Tuesday, December 08, 2015

சென்னை சம்பவத்தில் நாம் பெற்ற முக்கிய பாடம்

1/வெள்ளத்தில் சிக்குபவரைக்காப்பாற்ற அவர் தலைமுடி/ கூந்தல் பற்றி இழுத்து வருவதே சுலபம்.அவர்கள் கைக்குள் சிக்கிக்கொள்ளாதீர்==============2/ஒரு சாதா நபரால் நீச்சல் அடிக்க முடியும் தூரம் 1 கிமீ .கால அளவு 10 நிமிசம்.இதைக்கணக்கிட்டு வெள்ள மீட்புப்பணியில் இறங்கவும்
===========3/உணவுப்பொட்டலத்தை யாரும் தூக்கிப்போடாதீர்.தாமதம் ஆனாலும் பரவாயில்லை.கரங்களில் தருவது மரியாதை.அது அன்ன லட்சுமி
===============4/நீச்சல் குளத்தில்் நீந்திப்பழகியவர்கள் அசட்டு தைரியத்தில் வெள்ளத்தில் இறங்கக்கூடாது.ஆற்றின் இக்கரை டூ அக்கரை அகலத்தில் கடந்தவர் மட்டும்
===============5/வெள்ளத்தில் சிக்கியவர்கள் ் இருந்தால் சிறுவர்/சிறுமியரை குழந்தையை முதலில் காப்பாற்றுங்கள்.அது எளிது.துரித நேரத்தில் காப்பாற்றிடலாம்
=============6/கிட்டப்பார்வை தூரப்பார்வைக்குறைபாட்டுக்காக கண்ணாடி அணிந்தவர்கள் வெள்ளத்தில் இறங்காதீர்.கண்ணாடி தவறி விட்டால் ஆபத்து
============7/பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவோர் ஒரு பெண் மூலம் விநியோகிக்கவும்.இரு தரப்பு சங்கடம் தவிர்க்க.பேப்பரில் சுற்றி.ரப்பர் பேன்ட் போட்டு==============8/களப்பணியில் ஈடுபடுவோர் இரு வேறு நெட் ஒர்க் (BSNL ,IDEA) டூயல் சிம் வைத்துக்கொண்டால் வசதி.ஒரு நெட் ஒர்க் கிடைக்காத இடத்தில் இன்னொன்று
=============களப்பணியில் ஈடுபடுவோர் நோக்கியா பேசிக் மாடல் தொடர்புக்கும் ,சாம்சங் காலக்சி அப்டேட்டிற்கும் வைத்துக்கொள்ளவும் (வித் அடிசனல் பேட்டரி)================10/எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிய உணவு இட்லி இடியாப்பம் தான்.டிபன்வகையில் சாத வகையில் பூண்டுரசம் பெட்டர் (காய்ச்சல்காரருக்கும் )
===============11////////5/10/15 பேர் கொண்ட குழுவாக இயங்குபவர்கள் யூனிபார்மாக ஒரே நிற சர்ட் அணியவும்.கூட்டத்தில் உங்களை நீங்களே அடையாளம் காண எளிது
==============

12/சென்னை சம்பவத்தில் நாம் பெற்ற முக்கிய பாடம்.எல்லோரிடமும் செல் போன் இருந்தாலும் வீட்டுக்கு ஒரு லேன்ட் லைன் போன் இருந்தால் தகவல் உதவிக்கு!=========
13/புரியற மாதிரி தமிழ்ல சொல்லுங்க என்பதையே சிலர் புரியாத இங்க்லீஷ்ல கேட்கறாங்க.ஙே
================14/தான் உதவி செய்யலைன்னாலும் உதவி செய்யறவங்களை ஏதோ ஒரு நொட்டை சொல்லி குறை கண்டுபிடிக்கறான் பாருங்க அங்க தான் நிக்கறான் தமிழன்============15/தமிழனின் பாரம்பரிய குணமான ஞாபகமறதி ,மன்னிப்பு குணங்களாலும் ,எரியற கொள்ளி ல வேறநல்ல கொள்ளி இல்லாததாலும் மீண்டும் அதிமுகவே ஆட்சி அமைக்கும்============

16/கற்றுத்தெரிந்தவர்கள் ,கல்லாமலேயே தெளிந்தவர்கள் நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் திமுக ,அதிமுக ,காங் க்கு வாக்களிக்க மாட்டார்


===========

17/தனக்குக்கிடைக்காத நல்ல பெயர் சித்தார்த் ,பாலாஜி க்குக்கிடைக்கிறதே என்ற கோபத்தில் அவர்கள் மீது பொய் வழக்கு எதுவும் தொடராத அரசுக்கு நன்றி


===========


18/தமிழக அரசுக்கு எதிரான ,சரியான கருத்து தெரிவித்ததால் கமல் தன் பட ரிலீஸ் டைமில் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என யூகிக்கிறேன்


============

நீ புத்திசாலியாக,அறிவாளியாக இரு.ஆனால் முட்டாள்கள் இருக்கும் தேசத்தில் அவர்களுக்கு கருத்து சொல்லாதே !


============

20/ஒன்றே செய்! நன்றே செய்! ஆட்சி யில் இருப்பதற்குள் செய்!


===========

0 comments: