Friday, October 18, 2013

Escape Plan - கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு - சினிமா விமர்சனம்

உலகில் இருக்கும்  பல சிறைகளில்  கட்டமைக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள  ஓட்டைகளை, பலவீனங்களைப்பயன்படுத்தி   கைதிகள் எப்படித்தப்பிக்கிறாங்க  என்பதை உணர்ந்தவர்  ஹீரோ . அவரோட வேலையே இந்த மாதிரி  ஒரு ஜெயில்ல  வேலண்ட்ரியா உள்ளே போய் அங்கே இருந்து தப்பிச்சு  அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள மைனஸ்களை அதிகாரிகளுக்குத்தெரியப்படுத்துவதே . அவரோட அனுபவங்களை  ஒரு புக்காவே போட்டிருக்கார் . 


ஜெயிலோட அமைப்பு   எப்படி  இருந்தா  கைதி எந்த வழில  தப்பிப்பான் என்பதற்கான  கைடு அது . அந்த புக்கைப்படிச்சா சிறை அதிகாரிகள் ஜாக்கிரதையா  இருப்பாங்க , கைதிகள் படிச்சா ஈசியா  ஜெயில்ல  இருந்து தப்பிப்பாங்க. 


எந்த  ஜெயிலோட அமைப்பைப்பார்த்தாலும்  ஹீரோவால அந்த ஜெயில்ல  இருந்து எப்படித்தப்பிக்கறதுன்னு பிளான்  ரெடி பண்ணிக்கொடுக்க முடியும் . அப்பேர்ப்பட்ட  கில்லாடி ஆளான  ஹீரோவுக்கு  ஒரு பிராஜக்ட்  வருது . உலகின்  மிகப்பாதுகாப்பான  ஒரு ஜெயில் உள்ளே போய் தப்பிச்சு வரனும் . அதுக்கான  சார்ஜ்  5 மில்லியன் டாலர்கள் . 


ஹீரோ அந்த ஜெயிலுக்குள்ளே  போய்  தப்பிக்க  முனையும் போதுதான்  தெரியுது , இது அவரை லைஃப் லாங்க் ஜெயில்லயே சிக்க வைக்க திட்டமிடப்பட்ட சதின்னு . அதை எப்படி அவர்  முறியடிக்கறார்? அந்த சதி  செஞ்ச  சதி லீலாவதி  யார் என்பதே  மிச்ச  மீதி திரைக்கதை .  க்ளைமேக்ஸ் ல ஒரு சஸ்பென்ஸ் வேற  இருக்கு ஹீரோவா சில்வர்ஸ்டர் ஸ்டோலன் . ஆள் பார்க்க பாவமா  இருக்கார் . வயசானவங்க ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் நடிக்காம  இருப்பதே அவர்களது இமேஜ்க்கு நல்லது , வ்ழக்கமா  தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சட்டையைக்கழட்டி தன் எக்சசைஸ் பாடியைகாட்டி விடும்   ஹாலிவுட்  கமல் ஆன ஸ்டோலன்  இதில் அப்படிச்செய்யாதது ஆறுதல் . கன்னம் எல்லாம் சதை தொங்கிப்போச்சு. இருந்தாலும்  படம்  முழுக்க  தன்  ரசிகர்களைக்கவர்ந்திழுக்க  தன்னாலான முழு முயற்சியையும்  எடுத்திருக்கார் , வெல்டன்  இன்னொரு  ஹீரோ கமாண்டோ அர்னால்டு ஸ்வார்செனேகர் . இவரும் அப்படியே . வள்ளி படத்தில் ரஜினியைப்பார்த்தது போல்  வயசான  கெட்டப்பில்  இருக்கார் .ஹீரோவை  விட இவருக்கு காட்சிகள் குறைவுதான் . ஆனால்  க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ் காட்சி இவருக்கு  உரியது என்பதால்  நடிக்க  ஓக்கே சொல்லி இருப்பார்  போல 


வில்லனாக வரும்  ஜிம்  மிக அமைதியான முகத்துடன்   ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வழங்கி மனம்  கவர்கிறார் .  


ஹீரோயின்  பேருக்கு  இருந்தாலும்  நோ யூஸ் . திரைக்கதை  முழுக்க முழுக்க ஜெயிலிலேயே நடப்பதால்   ஹீரோக்கள்  இருவரையுமே காட்ட வேண்டிய கட்டாயம் 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஓப்பனிங்க்  சீனில்  ஹீரோ  ஒரு ஜெயிலில்  இருந்து தப்பிக்கும் காட்சி மிக பிரமாதமாகப்படம் ஆக்கிய  லாவகம் . யாரும்  லாஜிக் மிஸ்டேக்கே  சொல்லாத படி  எடுத்தது , அதே சமயம்  அதை  டீட்டெயிலாக சொல்லி  இழுக்காமல் கட் ஷாட்ஸ்களில் சொல்லி ஈசியாகப்புரிய வைத்தது 2  படம்  மொத்தம்  2 மணி  நேரம்  ஓடுது , முழுக்க முழுக்க ஜெயிலில் தான்  என்றாலும்   சில காட்சிகள்  தவிர  மீதிக்காட்சிகளை போர் அடிக்காமல்  ஒரு எதிர்பார்புடன் திரைக்கதை அமைத்த லாவகம்3  இரண்டு ஹீரோக்கள்  மெயினாக இருந்தாலும்   வில்லனுக்கு முக்கியத்துவம்  கொடுத்து அவரை அண்டர் ப்ளே ஆக்டிங்க் செய்ய வைத்தது இயக்குநரிடம்  சில  கேள்விகள் 

1. இந்தக்காலத்தில் அறிமுகம் இல்லாத நபர்  ஒரு செக் கொடுத்தா நம்மாளுங்க  அது பேங்க்கில் பாஸ் ஆன பின் தான் நம்புவாங்க , அது வரை ஒரு சாதா பேப்பர்தான் . ஆனால் 5  மில்லியன் டாலர் பிராஜக்ட். அதுவும் அட்வான்ஸ் பேமண்ட் என சொல்லப்பட்டதும்  அந்த பேமண்ட்டை கேஷாக வாங்காமல் செக்காக யாராவது வாங்குவாங்களா? இது பிளாக் மணி . செக்காக வாங்கினால்  கணக்கில் வந்துடாதா? அப்படியே செக்காக வாங்கினாலும் அதை கலெக்ச்ன போட்டு பாஸ் ஆன பின் தானே ஹீரோ  அந்த வேலையை செய்ய ஆரம்பிக்கனும் ?


2  அந்த செக் பேங்க்கில்  ரிட்டர்ன் ஆனதும்  ஒரு வசனம் “ இன்னும் 2 தடவை கலெக்‌ஷன் போட்டுப்பாரேன்  என . அப்போ  ரிப்ளை “ ஒரு மாசம் ஆச்சு , பல டைம் கலெக்‌ஷன் போட்டாச்சு , நோ யூஸ் . இந்த வசனம்  வரும்போது அந்த செக்  க்ளோசப்ல காட்டப்படுது . செக் ரிட்டர்ன்  பேங்க் சீல்  ஒரு டைம்  தான் வைக்கப்பட்டிருக்கு . ஒவ்வொரு டைம் செக்  ரிட்டர்ன் ஆகும்போதும்  சீல் வைக்க வேண்டாமா?   என்ன  தான் பேங்க் ஸ்டாஃப்ஸ் எல்லாம் சரியா வேலை செய்யாதவங்களா  இருந்தாலும் இதைக்கூடவா ஒழுங்கா செய்ய மாட்டாங்க ?


3  ஓப்பனிங்க்   சீன் ல  ஹீரோ  ஜெயில்ல  இருந்து தப்பிச்சு கார்ல போகும்போதே  தன் கைதி  டிரஸ்சை மாத்தி இருக்கலாமே? ஏன் மாத்தலை ? கைதி தப்பிக்கும்போது ஃபாலோ பண்ண வேண்டிய  முதல்  ரூலே  டிரஸ் சேஞ்ச் தானே?


4  ஜெயில்  அதிகாரிக்கு  ஹீரோ அந்த  ஜெயில்ல  இருந்து தப்ப  ஏதோ பிளான் போடறார்னு தெரியுது , பாதுகாப்பை  3 மடங்கு பலப்படுத்துங்கன்னு ஆர்டர்  போடறார். இதுக்கு பேசாம  ஹீரோவுக்கு 4 மணி நேரத்துக்கு  ஒரு முறை மயக்க மருந்து  கொடுத்தா போதுமே?  அல்லது ஸ்லீப்பிங்க் டேப்லட்சை அவருக்கே தெரியாம  கொடுக்கலாமே? 


5  தப்பிக்கப்போகும்  கைதி  உடம்பில் GSM  செல் ஃபோன் ல டிராக் கண்டுபிடிப்பது மாதிரி  ஏதாவது  ஒரு ட்ரான்ஸ்மீட்டரை பொருத்திட்டா  கைதி எங்கே தப்பி ஓடினாலும்  ஈசியா  ஃபாலோ பண்ணி பிடிக்கலாமே? 


6 ஜெயிலுக்குள்ளே  ஏதோ  ஒரு கவரை  ஹீரோ  தன் பேண்ட்டின் பின் பக்கம்  சொருகி மறைவா எடுத்துட்டுப்போறார். அது அப்படியே நழுவி கால் வழியா விழுந்தா  அவருக்குத்தெரியாது , அதனால் சட்டைப்பகுதியில்  முன் பக்கம் மறைத்து எடுத்துச்செல்வதுதான் பாதுகாப்பு ( லைப்ரரில  இருந்து  புக்  சுடும் பசங்க அப்படித்தான்  சுடுவாங்க ) 

7 துப்பாக்கி சுட்டு அனுபவம் ஏதும் இல்லாத  ஒரு ஆள் ஹீரோவுக்கு உதவி பண்றார் . அவர் 2 கைலயும்  2 கன் வெச்சு அட்டர் டைம் ல சுட்டுட்டே இருக்கார் , சுடும்போது ரிஃப்லக்‌ஷன் ஏதும் ஆகலை 


8 க்ளைமாக்ஸ்ல  வில்லன் கப்பல் மேல் தளத்தில் , அவர் அருகே ஆயில் கேன்கள் அல்லது பெட்ரோல் கேன்கள் இருக்கு , ஹீரோவுடன் நடக்கும் கன் ஃபைட்டில்  ஹீரோ  2 ஆயில் டேங்க்கில் சுட்டு ஆயில் லீக்கேஜ் ஏற்படுத்தறார். அப்புறம் 13 செகண்ட் கேப் விடறார் அந்த கேப் ல  வில்லன் டக்னு  கப்பல் ல இருந்து  கடல் ல குதிச்சு இருக்கலாமே?  ஏன் அப்படியே நிக்கறார்? நீச்சல் தெரியாதுன்னு சமாளிக்க வழி இல்லை , ஏன்னா கப்பல்ல ஒர்க் பண்றவங்க கம்ப்பல்சரி நீச்சல் பழகி இருக்கனும் என்பது விதி மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ஜெயில் லைஃப் எப்படி  இருந்தது ?


 எல்லாரும் உன்னைத்தான் அக்கறையா கேட்டாங்க 2  தப்பிக்கக்கூடிய வாய்ப்பு எந்தக்கைதிக்கும் 1% கூட கிடைக்கக்கூடாது , அதுதான் என் லட்சியம் 


3   பொதுவா ஜெயில்ல  இருந்து தப்பிக்க 3 காரணிகள் 

1 சுத்தி என்ன நடக்குதுன்னு  புரிஞ்சுக்கனும் 

2 வெளீல இருந்து உதவி  கிடைக்கனும் 

3 சமயத்துக்கு தக்கபடி சாதுர்யமா நடக்கக்கத்துக்கனும் 


4  ஹாய் , ஸ்வீட்டி , உன்  கள்ளத்தொடர்பு எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு ?

 வாட்? 

 நான் ஜெயிலுக்குப்போனதும்  ஒருத்தன்  கூட டின்னருக்குப்போனியே ? 5  ஹாய் , என் பேரு  மிஸ்  ஜூஸ் 

 புதுசா? 

 வாட்? 

 இல்லை , வேலைக்குச்சேர்ந்து புதுசா?ன்னு கேட்டேன் , நியூலி அப்பாயிண்ட்டட்>?

 5 மாசம்தான் ஆகுது 


 5  மாசமா? பார்த்தாத்தெரியலையே? 6  ஜெயில்ல  இருக்கும்போது  பொழுது போக்குகள் ஏதும் இல்லைன்னா  ரொம்ப  போர் அடிக்கும் 


7  டாக்டர் , அந்தக்கைதி  உங்க கிட்டே என்ன கேட்டான் ?

 இங்கே  இருக்கறவங்க எல்லாம்  ஏன் பல்ஹீனமா இருக்காங்கன்னு கேட்டான் 


 அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க ?

 இப்[போ  உன் கிட்டே சொன்ன மாதிரியே தெரியாதுன்னு சொன்னேன் 8  சின்ன வயசுல நான்  ஓவியன் ஆகனும்னு ஆசைப்பட்டேன் , இதுல என்ன பிரச்ச்னைன்னா எனக்கு அந்த  திறமை சுத்தமாக்கிடையாது 


9  சிறையில்  இருக்கும் மனிதர்களின்  புத்தி வெளியுலக மனிதர்களின் புத்தியை விட வித்தியாசமா சிந்திக்கும் 


10  சாதாரணமா   எல்லா ஜெயிலுங்களும்  ஊரை  விட்டுத்தள்ளி தான்  இருக்கும் 


11  ஒருத்தனைக்கொல்வது  சுலபம், அவனை திருத்தறதுதான் கஷ்டம் , இதுல வேடிக்கை என்னான்னா அதுதான் வாழ்க்கை ஆவது 


12   நீ சாகறதுக்கு ஆசைப்படறியா?


 நீ  ஜெயிலை விட்டு வெளீயே போக ஆசைப்படறியா? 


13  உனக்கு சுதந்திரத்தைத்தவிர வேறு  எது வேணாலும் தர  என்னால முடியும் 


14  நான்  இங்கே  வாழ்வதே கடவுளை ஒரு டைமாவது நேர்ல பார்த்துடலாம்னு தான் 


15  பொதுவா  டாக்டர்ங்க  வியாதியை குணப்படுத்த  மருந்து  தருவாங்களே தவிர அந்த மருந்தோட  தன்மை என்ன?னு தெரிஞ்சு வெச்சுக்க மாட்டாங்க  


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-41  ( ஹாலிவுட் படங்களுக்கு மார்க் போடுவதில்லை) 


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

ரேட்டிங் = 3.25   / 5சி பி கமெண்ட்  - தியேட்டரில் போய்ப்பார்க்கும் அளவு  பிரமாதமான படம்னு சொல்லிட முடியாது , ஆனா  போர் அடிக்காம போகுது . 2  சூப்பர் ஸ்டார்கள் ரசிகர்களைத்திருப்திப்படுத்தும் அளவு ஆக்‌ஷன் காட்சிகள் ஏதும்  கிடையாது  திரைக்கதை சுவராஸ்யம் போதும் என நினைப்பவர்கள் பார்க்கலாம் , பெண்களு,ம் பார்க்கலாம் , ஏன்னா படத்துல சரக்குக்கூட சீன் இல்லை , ஐ மீன் மருந்துக்குக்கூட விருந்து இல்லை 

2 comments:

princely said...

படத்துல 2 சூப்பர் ஹீரோ இருந்தும், மருந்துக்கு கூட அவுங்க போட்டோ போடல.. ஒன்லி ஹீரோயின் போட்டோஸ்..

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் அருமை.
வாழ்த்துக்கள்.