Monday, June 25, 2012

கோவை பதிவர்கள் சந்திப்பு @ பெருந்துறை

சேலத்துல பாடகர் மனோ,திருடா திருடி மன்மத ராசா பாட்டு புகழ் மாலதி, பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் கலந்துக்கற  நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது.. லக்‌ஷ்மண் ஸ்ருதி ஆர்க்கெஸ்ட்ரா @ ஜவஹர் திடல், சேலம்..அழைப்பு விடுத்தவர் பிரபல ட்விட்டர் கம் பதிவர்.. ஆனா பேர் சொல்லக்கூடாதாம்.. பெயர் வெளீயிட விரும்பாத பதிவர்.. கம் ட்வீட்டர்.. 

 நானே கேள்வி நானே பதில் என்ற பகுதி முதன் முதலா ஆனந்த விகடன்ல தான் ஆரம்பச்சதுன்னு யாராவது நினைச்சா அந்த நினைப்பை உடனடியா ரப்பர் வெச்சு அழிச்சிடுங்க.. ஏன்னா தினமலர் வார மலர் பகுதில தான் அது முதல் முதலா அந்தரங்கம் கேள்வி பதில்ல ஆரம்பிச்சுது.. இவங்களே ஒரு கேள்வி போட்டு 2 பக்கத்துக்கு ஒரு மேட்டர்  ஆஃப் த மேட்டர் போடுவாங்க.. பெயர் வெளியிட விரும்பாத வாசகி அப்டினு போடுவாங்க... அதுக்கு தமிழ்ல உள்ள மாற்றுப்பெயர்.. அனாமிகா.. அந்த மாதிரி பெயர் வெளியிட விரும்பாத வாசகர் அல்லது பதிவர்னா அவர் மிஸ்டர் அனாமிகாவா? தெரியல.. 


ஒரு க்ளூ வேணா தர்றேன். அவர் லக்கி யுவா, அதிஷா 2 பேருக்கும் தோஸ்த்..அவர் ஃபோன்ல மெசேஜ் அனுப்பி தகவல் சொன்னதும் போலாமா? வேணாமா?ன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.. கம்ப்பெனிக்கு ஆள் வேணுமே.. அப்புறம் தான் மாயவரத்தான் ட்விட்டர்ல  அவரும் சேலம் போக இருப்பதா சூசகமா தகவல் சொன்னார் . ( சூசகம் -நன்றி  டூ கலைஞர்)


சரின்னுட்டு சேலம் போக ரயில் டைம், ரயில் பேரு எல்லாம் கேட்டுக்கிட்டேன்.. சம்பவம் நடக்கறது  23.6.2012 சனிக்கிழமை மாலை 6 டூ நைட் 11. ( சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே அதுக்கு ஒரே ஒரு அர்த்தம் தானா?) சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு மாயவரத்தான்க்கு செல்லுல ஒரு எஸ் எம் எஸ் தட்டி விட்டேன்.. சேலத்துக்கு ரயிலா? பஸ்சா? ... உடனே ரிப்ளை - கார்ல .....


யார் பக்கமும் சாயாத பாபா அல்ல ஒரு பக்கமா சாஞ்சு நிக்கும் பாபா

அப்போ நான் பெருந்துறை வந்துடறேன், பிக்கப் பண்ணிக்கறீங்களா? .....


ஒய் நாட் ஸ்யூர். 


அப்டினு ரிப்ளை.. அப்புறம் அவரே கால் பண்ணார்.. 

“ சாயங்காலம் 4 மணிக்கு கிளம்பறதா  ஐடியா. ஈரோடே வர்றதா இருந்தாலும் வந்துடறோம். ”\\

“ றோம்? பன்மை? கூட யாரு?”

 கணேஷ்.. என்கிற பிழை திருத்தி”


ஓ. ஓக்கே நீங்க கிளம்பும்போது சொல்லுங்க.. நான்  பெருந்துறை வந்து வெயிட் பண்றேன்.. பிக்கப் பண்ணிக்குங்க”


தேவைப்பட்டா ஈரோடே வந்துடறேன்.?

 வேணாம், அது உங்களுக்கு சுத்து வழி.. 19 கி மீ அதிகம் வந்துடும்.. அதனால நானே பெருந்துறை வந்துடறேன்..


அப்புறம் அவங்க அவினாசி கிராஸ் பண்றப்போ கன்ஃபர்மேஷன் கால் குடுத்தாங்க.. நான் கிளம்பி கலெக்டரேட் பஸ் ஸ்டாப்ல  நின்னேன்.. பெருந்துறை பஸ்ல ஏறி பெருந்துறை வந்தேன்.. அப்போ மணி 5 ஆகி இருந்துச்சு.. அவங்க வர இன்னும் அரை மணி நேரம் ஆகும்.. அதுக்குள்ள அவங்களை பற்றி ஒரு ட்ரெய்லர் ஓட்டிடறேன்..


மாயவரத்தான் 1973 ல பிறந்தவர்..() ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் போட்டில வெற்றி பெற்று அங்கே ஒர்க் பண்ணவர்.. இவர் ஆர்ட்டிகிள் பல ஜூ வி ல ஆ வி ல வந்திருக்கு,.,. ஜி போஸ்ட் கவுதம் இவர் செட் தான்.. ( சூர்ய கதிர் மாதம் இரு முறை இதழின் முன்னாள் கவுரவ ஆசிரியர்).. இவர் மலேசியாவில் ரத்தினக்கல் பிஸ்னெஸ் எல்லாம் பண்ணுனவராம்.. யார் அந்த ரத்தினம் என்ற விபரம் எல்லாம் சரியா கிடைக்கலை.. இப்போ கோவை வாசி..


பிழை திருத்தி என்கிற கணேஷ்.() இவர் ஊட்டி வாசி.. பிறந்தது, வளர்ந்தது, பல பெண்களின் வாழ்க்கையில் விளையாண்டது எல்லாமே ஊட்டில தான்.. பல பெண்கள் அவங்க வாழ்க்கைல தாயக்கரம், செஸ், கேரம் விளையாடும்போது அவரும் கூட விளையாண்டாரு. வேற ஏதும் இல்லை..
இவருக்கு பிழை திருத்தி என்ற பெயர் எப்படி வந்தது? அதுக்கு ஒரு சுவராஸ்யமான கதை உண்டு.. அதாவது ஆஃபீஸ்ல, பப்ளிக் ப்ளேஸ்ல யாராவது நமக்கு தெரிஞ்ச பொண்ணோ, தெரியாத பொண்ணோ லோ ஹிப்லயோ, லோ கட்லயோ டிரஸ் பண்ணிட்டு வந்தா நாம என்ன செய்வோம்? கமுக்கமா ரசிச்சிட்டு கம்முனு இருப்போம்.. சிலர் தன் ஃபிரண்ட்ஸ்சை கூப்பிட்டு தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்கற பாலிஸி பிரகாரம்..அவங்களுக்கும் அதை காட்டுவாங்க..


ஆனா நம்ம அண்ணன் கணேஷ் என்ன பண்ணுவார்னா  அவங்க செஞ்ச பிழையை கூப்பிட்டு சுட்டிக்காட்டுவாரு.. அதாவது “ இங்கே பாரம்மா.. இது இது இப்படி இருக்கு.. சண்டே ஈஸ் லாங்கர் தன் மண்டே..  ப்ளீஸ் கரெக்ட் இட்.. அப்டினு டக்னு சொல்லிடுவாரு.. இந்த மாதிரி லேடீஸ் பண்ற பிழைகளை எல்லாம் திருத்தறதால ஊட்டியில் உள்ள ஜேசீஸ் இளைஞர்கள் நற்பணி மன்றம் இவருக்கு இந்த பட்டத்தை கொடுத்திருக்கு.. பிழை திருத்தி... அண்ணன் அதையே  ட்விட்டர் கேண்டிலாவும் வெச்சுக்கிட்டார்..


இவரைப்பறி இன்னொரு சுவராஸ்யமான தகவல் இருக்கு.. அது முறைப்படி பாகம் 4 ல தான் வரனும்.. ஆனா பாருங்க.. இந்த தமிழ் சினிமா பார்த்து பார்த்து சஸ்பென்ஸ் மெயிண்ட்டெயின் பண்றதுக்குப்பதிலா இடைவேளைக்கு முன்னாலயே க்ளைமாக்ஸ் சீன்ல இருந்து 2 க்ளிப்பிங்க் முன் பாதிலயே காட்டி டெம்ப்போ ஏத்துவாங்களே,. அது பார்த்து பார்த்து எனக்கும் அது பழகிடுச்சு.. மிஸ்டர் அனாமிகா அண்ணன் பிழை திருத்தியை பற்றி சொன்ன தகவல் ஆக்சுவலி சேலம் பற்றிய பதிவில் தான் வரனும்.. இருந்தாலும் இப்பவே சொல்லிடறேன்..
 

 அண்ணன் பிழை திருத்தி தனது செல் ஃபோனில் உள்ள அரிய புகைப்படங்களின் கலெக்‌ஷனை காட்டு காட்டுனு காட்டறப்போ மாயவரத்தான் அதை க்ளிக் பண்ணி அவர் ட்விட்டர்ல போட்ட ஃபோட்டோ. இது ஒரு காபி பேஸ்ட் ஃபோட்டோ

 கார்ல அண்ணன் பிழை திருத்தியும்,( கணேஷ்) மிஸ்டர் அனாமிகா அண்ட் கோ 4 பேரும் போஉ இருக்காங்க.. அப்போ கார்ல பெட்ரோல் போட பெட்ரோல் பங்க் கிட்டே நிறுத்தி இருக்காங்க.. ( பின்னே பிளட் பேங்க்  முன்னாலயா நிறுத்தி இருப்பாங்க?)அப்போ அண்ணன் பிழை திருத்தி


“ இங்கே வேணாம்.. இங்கே கலப்பட பெட்ரோல் இருக்கும்..”

 அப்டியா? வேற எங்கே  நல்ல பெட்ரோல் இருக்கும்?


போங்க , சொல்றேன்

 அண்ணே.. ஹிந்துஸ்தான் பாரத் பெட்ரோல் பங்க் வந்தாச்சு.. இங்கே அடிக்கலாமா?


 ச்சே ச்சே.. இங்கே எல்லாம் வேணாம்..

 அப்போ எங்கே தான் அடிக்கறது?


இன்னும் போங்க.. எப்பவும் பெட்ரோல் பங்க் மெயின் சிட்டில அடிக்கக்கூடாது.. ஹை வேல தான் அடிக்கனும்.. அதே மாதிரி ஹோட்டலுமே பஸ் ஸ்டேண்ட், ரயில்வே ஸ்டேன்ட்ல சாப்பிட செலக்ட் பண்ணக்கூடாது.. கொஞ்சம் தள்ளித்தான் பார்க்கனும்.. அந்த மாதிரி..

சரிங்கண்ணே.. இது ஓக்கேவா?
அண்ணன் பிழை  திருத்தி உடன்

இப்போ அண்ணன் பிழை திருத்தி காரை விட்டு இறங்கி வலது கையை வலது இடுப்புல வெச்சு ( அவரோட இடுப்புல தான் )இடது கையை நீட்டி அங்கே இருக்கற பெட்ரோல் போடற பையனை பார்த்து “ ஏய்.. தம்பி.. இங்கே பெட்ரோல் நல்லாருக்குமா?:”அப்டினு கேட்டிருக்காரு,,


அதுக்கு அந்த பையன் “ ஏதோ சுமாரா இருக்கும்ணே”

அப்டினு பதில் சொல்லி இருக்கான்.. உடனே இவரு “ ஆங்க்.. ஏப்பா இங்கேயே பெட்ரோல் அடிச்சுக்கலாம்ப்பா.. அவனே சொல்லிட்டான்”

 இப்போ கார்ல உள்ளவங்க நிலைமையை கொஞ்சம் கற்பனை பண்ணிப்பார்த்துக்குங்க.. செம காண்ட் ஆகிட்டாங்க.. 

யோவ்.. ஒழுங்கா நாங்க அங்கேயே அடிச்சிருப்போம்.. எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி எங்களை எல்லாம் காய விட்டுட்டியேப்பா” அப்டினு கலாட்டா பண்ணி இருக்காங்க..

கட் த ஃபிளாஸ்பேக்.. அவங்க வந்துட்டாங்க..

மாயவரத்தான் ட்விட்டர் டி பில இருக்கற மாதிரியே தான் நேர்லயும் இருந்தாரு,, கணேஷ் கொஞ்சம் மாற்றம் இருந்தது.. கை கொடுத்து அறிமுகம் பண்ணிக்கிட்டோம்..


“ டீ சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமே?”

 சரி..வாங்க.. பஸ் ஸ்டேண்ட்ல ஒரு கடை இருக்கு, அங்கே போலாம்..


 வேணாம்ப்பா .. வேற ஒரு கடை இருக்கு.. அங்கே போலாம்னு  கூட்டிட்டு போனாங்க. பாருங்க நான் லோக்கல் ஆள் ( ம்க்கும், நீ லோக்கல்னு தான் எல்லாருக்கும் தெரியுமே?) எனக்கே தெரியலை.. ஆனா இவங்களுக்கு தெரிஞ்சுருக்கு..


பெருந்துறைல பழைய பஸ் ஸ்டேண்ட்க்கு பக்கத்துல  இன்ஃப்ரா டெக்ஸ்னு ஒரு எக்ஸ்போர்ட் கம்ப்பெனி.. அதுக்கு பக்கத்துல ஒரு பேக்கரி கடை.. அங்கே போனோம்.. அப்போ டைம் சரிஒயா 5.30.. அந்த கம்ப்பெனில இருக்கறவங்களுக்கு அதுதான் டீ டைம்.. இவங்க 2 பேரும் அதெல்லாம் தெரிஞ்சே தான் கரெக்ட்டா அந்த டைம்க்கு வந்தாங்களா? அல்லது எதேச்சையா அமைஞ்சுதான்னு தெரியலை..


காரை அங்கே நிறுத்தும்போதே தகராறு.. கடைக்காரர் அங்கே நிறுத்த வேணாம்..  தள்ளி நிறுத்துங்க. அந்த எக்ஸ்போர்ட் கம்ப்பெனி கார் வந்தா ஹார்ன் அடிச்சே கொல்வானுங்க..

 அப்டின்னாரு,,


 இன்னைக்கு ஒரு ஃபைட் கன்ஃபர்ம்னு நினைச்சேன்.. ஆனா ஆச்சரியம் பாருங்க.. மாயவரத்தான் எந்த சண்டையும் போடாம காரை தள்ளி நிறுத்திட்டு வந்துட்டார்..
 பதிவுலக வழக்கப்படி ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம் ( பதிவுல போட வேணாமா?)பிழை திருத்தி வெச்சிருக்கற கூலிங்க் கிளாஸ் என்னுதை விட நல்லாருந்தது. அதுல ரேபான்னு போட்டிருந்ததால அது ஒரிஜினல்னு நினைச்சு அண்ணே , 2 பேரும் டெம்பரவரியா கிளாஸ் மாத்திக்கலாம்.. ஃபோட்டோ எடுத்துக்கிட்டு எக்ஸேஞ்ச் பண்ணிக்கலாம்னேன். ஓக்கேன்னுட்டாரு.,.

 கார்ல , ஐ மீன் கார்க்கு வெளில நின்னு 3 ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்..ரோட்ல போறவங்க எல்லாம் ஒரு மாதிரியா பார்த்தாங்க.. ஏன்னா ஊட்டி, கொடைக்கானல் மாதிரி டூர் ஸ்பாட்ல நீங்க என்ன பண்ணாலும் யாரும் எதுவும் கண்டுக்க மாட்டாங்க.. ஆனா பெருந்துறை மாதிரி  ஒரு ஊர்ல ஒரு மாதிரி பார்க்கத்தான் செய்வாங்க..

2 டீ , ஒரு பால் சொன்னோம்.. மாயவரத்தான் ஒரு பன் சாப்பிட்டார்.. கணேஷ் ஒன் பை டூ ( பன்னை)

  சாப்பிட்டுக்கிட்டு ட்விட்டர் வம்பு தும்புகள் பற்றி பேசிட்டு இருந்தோம்..


இங்கே இருந்து சென்னிமலை எவ்ளவ் துரம்?


 11 கி மீ தான்.. வாங்க  மலைக்கு போயிட்டு போகலாம்.

 இன்னொரு நாள் வர்றோம்.. இப்போவே டைம் ஆகிடுச்சு.. கிளம்பலாம்..


 நான் பில் பே பண்னப்போனேன். மாயவரத்தான் தடுத்து நானே குடுக்கறேன்.. ஏன்னா நான் தான் உன்னை விட சீனியர்னாரு,,


 எங்க ஊருக்கு வந்திருக்கீங்க... நான் தான் செலவு  பண்ணுவேன் ( 2 டீ ஒரு பால், ஒரு பன் என்றாலும் செலவு செலவு தானே..?)


சின்னத்தம்பி பெரிய தம்பி படத்துல ஓப்பனிங்க் ஷாட்ல சத்யராஜூம், பிரபுவும் ஒரு காமெடி ஃபைட் போட்டு கடைசி வரை பில்லே கொடுக்காம எஸ் ஆவேங்களே. அந்த மாதிரி ஆகிடுமோனு கடைக்காரர் பயந்துட்டார்.. ஏப்பா , யாராவது ஒருத்தர் பில்லைக்கொடுங்கப்பா அப்டின்னார். அப்புறம் சீனியரான மாயவரத்தான் பில் பே பண்ணூனார்.. யூத் நான் கம்முன்னு இருந்துட்டேன்..


தொடரும்...டிஸ்கி 1 - ஆல்ரெடி ஈரோடு பதிவர் சந்திப்பு, சென்னை மெகா ட்வீட்டப் இதெல்லாம் ஓப்பனிங்க் நல்லாதான் போச்சு, ஃபினிஷிங்க் சரி இல்லைன்னு வடிவேல் பண்ணுன காமெடி மாதிரி ஆனதால செண்ட்டி மெண்ட்டலா.. மில்லி மெண்ட்டலா திங்க் பண்ணி என்ன முடிவு பண்ணி இருக்கேன்னா.. ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு தனி டைட்டில்.. ( ஏன்னா பாகம் 1, 2, 3 எல்லாம் போட்டா கிண்டல் பண்றாங்க..


டிஸ்கி 2 - என்னென்ன டைட்டில்ல பதிவு போடலாம்னு யோசிச்சு வெச்சிருக்கேன்னா


1. சேலம் லக்‌ஷமண்-ஸ்ருதி ஆர்க்கெஸ்ட்ரா - விமர்சனம்


2. சேலம் பதிவர் சந்திப்பு


3.சேலம் சாப்பாட்டுக்கடை


4. ஹோட்டல் ரூமில் நடந்த காமெடி கலாட்டாக்கள் (இரவு 12 டூ 2 ரூமில் நடந்தது என்ன/)


5. ஏற்காடு - ஒரு பார்வை


6.  திரைக்கு வர இருக்கும் , பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் ஒரு படத்தின் கதை திரைக்கதை


7. கமல் கலந்து கொண்ட சினிமா ஷூட்டிங்கில் நடந்த காமெடி கலாட்டா


8. மொக்கை ஃபிலிம் கிளப் - ஊட்டி பிளான்


9. சேலம் பெண்கள்  VS  ஈரோடு பெண்கள் ஒரு ஒப்பீடு


10. லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் ரசிகர்களா நீங்கள்?

11. தொலை தூர கார் பயணத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை


12. சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் சில கேள்விகள்

13. ஏரியில் போட்டிங்க் போவோர் கவனத்திற்கு


14. ஏற்காடு - சாப்பாட்டுக்கடை


15. மிஸ்டர் அனாமிகா பதிவர் சொன்ன சுவராஸ்யமான கேரக்டர்கள் - ஒரு அறிமுகம் ( ஆத்தா குரு)


16. பிரபல பதிவர்கள் சிம்பு- தனுஷ் ரேஞ்சுக்கு இருந்தவர்கள் திடீர் என ஆர்யா மாதவன் போல் நட்பு பாராட்டும் மர்மம் ( ஒரு ஃபிளாஸ்பேக் கதை)


17. பவர் ஸ்டார் டாக்டர் ஆக்டர் சீனிவாசன் - சேலம் மக்கள் சந்திப்பு பேட்டி


18. திருடா திருடி படத்தில் தனுஷ் இன் அப்பா கேரக்டரில் நடித்த பாடகர் கம் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் சேலத்தில் சந்தித்த பிரச்சனைகள்


19. இரவு நேரத்தில் திலை தூரப்பயணம் செய்கையில் கவனிக்க வேண்டியவை


டிஸ்கி 3 - டிஸ்கி 3 - ஒரே ஒரு டைம் சேலம் போய்ட்டு எதுக்கு இத்தனை பதிவுனு கேட்பவர்களூக்கு - இதயம் பேசுகிறது இதழில் மணியன் ஒரு நாட்டுக்கு போய்ட்டு வந்தா 34 வாரம் தொடர் எழுதறார். கல்கண்டு லேனா . தமிழ் வாணன் ஒரு டைம் ஊருக்கு போனா  50 தன்னம்பிக்கை கட்டுரை எழுதறார்.. ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுரண்டை. நான் முதல்ல  12 பதிவு தான் போடுவதா இருந்துச்சு, மாயவரத்தான் தான் ஒரு ட்வீட்ல 20 பதிவு போடப்போறார்னு நக்கல் அடிச்சார். அதான் 20 ஹி ஹி

5 comments:

”தளிர் சுரேஷ்” said...

சுவையாத்தான் இருக்கு! போகப் போகத்தெரியும் உங்க மொக்கை!

'பரிவை' சே.குமார் said...

ஆரம்பம் அமர்க்களமாத்தான் இருக்கு...
பத்தொன்பதும் வரட்டும்...
பார்ப்போம்...

Yoga.S. said...

இது ஒண்ணும் தேறுற கேஸ் மாதிரி தெரியல!

Unknown said...

ஆர்கெஸ்ட்ரா விமர்சனமா சித்தப்பு!? அட்ரா.....அட்ரா......

Unknown said...

யாரப்பா அது வளத்தியா ஒரு பதிவர் கூலிங் கிளாசோட ?
கழட்டச் சொல்லுங்க முதல்ல #lol