Thursday, October 24, 2013

PRASTHANAM (2010) - சினிமா விமர்சனம் ( தெலுங்கு)

 

 

இந்தக்கதைக்கும் தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் , மு க ஸ்டாலின் , அழகிரி , கனிமொழி இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , நீங்களா ஒரு கற்பனையை பண்ணிக்கிட்டா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல

 ஒரு ஊர்ல  ஒரு எம் எல் ஏ. அவருக்கு 2 பசங்க .மூத்தவன்  நல்லவன் , அப்பாவுக்கு உதவியா அப்பா சொல் பேச்சு கேட்டு  அப்பா கிட்டே நல்ல பேர் எடுத்து அடக்கமான பையனா இருக்கான், ஆனா இளையவன் ஒரு டிரக் அடிக்ட் , உருப்படாதவன் , ரவுடி , அடிக்கடி கோபப்படுபவன். தன் மேல  அப்பாவோ , அக்காவோ பாசம் காட்டாம  தன்னை ஓரம் கட்டறாங்கன்னு இவனா மனசுக்குள்ள நினைச்சுக்கறான் . 

தன்னோட அரசியல் வாரிசா அப்பா மூத்த பையனை அறிவிச்சதும் இளைய பையன் கிட்டத்தட்ட சைக்கோ ஆகிடறான். தன் காதலியையே ரேப் பண்ணி மர்டர் பண்ணிடறான். போலீஸ் தேடுது .தனக்கு அடைக்கலம் கொடுக்கத்தயங்கும் சொந்த அக்கா , மாமா 2 பேரையும்  கொலை பண்ணிடறான்.

 

 

இந்த இக்கட்டான சூழல்ல எலக்‌ஷன் வருது . எம் எல் ஏவுக்கு கெட்ட பேரு . சொந்தப்பையனே ஒரு கிரிமினல் . அதுக்கப்புறம் என்ன ஆச்சு?ன்னு வெண் திரையில் காண்க . இந்தத்திரைக்கதைல 2 சஸ் பென்ஸ் ட்விஸ்ட்டும் இருக்கு 

எம் எல் ஏ வா சாய் குமார். ஓல்டு கெட்டப்பா இருந்தாலும் கோல்டு ஆக்டிங்க் . ஆந்திரா  தியெட்டர்களில் விசில் பறந்திருக்கும் .க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் நடிப்பில் ஆஹா! 


முதல் பையனா எங்கேயும் எப்போதும் ஹீரோ சர்வானந்த். அசால்ட்டான நடிப்பு , எதுக்கும் அலட்டிக்கவே இல்லை, ஓவர் ஆக்ட்டிங்கும் இல்லை. வெரிகுட் . இந்த மாதிரி ஹீரோக்கள் தெலுங்கில் குறைவு.ரொமான்ஸ் காட்சிகளில் நல்லா சைன் பண்ணுபவர் இயக்குநர் விடாததால் தவிக்கிறார். 

2 வது பையனா யாருடா மகேஷ் ஹீரோ சந்தீப் , கிட்டத்தட்ட இவர் தான் ஹீரோ மாதிரி , அதாவது ஆண்ட்டி ஹீரோ . ஹீரோவை விட இவருக்கே காட்சிகள்  அதிகம் . இவர் முகம் பால்  மணம் மாறா பாலகன் மாதிரி இருப்பதால் தாடி எல்லாம் வெச்சு வில்லத்தனம் ட்ரை பண்ணி இருக்காரு , ஆனா எதிர்பார்த்த ரிசல்ட் வர்லை , ஆனாலும்  மோசம் இல்லை 

 ஹீரோயின்  ரூபி பரிகார். எந்தக்கோயில் ல போய்  பரிகாரம் பண்ணாலும் லட்டு ஃபிகர் ஆக வாய்ப்பே இல்லை . இவருக்கு ப்டத்தில் பெரிதா சீன்களும் இல்லை . 2 டூயட் தான் மிச்சம்.

இன்னொரு  ஹீரோயின் ரேஷ்மி  அவருக்கு இவர் எவ்வளவோ தேவலை . இவர் டிரக்ட் அடிக்ட்டை ஏன் லவ் பண்றார் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை 

 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

 

1  ஆந்திராவில் தானே இருக்கோம், தமிழ் நாட்டு அரசியல் வாதிங்க வந்து கேட்கவா போறாங்க என்ற தைரியம் பாராட்டலாம்

 

2. மூன்று ஹீரோக்கள் படத்தில்  இருந்தாலும் காட்சிகளை சரி சமமாக பகிர்ந்தளிக்க முயன்றது 

 

3 படத்தில் திரைக்கதைப்படி ஒரு ரேப் சீன், பல காபரே டான்ஸ் சீன்கள் வருவதாக ஸ்க்ரிப்ட்டில் இருந்தாலும் காட்சி அமைப்பில் அப்படி வராமல் நாசூக்காக தவிர்த்தது , கண்ணியமான படமாக்கம் 

 

இயக்குநரிடம்  சில  கேள்விகள் 

 

1. போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு ரவுடி , அவன் கூட ஆரம்பத்துல  இருந்தே தகராறு பண்ற முஸ்லீம் பொண்ணு 2 பேருக்கும் எப்போ லவ் உண்டாச்சு , எப்படி அந்த சம்பவம் நடந்ததுன்னு காட்டவே இல்லையே? 

 

2 ஆண்ட்டி ஹீரோ வசதியான ஆளு , ஹீரோயின் அவங்க ஹோட்டல் ல மேனேஜரா இருக்கும் ஏழைப்பொண்ணு தான் . 2 பேரும் லவ்விங்க் . எதுக்காக காதலியை ரேப் பண்ணனும்? கொலை பண்ணனும் ? இதுக்கும் விள்க்கமே வைக்கலை .  


3  ஆண்ட்டி ஹீரோ தன் காதலியை ரேப் பண்ண தூக்க மாத்திரை  அல்லது வயாக்ரா மாதிரி மாத்திரை கொடுத்து கரெக்ட் பண்ணாம எதுக்காக ஆபத்துன்னு தெரிஞ்சும் ஓவர் டோஸ் டிரக் கொடுக்கறாரு ? 


4  கணவனா வரப்போகும் காதலன் தானே? அவன் கில்மாவுக்குக்கூப்பிடும்போது நாசூக்கா மறுக்கறது ஓக்கே , என்னமோ வில்லன் ரேஞ்ச்க்கு ஏன் போராடனும் ? மேட்டர் நடந்தாலும் பாதிப்பு இல்லையே? ஜீன் ஆதாரம் இருக்கு , பார்ட்டி பெரிய பார்ட்டி , லைஃப் ல செட்டில் ஆக சேஃப் தானே > ஏன் பார்ட்டி பம்முது ? 


5 ஹீரோ தன் அப்பா கூட காரில் போய்ட்டு இருக்கும்போது  கொலை மிரட்டல் கால் வருது . அப்போக்கூட கார் ஜன்னல் டோரை கூட க்ளோஸ் பண்ணாம அஜாக்கரதையாவா இருப்பாங்க ? ஒரு எம் எல் ஏ கார் அப்படித்தான் இருக்குமா? 


6  ஆல்ரெடி உயிருக்குப்போராடிட்டு இருக்கும் ஆளை சாய் குமார் கார்ல கூட்டிட்டு ஹாஸ்பிடல் போய்ட்டு இருக்கார் . அவரை ஏன் கழுத்தை நெறிச்சு கொலை செய்யனும் , கார்ல ஸ்லோவா போனா போதும் , அல்லது ஹாஸ்பிடல்க்கு சுத்து வழில போனா போதும், ஆட்டோமேடிக்கா அவர் இறந்துடுவாரே? க்ளவுஸ் கூட போடாம எதுக்கு ரிஸ்க் எடுக்கறார்? 


7 அரசியல்னாலே ரவுடியிசம் தான் , அயோக்கியத்தனம் தான் . வில்லனா இருக்கும் சாய் குமார் ஏன்  தன் இளைய பையனை அப்படி வெறுக்கனும் ? வில்லனுக்கு வில்லன் தானிக்கு தீனி சரியாத்தானே இருக்கு ?



 மனம் கவர்ந்த வசனங்கள் 



1.  சிகரெட் பிடிக்கறதுக்கும் , மரியாதைக்கும் சயிண்ட்டிஃபிக்கா எந்த சம்பந்தமும் இல்லை. அதனால என்னைப்பார்த்ததும் சிகரெட்டை கீழே போடனும்னு அவசியம் இல்லை 

 

 

2  யோவ் கிழவன் மாதிரி ஓட்டாதே , யூத் மாதிரி ஓட்டு , காரை 

 

3  அவன் ஆலோசிச்சு எதையும் செய்வான் , நீ ஆவேசத்தோட செய்வே 

 

4 நான் பலர் வாழ்க்கையை கெடுத்தவன் , நீ என் வாழ்க்கையையே கெடுத்துட்டியே ? 

 

5  பசியோட பாலிடிக்ஸ் பண்ண முடியாது , முதல்ல சாப்பிடுவோம்

 

6 இந்த உலகத்துல ஜெயிக்கிறது யாரு? தோக்கறது யாரு? னு முடிவு பண்றது ஒரே விஷயம் தான். அது உன் கேரக்டர் தான்

 

7 பொண்ணுங்களை மடக்க கண்ண தாசன் ல இருந்து கசாப்புக்கடைக்காரன் வரை  ஒரே மாதிரி தான் பேசறாங்க 

 

8 அரசியல் ல  விசுவாசமா இருக்கறவனை விட வில்லங்கமா இருக்கறவன் தான் ஜெயிப்பான் 

 

9 ஜெயிக்கறவனுக்கும் , தோக்கறவனுக்கும்  இடைல  இருக்கும் வித்தியாசம் நம்பிக்கை தான் 

 

10  எதிரிங்க எப்பவும் ஆப்போடதான் அலைவாங்கனு தெரியாதா? 

 

 

11  தலைவன் ஆகனும்னா வாரிசா இருந்தா போதாது ரத்தத்துலயே ஊறி இருக்கனும்

 

12   பெரிய கேடியா  இருந்தாலும் நியாய தர்மத்துக்குப்பிறந்தவன் மாதிருயே பேசறாரே? 

 

 சரக்கும் , சைடு டிஷ்சும் கம்மியா சாப்பிடறவர் போல 

 

13  சரிக்கட்ட முடியலைன்னா சமாதி கட்டு - இதுதான் என் பாலிசி 

 

14 சிம்ப்பதிலயே சீட்டிங்க் எம் எல் ஏ சீட்டைப்பிடிக்கலாம்னு நினைக்கறாரு 

 

15  பவர் வேணும்னா சாகறதுக்கும் , சாகடிக்கறதுக்கும் தயாரா இருக்கனும்    

 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 40 ( டப்பிங்க் படத்துக்கு விமர்சனம் போட மாட்டாங்க )


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 3  / 5


சி பி கமெண்ட்  - ஜீ டி வி ல போடும்போது பார்த்துக்கலாம்   தியேட்டர்ல போய்ப்பார்க்கும் அளவு ஒர்த் இல்லை . விருத்தாசலம்  ல படம் பார்த்தேன்






 

 

 

Director:

Writer:

(dialogue and story)

Stars:


Jeeva ...
Machi reddy
Sundeep Kishan ...
Chinna
Vennela Kishore ...
Goli
Sai Kumar ...
Loki
Pavithra Lokesh ...
Mother
Ruby Parihar ...
Heroine
Jaya Prakash Reddy ...
Bangaru Naidu
Reshmi ...
Nadia
Parihar Ruby ...
Heroine
Sharvanand ...
Hero
Surekha Vani ...
Sister

0 comments: