Thursday, January 26, 2012

வெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்கள் முன்னோட்ட விமர்சனம்)

வழக்கமா வெள்ளிக்கிழமை தான் படம் ரிலீஸ் ஆகும்.. இப்பவெல்லாம் வியாழக்கிழமையும் ரிலீஸ் பண்றாங்க. ஏதோ ஒரு ரீசன் இருக்கும்.. அதுவும் இந்த வாரம் 26 குடியரசு தினம் லீவ் நாள் என்பதால் அந்த ஒரு நாள் கூட்டமாவது வரட்டும்னு சில படங்கள் ரிலீஸ் ஆகுது போல.. 

http://mp3freedownloads.fingertipszone.com/wp-content/uploads/2012/01/paari.jpg

1. பாரி -  எல்லாம் புது முகம்.. ஹீரோ பேரு ராகுல். யாரும் பயப்படாதீங்க, வெறும் ராகுல் தான்.. ஹீரோயின் பேரு பீனா ( எப்படி எல்லாம் பேரு வைக்கறாங்க?) டைரக்டர் பேரு ரஜினி. நம்ம ரஜினி இல்ல.. கட்டிட காண்ட்ராக்டர் மகன் தான் ஹீரோ.. இவர் வழக்கமா தமிழ் சினிமா ஹீரோக்கள் போல வேலை வெட்டி இல்லாம சும்மா சுத்திட்டு இருக்கறவர்.. அவர் வாழ்க்கைல கிராஸ் ஆகறார் ஹீரோயின்.. அதுக்கப்புறம் அவர் வழ்க்கைல என்ன நடக்குது என்பது தான் கதை.. ஹி ஹி 

http://123tamilgallery.com/images/2011/07/Paari-83.jpg

சேலம் ஏரியாவில் தான் அனைத்து நடிகர், நடிகை செலக்‌ஷன் நடந்ததாம்.. இது வரை கேமராவையே பார்க்காத புது முகங்களாம்.. பார்ப்போம்.
http://www.isaithenral.info/musicu/2011/Theni%20Mavattam/theni-mavattam-%20250.jpg

2. தேனி மாவட்டம்-கூகுள் சர்ச்ல மட்டும் இல்லை, ஈரோடு மாவட்டத்துல இருக்கற பல சர்ச்லயும் தேடிப்பார்த்தும் இந்தப்படத்தை பற்றி எந்த விபரமும் கிடைக்கலை.. படத்தோட டைரக்டருக்கும், தயாரிப்பாளருக்கும் நான் சொல்லிக்கறது இன்னான்னா ஒரு படத்தை எடுக்கறதோட நம்ம கடமை முடிஞ்சுதுன்னு நினைச்சுடக்கூடாது, மார்க்கெட்டிங்க் ரொம்ப முக்கியம்.. படம் வரப்போற அன்னைக்கு கூட எந்த செய்திகளூம் எந்த மீடியாவிலும் வர்லைன்னா தியேட்டருக்கு ஆடியன்சை எப்படி வர வைப்பீங்க? ஹீரோ, ஹீரோயின் யார்னு தெரியாது, டைரக்டர் பற்றி எந்த விபரமும் மக்களுக்கு தெரியலைன்னா  எப்படி கூட்டம் தானா வரும்னு நினைக்கறீங்க?

http://www.cinepicks.com/tamil/events/theni-mavattam-audio-launch/theni-mavattam-audio-launch-stills-4.jpga

இவங்களை பார்த்தா புது முக ஆண்ட்டி மாதிரி தெரியுது, இவங்க தான் ஹீரோயின் போல. இவங்களை மட்டும் கஷ்டப்பட்டு கொஞ்சம் இஷ்டப்பட்டு தேடி கண்டு பிடிச்சேன்..

http://www.hindustantimes.com/Images/HTEditImages/Images/Agneepath-new-poster.jpg

3. AGNEEPATH - 1990ல வந்த அதே அக்னிபாத் படம் தான் இப்போ ரீமேக் ஆகி வந்திருக்கு.. ஹீரோ ஹிருதிக்ரோஷன்.. சஞ்சய்தத் வில்லன், பிரியங்கா தான் ஹீரோயின், நம்ம ஊர் ஆள் ரவி கே சந்திரன் தான் ஒளிப்பதிவாளர்.. ரிஷி கபூர் ஒரு நெகடிவ் ரோல்ல வர்றார்.. இது கிட்டத்தட்ட மலையூர் மம்பட்டியான் கதைதான்.. அதாவது ஹீரோ எல்லா படத்துலயும் வர்ற மாதிரி வேலை வெட்டி இல்லாத ஆக்ரோஷ கோபக்கார இளைஞன்..

ஹீரோவோட அப்பா தூக்குல தொங்கறதுக்கு வில்லன் காரணம் ஆகிடறார்.. வில்லன் போதை பொருட்கள் கடத்தறவர்.. ஹீரோ அப்பவே வில்லனை பழி வாங்கிட்டா 2 ரீல்ல படம் முடிஞ்சிடும்கறதால மும்பை போய் ரிஷி கபூர்ட்ட வேலைக்கு சேர்றார்.. அவருக்கு பொழுது போகனும் இல்லையா? அதுக்காக ஹீரோயின் பிரியங்கா சோப்ரா அவர் கூடவே இருந்து அவருக்கு ஹெல்ப் பண்ணறாங்க.. ஹி ஹி

http://lh3.ggpht.com/-Q83oEBghmVY/TvNgX-Z4KII/AAAAAAAAByc/NkIBOPd5VvA/Chikni-Chameli----Official-_thumb.jpg?imgmax=800

15 வருஷம் ட்ரெயினிங்க் எடுத்துட்டு ஹீரோ தன் சொந்த கிராமம் வந்து வில்லனை பழி வாங்கறார் .ஒரிஜினல்ல அமிதாப் பண்ணுன ரோல், இவர் எப்படி பண்ணி இருக்காரோ? பார்ப்போம்..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/01/Bhothi-Dharman-Walls-14-342x256.jpg

4. போதிதர்மன் - ஏதோ ஒரு சைனீஷ் படம்.. தமிழ்ல டப் ஆகி வருது.. போதி தர்மனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதுன்னு தோணுது. சும்மா மார்க்கெட்டிங்க்காக அப்படி  டைட்டில் வெச்சிருக்கலாம்.. ஏதோ டப்பா படமாட்டத்தான் தோணுது.. பார்ப்போம்

13 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதினிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

rajamelaiyur said...

Happy republic day

ஹாலிவுட்ரசிகன் said...

எந்தப் படமும் தேறுற மாதிரி தெரியல.

தேனி மாவட்டம் ஏதோ நிலங்களை மீட்டுக் கொடுக்குற கதைன்னு ஏதோ ஒரு பதிவில் வாசித்ததா ஞாபகம்.

குடியரசு தின வாழ்த்துக்கள்.

Unknown said...

குடியரசு தின வாழ்த்துகள்...வழக்கம் போல் மொக்கைப்படங்கள்

சசிகுமார் said...

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்....

vetha (kovaikkavi) said...

குடியரசு தின வாழ்த்துக்கள.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!குடியரசு தின வாழ்த்துக்கள்.Enjoy!/////இவங்கள மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டு,இஷ்டப்பட்டு தேடி கண்டு புடிச்சேன்!///யூஸ்புல்லா இருக்குதா????ஹி!ஹி!ஹி!!!!!!

நெல்லை கபே said...

குடியரசு தின வாழ்த்துக்கள்!

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் குடியரசுதின வாழ்த்துக்கள்

தேனி மாவட்டம் பெயரை பார்க்க நல்ல படம் போல இருக்கு ஆனால் நீங்கள் சொன்னது போல படத்துக்கு விளம்பரம் ரொம்ப்ப முக்கியம் தான்.

போதிதர்மன் படம் என்று எனக்கு இண்டைக்குத்தான் தெரியும் அட் பாக்கும் போது நினைச்சன் ஏதோ சீரியல் என்று.

இந்த படங்களின் விமர்சனங்களுக்கு வெயிட்டிங் பாஸ்

MANO நாஞ்சில் மனோ said...

சஞ்சய் தத் வில்லனா வந்தாலும் அவர் என்றைக்கும் ஹீரோதான்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே உனக்கு எனது குடியரசு தின வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

இதுல எதுவும் தேறுகிறமாதிரி தெரியல...

Anonymous said...

படங்கள் படங்களாக வாழ்த்துக்கள்