Tuesday, June 19, 2012

முனிவர்கள் ஏன் தவம் செஞ்சாங்கன்னா ..ஒரு சீக்ரெட் ஹி ஹி ஹி

அடப்பாவீகளா...எப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க !! pic.twitter.com/cRFbDv10
1. சன் டி வி டீம் மீட்டிங்க்கில் - விஜய் டி வி ல சினேகா கல்யாண முகூர்த்தத்தை அடிக்கடி காட்டி வெறுப்பேத்தறாங்க.. நாம ஏன் ஒரு ஸ்டெப் முன்னேறக்கூடாது?----------------------------

2. கோவை கொலை வழக்கில் துப்பு கொடுத்த இட்லி வியாபாரி! : # நல்ல வேளை, குஷ்பூ இட்லி சேல்ஸ் செஞ்சாங்காட்டித்தான் ஐடியா வந்துச்சுன்னு உடன்பிறப்புக்கள் சொல்லலை


--------------------


3. டியர், இப்போ இழவு வீட்டுக்குப்போறோம், முகத்தை சோகமா வெச்சுக்கோ, ஐ மீன் எப்பவும் போல் இயல்பா இரு போதும்------------------------------4. ஜட்ஜ் - கொலை நடந்த அன்னைக்கு நீ எங்கே இருந்தே? என்ன செஞ்சுட்டு இருந்தே? கைதி - கேனத்தனமான கேள்வி, கொலைதான் செஞ்சுட்டு இருந்தேன்


--------------------------------

5. கலைஞர் - ஜனாதிபதி தேர்தல்ல ஏதாவது வாய்ஸ் தர்றது? 


ரஜினி - -ஆக்டிவ் வாய்ஸா? பாசிவ் வாய்ஸா?


-------------------------------


ஆசிரியர்:சரி,சரி,அதையாவது பாஸ் பண்ணித்தொலை.


6. குக்கர் ஆஃபீஸ் போயிருக்கா? புரியலையே?  


எங்க வீட்ல என் கணவர் தான் குக்


-----------------------------

7. டியர், டைம் 7 ஆகிடுச்சு, இருட்டிடுச்சு, நான் கிளம்பறேன்.. ம்க்கும், இனிமேல் தான் லவ்வே ஸ்டார்ட் பண்ணலாம்னு இருந்தேன்


---------------------------------

8. எனக்கு எந்த டெய்லரும் செட் ஆகலை.. எலிசபெத் டெய்லரை கூட ட்ரை பண்ணிட்டேன்
----------------------------------------


9.எளியார்,வலியார் என அனைவரையும் ஒரே மாதிரி மதிபோம், பிள்ளையார் சுழியை பெற்றோரை மதிப்பதில் இருந்து தொடங்குவோம்--------------------------------------


10. கெட்டாலும், கெட் டுகெதர்  லைஃப் என்றாலும் மேன் மக்கள் மேன்மக்களே!


----------------------------· ·

11. அந்த காலப்பெண்கள் இரக்க சுபாவம் உள்ளவர்களாகவும், இந்தக்காலப்பெண்களில் பலர் இறக்க சுபாவம் உள்ளவர்களாகவும் ... # லோ ஹிப் லேகா


-------------------------------------

12. நானும், என் ஆளும் சரோஜா தேவி புக்கை ஒண்ணா படிச்சா அது கம்பைண்டு ஸ்டடியா? # டவுட்டு டேவிட்டு,ரிவிட்டு ரீட்டா


------------------------------------


13. தவத்தை கலைக்க அழகிகள் வருவார்கள் என்பது தெரிந்துதான் பல முனிவர்கள் தவமே செய்திருக்கக்கூடும் # தவமாய் தவமிருந்து-----------------------------


14. பெட் ரெஸ்ட் எடுக்கனும்னு டாக்டர் சொல்றப்போ தன் பெட்டை ரெஸ்ட் எடுக்க வெச்சுட்டு மனைவியின் பெட்டில் போய் படுத்துக்கிட்டவன் குணமாவானா?---------------------------------------


15. ஞாபகங்கள் என்பது ஒயின் மாதிரி,காலம் கூடக்கூட ருசி அதிகம் #  DAM 999
--------------------------------
16. நோக்கியா, பெப்சி, சோனி, யாகூ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள்,  71 ஆயிரம் ஊழியர்களை, பணிநீக்கம் செய்ய முடிவு #  ரொம்ப பன்னாட்டுதான்


------------------------


17. ராகிங் கொடுமையை தடுக்க அனைத்து கல்லூரிகளிலும் புகார் பெட்டி # அந்த புகார் பெட்டிதான் முதல்ல காணாம போகும்
-----------------------------

18. நல்லவங்களுக்கு காலம் இல்லை, ஜனாதிபதி தேர்வில் கலாம் இல்லை-----------------------------


19. காதலியுடன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை-----------------------------


20. நித்தியானந்தா ஒரு குழந்தை, விட்டுடுங்க:போலீஸாரிடம் மன்றாடிய பெண் விஞ்ஞானி # மேடம், நீங்க எது பத்தி ஆராய்ச்சி செஞ்சீங்க?நித்தி பத்தியா?


