Wednesday, June 27, 2012

கன்னி ராசி ஆண்களுக்கு ஸ்பெஷல் சலுகை ஏதாவது இருக்கா??? ?

ஆசையும் பயமும் தன்னகத்தே விதி மாறி இரண்டற கலந்து நிலையில்லா நிமிடங்கள் அனைத்தையும்     இருதலைகொள்ளி எறும்பாக வாட்டி வதைக்குதே!!!!!!!!!!
1.நடிகை - ரசிகர் மன்றங்களை கலைக்கலாம்னு இருக்கேன் 


டாக்டர்- ஏம்மா, மாசா மாசம் க்ளினிக் வந்து கலைக்கவே உனக்கு நேரம் இல்லை ;-)


--------------------------------------------


2. எப்போதும் ஆனந்தமாக இருக்க ஆசைப்பட்டால் காதலி! அவள் பேரே ஆனந்தியாக இருந்தால் மகிழ்ச்சி!
-----------------------------


3. ஐ கெட் மேரீடு வித் சில்ட்ரன் = மேரேஜ் ஆகும்போதே குழந்தைங்க இருந்துதுன்னு அர்த்தமா? ----------------------------


4. பின் நவீனத்துவம்னா  ஸ்ரீதேவி மூக்கை ஆபரேஷன் பண்ணி அழகு படுத்துன  மாதிரி பின்னழகை அழகுபடுத்துவதா?------------------------


5. 20 கண்கள் இருந்தும் ராவணன் கவனம் ஒரே ஒரு பெண் மீதுதான் இருந்துச்சு, 2 கண்ணை வெச்சுட்டு நாம டெயிலி 200 பேரை சைட் அடிக்கறோம்;-)-----------------------

6. மது ஒழிப்பில் அக்கறை உள்ள தலைவர் ராம்தாஸை விட கேப்டன் தான், டெயிலி ஒரு ஃபுல் அடிச்சே ஒழிக்கப்பார்க்கறார்


-----------------------


7. நான் தீ படம் பார்க்கிறேன் = I AM SEEING THE FILM FIRE # எடக்கு மடக்கு மொழிபெயர்ப்பு-----------------------------


8. வேட்டியின் நுனி பிடித்து உறங்குகிறாள் மகள், மனைவியிடம் சாப்பாடு கொண்டு வரச்சொல்லி சாப்பிட்டேன் # சிம்ப்பிள்---------------------


9. ஜூலை 25ல் வங்கிகள் போராட்டம்  # அட லூசுங்களா! 29ந்தேதி ஸ்ட்ரைக் பண்ணாலாவது பில்லா 2 பார்க்கலாம்----------------------------


10. ரோட்ல ஆக்சிடெண்ட் ஆனா , சாரி தெரியாம பட்டுடுச்சுன்னு பணிஞ்சு போயிடுங்க , சண்டையை தவிர்க்கலாம் --------------------------
11. ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் இளையராஜா பாடல்? # மொத பாட்டு  ராஜாதி ராஜன் இந்த ராஜா?--------------------------


12. வெட்னரி டாக்டர் நீங்க, எதுக்கு உங்க கழுத்துல  ஸ்டெதஸ்கோப்?  ம், செல்ஃப் செக்கப் அப்பப்ப பண்ணிக்குவேன் ;-)


-----------------


13. அரசியலில் ஈடுபடுவேன்: நடிகை சோனா) #  சோனியா காந்தி, சோ வரிசைல சோனா! செத்தாண்டா சேகரு-----------------

14. மாநகராட்சியில் தவறு செய்யும் அதிமுக கவுன்சிலர்கள் திருந்தாவிட்டால் மாமன்றத்தை கலைத்து விடுவேன்-ஜெ # அதனால தப்பு பண்றவங்க யூஸ் லாட்ஜ் 


-----------------------------------


15. தமிழ் ஒரு நுணுக்கமான மொழி! எழுத்துப்பிழைகள் சில சமயம் பூமாரங்க் ஆகி நம்மையே தாக்கும்


---------------------------------


மேலிருந்து கீழாக கோடு உள்ள சட்டை அணிந்தால் ஒல்லியாக காட்டும். குறுக்கு கோடு போட்டால் குண்டாக காட்டும் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த பெண்மணிக்கு பிபிசியின் ‘அமெச்சூர் சயின்டிஸ்ட்’ விருது வழங்கப்பட்டுள்ளது.16. ஜாதி ஒழியாது: ஜி.கே.மணி #  ஜாதிக்கட்சி ஒழிஞ்சாக்கூட இப்போதைக்கு போதும் 


-- ----------------------------


17.  கன்னி ராசில பிறந்த  ஆண்களுக்கு  ஏதாவது ஸ்பெஷல் சலுகை கிடைச்சிருக்கா? ரொம்ப நாள் டவுட்டு -------------------------------


18. தலைவரே! இன்னும் நீங்க கடிதம் எழுதிட்டு இருக்கறது உடன் பிறப்புகள் எங்களுக்கே கேவலமா இருக்கு! ஒண்ணா மெயில் அனுப்புங்க, அல்லது STD பேசுங்க


---------------------------------------

19. சாக்லேட் கேர்ள்ஸ் அப்டின்னா அதிகமா சாக்லெட் சாப்பிட்டு சுகரை ஏத்திக்கும் ஃபிகர்ஸா?---------------------------------

20. என்னைக் கடக்கும் போது உன் நடையில் வரும் சிறு தடுமாற்றம் சொல்லுது நீ லவ் பண்ண வர்றப்பக்கூட மப்பில்தான் இருக்காய் என்பதை !----------------------------------