Friday, October 18, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 18 10 2013 ) 9 படங்கள் முன்னோட்ட பார்வை


தீபாவளி போட்டியிலிருந்து விலகிய 7 படங்கள்  ரிலீஸ்

7 movies Releasing tomorrow
வருகிற செப்டம்பர் 2ந் தேதி தீபாவளிக்கு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீசாகிறது. இதனால் தீபாவளி போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகும் 7 சிறுபட்ஜெட் படங்கள் (அக்., 17ம் தேதி) ரிலீசாகிறது.

ஆர்.சுந்தர்ராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டைரக்ட் செய்துள்ள சித்திரையில் நிலாச்சோறு நாளை ரிலீஸ். தெய்வ திருமகள் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாராதான் ஹீரோயின். குழந்தையை சுற்றி நடக்கும் கதை. வசுந்தரா பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கிறார்.

பெரும் போராட்டத்துக்கு பிறகு கருணாசின் ரகளபுரம் நாளை ரிலீஸ். காமெடி போலீசான கருணாஸ் சீரியசான கேஸ்களை காமெடியாக டீல் பண்ணும் கதை.

சினிமாவுக்கு புதியவர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் நுகம். ஜெஃபி என்பவர் டைரக்ட் செய்துள்ளார். இனியா ஹீரோயின். இது ஒரு திகில் கதை.

திருப்பதி என்பவர் டைரக்ட் செய்துள்ள முத்து நகரம் என்ற படமும் நாளை ரிலீசாகிறது. தூத்துக்குடி தாதாக்களின் கதை. இதுவும் புதுமுங்களின் தயாரிப்பு.

ஏ.ஆர்.ரவி என்ற நியூபேஸ் டைரக்ட் செய்துள்ள படமான அஞ்சல்துறையும் நாளை ரிலீஸ். இதில் ஒரே ஒரு பாடல் காட்சியை மட்டும் 3டியில் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதுதவிர நிர்ணயம், இங்கு காதல் கற்றுத் தரப்படும் ஆகிய இரண்டு சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசாகிறது. இதற்கு இடையே ஹாலிவுட் ஆக்ஷன் படமான எஸ்கேப், கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு என்ற பெயரில் தமிழிலும், ஆங்கிலத்திலும் ரிலீசாகிறது.

1சித்திரையில் நிலாச்சோறு - .பயணங்கள் முடிவதில்லை, அம்மன் கோயில் கிழக்காலே, என் ஜீவன் பாடுது, மெல்ல திறந்தது கதவு, வைதேகி காத்திருந்தாள் என ஏராளமான ஹிட் படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தராஜான். இவருடைய படங்கள் எப்படி மிகப்பெரிய ஹிட்டோ அதைவிடம் இவர் படத்தில் இடம்பெறும் பாடல்கள் பெரிய ஹிட்டாகும். இளையராஜா இசையில் இவருடைய அனைத்துப் படங்களின் பாடல்களும் தமிழக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவையாகும்.

நீண்ட இரு இடைவெளிக்குப் பிறகு ஆர்.சுந்தராஜான் 'சித்திரையில் நிலாச்சோறு' என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு இசைஞானி தான் இசையமைத்துள்ளார். சுந்தராஜன் - இளையராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு தற்போது ரசிகர்களிடையே பலமான எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் சார்பில் பழனிச்சாமி என்பவர் தயாரித்துள்ள இப்படத்தில் புதுமுகங்கள் நடிக்க, முக்கிய வேடத்தில் 'தெய்வத்திருமகள்' படத்தில் நடித்த சாரா அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஏப்ரல் 25) சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கோவை தம்பி, கலைப்புலி ஜி.சேகரன், கேயார் உள்ளிட்ட ஏராளமானோர்கள் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும், இயக்குநர் ஆர்.சுந்தராஜான் - இளையராஜா கூட்டணியின் உருவான பாடல்கள் குறித்தும், படங்கள் குறித்தும், சுந்தராஜனின் நகைச்சுவை உணர்வு பற்றியும் பேசினார்கள். நிகழ்ச்சி முழுவதுமே கலகலப்பாக ஏதோ ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்தது போல இருந்தது. (டி.என்.எஸ்)

2. ரகளபுரம். -  திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் 3வது படம் ரகளபுரம். இப்படத்தில் கருணாஸ் ஜோடியாக அங்கனா நடிக்கிறார். கோவை சரளா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர பரத் ரெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், பவன், மயில்சாமி, சிங்கம்புலி, ஓ.ஏ.கே.சுந்தர், சஞ்சனாசிங், ரகசியா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பயந்த சுபாவம் உள்ள ஒரு போலீஸ்காரரை பற்றிய படம் இது. அவர் தப்பாக எடுக்கும் முடிவுகள் எல்லாம் அவருக்கு சாதகமாக முடிகின்றன. அதனால் ஏற்படும் பிரச்னைகள்தான் இப்படத்தின் கதை. சுந்தர் சி, சுராஜ், ஷக்தி சிதம்பரம் ஆகிய டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக இருந்த மனோ இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோவாக நடிப்பதுடன் தன்னுடைய கென் ஸ்டூடியோ சார்பில் கருணாஸே இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது.  
 
3 இங்கு காதல் கற்றுத்தரப்படும்-  ஸ்ரீநாத் கிரியேஷன்ஸ் சார்பில் சாந்தி ஸ்ரீதர் தயாரிக்கும் படத்துக்கு ‘இங்கு காதல் கற்றுத்தரப்படும்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் ஸ்ரீநாத் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக தருஷனா நடிக்கிறார். லிவிங்ஸ்டன், ஆர்த்தி, பாண்டு, இமான் அண்ணாச்சி, ஷியாம்சுந்தர, மீனாகுமாரி, பேபி ஸ்நேகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஸ்ரீதரன் இயக்குகிறார். காதலிக்கிறவர்கள் தங்கள் காதலை எவ்வாறு கையாளவேண்டும். காதலிக்க போகிறவர்கள் எவ்வாறு அதனை எதிர்கொள்ள வேண்டும். காதலில் தோற்றவர்கள் அந்த சூழலை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காதலர்களுக்கு கருத்து சொல்லும் படமாக தயாராகிறது என்றார் இயக்குனர்.

சென்னை, ஊட்டி மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஒளிப்பதிவு: கோபி சபாபதி, இசை: காகித்யா, எடிட்டிங்: கண்ணதாசன், இணை தயாரிப்பு: வி.மணிவண்ணன், தயாரிப்பு மேற்பார்வை: செங்குன்றம் இ.கணேசன்.முத்து நகரம்'.- எல்.ஏ.சினி ஆர்ட்ஸ் சார்பில் ஏ.முருகன் தயாரிக்கும் படம் `முத்து நகரம்'. இதில் நாயகர்களாக விஷ்வா, கே.திருப்பதி, ரவி, தீப்பெட்டி கணேசன், அரசு நடிக்கின்றனர். நாயகியாக அஸ்ரிக் நடிக்கிறார். கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, நந்தா சரவணன், காதல் சுகுமார், பாய்ஸ் ராஜன், பூவிதா, செவ்வாழைராஜி, கவிதாபாலாஜி, மது, ஸ்ரீகவி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி கே.திருப்பதி இயக்குகிறார். இவர் பல இயக்குனர்களிடம் இணை மற்றும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிறக்கும் போது யாரும் குற்றவாளி இல்லை. வளர்ந்த பிறகும் குற்றவாளிகளாக விரும்புவது இல்லை. சூழ்நிலைகளே குற்றவாளியாக்கிறது.

இந்த கருத்தை படத்தில் பதிவு செய்துள்ளோம் என்றார் இயக்குனர். படப்பிடிப்பு தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், குலசேகரப் பட்டிணம், கயத்தாறு போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. இசை: ஜெய்பிரகாஷ், ஒளிப்பதிவு: சூர்யா, எடிட்டிங்: ராஜ்கீர்த்தி, ஸ்டண்ட்: பயர்கார்த்திக், பாடல்: ஜெயமுரசு, கவின்பா, நடனம்: பால குமார் ரேவதி, தயாரிப்பு மேற்பார்வை: ஜெ.வின்னி.

5. அஞ்சல்துறை -  அஞ்சல்துறை என்ற பெயரில் புதுமுகங்கள் நடிக்கும் ஒரு திகில் படம் தயாராகி வருகிறது. புதுமுகங்கள் மோகன் சி, நாராயணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடிகளாக சவுபர்னிகா, குஷ்பு முகர்ஜி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எடிட்டிங், ஒளிப்பதிவு, டைரக்ஷன் பொறுப்புகளை ஏ.ஆர்.ரபி ஏற்றுள்ளார்.

படத்தை பற்றி ரபி கூறுகையில், கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இரண்டு நண்பர்கள் காதல் வசப்படுகிறார்கள். அந்த அறையில் ஒரு அமானுஷ்யமான சக்தி இருந்து கொண்டு இவர்களின் காதலுக்கு தொல்லை கொடுக்கிறது. அதை மீறி நண்பர்கள் இரண்டு பேரும் காதலில் எப்படி ஜெயிக்கிறார்கள்? என்பதே கதை. செந்தில், நெல்லை சிவா, பெஞ்சமின், கிங்காங், போண்டாமணி ஆகிய நகைச்சுவை நடிகர்களுடன் வடிவுக்கரசியும் நடிக்கிறார். பருத்திப்பள்ளி பி.சின்னுச்சாமி தயாரிக்கிறார். பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் திருவனந்தபுரத்தில் படம் வளர்ந்து வருகிறது, என்றார்.
 
6.ரவுடி கோட்டை -  ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்த புதிதில் அதாவது 2010ம் ஆண்டு நிதினுடன் நடித்த தெலுங்குப் படம் "சீதாராமுல கல்யாணம் லங்கோலோ". வெல்பர் கிரியேஷன் சார்பில் மல்லையா விஜய பிரசாத் என்பவர் தயாரித்திருந்தார். இதன் தமிழ் டப்பிங் உரிமையை பெண் தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி என்பவர் வாங்கியிருந்தார். படத்தை தமிழில் டப் செய்து ரவுடி கோட்டை என்ற பெயரில் ரிலீஸ் பண்ணவும் தயாராக இருந்தார்.

இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் சுந்தரலட்சுமி மீது நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்போவதாக சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:  "தெலுங்கில் சீதாராமுல கல்யாணம் லங்கோலோ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது இது தெலுங்கில் மட்டுமே வெளியிடப்படும் தமிழ் டப்பிங் வெளிவராது என்று சொல்லித்தான் ஒப்பந்தம் போட்டனர். ஆனால் இப்போது ஒப்பந்தத்தை மீறி தமிழ் டப்பிங் உரிமையை விற்றுள்ளனர். இதற்கு என்னிடம் முறையான அனுமதி பெறவில்லை. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்வேன்" என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சுந்தரலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலுங்கு தயாரிப்பாளரிடமிருந்து முறையான அனுமதி பெற்றுத்தான் தமிழில் டப் செய்திருக்கிறேன். ஹன்சிகாவின் புகார் குறித்து தெலுங்கு தயாரிப்பாளரிடம் கேட்டபோது மற்ற மொழிகளில் டப் செய்ய மாட்டோம் என்று ஹன்சிகாவுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. வாய்மொழியாகவும் அவர் கேட்கவில்லை. நாங்களும் சொல்லவில்லை. என்று கூறிவிட்டார் எனவே ஹன்சிகா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அவர் தெலுங்கு தயாரிப்பாளர் மீதுதான் எடுக்க வேண்டுமே தவிர எங்கள் மீதல்ல. அதையும் மீறி அவர் எங்களுக்கு இடையூறு செய்தால் அவரை சட்டப்படி சந்திப்போம் எங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் அவரே ஈடுகட்ட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஹன்சிகா எதிர்ப்பது ஏன்...?

படத்தின் டப்பிங் பொறுப்பேற்றிருக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறும்போது "ரவுடிக்கோட்டை படத்தில் ஹன்சிகா படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அதனால் தமிழ் நாட்டில் தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என்று பயந்து படத்தை தடை செய்ய முயற்சிக்கிறார்" என்றார்.7 நிர்ணயம்  - பி.சி.எஸ்.எம். பட நிறுவனம் சார்பில் செல்வ கணேஷ், சிட்டிபாபு, ஸ்ரீசரவணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் நிர்ணயம் இதில் புதுமுகம் விக்ரம் ஆனந்த் நாயகனாகவும், ரெஜினா கசன்ட்ரா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

வேதிகா என்ற நான்கு வயது குழந்தையும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறது. காதல் சரண்யா, வி.கே.ராமசாமியின் மகன் வி.கே.ஆர். ரகுநாத், ஹாரீஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஸ்ரீசரவணன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும் போது வாழ்க்கையில் காதல் மட்டுமே முக்கியம் என்று சில இளைஞர்கள் வாழ்கின்றனர். இவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆக முடியாமல் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இவர்களை பற்றிய கதையே இப்படம்.

தளி, காஞ்சீபுரம், சித்திர துர்கா, மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்து இறுதிகட்ட பணிகள், நடக்கின்றன. இசை: வி.செல்வகணேஷ், ஒளிப்பதிவு: சிட்டிபாபு.
 
8  நுகம்  - சினர்ஜி கிரியேஷன்ஸ் சார்பில் ஜெஃபி தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘நுகம்’. ஜெய்பாலா, இனியா, கஞ்சா கருப்பு, விஜயகுமார் உட்பட பலர் நடிக்கின்றனர். படம் பற்றி நிருபர்களிடம் ஜெஃபி கூறியதாவது: ‘நுகம்’ என்பதற்கு தாங்க முடியாத, தவிர்க்க முடியாத வலியுடன் கூடிய பாரம் என்று பொருள். அதாவது, மனம் பாரமாக இருக்கிறது என்று சொல்வார்களே, அது. அன்னிய முதலீடுகளை தடுக்கும் விதமாக செயல்படும் இரண்டு தீவிரவாதிகளைப் பற்றிய கதை.

இரண்டு கெட்டவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை, சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாக்கியுள்ளேன். ஜெய்பாலா, விஜயகுமார் இருவரும் தீவிரவாதிகள். கெட்டவன் என்றாலும், அவனுக்கும் காதல் வரும். தீவிரவாதி ஒருவனுடைய காதலியாக இனியா நடிக்கிறார். சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், மும்பை, பெங்களூரில் ஷூட்டிங் நடந்தது. இரண்டு ‘கட்‘டுகள் கொடுத்த சென்சார், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது

Escape Plan (2013) Poster9.

Escape Plan (2013)-ஆக்ஷன் ஹீரோக்களான அர்னால்ட் ஸ்வாஜ்நேகரும் சில்வர்ஸ்டர் ஸ்டாலோனும் இணைந்து நடித்துள்ள ஹாலிவுட் படம், ‘எஸ்கேப் பிளான்’. இது தமிழில் ‘கேடி ராம்போ கில்லாடி அர்னால்ட்’ என்ற பெயரில் டப் ஆகிறது. தவறாக சிறைதண்டனை விதிக்கப்பட்ட ஒருவன், அங்கு பல கொடுமைகளை அனுபவிக்கிறான். சக கைதியின் உதவியுடன் அவன் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் கதை. பிரமாண்டமாக உருவக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை மைக்கேல் ஹாப்ஸ்டோம் இயக்கி உள்ளார். ஹோப்ஸ், வின்னி ஜோன்ஸ், வின்சென்ட் டோனோபிரியோ, எமி ரியான் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை தமிழில், எஸ் இன்டர்நேஷனல் 18,ம் தேதி வெளியிடுகிறது. 

 

When a structural-security authority finds himself set up and incarcerated in the world's most secret and secure prison, he has to use his skills to escape with help from the inside. 

 

Ray Breslin is the world's foremost authority on structural security. After analyzing every high security prison and learning a vast array of survival skills so he can design escape-proof prisons, his skills are put to the test. He's framed and incarcerated in a master prison he designed himself. He needs to escape and find the person who put him behind bars. 

 

 

Director:

Writers:

(screenplay), (screenplay), 1 more credit »

Stars:

 

சென்னை : சினர்ஜி கிரியேஷன்ஸ் சார்பில் ஜெஃபி தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘நுகம்’. ஜெய்பாலா, இனியா, கஞ்சா கருப்பு, விஜயகுமார் உட்பட பலர் நடிக்கின்றனர். படம் பற்றி நிருபர்களிடம் ஜெஃபி கூறியதாவது: ‘நுகம்’ என்பதற்கு தாங்க முடியாத, தவிர்க்க முடியாத வலியுடன் கூடிய பாரம் என்று பொருள். அதாவது, மனம் பாரமாக இருக்கிறது என்று சொல்வார்களே, அது. அன்னிய முதலீடுகளை தடுக்கும் விதமாக செயல்படும் இரண்டு தீவிரவாதிகளைப் பற்றிய கதை.

இரண்டு கெட்டவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை, சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாக்கியுள்ளேன். ஜெய்பாலா, விஜயகுமார் இருவரும் தீவிரவாதிகள். கெட்டவன் என்றாலும், அவனுக்கும் காதல் வரும். தீவிரவாதி ஒருவனுடைய காதலியாக இனியா நடிக்கிறார். சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், மும்பை, பெங்களூரில் ஷூட்டிங் நடந்தது. இரண்டு ‘கட்‘டுகள் கொடுத்த சென்சார், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=10332&id1=3#sthash.rigNIp13.dpuf

1 comments:

sivasenthilkumar said...

Is it from setember 2nd or november 2nd? (in first line of article
)