Sunday, June 03, 2012

நடிகை காஜல் இணையத்தில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் - ஜூ வி கட்டுரை



க்கபூர்வமான காரியங்களைவிட, அழிவுபூர்வ​மான விவகாரங்களுக்குத்தான் இணையதளம் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ? 

சி.பி - ஆவதும் நெட்டாலே, அழிவதும் நெட்டாலே?


ஒரு பெண்ணை எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியும் என்பதற்கு, நடிகை காஜலுக்கு நேர்ந்த கொடுமையே சாட்சி.


'கோ’, 'மௌன குரு’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் காஜல். இவர் சென்னை, போலீஸ் கமிஷனரிடம் கொடுத்திருக்கும் புகாரைக் கண்டு யாரும் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது. .


''கடந்த 23-ம் தேதி மாலை 3 மணியில் இருந்து என்னுடைய செல்போனுக்குத் தொடர்ந்து அழைப்பு வந்துகொண்டே இருந்தது. பேசியவர்கள் அனைவரும், 'எங்கே வர்ற? ரேட் எல்லாம் பிரச்னை இல்லை, எந்த ஹோட்டல்ல ரூம் போடலாம்?’ என்ற ரேஞ்சிலேயே பேசினார்கள்.


 திடீரென இப்படிப்பட்ட அழைப்புக்கள் ஏன் வருகிறது என்று புரியவில்லை. ஆபாசமாகப் பேசியவர்களை திட்டித் தீர்த்தேன். அப்படி ஒருவரைத் திட்டியபோது, அவர்தான் நிதானமாக, 'உங்களின் போட்டோவும் மொபைல் நம்பரும் போட்டு ஒரு வெப்சைட்டில் நீங்கள் ஒரு கால் கேர்ள் என்பதுபோல் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அதனால்தான் உங்களைத் தொடர்பு கொண்டேன்’ என்றார். 


அவரிடம் இருந்து வெப்சைட் அட்ரஸைப் பெற்றேன். இலவசமாக விளம்பரங்கள் தருவதற்குப் பயன்படும் வெளிநாட்டு வெப்சைட்  அது. அதைப் பார்த்து கதறி அழுதேன். உடனே, அந்த வெப்சைட் முகவரிக்கு, 'என்னைப் பற்றி தவறான விளம்பரம் வெளியாகி உள்ளது. அதை உடனே நீக்க வேண்டும். அதை வெளியிட்டவர் யார் என்பதையும் தெரிவிக்க வேண்டும்’ என்று இ-மெயில் அனுப்பினேன்.



'உங்களைப்பற்றிய விளம்பரம் 72 மணி நேரத்தில் நீக்கப்படும். விளம்பரத்தை வெளியிட்டவர்பற்றிய தகவலைத் தர முடியாது’ என்று பதில் வந்தது. இதையடுத்தே சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். உடனே நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்தால்தான், எதிர்காலத்தில் மற்ற பெண்களுக்கும் இதுபோன்ற பிரச்னைகள் வராது'' என்றார் கவலையுடன்.


சி.பி - எதுக்கு 72 மணி நேரம்? வெப்சைட் ஓனர் 3 நாள் லீவ்ல இருக்காரா? அதை எடுக்க 3 நிமிஷம் போதாதா? அந்த விளம்பரம் அட்லீஸ்ட் 5 நாளாவது விளம்பரத்தில் இருக்க ஆல்ரெடி ஒப்பந்த அடிப்படைல காசு வாங்கி இருப்பாரு.



புகாரை விசாரித்து வரும் சைபர் க்ரைம் கூடுதல் உதவி ஆணையர் சுதாகரிடம் பேசினோம். ''இதுகுறித்து விசாரித்து வருகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க எங்கள் டீம் மீட்டிங் நடக்கிறது. அதன் பிறகுதான் மற்ற விவரங்களைத் தர முடியும்'' என்றார்.


பெண்ணைக் கேவலப்படுத்தும் இதுபோன்ற அற்பத்தனமான ஆயுதங்களைக் கையில் எடுப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும்.