Saturday, June 09, 2012

ஆர்த்திராவ் நித்யானந்தாவை மாட்ட வைத்தது எப்படி? ஜூ வி கட்டுரை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSISw0op29irRYN6ssutfJQSnKXqiOMuhhzks500ZH5E2gfii9WB2WrRZheiovnsg3QCBX8ZwLgoAIBvLupgq6uY1XPD4mUrifln42DiA_29PvI89Nc-LNgB8Vjo_UMz3VMvnak0zq-c8/s1600/Swamiji+with++NIYF.JPG''நித்தியானந்தரை என் குருவாக​வும் கடவுளாகவும் நினைத்து ஆறு வருடங்களாக அவரது தீவிர பக்தையாக இருந்தேன். இன்று ஏமாந்து உங்கள் முன் நிற்கிறேன்...'' என்று சோகத்துடன் சொல்கிறார் ஆர்த்தி ராவ். 
யார் இந்த ஆர்த்தி ராவ்?


 14.3.10 ஜூ.வி-யில் 'கேமரா பொருத்திய வெளிநாட்டு பக்தை’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரியும், 12.6.11 ஜூ.வி-யில் 'வீடியோ தயாரித்தாரா ஆர்த்தி ராவ்..?’ என்ற தலைப்பில் செய்தியும் வெளியிட்டு இருந்தோம். அந்தக் கட்டுரையில் ரஞ்சிதா, 'நான் நித்தியானந்தருடன் இருப்பதைப் போன்ற மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவை வைத்து லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ், வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் பணம் கேட்டு என்னை மிரட்டினார்கள். நான் பணம் கொடுக்காததால், அந்த வீடியோவை வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்தினார்கள். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்...’ என வழக்கு தொடர்ந்து இருப்பதையும், வீடியோ விவகாரத்தில் ஆர்த்தி ராவுக்கு முக்கியப் பங்கு இருப்​பதையும் குறிப்பிட்டு இருந்தோம்.அதைப் பற்றிதான் இப்போது கன்னட சேனல் ஒன்றில் ஆர்த்தி ராவ் வாய் திறந்திருக்கிறார். ''நான் நித்தியானந்தரோட ஆசிரமத்தில் இருந்தவரை என்னோட பேரு மா நித்யானந்த பிரம்மேஸ்வரிமை. சென்னையில் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த பெண் நான். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, அமெரிக்காவில் வேலை பார்த்தேன். அங்கேயே ஒருத்தரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டேன்.


 எனக்கும் என் கணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவரை விட்டுப் பிரிந்து விட்டேன். அப்போதுதான் என் பயணம் ஆன்மிகத்தை நோக்கித் திரும்பியது. நித்தியானந்தரின் ஆசிரமத்தில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பித்தேன். 'உனக்கு சீக்கிரமே ஜீவன் முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி நித்தியானந்தர் என்னை செக்ஸுவலாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 

சி.பி - ஓஹோ.. அவர் தான் உங்களை பயன் படுத்துனார்.. அதை சாக்கா வெச்சு இப்போ நீங்க உங்க சுய நலத்துக்கு அந்த மேட்டரை பயன் படுத்திக்கறீங்க? 

 http://www.envazhi.com/wp-content/uploads/2010/12/ranjitha-123211.jpg


'இது தப்பு’ என்று நான் அவரிடம் சொன்னபோது, 'கண்ணன் - ராதை போல நாம இருக்கணும். அப்போதான் சீக்கிரமே ஜீவமுக்தியை அடைய முடியும்’ என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினார். அவர் சொன்னதை நானும் நம்பினேன்.

சி.பி - அடடா.. ஜீவ முக்தி  அடையறதுதுதான் ஆன்மீகப்பணியா?  அய்யய்யோ, மதுரைல எத்தனை பேர் இப்படி ஜீவ முக்தி அடைஞ்சுட்டு இருக்காங்களோ தெரியலையே?


லெனின் கருப்பன் என்னிடம், 'ஜீவ முக்தி என்று பொய் சொல்லி நித்தியானந்தர் ஏமாற்றுகிறார்’ என்று சொன்னார். அதைப் பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் நித்தியானந்தரின் அறையைச் சுத்தம் செய்யும் பணி எனக்குக் கொடுக்கப்பட்டது. நித்தியானந்தரின் அறைக்குள் இருக்கும் ஏர் பியூரிஃபையர் மெஷினுக்குள் ரகசிய கேமரா ஒன்றை நான் பொருத்தி வைத்தேன். இரண்டு நாட்கள் கழித்து அந்தக் கேமராவை எடுத்து ஓடவிட்டுப் பார்த்தபோது, எனக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. கேமராவை வேறு யாராவது வைத்திருந்தால்கூட, நான் அதை மார்ஃபிங் என்று நினைத்திருப்பேன். நானே வைத்ததால் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. உடனே, ஆசிரமத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்''


 என்கிறார்.ஆர்த்தி ராவ் குற்றச்சாட்டுக்கு நித்தியானந்தா என்ன சொல்கிறார்?


''கடந்த 2004-ம் ஆண்டு கொடிய பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகத்தான் ஆர்த்தி ராவ் என்ற பெண் எங்களது ஆசிரமத்துக்கு வந்தார். ஆசிரமத்தில் ஒரு பக்தையாகத்தான் வந்து போவாரே தவிர அவருக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. பல ஆண்களோடு உறவு வைத்துக் கொண்டால் என்ன வியாதி வருமோ, அப்படிப்பட்ட ஒரு வியாதிதான் ஆர்த்திக்கும் வந்திருந்தது. ஹெர்பீஸ் டூ என்ற அந்தக் கொடிய பால்வினை நோய் எளிதில் மற்றவர்களுக்குப் பரவும் தன்மை கொண்டது. 


ஐந்து வருடங்களாக உடல் ரீதியாகத் தொல்லை கொடுத்தார் என்று சொல்கிறாரே, என் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்து சோதனை செய்யுங்கள். அந்தப் பெண்ணோடு உடல் ரீதியான தொடர்பில் இருந்தால் எனக்கும் அந்த நோய் வந்திருக்க வேண்டும் அல்லவா..?

 சி.பி - அது எப்படி வரும்? நீங்க தான் புத்திசாலித்தனமா காண்டம் யூஸ் பண்றதா  ஐரோப்பா கண்டமே சொல்லுதே?

அமெரிக்காவில், குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்​பட்டிருக்கிறது. அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நித்தியானந்தரின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிகளை செய்திருக்கிறார். அவர் ஒரு ஃபிராடு. அமெரிக்கப் போலீஸ் மற்றும் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி. இன்றுவரை அவர் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். லெனின் கருப்பனோடு சேர்ந்து ஆசிரமத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்தார்.


 பொய்யான ஒரு வீடியோவைத் தயாரித்து ரஞ்சிதாவை மிரட்டி இருக்கிறார். ரஞ்சிதாவும் அப்போதே போலீஸில் புகார் செய்து, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.


இப்போது நான் மதுரை ஆதீனமாக பொறுப்பு ஏற்றுக் கொண்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர்தான், இந்த ஆர்த்தி ராவைத் தூண்டி விட்டு எனக்கு எதிராகப் பேச வைத்திருக்கிறார்கள். ஆர்த்தி ராவ் விவகாரத்தை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்கிறார்.


தலை சுத்துதுடா சாமி!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicBLFbH6cGUPbhjtNdFyEmvNO4w_SaYaN8zwqJC_nb9Mks36yiVh4ArWmZSLZHd6i5G8jfmZCGvdz3eBtw8wTv1tWINMLiCu2n1EqTuPjrIWuDccSB6uqVhBEvYnwcMfA2uP44FVG9OT6i/s1600/ranjitha.jpg

2 comments:

கும்மாச்சி said...

இந்த நித்தியே இப்படித்தான் எஜமான், எழுதுங்க எஜமான் எழுதுங்க,

Prem S said...

//சி.பி - அடடா.. ஜீவ முக்தி அடையறதுதுதான் ஆன்மீகப்பணியா? அய்யய்யோ, மதுரைல எத்தனை பேர் இப்படி ஜீவ முக்தி அடைஞ்சுட்டு இருக்காங்களோ தெரியலையே?//ஹா ஹா இவரை எல்லாம் மக்கள் எப்படி நம்புறாங்க கூட்டம் வருதும்னு தெரியல