Sunday, October 20, 2013

ஆரம்பம் ல் ஆர்யா - டாப்ஸி ரொமான்ஸ் ஓவர் டோசா? - அஜித் பேட்டி

'ஆரம்பம்' பார்த்து ஆர்யாவை புகழ்ந்த அஜித்!

ஆரம்பம்' படத்தினைப் பார்த்துவிட்டு ஆர்யா பாராட்டி இருக்கிறார் அஜித்.
தீபாவளி ரேஸில் மற்ற இரண்டு படங்களையும் முந்திக்கொண்டு இம்மாதம் 31ம் தேதியே திரைக்கு வரவிருக்கிறது 'ஆரம்பம்'. பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யூ' சான்றிதழ் அளித்தார்கள்.
நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டது மட்டுமன்றி, படத்தினை அஜித் மற்றும் ஷாலினிக்கும் திரையிட்டு காட்டியிருக்கிறார்கள்.
படத்தினைப் பார்த்துவிட்டு இயக்குநர் விஷ்ணுவர்தனை புகழ்ந்திருக்கிறார் அஜித். தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் இவ்வளவு பெரிய படம் அளித்ததற்கு நன்றி என்று விஷ்ணுவர்தனிடம் கூறியுள்ளார்.


அதுமட்டுமன்றி, ஆர்யாவிற்கு போன் செய்து மிகவும் பாராட்டியிருக்கிறார். “நீங்கள் டாப்ஸியுடன் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளில் இளமை ததும்புகிறது. இளைஞர்களின் மத்தியில் உங்கள் நடிப்பிற்கு பெரும் பாராட்டு கிடைக்கும், கண்டிப்பாக ஆரம்பம் படத்திற்கு பிறகு உங்களது திரையுலக வாழ்க்கை உச்சித்தில் இருக்கும். தொடர்ச்சியாக வெற்றியை சுவைத்துக் கொண்டிருப்பதிற்கு பாராட்டுக்கள்” என்று ஆர்யாவிடம் தெரிவித்திருக்கிறார் அஜித்.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நிறைய ஹீரோக்கள் இணைந்து நடிக்க முன்வருவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் 

IMG_5062

.1. நாம வாங்கும் ஷீ சாக்ஸ் கெண்டைக்காலைத்தாண்டறது இல்லை.இந்த நரசுங்களுக்கு மட்டும் எப்டி இவ்ளவ் நீளமாக்கிடைக்குது?்
=====================
2 நீ இங்க்லீஷ்ல வீக்கா?னு கேட்ட இங்க் மிஸ் கிட்டே கணக்குல ஸ்ட்ராங்க் ,சென்ட்டம்னு சொல்ல நினைச்சேன்.சொல்லல ;-))

=====================
3 சாட்சிகள் சொல்வது நம்பும்படியாக இல்லை -நீதிபதி #மிஸ்டர் மாரி முத்து.இனி உங்க பேரு நம்பா மாரி முத்து

====================
4 போட்டு வாங்கும் பொம்முக்குட்டி- உங்களுக்கு எந்த மாதிரி பொண்ணுங்களைப்பிடிக்கும் , ? 

ஜொள் ஜக்கு - எல்லாப்பொண்ணுங்களையும்
=======================
5 திருமணமான நடிகைகளை ஆண் கண்டுகொள்வதே இல்லை.திருமணமானாலும் தன் ஆதர்ச ஹீரோவை பெண் விடுவதில்லை # நீதி - ஹி ஹி மியாவ்
======================6 எங்க ஆபீஸ் ல வெர்ஜீனியா னு ஒரு ஆங்கிலோ இண்டியன் கேர்ள் சேர்ந்திருக்கு.எல்லார் மனசுலயும் என்ன கேள்வி ஓடும்னு யூகிக்க முடியுது
====================
7 மோடியை காமெடி பீஸ் ஆக்காம விடமாட்டாங்க போல # சோ ,எஸ் வி சேகர் அறிக்கைகள்
====================
8 விஜய் சேதுபதி யின் புதிய பட டைட்டில் சங்கு தேவன் # சென்ட்டிமென்ட் செம்மல்கள் நிறைந்த கோடம்பாக்கத்தில் டைட்டிலிலேயே சங்கு! துணிச்சல் தான்

====================
9 தலை தீபாவளி கொண்டாடாத புதுமணத்தம்பதியும் இல்ல. தல படம் தீபாவளிக்கு வருவதைக்கொண்டாடாத அஜித் ரசிகரும் இல்லை
===================10 பில்லா ,மங்காத்தா ,பில்லா 2 அஜித் ஓப்பனிங் சீன் களை எல்லாம் ஆரம்பம் அஜித் ஓப்பனிங் சீன் தூக்கி சாப்பிட்ரும் என அவதானிக்கிறே
==================
11 வில்லன் - எமனையே ஏமாத்தி எஸ்கேப் ஆனவன் நான் . 

அஜித் - எமன் எருமை ல வந்திருப்பான்.சேஸ் பண்ண முடிஞ்சிருக்காது.நான் ரேஸ் பைக் ல.
=====================12 வில்லன் - GUN னை உன் நெத்திப்பொட்டுல வெச்சும் உனக்கு பயம் வர்ல ? 

அஜித் - துப்பாக்கி யைப்பாத்து பயப்படும் துர்ப்பாக்கியம் எனக்கு இல்லை
=====================
13 சார்.இந்த ஆபரேஷனுக்கு அவர் தான் கரெக்ட் சாய்ஸ் னு எப்டி சொல்றீங்க ?,

போலீஸ் கமிஷனர் - அவர் 6 அடி உடம்புலயே 60 ஆபரேஷனைப்பார்த்தவர்
========================14 9 தாரா - என் பின்னாலயே வருவீங்க ,பாலோ பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேன் . 

அஜித் - பர்சனாலிட்டி இல்லாதவன் தான் பொண்ணுங்க பின்னால போவான்.

=====================
15 சார்.உங்க படத்துல காமெடி இல்லையாமே? ஏன்? 

படத்தைப்பார்த்து ஊரே சிரிக்குதுன்னு ஒரு பேச்சு வந்துடக்கூடாதுனு தான்

======================

ஆரம்பம்' படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
தீபாவளி ரேஸில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ‘ஆரம்பம்’. அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா மற்றும் பலர் நடிக்க, விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கிறார்.
சமீபத்தில் இணையத்தில் வெளியான ‘ஆரம்பம்’ புகைப்படங்களில் அஜித் போலீஸ் உடை அணிந்திருந்தார். இதனால் எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது. இணையத்தில் 'ஆரம்பம்' படத்தினைப் பற்றி அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது #Arrambam என்ற டாக் இந்தியளவில் டிரெண்ட்டாகிறது. இன்று சென்சார் என்பதால், #Arrambamcensorday என்ற டாக் இந்தியளவில் டிரெண்ட்டாகி வருகிறது.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால், படத்தினை சென்சார் அதிகாரிகளுக்கு இன்று காலை திரையிட்டு காட்டினார்கள். படத்தினைப் பார்த்துவிட்டு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
தீபாவளி படங்களில் முதலில் சென்சார் ஆகியிருப்பது 'ஆரம்பம்'. ஆகையால் இம்மாத இறுதியில் 31ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஆனால் இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை.0 comments: