Friday, June 22, 2012

சகுனி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQF6RBDRvl465d9UY4EXfZR-wJFf97KWzWKxKrmHUJfgfZJ_gFe-TZygMFeNmDiG2nAtuVDRDUjx_ZDCGFe8nS4oiMrawEGV5c0y5cO04f2FeIdeOnnftl_ixUzQE2LPJItAlp-TR0do6G/s1600/Saguni-Movie-Release-Date-Wallpapers-+(2).jpg
பராசக்தி சிவாஜிகணேசனுக்குப்பிறகு  அறிமுகம் ஆன முதல் படத்திலேயே அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்ற ஹீரோ கார்த்தி என்றால் அது மிகை ஆகாது.. பருத்தி வீரன் மெகா ஹிட்டுக்குபின் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் கமர்ஷியல் சக்சஸ் ஆகாவிட்டாலும் அது ஒரு முக்கியமான படமே.. காதல் பயணமாக வந்த லிங்கு சாமியின் பையா, ஆக்‌ஷன் படமான நான் மகான் அல்ல, போலீஸ் கலக்கல் கமர்ஷியல் சிறுத்தை  என கார்த்தியின் தொடர் வெற்றி  கேரக்டர் செலக்‌ஷன், கதை தேர்வு முன்னணி ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை..

படத்தோட கதை என்ன? ஹீரோவின் பாரம்பரிய மிக்க குடும்பத்தின் பங்களா  விஜய்காந்த்தின்  மண்டபம் மாதிரி ரயில்வே லைன் அங்கே கொண்டுவருவதால் இடிக்கப்போறாங்க. அதை தடுக்க ஹீரோ தூள் பட விக்ரம் மாதிரி பட்டணம் போறாரு.. அரசியல்வாதிகளை சந்திக்க ட்ரை பண்றாரு,..  முடியல.. அதாவது அவர் நினைச்ச மாதிரி தடுக்க முடியலை.. 


 அமைதிப்படை சத்யராஜ் மாதிரி பிளான் போடறார்....சொர்ணாக்கா மாதிரி இருக்கற ராதிகாவை கவுன்சிலர் ஆக்கி மேயர் ஆக்கிடறார்.. .. சாதா சாமியாரா இருக்கும் நாசரை ஸ்பெஷல் சாமியார் ஆக்கி ஈசா யோகா மையம்காரர் மாதிரி அசத்த வைக்கறார்.. 


 இவர் பண்ற அலப்பறை பார்த்து நாட்டோட சி எம்மான பிரகாஷ்ராஜே பயந்து கஞ்சா கேஸ்ல உள்ளே போட அங்கே ஜெயில்ல எதிர்க்கட்சித்தலைவ்ரை  சந்திச்சு அவரை சி எம் ஆக்க பல முயற்சி எல்லாம் பண்றாரு..

 பிரகாஷ் ராஜ்க்கு ஒரு கீப்.. ( ஒரு நாட்டின் சி எம் க்கு ஒரே ஒரு கீப் தானா? அப்டினு எல்லாம் லாஜிக் பார்க்கப்படாது.. தெரிஞ்சு 1.. தெரியாம எத்தனையோ? ) எலக்‌ஷன்ல ஜெயிக்க , அனுதாப ஓட்டு வாங்க அவரையே போட்டுத்தள்ள ஐ மீன் சாகடிக்க திட்டம் போடறார்.. எல்லாத்தையும் ஹீரோ எப்படி முறியடிக்கறார் என்பதை ரெண்டே முக்கால் மணி நேரம் இழு இழுன்னு இழுத்து சொல்லி இருக்கார் டைரக்டர். ஹீரோ கார்த்திக்கு குருவி தலையில் பனங்காய் வெச்ச மாதிரி  வயதுக்கு மீறிய வேட.ம்.. ஒரு ரஜினியோ, சத்யராஜோ செய்ய வேண்டிய பவர்ஃபுல் கேரக்டர்.. விளையாட்டுத்தனமா பண்றார்.. முதல் முறையா ஹேர் ஸ்டைல், கெட்டப் எல்லாம் மாற்றி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கிறார்.. வழக்கமா கார்த்தி படங்களில் அவர் எதார்த்த நடிப்பு கொடி கட்டிப்பறக்கும்.. அது இதில் கொஞ்சம் மிஸ்சிங்க்.. பாடல் காட்சிகளில் , டான்ஸ் ஸ்டெப்களில் அவர் விஜய் மாதிரி ட்ரை பண்றதெல்லாம் ஓவரோ ஓவர்.. ( அழகிய தமிழ்மகன் பட பாடல்களில் வரும் ஸ்டெப் )


அடுத்து சந்தானம்.. இப்போவெல்லாம் ஒரு கமர்ஷியல் சக்சஸ் படம்னா அதுக்கு சந்தானம் கண்டிப்பா தேவைப்படுது..  முதல் பாதி முழுவதும் வர்ற கேரக்டர்.. பின் பாதில அதிகம் காணோம்.. வந்த வரை ஓக்கே... ஆனா இன்னும் நல்லா அந்த கேரக்டரை டெவலப் பண்ணி இருக்கலாம்.. ஐ திங்க் ஏதோ கால்ஷீட் பிரச்சனையால பின்பாதி படத்துல அவர் இல்லாத மாதிரி பார்த்துக்கிட்டாங்க போல.. படத்துல அவர் அடிக்கும் டைமிங்க் விட் மட்டும் 37.. சரக்கு பற்றியும் , குடிகாரர்களுக்கு சப்போர்ட் பண்ணி அவர் பேசும்  20 லைன் வசனம் காதிலேயே விழவில்லை.. ஒரே கைதட்டல் தான்.. தியேட்டர்க்கு வந்தவங்க 90 % பேர் குடிகாரங்க போல.. 


வில்லனாக பிரகாஷ்ராஜ்.ட்ரெய்லர்களில் இவரை காட்டவே இல்லை.. கோட்டா சீனிவாசராவைத்தான் காட்னாங்க.. என்ன உள்குத்தோ? சி எம் ஆக அவர் காட்டும் கெத்து, நயவஞ்சகம் எல்லாம் ஓக்கே.. நாட்டோட சி எம்மாக இருப்பவரை மக்கள் மத்தியில் இவர் கெட்ட பெயர் வாங்க வைக்கும் நடிப்பு அட்டகாசம்.. ஆனால் அதற்கு அவர் செய்யும் ஐடியா நம்ப முடியாதது.. 

கோட்டா சீனிவாசராவை அந்த பல்லி சிரிப்புக்காகவே ரசிப்பவர்கள் உண்டு.. திருப்தியான நடிப்பு.. 

 ஹீரோயின் பிரணிதா.. கொழுக் மொழுக் வெண்ணேய்ச்சிலை மாதிரி இருக்கார்.. ஒரே ஒரு பாடல் காட்சியின் 6 வது வரியில் தன் லக்கி நெம்பர் 42 என காட்ட முயற்சித்து தோற்கிறார்.நடிக்கவெல்லாம் வாய்ப்பே இல்லை.. கமர்ஷியல் படத்தில், அதுவும் தமிழ் சினிமாவில் அவ்ளவ் தான்.... 3 டூயட்... அப்புறம் க்ளைமாக்ஸ்ல வந்தா போதும்மா என சொல்லிட்டாங்க போல.. இளமைத்துள்ளல் அதிகம் மிளிர்வது  பிரணிதாவிடமா? ஹன்சிகாவிடமா? என்று பட்டின் மன்றம் வைத்தால் ஹேர் (hair)இழையில் . ஃபேர்(fair) இடையில் இவர் ஜெயிக்க வாய்ப்பு உண்டு என்பதை அவரது லக்கி நெம்பர் 38 அடிச்சு சொல்லுது .


இன்ஸ்பெக்டராக அனுஷ்கா வரும் காட்சிகள் 3 தான் என்றாலும் அட்டகாசம்.. ஆண்ட்ரியா, ரோஜா  என்று வி ஐ பி நடிகைகளை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பது இயக்குநரின் சாமார்த்தியம்.. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2y0H3IYC05dHlfFbm5ieqXXXGzjv-HPFqe1tubSOWNniQ3dgPv_T3PntkXsVYLRiRj367dI4a8RU2f4KFmXWVhMA9pE8Z3tJSn97Jed-idspYt-oWQuqXTVRgDurkOhzxigKagZRFH-_S/s1600/Karthi+Saguni+Latest+Stills%252CPhotogallery_0.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. சாதாரண கதையை திரைக்கதையால் சுவராஸ்யமாக சொல்ல முடியும் என்று காட்டியமைக்கு.. குறிப்பா கார்த்தியின் ஃபிளாஸ்பேக் காட்சிகள் கட் பண்ணி கட் பண்ணி சந்தானத்திடம் சொல்லப்படுவதும் ஒவ்வொரு காட்சிக்கும் அவர் கொடுக்கும் கவுண்ட்டர் கமெண்ட்டும் அப்ளாஸ் அள்ளுது.. 


2. பாடல் காட்சிகள் இந்த மாதிரி அரசியல் கமர்ஷியல் படத்துக்கு தேவை இல்லை என்றாலும் 4 பாடல்கள் நல்லா பண்ணி இருக்காங்க.. குறிப்பா வெள்ளை பம்பரம் என்னை சுத்துதே பாட்டு.. ஆனா காட்சிப்படுத்துவதில் இன்னும் கவி நயம் வேண்டும்.. போட்டது பத்தலை மாப்ளை எனும் பாட்டு குடிகாரர்களின் மப்பு கீதம் ஆக வாய்ப்பு உண்டு.. 


3. என்ன நடந்தாலும் அலட்டிக்கொள்ளாத ஹீரோ கேரக்டரைஷேஷன் அருமை.. அதே போல் சந்தானம் கேரக்டரின் டைமிங்க் சென்ஸ் அசத்தல்.. http://chennaionline.com/images/gallery/2012/June/20110907105022/saguni_movie_latest_photos_images_stills_49.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. ஒரு நாட்டின் சி எம் பப்ளிக்ல பிரஸ் மீட் நடக்கும்போது ஒரு லேடி கிட்டே செல்ஃபோன்ல கில்மாப்படம் காட்டுவாரா? கேமரா எல்லாம் பார்த்துட்டு இருக்கு.. பிரகாஷ்ராஜின் சதி அது என்றாலும் எப்படி அதை நம்ப முடியும்.. ? சாத்திய அறைக்குள்ளே ஏதாவது பண்ற மாதிரி வீடியோ காட்டி இருந்தா இன்னும் கெத்தா இருந்திருக்கும்.. இது ரொம்ப சிறுபிள்ளைத்தனமா  இருக்கு..


2. ஊருக்கெல்லாம் தெரிஞ்சுடுச்சு.. அவமானம்.. ஓக்கே. அதுக்காக யாராவது தற்கொலை செய்வாங்களா? அப்படியே பண்ற மாதிரி இருந்தாலும் அவர் மட்டும் பண்ணிக்கலாமே? எதுக்கு மொத்தக்குடும்பமும்? அவங்க என்ன பாவம் செஞ்சாங்க.?


3. ஹீரோ கார்த்தி ஹீரோயின் கிட்டே படத்தோட 4 வது ரீல்ல “உனக்காக முதல் முதலா கோட் எல்லாம் போட்டிட்டு வந்திருக்கேன்.. அதுவும் முதன் முதலா.”. அப்டினு ஒரு டயலாக் சொல்றார்.. ஆனா படத்தோட முதல் காட்சிலயே அவர் கோட்டோடதான் வர்றார்.. அது போக 3 சீன்ல கோட்ல தான் இருக்கார்..


4. ரோஜாவை வில்லியா காட்டி இருக்க வேண்டிய அவசியமே இல்லை.. அப்படியே காட்ட நினைச்சா அதாவது வில்லியா காட்ட நினைச்சா வேற நடிகையை போட்டிருக்கலாம்.. அந்த கேரக்டருக்கு.. ஏன்னா உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் படத்துல அவர்க்கு என்ன நிலைமை வந்ததோ அதே நிலைமை தான் இப்போ ஹீரோவுக்கு , மக்கள் கம்பேர் பண்ணி பார்க்க மாட்டாங்களா? 

5. சொந்த அத்தையான ரோஜா ஹீரோவைப்பார்த்து “ உன்னை வேலைக்காரனாத்தான் வெச்சிருந்தேன்” வேற எண்ணம் இல்லைனு சொல்றார்.. 28 வயசுப்பையனை  கட்டித்தரும் எண்ணம் இல்லாத பெண்ணைப்பெற்றவர்கள் பெண்ணை அவன் கூட தனியா விட்டுட்டு வெளீயூர் எல்லாம் போவாங்களா?


6. ஹீரோயின் ஹீரோவை லவ்வறார்.. ஹீரோயின் அம்மா ஹீரோ கிட்டே “ நீ சொத்துக்காக ஆசைப்பட்டுத்தானே வந்தே?”அப்டினு கேட்கறார்.. ஆனா ஹீரோயின் மனசில் என்ன இருக்கு?ன்னு சொல்லவே இல்லை.. அம்மா சொன்னதைகேட்டு அவர் ஹீரோ வேணாம்னு சொன்னதா வசனத்தில் தான் வருது.. கதைக்கு முக்கியமான நிலைப்பாட்டைக்காட்ட அதுக்கு தனி சீன் வெச்சிருக்கனும்.. 


http://1.bp.blogspot.com/-P9NvFJuRBKc/Tnfkr2GN46I/AAAAAAAANNY/pU31yJc49SU/s1600/actress-praneetha-black-saree-hot-stills-01.jpg


7. படம் இடைவேளை முடிஞ்சு திரைக்கதை சுறு சுறுப்பா டேக் ஆஃப் ஆகற டைம்ல அந்த மெலோடி சாங்க் ( மனசெல்லாம் ) எதுக்கு? 


8. கவுன்சிலர் எலக்‌ஷன்.. அதுக்காக பிரச்சாரம் நடப்பது, மக்களைக்கவர ஐடியா பண்றது எல்லாமே மை படத்தின் அப்பட்டமான காப்பி.. 


9. கிரண் கார் ஆக்சிடெண்ட் ஆகறப்போ முத டைம் காட்டும்போது லாங்க் ஷாட்டில் அந்த கார் மட்டும் எரியற மாதிரி காட்டறாங்க. ஆனா என்ன நடந்துச்சுன்னு விளக்கம் சொல்லும் ஃபிளாஸ்பேக் காட்சியில் பக்கத்துல கார்த்தி வந்த காரும் நிக்குது.. 

10.என்னதான் எரிஞ்சு போனாலும் கார்ல எலும்புக்கூடாகவாவது டெட் பாடி இருக்கனுமே.. அது இல்லாம ஒருத்தி இறந்ததா எப்படி எல்லாரும் நம்புனாங்க?.

11. ஹீரோவோட வீட்டை இடிக்க ஹைவேஸ் காரங்க ட்ரை பண்ணி இருந்தா இந்தக்கதை ஓக்கே.. ஆனா ரயில்வே டிராக்,.. அது மத்திய அரசு சம்பந்தப்பட்டது..   ஆனா சி எம் ஆன உடனே முத உத்தரவுல அவர் சைன் பண்ணணி அதை  கேன்சல் பண்ணிட்டதா வருதே? அது எப்படி? மத்திய அரசுல கூட்டணி வகிச்சு கலைஞர் மாதிரி டெல்லி போய் சாதிச்சாலும் அதை ரயில்வே மினிஸ்டரோ, அல்லது பி எம்மோதானே அறிவிக்க முடியும்? 


12. படம் முடியற டைம்ல ஹீரோ தமிழக அரசியல் திருப்பத்தை முடிச்சுட்டு டெல்லி  அரசியலுக்காக யாரோ ஃபோன்ல கூப்பிடறாங்க என்பதும் அடுத்து அவர் கிங்க் மேக்கரா ஒரு பி எம்மை  உருவாக்கப்போறார் என்பதும் ரொம்ப ஓவர்..http://www.cinepicks.com/tamil/events/actors-meet/karthi-santhanam-and-silambarasan-at-actors-meet-443.jpgஎதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 43


எதிர்பார்க்கும் குமுதம்  ரேங்க் - ஓக்கே 


சி.பி கமெண்ட் - ஜாலியான கமர்ஷியல் படம் தான்.. அடிதடி, ரத்தம், வன்முறை எல்லாம் இல்லாம காமெடியா படம் போவதால் பெண்கள் உட்பட எல்லாரும் டைம் பாஸ்க்கு பார்க்கலாம்.. அறிமுக இயக்குநருக்கும் சரி, கார்த்திக்கும் சரி இது ஒரு வெற்றிப்படமே

 ஈரோடு அபிராமில இந்தபடம் பார்த்தேன் 


டிஸ்கி -1..சகுனி படத்தின் 30% காட்சிகள் காப்பி அடிக்கப்பட்ட படமான மை படத்தின் லிங்க் http://www.adrasaka.com/2012/04/blog-post_25.html


டிஸ்கி 2 - படத்துல மனம் கவர்ந்த வசனங்கள்ல மொத்தம் 55 வசனங்கள் http://www.adrasaka.com/2012/06/blog-post_23.html
 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLvL9nESMcNCr5K3kGu4p-Z9S0LWxYUNAX2pp7Zp_TMaa8-ciOOmpwqlmDjhyMq-QNuja5PVX8LlfJsI_4QTNW1v0jyI_ScLn_8RlPfYSH5eLdQ5ijnXUBEB1S923NP_HduHDq8TGXXTmd/s1600/praneetha.8.jpg

24 comments:

தாமரைக்குட்டி said...

முதல் பாயாசம்....

தாமரைக்குட்டி said...

ரெண்டாவது லட்டு!

தாமரைக்குட்டி said...

விறு விறு விமர்சனம்.....

தாமரைக்குட்டி said...

ஏகப்பட்ட லாஜிக்மிஸ்டேக் கூறிவிட்டு வெற்றிப்படம் என்பது என்ன கதை?

தாமரைக்குட்டி said...

டயலாக்ஸ் தனிபதிவு போடுங்கோவ்வ்....

தாமரைக்குட்டி said...

டீட்டைய்லான விமர்சனம்.... நன்றி செந்தில்.... பில்லாவ மறந்துடப்போறிங்க.... (டேய்... நீ ஃபேஸ்ஃபுக்ல டாச்சர் பண்ணுறவன் தானே? ஹிஹிஹிஹி நான் தான்.....)

Thirumalai Kandasami said...

padam hitta ..?

Sathya said...

நல்ல விமர்சனம். வசனத்திற்காக காத்து இருப்பதில் தப்பே இல்ல

சி.பி.செந்தில்குமார் said...

@தாமரைக்குட்டி

லாஜிக் மிஸ்டெக்கே இல்லாத படங்கள் வெற்றி பெறுவதும் உண்டு, ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ் உள்ல படங்கள் பம்ப்பர் ஹிட் அடிப்பதும் உண்டு,, மக்களுக்குத்தேவை எண்ட்டர்டெயின்மெண்ட்.

'பரிவை' சே.குமார் said...

சுடச்சுட சூடான விமர்சனம்,

Manikandan said...

Ideas kudukaratha vittutu.. neenga oru padam pannuga boss...

”தளிர் சுரேஷ்” said...

நல்ல விமரிசனம்! படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது!

காலப் பறவை said...

good review

vimalanperali said...

எண்டெர்டெண்ட் மூவி ரகம் போலிருக்கிறது படம்.நல்ல விமர்சனம்.நன்றி வணக்கம்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

Karthikeyan Rajendran said...

ஹீரோயின் படத்த பெரிசா போட்டு பல ஹிட்டு வாங்கிட்டீங்களே

உணவு உலகம் said...

விமரிசனம்- விமரிசை.

rajesh said...

padam rempa sumarthan

GG Govindaraj Guru said...

1. ஒரு நாட்டின் சி எம் பப்ளிக்ல பிரஸ் மீட் நடக்கும்போது ஒரு லேடி கிட்டே செல்ஃபோன்ல கில்மாப்படம் காட்டுவாரா? கேமரா எல்லாம் பார்த்துட்டு இருக்கு.. பிரகாஷ்ராஜின் சதி அது என்றாலும் எப்படி அதை நம்ப முடியும்.. ? சாத்திய அறைக்குள்ளே ஏதாவது பண்ற மாதிரி வீடியோ காட்டி இருந்தா இன்னும் கெத்தா இருந்திருக்கும்.. இது ரொம்ப சிறுபிள்ளைத்தனமா இருக்கு..


இக்காட்சியில் அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைபேசியில் பேசி கொண்டிருப்பதை காணலாம்.அதலால் அவர் மற்றொரு தொலைபேசியில் அழைப்பு வர அதை யாரென பார்க்க சொல்கிறார்........நீங்கள் கூறியது போல எந்த சிறுபிள்ளைத் தனமும் இல்லை

GG Govindaraj Guru said...

3. ஹீரோ கார்த்தி ஹீரோயின் கிட்டே படத்தோட 4 வது ரீல்ல “உனக்காக முதல் முதலா கோட் எல்லாம் போட்டிட்டு வந்திருக்கேன்.. அதுவும் முதன் முதலா.”. அப்டினு ஒரு டயலாக் சொல்றார்.. ஆனா படத்தோட முதல் காட்சிலயே அவர் கோட்டோடதான் வர்றார்.. அது போக 3 சீன்ல கோட்ல தான் இருக்கார்..


அந்த காட்சியில் அந்த வசனம் சரியானதாகவே உள்ளது,ஏனெனில் பிளாஸ்பேக்கில் அந்த வசனம் உள்ளதை நிங்கள் கவனிக்க வேண்டுகிறேன்...

Santhosh said...

பரினிதாவையும் ஹன்சிகாவையும் கம்பேர் பண்ணிங்க பாத்திங்களா தலைவா.. எங்கேயோ போயிட்டிங்க..

அதை விட பலகோடி நூற்றாண்டுக்கு முன்னாடி ரோஜா தவிச்ச மாதிரி இங்க கார்த்தி தவிக்கிறாருன்னு சொல்லி யிருக்கிங்க பாருங்க.. ஸ்யப்பா.. எப்படி தல உங்களால மட்டும் உங்க கம்பேரிசனே கம்பேரிசன்..

Santhosh said...

தலைவா அந்த 52 வசனங்களுக்காக வெயிட்டிங்..

Santhosh said...

தலைவா அந்த 52 வசனங்களுக்காக என்னோட சேர்ந்து சினிமா துறையே வெயிட்டிங்..

மன்மதகுஞ்சு said...

அண்ணே அது என்ன 42 மேட்டர் படத்தை திரும்ப பார்க்க வைச்சிட்டீங்களே