Thursday, October 31, 2013

ஆரம்பம் - சினிமா விமர்சனம்

அஜித் ஒரு போலீஸ் ஆஃபீசர் கம் பாம் ஸ்க்வாடு ஆஃபீசர். அவரோட நண்பர் ராணாவும் . அவரும்  தீவிரவாதிகளைத்தாக்கும்  ஒரு ஆபரேஷன்ல துப்பாக்கிக்குண்டு பட்டு ராணா செத்துடறாரு . புல்லட் ப்ரூஃப்  ஜாக்கெட் போட்டும் எப்படி குண்டு பாய்ஞ்சுது ?அப்டினு அஜித் மேலிடத்துல கேள்வி கேட்கறாரு .

 பொதுவா மேலிடம் , மேடம் இவங்களுக்கெல்லாம் கேள்வி மேல  கேள்வி கேட்டாலே பிடிக்காதே .அதனால அஜித் ஃபேமிலியை கார்னர் பண்றாங்க . புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் தயாரிப்பில் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கு . அதில் கமிஷனர் , மினிஸ்டர் எல்லாருக்கும் தொடர்பு இருக்கு . 

தன் நண்பனின் சாவுக்குக்காரணமானவங்களை அஜித் எப்படி பழி வாங்கறார்? அந்த  ஊழல் பணத்தை எல்லாம் இந்தியன் தாத்தா , சிவாஜி மாதிரி எப்படி ரிட்டர்ன் எடுக்கறார் என்பதே திரைக்கதை . 


ஸ்வார்டு ஃபிஷ் என்ற ஆங்கிலப்படத்தின் தாக்கம் ஆங்காங்கே  தெரியுது . அது சாதா ரசிகனுக்குத்தெரியாம இருக்க ரொம்பவே மெனக்கெட்டு சுத்தி வளைச்சு கதை சொல்லி இருக்காங்க . 

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் கலக்கல் . அவர் படத்தில் பேசும் காட்சிகள் குறைவு , ஆனால் அவர் வரும் காட்சிகள் எல்லாம் கைதட்டல் . மேக் இட் சிம்ப்பிள் என்பது இந்தப்படத்தில் அவர் பேசும் பஞ்ச் வசனம் . கோட் சூட் கூலிங்க் கிளாஸ் போட்டு படம் பூரா நடக்கிறார் என்ற புகார்கள் தலை தூக்காமல் இருக்க இந்தப்படத்தில் அவர் ஜீன்ஸ் பேண்ட் - டி சர்ட்டில் தான் படம் முழுக்க வர்றார் . ஃபைட்  சீனில் ஒரு ரிஸ்க் ஜம்ப் , காரில் தொங்கி சண்டை இடும் காட்சி என 2 இடங்களில்  ரிஸ்க் எடுத்து இருக்கிறார். சக நடிகர்களுக்கு சமமாக சான்ஸ் கொடுக்கும் பண்பு அஜித்திடம் இய்லபாகவே உண்டு.


ஆர்யா , படத்தின் முன் பாதிக்கு இவர் தான் ஹீரோவா என கேட்கும் அள்வு  படம் முழுக்க வியாபிக்கிறார். டாப்ஸியிடம் லவ்வுவது , லவ் பிரபோசிங்க்  சீன் எல்லாம் இளமை ஏரியா . அவர் பாய்ஸ்  குண்டுப்பையன் மாதிரி கெட்டப் சேஞ்ச் செய்தது எல்லாம்  பெரிதாக எடுபடவில்லை .முன் பாதியில் அவர் அஜித்தை வில்லன் ஆக நினைத்து நீ வா போ என ஒருமையில் பேசியவர்  பின் பாதியில்  ஜீ  என அழைப்பது அக்மார்க் ரஜினி ஃபார்முலா .


நயன் தாரா அஜித்துக்கு ஜோடி இல்லை , ஆனால் தோழி மாதிரி . டூயட் வாய்ப்பு இல்லை . நயன் தாரா ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக வலியனா திணிக்கப்பட்ட  ஒரு கவர்ச்சிக்காட்சி உண்டு . அது இல்லாமலேயே நயன் கிக்காகத்தான் இருக்கிறார் .


டாப்சி  இளமைத்துள்ளல் . ஆர்யா காதலை வெளிப்படுத்தும்போது யோசிப்பவர்  பின் இயல்பாய் மனதில் காதல் மலரும்போது ஆஹா போட வைக்கிறார் .


போலீஸ் ஆஃபீசர்களாக  கிஷோர் , அதுல் குல்கர்னி  என திறமைசாலிகள் ஆங்காங்கே அட்டெண்டென்ஸ் போடுகிறார்கள்இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படத்தின் ஜீவநாடிக்காட்சியே அந்த  ஊழல் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணும் பேங்க் சீன் தான் கலக்கலான ஐடியா . படமாக்கம் , எடிட்டிங்க் , நடிப்பு , இயக்கம் , பி ஜி எம் எல்லாம் கன கச்சிதம் ,. நீண்ட நாட்களுக்கு டாப் சீன்களில் இடம் பிடிக்கும்2. அஜித்துக்கு அதிக முக்கியத்துவம் தராமல் ஆரம்பத்தில் அதாவது படத்தின் ஆரம்பத்தில் ஆர்யாவை முன்னிறுத்தி காட்சிகளை அமைத்தது 


3. படம்  முழுக்கவே ஸ்டைலிஷான அஜித் , மேக்கிங்க் எல்லாம் பக்கா . ஒளிப்பதிவு , லொக்கேஷன்  செலக்சன் எல்லாம் பக்கா 

4 ஃபோனில் டாப்சி ஐ லவ் யூ என வெவேறு மாடுலேஷனில் சொலவ்து அபாரம் 


இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1.  இந்த மாதிரி ஆக்சன் படத்துக்கு ஹீரோ அறிமுகக்காட்சி ஹீரோ ஓடி வருவது மாதிரி இருக்கனும் , பாட்டு சீனாக இருக்கக்கூடாது . வெற்றி விழா கமல் ஓப்பனிங்க் சீன் நல்ல உதாரணம் அதே போல் ஓப்பனிங்க் சாங்க்  பெரிதாக எடுபடவில்லை .


2. ஹீரோ அஜித் ஒரு பேரத்துக்காக ஆள் மாறாட்டம் செய்கிறார். அந்த ஆளை வில்லன் ஆள்  ஃபோட்டோவில் கூட பார்த்திருக்க மாட்டாரா? இப்பவெல்லாம் நவீன யுகம் , எம் எம் எஸ் ஸில் செல் மூலம் ஃபோட்டோவை அனுப்பிக்கலாமே? 


3. நயன் தாரா  ஒருவனை துப்பாக்கி முனையில் மிரட்டி படுக்கையில் அவன் மீது உட்கார்ந்து இருக்கும்போது அஜித் அவன் ரூமில் ஆள் மாறாட்டம் செய்யும் காட்சியில் எதுக்கு அவ்வளவு ரிஸ்க்? அவன் தலையில் ஒண்ணு போட்டு மயக்கம் அடையச்செய்து இருக்கலாமே? ஒரு ஆக்சன் ஹீரோ இருக்கும்போது நாயகியின் கிளாமரைகாட்டித்தான் ஆளை மயக்கி ஏமாற்றனும் என்பது ஹீரோவுக்கும் பங்கம் தானே? 


4. டி வி  ரிமோட் எல்லாரும்  யூஸ் பண்ணுவொம் . ஒரு மினிஸ்டருக்கு ரிமோட்டை எப்படிப் பிடிப்பது என்று கூடவா  தெரியாது ? சிவப்பு பட்டன் இருப்பது  டி வி திரையை நோக்கி இருக்கனும் என்பது சின்னக்குழந்தைக்குக்கூடத்தெரியுமே?  


5 அஜித்தின் ஃபிளாஸ்பேக் காட்சியில் ஆல்ரெடி பார்த்துப்பழ்கிப்போன கேப்டன் , சர்த்குமார் படங்களின் வாசனை .அதையும் , ஆர்யா டாப்ஸி  காட்சிகளையும் கொஞ்சம் ட்ரிம் பண்ணி இருக்கலாம் 
மனம் கவர்ந்த வசனங்கள்


1. இடைவேளை பஞ்ச் = ஆர்யா - உன்னை மாதிரி ஆளுங்களுக்கு இது தான் முடிவு. 


அஜித் - ஹா ஹா .இனி தான் ஆட்டம் ஆரம்பம்


2 இது யாரு ? இன்னொரு ஹேக்கரா?


உனக்கு போர் அடிக்குமேன்னு துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டு வந்திருக்கேன்3 மேலே இடித்த நயன் - ஸாரி


இடி பட்ட ஆள் - ப்ளஷர் ஈஸ் மைன்


4 ஆ-ன்னா ஊ-ன்னா கன்னைத்தூக்கிடற்யே

இது மூளை சம்பந்தப்பட்ட விஷயம்


5 உனக்கும் அந்த தீவிரவாதிக்கும் என்ன வித்தியாசம் ?

அப்போ ப்ளூ சர்ட் , இப்போ பிரவுன்


6 நான் எதுக்கு பயப்படனும் ? என்னை விட என் உயிரைப்பத்தி கவலைப்பட நீ இருக்கும்போது

7 டைவர்ஸ் கேட்குறாடா


சூப்பர் ஆஃபர் , மிஸ் பண்ணிடாதே


8 நம்ம கல்யாண நாள் எப்போ? என் மேல அன்பு இருந்தா நினைவு இருக்கும்


இப்போதானே முடிஞ்சது ?

அதான் எப்போ? டேட் ?


9 சாவைப்பார்த்து நான் என்னைக்குமே பயந்ததில்லை , ஆனா அது எப்போ எப்படி வருதுங்கறதுதான் முக்கியம்


10 எதிரிங்க எத்தனை பேர் இருந்தாலும் சமாளிச்சடலாம், ஆனா துரோகி ஒருத்தன் இருந்தாலும் என்னால சகிச்சுக்க முடியாது


11 ஃபிங்கர் பிரிண்ட் ரொம்ப முக்கியம்


என்ன தான் டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆனாலும் கடைசில நாம கைநாட்டு தான்


12 நீ இங்கே என்ன பண்றே?

நிச்சயம் உனக்கு நல்லது பண்ண வர்லை

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1.டாப்சிக்கு ஆர்யா மேல் காதல் வந்ததும் முதுகில் தேவதைக்கான சிறகு முளைக்கும் காட்சி கவிதை


2. அஜித் ன் பாடிலேங்குவேஜில் தேர்ந்த வில்லனுக்கான எகத்தாளம்


3 SWORD FISH ன் உல்டா சீன் என சொல்லப்படும் டிக் டாக் டிக் டாக் மேனரிசம் ஆல்ரெடி வாலி யில் அஜித்தே செய்ததே


4 ஆர்யா டூ நயன் - இப்டி நம்ப வெச்சு ஏமாத்திட்டியே # சிம்பு இதைப்பாத்தா ;-))


5 வசனமே பேசாமல் ஒரு ஹீரோவை அப்ளாஷ் வாங்க வைப்பது எப்படி என்ற கலையில் விஷ்ணுவர்தன் பிஹெச்டி


6 ஆரம்பம் @ இடைவேளை. பார்த்த வரை படம் ok அஜித் ன் பஞ்ச் மேக் இட் சிம்ப்பிள் குட் டயலாக் டெலிவரி.ஆர்யாவுக்கு அஜித்தை விட காட்சிகள் அதிகம்
7 அஜித் க்கு காட்சிகள் கம்மி என்றாலும் வரும் காட்சிகள் எல்லாம் ஸ்டைலிஷ் தான்.


8 பில்லா ,மங்காத்தா வை விட BGM கலக்கல் இதில் குறைவு என்றாலும் குறை சொல்லும்படி மோசம் இல்லை


9 ஹீரோவை விட உயரமான ஆட்கள் காட்சியில் வரும்போது கேமரா கோணம் எப்படி வைக்கவேண்டும் என்பதை ஒளிப்பதிவாளர் கற்க வேண்டும்


10 நாயகன் கமல் கெட்டப்பில் அஜித் ஆடும் பாட்டுக்கு அப்ளாஸ் அள்ளுது.கலர்புல் கலக்கல்


11 த்ரிஷா ராணா விடம் மயங்கியதில் ஆச்சரியமே இல்லை. ஆகிருதியான ஆள்


12 விஷ்னுவர்தன் நம்ம கேப்டன் ரசிகர் போல.அஜித் ன் பிளாஸ்பேக்கில் பல கேப்டன் பட வாசனை


13 ரைட்டர் சுபா சார்.ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் சரத் நடிச்ச ஏய் பட கதையை அப்டியே பட்டி டிங்கரிங் பண்ணிட்டீங்க போல :-(((
சி பி கமெண்ட் - ஆரம்பம் - முன் பாதி வேகம், பின்பாதி ஸ்லோ- பில்லா,மங்காத்தாவுக்கு ஒரு மாற்று கம்மி - விகடன் மார்க் - 42 , ரேட்டிங்க் -3 / 5 பெரம்பலூர் ராம் ல் படம் பார்த்தேன்ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-42


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 3  / 59 comments:

நம்பள்கி said...

நீங்கள் போட்ட படங்கள் பார்த்தேன் விமார்சனமும் படித்தேன்; Best--வாழ்க உங்கள் சேவை!

ஆமா! அங்க மினி - இட்லி தான் சுட முடியும் போலிருக்கு!

ஆனால், உண்டியல்? எப்பா சாமி!
திருப்பதி பாலாஜியே பொறாமைப் படுவார்!

திருப்பதி உண்டியலைப் பார்த்து இருக்கீங்களா!?

நம்பள்கி said...

மைக் டெஸ்டிங்!

மனித புத்திரன் said...

அந்த பச்சை கலர் ட்ரெஸ்ஸில் டாப்சீ டாப்பு...யப்பா என்ன ஒரு அழகு

Astrologer sathishkumar Erode said...

விமரசனம் முழுமையா இல்ல..உடனே இயக்குனர் கேள்வ்பி இயக்குனர் பாராட்டு பெறும் இடங்கள் போயிடுறிங்க..படம் இன்னிக்குதான் ரிலீஸ் ஆகியிருக்கு அதனால் படம் எப்படின்னு தெரிஞ்சுக்க ஆர்வமா வருபவருக்கும் ஆனந்தவிகடன் ஸ்டைலில் விமர்சனம் மட்டும் நச்சுன்னு கொடுங்க..கேள்வி,பாராட்டு பகுதிகள் வேண்டாமெ..? அதிவேக உலகில் யாரும் இவ்வளவு பொறுமையா எல்லாத்தையும் படிக்க மாட்டாங்க..எதுக்கு இவ்ளோ டைப் பண்ணிக்கிட்டு..?

Astrologer sathishkumar Erode said...

ஆரம்பம் என கூகிளில் தமிழில் டைப் பண்ணா உங்க ப்ளாக் தான் முதல்ல வருது வழ்த்துக்கள்..அப்புறம் விமர்சனத்தில் இருக்கும் ஃபோட்டொ எல்லாம் பழசு நச்சுன்னு 3 படம் போதும்...ஒண்ணு இருந்தாலெ போதும்...பதிவையும் குறைக்கலாம்...எக்ஸ்ட்ரா பகுதிகளில் கேல்விகள்,டயலாக் பகுதிகள் ஒண்ணு ரெண்டு மட்டும் ஒடவும்..ஸ்லோவா இருக்கும் நெட் வெச்சிருக்குறவங்களுக்கு படிக்க முடியாது லோட் ஆக லேட்டாகும்...arampam wallpapers என கூகிளில் தேடவும் நிறைய கிடைக்கும்

Weekend Traveller said...

5 வது பாயிண்ட் இன் மனம் கவர்ந்த வசனங்கள் : "அப்ப" ப்ளு ஷர்ட் இப்ப பிரவுன்.. "அவன்" கிடையாது ;)

Unknown said...

padam parthen 42 mark adhigam dhan 38 sariyaga irukum... pala katchigal pala padangalil pathadhe!!!!!

rajesh said...

முத்து சிவா நீங்கதான் கரெக்டா விமர்சனம் எழுதியிருக்கீங்க.. எல்லா பதிவரும் முதல் நாள் அஜித் ரசிகர்கள் துள்ளல்ல வச்சு.. படம் பரவாயில்ல.. ஆனா வசூல் பிச்சுக்கும் என எழுதி யிருக்காங்க... ஆனா இங்க நாகர்கோவில்ல படம் படு பிளாப்.. தல ரசிகர்கள் ஜி படத்துக்கே எக பில்டப் கொடுத்தாங்க முதல் நாள் முதல் ஷோவுல

ராஜேஷ்

Unknown said...

good review...