Skip to content

Saturday, November 07, 2015

வாட்ஸ்ஆப்-பில் 'வேதாளம்' காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி

'வேதாளம்' படத்தில் அஜித் | கோப்பு படம்
'வேதாளம்' படத்தில் அஜித் | கோப்பு படம்
வாட்ஸ்ஆப் மூலமாக 'வேதாளம்' படத்தின் காட்சிகள் வெளியாகி வருவதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், கபீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வேதாளம்'. அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார். நவம்பர் 10ம் தேதி தீபாவளி தினத்தன்று இப்படம் வெளியாக இருக்கிறது.
இறுதிகட்டப் பணிகள் அனைத்து முடிந்து நேற்றிரவு (நவம்பர் 5) மாலை இயக்குநர் சிவா, அஜித் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பிரத்யேக காட்சியைப் பார்த்தார்கள். அதனைத் தொடர்ந்து அஜித்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இப்படம் திரையிடப்பட்டது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 6) காலை முதலே அஜித்தின் முதல் காட்சி என 4 விநாடிகள், 'ஆலுமா டோலுமா' பாடல் காட்சிகள் என 8 விநாடிகள் ஆகிய இரண்டு வீடியோக்கள் வாட்ஸ்-அப் மூலமாக வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோக்களை திரையரங்குகளில் படம் ஒடும் போது எடுத்திருக்கிறார்கள்.
படம் வெளியாக இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், வெளியாகி இருக்கும் இந்த வீடியோக்களால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

-தஹிந்து