Monday, June 18, 2012

ஆனந்த விகடனே அடுத்தவர் படைப்பை சுட்டுப்போட்ட அவலம்,இணைய தளங்கள் அதிர்ச்சி

இணைய தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு பரபரப்பான செய்திகள் வெளியிடுவதும், செய்தியை யார் முந்தித்தருகிறார்கள் என்பதில் வேகமும் காட்டி வருவது ரெகுலராய் நடக்கக்கூடியதே.. அதே சமயத்தில் மற்றவர் படைப்பை  தன் படைப்பு மாதிரி காட்டிக்கொள்வது ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.. 


நானே பல முறை ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், கல்கி, நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களில்  வெளி வந்த படைப்புகளை இங்கே வெளியிட்டு கடைசியில் நன்றி - என போட்டு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை பெயரை போட்டு விடுவேன்,.. டைட்டில், லேபிள், பி கு ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு இடத்தில் அவர்கள் பெயர் வந்து விடும்.. 


 ஆனால் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத்திகழ வேண்டிய பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடனே வேறொரு இணைய தளத்தில் வந்த மேட்டரை சுட்டுப்போட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியைத்தருகிறது.பாதிக்கப்பட்ட இணைய  தள உரிமையாளர் விகடனுக்கு மென்ஷன் போட்டு விளக்கம் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை


 மாயவரத்தான் அவர்கள் போட்ட ட்வீட்டில் இருந்து
இது படைப்புத் திருட்டு இல்லீங்களாண்ணா இதை ஒரிஜினலா வடிவமைச்சது
 a
 ORIGINAL

powered by Photobucket
சனிக்கிழமை நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருதுகள் வென்றவர்கள் பட்டியல்...

11 comments:

Thalapolvaruma said...

என்ன கொடுமை அண்ணா விகடனே இப்படி செய்தா சாதாரண பதிவர் சொல்லி என்ன பயன்

Thalapolvaruma said...

நியூஸ் வருவதை போடுபவர்களில் சிலர் நன்றி என்பர் இவர்களுக்கு என்ன

'பரிவை' சே.குமார் said...

அது சரி...
நன்றி கூட போடவில்லையா அவர்கள்...

”தளிர் சுரேஷ்” said...

நானும் காப்பி பேஸ்ட் செய்கிறேன்! ஆனால் பதிவாளருக்கு நன்றி போட்டுவிடுவேன்! என்ன செய்ய சொந்தமாக எழுதினால் யாரும் படிக்க மாட்டேங்கிறாங்க! ஆனந்த விகடனுக்கு என்ன நேர்ந்தது இப்படி செய்ய?

கேரளாக்காரன் said...

நானும் நெக்ரோஃபிலியா,யூரோஃபிலியா,பீடோஃபிலியா என்னென்னமோ ஃபிலியா எல்லாம் பாத்துருக்கேன் இது என்ன ஃபிலியான்னு தெரியல.... எல்லாரும் உங்கள திட்டனும்னு ஆசைப்படர ஃபிலியா :)

ADMIN said...

அடடே..! விகடனுமா?

கேரளாக்காரன் said...

//palani vel said...
அடடே..! விகடனுமா?//

ஆமா பாஸு நீங்க, அடுத்து நம்ம செந்தில் அண்ணே வரிசைல இப்போ விகடன்

வெல்கம் டூ க்லப் அப்டீன்னு போட்டா சும்மா கலக்கலா இருக்கும்

தாமரைக்குட்டி said...

ஆனந்த விகடன் படிப்பதையே நிறுத்திவிட்டேன் எப்போ ஹாய் மதனை தூக்கினாங்களோ அப்பவே.......

அனுஷ்யா said...

பிக் பாக்கெட் அடிப்பவனைப் பற்றி பெருங்கொள்ளைக்காரரின் குய்யோ முய்யோதான் இந்த கட்டுரை...

Avargal Unmaigal said...

அது போலத்தான் குமுதம் ரிப்போர்ட்டரிலும் என் வலைத்தளத்தின் பெயரைப் போடாமல் எனது பதிவை ஈ அடிச்சான் காப்பி போல அடித்து போட்டு இருக்கிறார்கள்.

பெரிய பத்திரிக்கை என்று சொல்பவர்களிடம் சரக்கு தீர்ந்து போய்விட்டது போல

R. Jagannathan said...

இது விஜய் அவார்ட்ஸ் லிஸ்ட் தானே? இதில் ஆ.வி. ஏன் காபி அடிக்க என்ன இருக்கிறது? விஜய் டி.வி.யே ஆ.வி.க்கு இதை அனுப்பியிருக்கக் கூடுமே? - ஜெ.