Wednesday, October 23, 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா vs சென்சார் நிர்ப்பந்தம்

ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் அரசு விளம்பரத்தை கிண்டலடிக்கும் காட்சியை நீக்கிவிட்டதாக இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். 


கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு நடிப்பில் ராஜேஷ் இயக்கியிருக்கும் காமெடி கலாட்டா ’ஆல் இன் ஆல் அழகுராஜா’. 


இப்படத்தின் டீஸர் வெளியானது. அதில் சந்தானம் ஒரு காட்சியில், அரசின் புகையிலை மற்றும் குட்கா எதிர்ப்பு விளம்பரத்தை கிண்டலடிப்பது போல காட்சி அமைந்திருந்தது. 


இக்காட்சி குறித்து, தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் மன்றம் தமிழக அரசிடம் புகார் தெரிவித்தது. மேலும் குட்கா சாப்பிட்டு புற்றுநோயால் இறந்த முகேஷ் என்ற மனிதன் தன் குரலால் நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இவ்விளம்பரத்தைக் கிண்டலடிப்பதா என கண்டனம் தெரிவித்திருந்தது. 


புகையிலைக்கு எதிரான பிரச்சாரம் தான் என்று அக்காட்சிக்கு விளக்கமளித்திருந்தார் இயக்குனர் ராஜேஷ். எதிர்ப்பு தொடர்ந்ததால் இப்போது அக்காட்சியை நீக்குமாறு சென்சார் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 


இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அக்காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக ராஜேஷ் அறிவித்துள்ளார். அப்படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகளும் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். 

நன்றி - த தமிழ் ஹிந்து 


1. தமிழர்கள் ஏன் சிதம்பரத்தை டெல்லி அனுப்பினார்கள? ்-மோடி#"இங்கே இருந்தா தங்கம் வாங்காதே,வெண்கலம் வாங்காதேனு இம்சிப்பார்னு தான்.


===================


2 பாஜக ஆட்சியமைந்தால் தமிழர்களின் கனவு நனவாகும்-மோடி # சாருக்குத்தமிழே தெரியாது.தமிழர்களோட கனவும் ,உணர்வு மட்டும் எப்டி புரியும்?


====================


3 கேரளா வில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்த விஜய்! # அரசியல்ல குதிக்கட்டுமா ? குதிக்காதப்பவே அம்புட்டு அடி தலைவா!


===================


4 கௌதம் மேனனிடம் ஒரு கதை கேட்டுள்ளேன். இன்னும் உறுதி செய்யப்படவில்லை . விஜய் சேதுதபதி!"# சைன் பண்ணுனீங்கன்னா (ஏ சென்ட்டர்ல) சைன் பண்ணலாம்


======================


5 கூட்டணி பற்றி கவலைப்படாதீர்கள்: தமிழக பா.ஜனதாவுக்கு நரேந்திரமோடி..அறிவுரை # மக்களைப்பத்தி ,அவங்க பிரச்சனைகளைப்பத்தி கவலைப்பட்டாத்தேவல


====================


6 போர்னோகிராபியால் தான் இன்டர்னெட் வளர்ந்தது"- கமல் # நெட் டின் விஸ்வரூபம் பிட் டில் ?===================


7 ஆஅராஜா புகையிலை தடுப்பு விழிப்புணர்விற்கு எதிரான படம் என்பதால் தடை செய்ய வேண்டும் -தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடு மக்கள் மன்றத்தினர் கேஸ் #====================


8 தமிழை கட்டாய பாடமாக்க சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல் # பார்த்தா பெரிய மனுசரா இருக்கீங்க.என் அறிக்கையை பிட் அடிக்கறீங்க? - தமிழ் இனத்தலைவர்=====================


9 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அதிமுக பொதுக்கூட்டத்தில் ராமராஜன் கேப்டனை விளாசிட்டு இருக்கார்.ஆக்ரோசமான பேச்சு ( 18 10 2013 )===================


10 மன்மோகன்சிங், ரஷியா-சீனாவில் 5 நாள் சுற்றுப்பயணம்: # இன்னும் ஒரு வருசம் தான் இருக்கு.ஆண்டு அனுபவிச்சுக்குங்க====================


11 வேலூரில் மதுக்கடை சுவரில் துளைபோட்டு திருடிய கணவன்-மனைவி..# திருட்டுக்குடிகாரக்குடும்பம் போல.


=================


12 கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்: மன்மோகன்.# கட்டுன பொண்டாட்டியையே கவனிக்காதவன் அடுத்த மேரேஜ்க்கு பரிசம் போட்டானாம்=====================


13 சிறுமிகளுடன் செக்ஸ் ஆயுளை கூட்டும்-அசாராம் பாபு் # தூக்கு தண்டனை கொடுத்துட்டா உள்ளதும் போயிடுமே கில்மாக்கண்ணா


==================


14 உன் கேர்ள் பிரண்ட் உனக்கு தன் மேரேஜ் இன்விடேசன் அனுப்பலைன்னா கவலைப்படேல்.புருசன் தகர டப்பாத்தலையனா அமைஞ்சிருப்பான்


==================


15 உண்மையை அப்பட்டமாச்சொன்னா பொண்ணுங்களுக்குப்பிடிக்காது.அதனால தான் கவிதைகளை அவங்க ரசிக்கறாங்க.பசங்க அள்ளி விடறாங்க==================


16 பாஜக ஆட்சியமைந்தால் தமிழர்களின் கனவு நனவாகும்-மோடி # தமிழனோட கனவே வேலைக்கே போகாம சம்பளம் வாங்கனும்னுதான்.தரமுடியுமா?


==================


17 சென்னை: தீபாவளி திருடர்களைப் பிடிக்க தி.நகரில் நவீன கண்காணிப்பு கேமரா
# கேமரா சூப்பரா இருக்குனு அதை முதல்ல ஆட்டையைப்போட்ரப்போறாங்க


===================


18 மதவாத சக்திகளை வீழ்த்த காங்குடன் கூட்டணி-திருமா# குருமா ல உப்பே சேர்ப்பதில்லையா மிஸ்டர் திருமா?


====================


19 உலகின் டாப் 50 பெண் தொழில் அதிபர்கள் பட்டியலில் 4 இந்தியர்கள் # ஆண் தொழில் அதிபர்கள்னா நடிகைகள் லவ் பண்ண யூஸ் ஆகும்==================


20 ஆல் இன் ஆல் அழகுராஜா வில் அரசு விளம்பரத்தை கிண்டலடிக்கும் காட்சியை நீக்கிவிட்டேன் - எம் ராஜேஷ் # சென்சார் நிர்ப்பந்தத்தால்னு சொல்லுங்க


==================================================

0 comments: