Friday, June 08, 2012

பெண் உடலில் எனக்கு பிடித்த பாகம் எது? பிடிக்காத பாகம் எது? ( ட்வீட்ஸ் & ஜோக்ஸ்)

1.மணிரத்னத்தின் பூக்கடை டைட்டிலுக்கு சிக்கல்,ஜகா வாங்கினார் # இது எல்லாம் ஒரு பிரச்சனையா? மலர் நிலையம்னு வைங்க பாஸ்


--------------------------------------

2. பெண்கள் நாட்டின் கண்கள், கவிதை KNOT க்கு அடித்தளம்  கொடுக்கும் நாண்கள்

------------------------------------

3. குளிக்கறப்ப சோப் யூஸ் பண்றதில்லை, கடலை மாவுதான் - ஹன்சிகா மோத்வானி # நாங்க நம்ப மாட்டோம், ஏதாவது ஆதாரம் இருக்கா?வீடியோ லிங்க் ப்ளீஸ்

-----------------------------------

4.ஹோசன்னா பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது வருத்தம் அளிக்கிறது எ- ஏ.ஆர்.ரஹ்மான் # ஹோ”சன்”னா எதிர்ப்பாங்க, ஹோ”ஜெயா டி வி”ன்னு மாற்றிடுங்க

------------------------------------

5. அமெரிக்காவின் ஓப்ரா வின்ப்ரேவுக்கு சமீராரெட்டி புடவை பரிசு # மேடம், உங்களுக்கும் சேலை கட்டத்தெரியாது, அவருக்கும் தெரியாது, பொன்னாடையோ?

----------------------------------------

6. லேடி -சுவாமி! கடவுள் இருக்காரா? இல்லையா?

நித்யானந்தா - வாசல்லியே நின்னு விசாரிச்சா எப்டி? ஆசிரமத்துக்குள்ளே வா பெண்ணே!

--------------------------------

7. சார், நீங்க ஏன் எப்பவும் பூப்போட்ட ( பூ டிசைன்) சட்டையே போடறீங்க?

ராமராஜன் & சாரு - எனக்கு மனசு பூ மாதிரின்னு பூவைகளுக்கு உணர்த்த


---------------------------------------

8. சுவாமி!  நீ இருக்கியா? இல்லையா?ன்னு விவாதம் நடக்குது, நீ பதில் சொல்லு.


கடவுள் - ஸாரி, எனக்கு பொழப்பை பார்க்கனும்,நோ டைம்


-----------------------------------------

9. எனக்கு இருக்கற அறிவுக்கும் , அழகுக்கும் நான் சாரு நிவேதிதா ஆக வேண்டியவன்னு இனி சொல்வாங்களோ?# சாருவின் இயற்பெயர் அறிவழகன்


----------------------------------

10. தலைவர் ஏன் கடுப்புல இருக்காரு?


பொன்னாடை வேண்டாம் என்று சொன்ன பன்னாடையே! வருக!னு கட் அவுட் வெச்சிருக்காங்களாம்

-------------------------------------

11. சில பெண்களால் தான் இங்கு பாதி ஆண்கள் வஞ்ச புகழ்ச்சி அணி பற்றி தெரியாமலேயே இருக்கிறார்கள் # வஞ்சிப்புகழ்ச்சி

--------------------------------

12. கோமாளி செல்வா - எதையும் நான் முன்கூட்டியே செஞ்சுடுவேன்

.. ஏமாளி செல்வி - அதுக்காக 2013 டைரியை இப்போவே எழுதிட்டா எப்படி?

-----------------------------

13. இண்டர்வியூவில் ஆஃபீசர் - நாங்க கேட்கற கேள்விகளுக்கு நீங்க பதிலே சொல்லலையே?

சவுமி - சாரி சார், எனக்கு எல்லார் கிட்டயும் கேள்வி கேட்டுத்தான் பழக்கம்

-----------------------------------

14. மகாராணி! அரண்மனை வாயிற்காவலன் உங்களுக்கு எப்படி பழக்கம்?


விடும் அமைச்சரே! ”காவலன் ”  “ நண்பன்” ஆவது காலத்தின் COTட்டாயம்

----------------------------------

15. நாற்காலி ஆசை இல்லாதவராமே தலைவரு?

அவருக்கு ராசி நெம்பர் 3, அதனால முக்காலில தான் உக்காரும் அந்த தக்காளி

-------------------------------

16. மை பேபி - டாடி, நீ லூஸா?

ஹி ஹி உனக்கு எப்படித்தெரியும்?

தாத்தா கிட்டே அம்மா சொல்லிட்டு இருந்தாங்க

----------------------------------

17. உன் உடலில் எனக்கு பிடித்த பாகம் உன் கண்கள்: பிடிக்காத பாகம் அதை அடிக்கடி மூடிவிடும் உன் இமைகள்


--------------------------------

18.  டாக்டர் பட்டம் கொடுத்ததை தலைவர் ஏன் வேண்டாம்னு சொல்லிட்டாரு?

அவர் மேல ஏகப்பட்ட கேஸ் இருக்கு.. வக்கீல் பட்டம் குடுத்தாலாவது யூஸ் ஆகும்னு பார்க்கறாரு..

--------------------------------------

19. திருடிய மனதை திருப்பிக்கொடு என்றாள். வாங்கியதை திருப்பித்தரும் பழக்கம் எனக்கு இல்லை,உனக்காக முத்தத்தை மட்டும் திருப்பித்தரவா? என்றேன்

---------------------------------

20. வீடு புகுந்து திருடினியா?

நோ யுவர் ஆனர், நான் திருடுனதே வீட்டைத்தான் ஹி ஹி


---------------------------------

6 comments:

rajamelaiyur said...

//மணிரத்னத்தின் பூக்கடை டைட்டிலுக்கு சிக்கல்,ஜகா வாங்கினார் # இது எல்லாம் ஒரு பிரச்சனையா? மலர் நிலையம்னு வைங்க பாஸ்
//

பார்த்து அப்புறம் மலர்வளையம் என்று வைத்துவிட போறாங்க

sethu said...

இன்னும் உங்க கிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன்

sethu said...

இன்னும் உங்க கிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன்

sethu said...

இன்னும் உங்க கிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன்

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே தலைப்பு நெசமாவே அப்படியா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

20. நாட்டில திருட்டுக் கூட்டம் அதிகமாயிடுச்சி!


தினத்தந்திக்கு ஒரு கடிதம்!.