--------------------------------------

ஜோக்ஸ்1. கட்சில அவருக்கு பெரிய போஸ்டாமே? ஏகப்பட்ட வேலையாமே?

ஆமா, டெயிலி பிரைம் மினிஸ்டருக்கு லெட்டர் எழுதற வேலை.. 

----------------------------------


2. மன்னா! நீங்க போரில் தோற்றதை புலவர் கிண்டல் அடிக்கிறார்..

எப்படி?

நொந்த சஷ்டிக்கவசம் பாடறாரே?


---------------------------------------------

3. உங்க காதல் மீட்டிங்க் குளத்துலதான் நடக்குமா? சரி.. அதுக்கு ஏன் பயப்படறே?

நீ வேற.. அவ சொந்த ஊரு கூடன் குளம்.. 


--------------------------------------------------


4. மலையாள நடிகையை கூட்டிக்கிட்டு தலைவர் பப்ளிக்கா வாக்கிங்க் போறாரே?

ஏதோ “ரதி” யாத்திரையாம்.. 

-----------------------------------------


5. அவரு அன்னா ஹசாரே ஆதரவாளர் போல..

எப்டி சொல்றே?


தேர்ந்தெடுக்கப்பட்ட மனைவியை திருப்பி அவங்கம்மா வீட்டுக்கே அனுப்பும் உரிமை ஒவ்வொரு கணவனுக்கும் தேவைங்கறாரே?

-------------------------------------------


-

6. தலைவர் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்காரு..

எப்டி சொல்றே?

பீடா, மாவா அடிக்கடி போடற பழக்கம் உள்ளவங்கதான்  மாவோயிஸ்ட்டா?ங்கறாரே? 

-----------------------------------------


7. தலைவரே, நம்ம மகளிர் அணித்தலைவி ரொம்ப நேர்மையானவர்னு எப்படி சொல்றீங்க?

அவங்க வீட்டு பாத்ரூம்ல ஹமாம் சோப் இருக்கறதை பார்த்தேனே?

----------------------------------------


8. ரியாலிட்டி ஷோக்கள் தலைவருக்கு  பிடிக்காதாமே?

ஆமா, அவருக்கு ரியல்னாலே பிடிக்காது..


---------------------------------
9. உங்க படம் பார்க்க பெயிண்ட்டிங்க் மாதிரி இருக்கு..

ரொம்ப தாங்க்ஸ்ங்க..

ஆனா நீங்க வர்ற சீன்ஸ் மட்டும் வாமிட்டிங்க்ஸ் மாதிரி இருக்கு.. 


-------------------------------------


10. தலைவர் லெட்டர்ல தேவி துணைன்னு எழுதறாரே?அது அவரோட
குல தெய்வமா?

ஆமா, அவரோட சம்சாரம் தான்..

-----------------------------------
11.   தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்?

வாழும் மட ஆத்மா ! என அவரை வர்ணிச்சாங்களாம்!!


-------------------------------------
12.  என் பையன் டென்த் ஃபெயில் ஆகிட்டான்..

இதுக்கு ஏன் வருத்தப்படறீங்க?  கல்வி அமைச்சராக்கூட ஆகலாம்..

-----------------------------------------
13.  தலைவருக்கு லொள்ஸ் ஜாஸ்தி..


ஏன்?


சோ அய்யரை நீக்கிட்டு சந்தானம் செட்டியாரை தேர்தல் கமிஷனரா நியமிக்கனும்கறாரே?

-------------------------------------


14. மிஸ்டர், பஸ்ல பொண்ணுங்களை இடிக்கறீங்களே? இது தப்பில்லை?

மேடம், இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்... பழமொழி, குறள் எதும் படிச்சதில்லை?

----------


15.உன் மீதான என் கோபத்தை உள்ளுக்குள் சேமித்து வைக்க நான் விரும்புவதில்லை, உதடுகள் வழியே அவற்றை வெளியேற்றி விடுகிறேன்

-----------------------------

16.  கடல் - என் கசப்பான இதயத்திற்குள் இன்னும் எது வரை நுழைவதாய் உத்தேசம்? 

நதி - நீ இனிப்பாகும்வரை # ரீமிக்ஸ் ஆஃப் SMS


 --------------------

0 comments: