Wednesday, October 09, 2013

ராமராஜன் லல்லு பிரசாத் யாதவை ஜெயில் தண்டனையில் இருந்து காப்பாற்றியது எப்படி?

 

மாட்டு தீவன ஊழலில் சிக்கிய லாலு நம்ம ஊர் பசுநேசன் ராமராஜனை சந்தித்தால் என்ன பேசுவார்? - ஒரு ஜாலி கற்பனை. 



ராமராஜன்: லாலு ஜி, மாட்டுக்கு தீவனம் வாங்கி நீங்க பல கோடி சம்பாதிச்சிங்க, மாட்டு மடியில இருந்து பால் கறக்கறமாதிரி நடிச்சு சில கோடிகளைச் சம்பாதிச்சவன் நான். 


லாலு: அச்சா... அச்சா... ஆனா உங்களை வாழ்வச்ச மாடு என்ன ஜெயிலில தள்ளிடுச்சே ராமராஜன்ஜி. 


ராமராஜன் : ஆடுற மாட்ட ஆடி கறக்கணும், பாடுற மாட்ட பாடி கறக்கணுங்குறது எங்க ஊரு பழமொழி லாலுஜி. எங்க ஊரு அரசியல் வாதிங்கள பாருங்க, எதையும் செய்ய மாட்டாங்க, ஆனா, திட்டப்பணி செஞ்சு முடிச்சதா பணத்த சுருட்டிட்டு ஜம்முன்னு சுதந்திரமா வெளியில நடமாட்டிட்டு இருக்காங்க. 



லாலு: ஒகே ஜி, நம்ம ரெண்டு பேரும் பசுமாடு விஷயத்துல ஒண்ணு. இப்ப எப்படி தப்பிச்சு வெளியில வரதுன்னு ஐடியா கொடுங்க ராமராஜன்ஜி. 


ராமராஜன்: தீவனம் போட்டவனுக்கு சானி அள்ள தெரியாதுங்கிற மாதிரி இருக்கு உங்க பேச்சு. முதல்ல உங்க காஸ்டியூம மாத்தனும், அரைக்கால் டவுசர், பச்ச முண்டா பணியன், சிகப்பு துண்டு தோல்ல போட்டுக்கிட்டு, ஊருக்குள்ள நடமாடியிருந்தா, பசு நேசன்னு, பீகார்வாசிங்க கொண்டாடியிருப்பாங்க. உங்க மேல சந்தேகப்பட்டு இருக்க மாட்டாங்க ஜி.


லாலு: உங்க படத்த பாக்காம போயிட்டேன் ராமராஜன் ஜி, இப்ப தப்பிக்க வழி என்னான்னு சொல்லுங்க ஜி. 


ராமராஜன்: வெரி சிம்பிள், மாட்டுக்கு என்னா வாங்கி ஊழல் செஞ்சீங்க... 


லாலு: தீவனம் வாங்கி. 


ராமராஜன்: இப்ப அந்த தீவனம் எங்க இருக்கு? 


லாலு: மாடுங்க சாப்பிட்டுடுச்சு. 


ராமராஜன்: எந்த வழக்கா இருந்தாலும், பார்த்த சாட்சி வேணும்: இல்லன்னா, உபயோகப்படுத்தப்பட்ட பொருள சாட்சியா நீதிமன்றத்தில ஒப்படைக்கணும். அப்பதான் வழக்கு நிக்கும். 


லாலு: ராமராஜன்ஜி, நீங்க பாடி பாடி மாட்ட அடக்கிறதலதான் ஸ்பெஷலிஸ்ட்டுன்னு நினைச்சேன். ஆனா, வழக்காடுறதலையும் சூப்பரப்பு. 


ராமராஜன்: (பேசிட்டு இருக்கும் போது, குறுக்கால பேசாத, சின்னபுள்ள தனமா, என்றபடி சிகப்பு துண்டால் லாலுவை அடித்து உட்கார வைத்தபடி) இப்ப தீவனத்த மாடு சாப்பிட்டுடுச்சு, அத சாப்பிட்ட மாடுங்க பாதி செத்து போச்சு. தீவணம் வாங்கினது உண்மை. அதுல ஊழல் நடந்து இருக்கிறதா நிருபிக்க, அத சாப்பிட்ட மாடுங்க சாட்சி சொல்லுனும், இல்லன்னா, ஊழல் நடந்ததா சொல்லுற தீவணத்த கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஒப்படைங்கன்னு, நீதிமன்றத்தல ஒரு போடு போடுங்க லாலுஜி, அப்புறம் உங்கள கம்பி எண்ண வெச்சவங்கள, நாம கம்பி எண்ண வைக்கலாம்.” 



(பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி.. என பாடியபடி ராமராஜன் இடத்தை காலி செய்ய, அவர் நடந்து போகும் அழகை பார்த்து, லாலுஜி, அந்த திசை நோக்கி பெரிய கும்பிடு போட்டபடி, வழக்கை எதிர்கொள்ள தயாராகிறார்.) 


thanx  - the  hindu tamil

0 comments: