Saturday, June 30, 2012

புருஷனுக்கும், ப்ளூ டூத்க்கும் இன்னா ஒத்துமை? ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ்)

மும்பையில் உள்ள " GATE WAY OF INDIA " - வின்
அழகிய தோற்றம் !
1.தினமும் உங்கள் பெற்றோருக்காக எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள்? என்பதை  எண்ணிப்பார்த்தால் எல்லா நாளும் இனிய நாளே!


---------------------------


2. .ஜூலை 13-ல் அஜித்தின் பில்லா-2 ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! #  அடடா! 13 ராசி இல்லாத நம்பர்னு யாரும் சொல்லலையா?--------------------------------


3. விஸ்வரூபம் தலைப்பை மாற்ற சொல்லி கமலுக்கு கோரிக்கை! # விஸ்வ = உலகு, ரூபம் = அழகு, உலக அழகன்னு மாத்திக்குங்க


------------------------


4. இலை மறை காய் மறைவாக டபுள் மீனிங்கை பயன்படுத்திய கே பாக்யராஜ் பெற்ற வெற்றியை அப்பட்டமாக சொன்ன எஸ் ஜே சூர்யா பெறவில்லை


--------------------------------


5, சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி நியமனம் செல்லாது:ஜெ மனு # மேடம், பேசாம ஓ பி எஸ் ஸை ஜட்ஜ் ஆக்கிடலாமா?------------------------------------
6. இன்று போதைப்பொருள் ஒழிப்பு தினம், எனவே குடிபோதை,புகழ் போதை,பெண் போதையில் இருப்பவர்கள் அதிலிருந்து மீண்டுவர சிந்தியுங்கள்--------------------------------

7. அரசியல்வாதிகள்,கட்டிட காண்ட்ராக்டர்கள்,இஞ்சினியர்கள் வாழ்வு மேம்படக்கட்டப்படுவதுதான் மேம்பாலமா?-------------------------


8. மனைவியின் தேர்வைக்கண்டு எள்ளி நகையாடுவோர் கவனத்திற்கு,நீங்களும் அவர்கள் தேர்ந்தெடுத்தவர் லிஸ்ட்டில் ஒருவர் என்பதை மறக்காதீர்! #SMS


----------------------------

9.கணவன் என்பவன் ப்ளூடூத் மாதிரி,சம்சாரம் பக்கத்துல இருக்கறப்போ தொடர்புல தான் இருப்பான், அவ அந்தப்பக்கம் போய்ட்டா  நியூ டிவைஸை ஆட்டோமேட்டிக்கா தேட ஆரம்பிச்சுடறான்


------------------------

10. கணவன் வெளியூர் செல்லும் தருணங்களில் மனைவி அவனைப்பற்றியே நினைக்கிறாள், கணவன் அதற்கு நேர் எதிர் ----------------------------11. பொண்ணுங்க பசங்களை “ நீயும் உன் முகரக்கட்டையும்” அப்டின்னு திட்டுனா பசங்களுக்கு நோ கோபம், ஆனா பசங்க பொண்ணை கட்டைன்னு சொன்னா ஏன் கோபம்?--------------------------------

12. பொருட்களை உபயோகியுங்கள்,மனிதர்களை உபயோகிக்காதீர்! மனிதர்களை நேசியுங்கள்,பொருட்களை  நேசிக்காதீர்!-------------------------------

13. சென்சார் ஆஃபீசர் வீட்டுக்கு வந்ததும் அவர் சம்சாரம் “ இன்னைக்கு என்ன புதுசா பார்த்தீங்க?”ன்னு கேட்பாரோ?----------------------------------


14. இதோ 5 நிமிஷத்துல ரெடி ஆகிடறேன்- மனைவி = இப்போ பிஸியா இருக்கேன், கால் யூ லேட்டர் - கணவன் # வாழ்க்கைப்பொய்கள்------------------------


15. இதயத்தில் இருக்கும் வலிகளை உதட்டில் உள்ள புன்னகையால் மறைக்க முடிவதில்லை


----------------------------------16. காதலி - பைக்ல யார் கூட போனே? 


காதலன் - சிஸ்டர்டி.

. காதலி -ஏன் அவ பர்தா போட்டு முகத்தை மூடி இருந்தா?

 காதலன் - அவ உன் சிஸ்டர்டி  ஹி ஹி 


-----------------------------

17. எங்க ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் மேட்சுக்கு மேட்ச் பைத்தியம் போல, வாரா வாரம் செவ்வாய் மட்டும் செவ்”வாய்”ல வருது # லிப்ஸ்டிக் லதா------------------------------


18. அம்மாவுக்கு பிரசவ வலியைக்கொடுத்து பிறந்ததால் தானோ என்னவோ எல்லாக்குழந்தைகளும் வலி ஏற்படும்போதெல்லாம் அம்மா என்கின்றன----------------------------------

19. உலகின் மிகப்பெரிய பொய் - எங்க பரம்பரைல எல்லாருமே பிரம்மச்சாரிகள் தான் ;-)--------------


20. பேசாம என் அத்தை பெண்ணையே மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.


 ஏன்? பேசுனா பொண்ணு தர மாட்டாங்களா? -----------------------------
இங்கு பெட்ரோல் விலையை ஏற்றி மக்களிடம் பணம் பிடுங்கி பணக்கார நாடுகளான ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த இத்தாலி போன்ற நாடுகளுக்கு 50000 கோடி உதவி செய்யும் (மன்மோகன்சிங் அரசு) இந்தியா ?

இந்தியப் பொருளாதார நிலைமையே படுமோசமாகி இருக்கக் கூடிய நிலையில் ஐரோப்பிய பொருளாதார சிக்கலை சமாளிக்க இந்திய நிதி உதவி அளிப்பதா? என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும் பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்துள்ளார்.


0 comments: