Monday, June 11, 2012

வாலு - ஆளை விடு - வாழ விடு - சிம்பு பேட்டி - கிடாவெட்டு

http://www.cinepicks.com/tamil/gallery/vaalu/santhanam-and-simbu-in-vaalu-poster-861.jpgல்யாண சீஸன் நெருங்குவதால், அதற்கு முன்னரே டாப் கியரில் ஆடிவிடும் மூடில் இருக்கிறார் சிம்பு. அடுத்த படத்துக்கு 'வாலு’ என்று பெயர்.''ஆஹா... திரும்ப சேட்டையை ஆரம்பிச்சுட் டீங்களா?'


சி.பி - அண்ணன்  எப்போ சேட்டையை விட்டாரு? இப்போ ஆரம்பிக்க? ஆல்வேஸ் அண்ணன் சேட்டை மன்னன் தான், ஆனா எடுக்கப்போற படத்தோட டைட்டில் மட்டும் வேட்டை மன்னன்


''இது எல்லாருக்கும் பிடிக்கிற வாலு! இன்னும் பக்கா சென்னைப் பையனா ஒரு படம்கூடப் பண்ணது இல்லை. அப்படி ரொம்பத் துறுதுறுப்பா, செம கலகலப்பா ஒரு ஸ்க்ரிப்ட் கொண்டுவந்தார் விஜய்சந்தர். லவ் ஸ்டோரி. இதில் என் வால்தனம் மட்டும் இல்லை. எல்லோரோட வால்தனமும் இருக்கிற - மிஸ் பண்ணவே முடியாத கதை. ஹன்சிகா, சந்தானம்னு ஹிட் பேக்கேஜ் சேர்த்து, உடனே இறங்கிட்டோம்.


 தீபாவளிக்கு வர்றான் வாலு. படத்தில் காமெடி அள்ளும். சந்தானத்தை நான்தான் சினிமாவில் முதல்ல கொண்டுவந்தேன். இப்ப, எல்லா ஹீரோக்களுக்கும் அவர் செம தோஸ்த் ஆகிட்டார். 'மன்மதன்’ முதல் நாள் ஷூட்டிங்ல அவரோட சில ஆக்ஷன்களைப் பார்த்தேன். 'ஜஸ்ட் லைக் தட் பெரிய ஆள் ஆயிடுவ நண்பா. சீக்கிரமே என் படத்துக்கு உன்கிட்ட கால்ஷீட் கேட்டு நிக்கிற மாதிரி இருக்கும்’னு சொன்னேன். 'என்ன சார்... பயமுறுத்துறீங்க?’னு தயங்கித் தயங்கிச் சிரிச்சார். நான் சொன்ன மாதிரியே ஆச்சு.


 ஆனா, மனுஷன் ஜெம் ஆஃப் தி ஜெம். என் படம்னா நான் சந்தானத்துக்கிட்ட டேட்ஸ் கேட்கிறது இல்லை. அவருக்கு ஏத்த கேரக்டர்னா 'நீதாம்பா’னு சொல்லிடுவேன். 


ஷூட்டிங் அன்னிக்கு ஸ்பாட்ல நிப்பார். அதுதான் சந்தானம்.''


 சி.பி - ஓஹோ நீங்களும் எம் ஜி ஆர் மாதிரிதானா? நீங்க இருக்கறப்ப சக டெக்னீஷியன்கள், நடிகர்கள் உட்கார விட மாட்டீங்களா?

''ஆர்யா... நயன்தாரானு கிசுகிசுக்கிறாங்களே?''
''அட, அவங்க ஒரு காலத்தில் எனக்கு ஃப்ரெண்ட். அதுக்காக இன்னமும் கேட்டுக்கிட்டே இருக்கணுமா? அவங்க நாளைக்கு இன்னொருத்தர்கிட்ட இருப்பாங்க. அப்புறம், கல்யாணம் பண்ணிப்பாங்க. அதுக்கும் நான் பதில் சொல்லிட்டே இருக்கணுமா? நல்ல காமெடிங்க!''சி.பி - கீதை வாசகம் சிம்பு அண்ணன் ரசிச்சு மனசுக்குள்ள படிக்க நான் டெடிகேட் பண்றேன் - எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவருடையது , எதை நீ தள்ளிட்டு வந்தாய், போறப்ப அள்ளிட்டுப்போக?


http://chennaionline.com/images/gallery/2012/June/20120606035951/Vaalu_Movie_First_Look_Wallpapers_02.jpg''இப்போதைய ஹீரோக்களில் யாரைப் பிடிச்சிருக்கு?'''ஜெய்! அவரோட முகம் முதல் சீன்லயே இம்ப்ரெஸ் பண்ணிருது. நல்ல நல்ல படங்களா பண்ணும்போது இன்னும் சூப்பரா வருவார். சாந்தனுவுக்கு டான்ஸ், காமெடி நல்லா வருது. ஆனா, இன்னும் நல்ல நேரம் அமையலை. ஆர்யா 'பாஸ்’ மாதிரி அசால்ட்டா பண்ணா ரொம்ப நல்லா இருக்கு. கார்த்தியோட பட செலெக்ஷன் அட்டகாசம். ஜெயம் ரவியை ரொம்ப இயல்பா எல்லாரும் ஏத்துக்கிறாங்க. ஜீவாவுக்கு ஃபிட் ஆகாத கேரக்டர் எதுவும் இருக்கானு தெரியலை. பெர்ஃபார்ம் பண்றதில் தனுஷ் கவனம் செலுத்துறார்.''
''உங்களுக்கு செல்வராகவன், பாலா மாதிரி டைரக்டர்களுடன் சீரியஸா படம் பண்ணணும்னு ஆசை இல்லையா?''
''ஒரு விஷயம்... தனுஷ்தான் அப்படிப் பண்ணுவார். அவருக்கு நடிப்பில் சீரியஸா ஏதாச்சும் பண்ணிட்டே இருக்கணும்னு ஆசை. நமக்கு அந்த ஆசை இல்லை. நான் பெர்ஃபார்ம் பண்றவன் இல்லை... என்டர்டெய்ன் பண்றவன்


. பயங்கரமா நடிச்சு பேர் வாங்கணும்னு நான் ஆசைப்படக்கூட மாட்டேன். ஆஸ்கர், தேசிய விருது வாங்கணும்னு எனக்குக் கனவுகூடக் கிடையாது. ரஜினி 'தளபதி’யில் பண்ண மாதிரி எப்பவாவது ஒரு ரோல் நடிக்கலாம். அப்படித்தான் வெற்றிமாறன் கதையில் இன்ட்ரஸ்ட் எடுத்து நடிக்கப்போறேன். மத்தபடி, நமக்கு தியேட்டர்ல விசில் பறக்கணும். கைத்தட்டல் கொட்டணும். டிஸ்ட்ரிபியூட்டர் சந்தோஷப்படணும். அவ்வளவுதான்.''''அது யு டியூப்போ... இல்லை ஃபேஸ்புக்கோ... உங்க அப்பாவைச் சகட்டுமேனிக்குக் கிண்டல் கேலி பண்றாங்களே... அதைப் பத்தி அப்பாட்ட பேசுவீங்களா?''''ஜெயிச்ச மனுஷங்களை எப்பவும் நிறையக் கிண்டல் அடிப்பாங்க. அப்படித்தான் அப்பாவையும் கமென்ட் பண்றாங்க. அவரோட ரெக்கார்டு இன்னும் முறியடிக்கப் படலை. அவ்வளவு ஏங்க, ரஜினி சாரையே அதுல பயங்கரமா கிண்டல் அடிக்கிறாங் களே. ரஜினி ஜோக்ஸ்னு தினமும் நிறையக் கொட்டுதே? கிண்டலுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டே இருந்தா, அப்புறம் நாம வேற எந்த வேலையையும் பார்க்க முடியாது. டேக் இட் ஈஸி!''


''சினிமாவில் தம்பியோட என்ட்ரி எப்போ?'''இந்த வருஷக் கடைசி, இல்லைன்னா... அடுத்த வருஷம். நல்லா டான்ஸ் ஆடுறான். கொஞ்சம் வெயிட்டா இருக்கான். ஃபிட்னெஸ் சரிபண்ணிட்டா, டபுள் ஓ.கே. அவனுக்கு ஏத்த முதல் ஸ்க்ரிப்ட்டை அப்பாதான் ரெடி பண்றார். சின்ன வயசுலயே ஸ்டேட் அவார்டு வாங்கினவன். என்னைவிட நல்லா நடிப்பான்.'''தங்கச்சி இலக்கியாவுக்குக் கல்யாணம் எப்போ?''''அடுத்த வருஷம். மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க. அந்தப் பையனை எனக்குப் பிடிக்கணும். என் தங்கச்சிக்குப் பிடிக்கிற பையனை எனக்கும் பிடிக்கும். என் தங்கச்சிக்கு நான்னா ரொம்ப உசிரு. கல்யாணம் ஆயிட்டா அவளை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். அதுக்காக எத்தனை நாள்தான் வீட்லயே வெச்சுட்டு இருக்க முடியும்? 'பாசமலரே, சீக்கிரம் கௌம்பு’னு இப்பவே சொல்லிச் சொல்லிப் பழகிட்டு இருக்கேன். தங்கச்சிக்கு சினிமா ஆர்வம் இல்லை. படிப்புதான் இஷ்டம். எம்.பி.ஏ. முடிச்சிருக்கா. சினிமா கதை சொன்னா, நல்லா ஜட்ஜ் பண்ணுவா. 'லூஸுப் பெண்ணே பாட்டு ஹிட்டாகும்’னு முதல்ல சொன்னது அவதான். 'எவன்டி உன்னைப் பெத்தான்’ ப்ளே பண்ணப்போ, கொஞ்சம் பயமா இருந்தது. 'இல்லண்ணா, பொண்ணுங்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும்’னு சொன்னா.'''ரொம்ப சமர்த்தா இருக்கிற மாதிரி இருக்கு. சரி... இப்ப இண்டஸ்ட்ரியில் யாருக்கு உங்க ப்ளேபாய் பட்டத்தைக் கொடுக்கலாம்?''''நிறைய விஷயங்கள் பட்டு உணர்ந்த பிறகு, இப்பதான் மெச்சூரிட்டி வந்திருக்கு. இனிமே ரொம்ப பெர்ஃபெக்ட்டா இருக்கணும். நானே ப்ளேபாய் இமேஜை விட்ட பிறகு, அப்படி யாரு இருந்தா எனக்கென்ன?''


 http://reviews.in.88db.com/images/stories/nayanthara-simbu-vaalu-movie.jpga

thanx - vikatan

0 comments: