Sunday, October 27, 2013

ஆரம்பம் -வசனகர்த்தா சுபா பேட்டி + கொங்கு மண்டலம் தீபாவளி ரிலீஸ் தியேட்டர் லிஸ்ட்

ஆரம்பத்துக்கு முன்பதிவு தொடங்கியது - தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்!!

 

தல ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் தீபாவளி விருந்து படைக்க வருகிறது ஆரம்பம். வருகிற 31ந் தேதி உலகம் முழுவதும் ஆரம்பம், ஆரம்பம். அதற்கான முன்பதிவு இன்று (அக்டோபர் 26) தொடங்கியது. காலை பத்து மணிக்கு துவங்கிய முன்பதிவு மாலை 5 மணி வரை இருக்கும். சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இதற்கென தனியாக கவுண்டர்கள் அமைத்திருக்கிறார்கள். காலை 8 மணிமுதலே ரசிகர்கள் முன்பதிவு கவுண்டர்களை மொய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

தீபாவளி ஸ்பெஷல் டிரைய்ன் மாதிரி காலை 12 மணிக்குள் நவம்பர் 5ந் தேதி வரைக்கும் ரிசர்வேஷன் முடிந்து விட்டதாக தியேட்டர் மானேஜர்கள் தெரிவிக்கிறார்கள். சென்னை அடுத்த பிற நகரங்களிலும் இன்றே முன்பதிவு தொடங்கியது. அங்கும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜாலில் இதுவரை 24 காட்சிகளுக்கு ஹவுஸ்புல் புக்கிங்க ஆகிவிட்டது. 31ந் தேதி அன்று மட்டும்  70 காட்சிகள் திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதுதவிர பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ஆன்லைன் புக்கிங்கும் இன்று தொடங்கியது. சில புக்கிங் இணைய தளங்கள் இதற்கென்று தனி பக்கத்தை துவக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பம் மூலம் 18 வருடங்களுக்கு பிறகு ரீ-என்ட்ரியாகும் சுமன் ரங்கநாதன்!!
3

Suman Renganathan Re-entry after 18 years by Arrambam
சுமன் ரங்கநாதனை ஞாபகம் இருக்கிறதா...? தமிழில், ‘புதுப்பாட்டு’, ‘பெரும்புள்ளி’, ‘மாநகரகாவல்’ போன்ற படங்களில் நடித்தவர். பின், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடிக்க துவங்கினார். துவக்கத்தில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்த சுமா, பின் பாலிவுட்டே கொண்டாடும் கவர்ச்சி நடிகையாக மாறினார். இந்நிலையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சுமன் ரங்கநாதன்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத் நடித்துள்ள ‘‘ஆரம்பம்’’ படத்தில் தான் சுமா, ரீ-என்ட்ரி ஆகியுள்ளார். ஆக்ஷ்ன் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ஆரம்பம் படத்தில் சுமாவின் ரோல் ரொம்பவே முக்கியமானதாம். இந்தவேடத்தில் அவரை நடிக்க கேட்டபோது ரொம்பவே முதலில் தயங்கினாராம். பிறகு படத்தில் அஜீத், ஆர்யா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், இந்த ரோல் கண்டிப்பாக உங்களுக்கு ‌பொருத்தமாக இருக்கும் என்று டைரக்டர் சொன்ன பிறகு நடிக்க சம்மதித்தாராம். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பது குறித்து இந்தப்படம் வெளிவந்த பிறகு முடிவு செய்ய இருப்பதாக கூறியுள்ளார் சுமன் ரங்கநாதன். 


உளவுத்துறை அதிகாரி வேடத்தில் ஆரம்பம் அஜீத்!

Ajith as intelligence officer in Arrambam movie
 அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் நடிப்பில் ரசிகர்களுக்கு தீபாவளி போனசாக வெளியாகயிருக்கும் படம் ஆரம்பம். பில்லா படத்தை இயக்கிய அஜீத்தின் லக்கி இயக்குனரான விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இப்படத்தில் மங்காத்தாவில் நடித்தது போலவே நரை முடி கெட்டப்பில் நடித்திருக்கிறார் அஜீத். அதேசமயம், ஜீன்ஸ்-டீசர்ட் என்று யூத்தை மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறாராம். கூடவே, இப்படத்துக்காக அவர் எடுத்த ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் அனைத்தும் அஜீத்தின் பாடி லாங்குவேஜையே வித்தியாசப்படுத்தியிருக்கிறதாம். அதனால் ஆரம்பம் அஜீத் அசத்தல் அஜீத் என்கிறார்கள்.

மேலும், உளவுத்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ள அஜீத், ஒரு கட்டத்தில் பக்கா ஹாலிவுட் நடிகர்கள் போன்றே பர்பாமென்ஸ் செய்திருக்கிறாராம். அவரது நடை உடை எல்லாமே தலயின் தலயாய ரசிகர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருக்குமாம். அந்த அளவுக்கு தனது தரத்தை இப்படத்தில் உயர்த்திக்காட்டியிருக்கிறாராம் தல அஜீத்.

இப்படம் டை ஹார்ட், ஸ்வார்டு பிஷ் போன்ற ஹாலிவுட் படங்களின் சாயலில் அவுட்புட் வந்திருப்பதாக சொல்லும் ஆரம்பம் படக்குழுவினர், இது அஜீத்தை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்கிறார்கள்.


பெரும்பான்மை தியேட்டர்களை கைப்பற்றியது ஆரம்பம்

aarambam captured most of the theatres
தீபாவளியையொட்டி வருகிற 31ந் தேதி அஜீத் நடித்த ஆரம்பம் ரீலிசாகிறது. நவம்பர் முதல் தேதியில் பாண்டியநாடும் நவம்பர் 2ந் தேதி, தீபாவளி அன்று ஆல் இன் ஆல் அழகுராஜாவும் ரிலீசாகிறது. மூன்றுமே பெரிய படங்கள் என்பதால் தியேட்டர்களை பிடிப்பதில் கடும் போட்டி நிலவியது. இந்த போட்டியில் ஆரம்பம் பெரும்பான்மை தியேட்டர்களை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

தமிழ் நாட்டில் உள்ள சுமார் 850 தியேட்டர்கள் ரிலீஸ் சினிமாவுக்கு ஏற்ற சொகுசான தியேட்டர்கள். இவற்றில் சுமார் 500 தியேட்டர்களில் ஆரம்பம் ரிலீசாகிறது. ஆல்இன் ஆல் அழகுரஜா 300 தியேட்டர்களிலும், பாண்டிய நாடு சுமார் 200 தியேட்டர்களிலும் ரிலீசாகிறது. "கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளடக்கிய ஏரியாவில் 75 தியேட்டர்கள் ரிலீஸ் தியேட்டர்கள். இவற்றில் 40 முதல் 50 தியேட்டர்களில் ஆரம்பம் ரிலீசாகிறது" என்கிறார் ஆரம்பம் தியேட்டர் ரைட்ஸ் வாங்கியுள்ள காஸ்மோ பிக்சர்ஸ் சிவா. படம் முதலில் ரிலீசாவதாலும், அஜீத் படத்துக்கு எப்பவுமே மாஸ் ஓப்பனிங் இருக்கும் என்பதாலும் தியேட்டர்காரர்கள் ஆரம்பம் படத்தையே ரிலீஸ் செய்ய விரும்புகிறார்கள்.

ஒரு எக்ஸ்ட்ரா தகவல்: ஆரம்பம் படம் ஓடும் நேரம் சரியாக 2 மணி 30 நிமிடம்.ஆரம்பம் படத்தில் அஜீத்தை பார்த்து வியந்தோம் - கதாசிரியர்கள் சுபா நெகிழ்ச்சி!!

Writers Suba Praises Ajith and Arrambam
கதாசிரியர்கள் சுபா, தமிழ் திரை உலகில் தங்களுக்கென இடத்தை நிர்ணயத்து விட்டார்கள். அஜீத் குமார், ஆர்யா,ராணா, நயன்தாரா, மற்றும் டாப்சி நடிக்கும் ஆரம்பம் திரை படத்தின் மூலம் தங்களது திரை பயணத்தின் உச்ச கட்டத்தை தொட்டு உள்ளதாக கூறும் இவர்களின்ஆரம்பம் பற்றிய சில அனுபவங்கள் இதோ !!!

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இப்படி ஒரு படத்தை எடுக்க போகிறோம் என கூறியபோது , அஜீத் ரசிகர்களின்  எதிர்பார்ப்பை பூர்த்தி  செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு கதை கருவை அவரிடம் பகிர்ந்துக் கொள்ள முதன்முதலாக அவரை சந்தித்த போது அவரது எளிமை எங்களை கவர்ந்தது. ஒரு நட்சதிரத்துக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தது வியப்பு ஊட்டியது, அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் விடுத்த வேண்டுகோள் எங்களை மேலும் வியப்பூட்டியது, அது படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ, வசனங்களோ, பஞ்ச் வசனங்களோ இருக்க கூடாது என்பதுதான். கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார்.

அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்ட பிறகு தான் அந்த மனிதருக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது. அந்த தன்னம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டி கொண்டது என்றால் மிகை ஆகாது.

படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடல் பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சி தான், அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது. நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணி புரிந்து இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் ஆரம்பம் படத்தை பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை.

எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதை பார்க்கும் போதுதான் அவருடைய ரசிகர்கள் எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புலப்படுகிறது.. ஏராளமான பொருட் செலவு, விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம், யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு. ஆர்யாவும், அஜீத் சாருக்கும் உள்ள பரஸ்பர மரியாதை, சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அந்த காலத்துக்கு இதுதான் ஆரம்பம் என்கிறார்கள்.


விஷ்ணுவர்த்தனை மனமார பாராட்டிய அஜீத்குமார்
4

Ajith praises Vishnuvarthan
ஸ்ரீ சத்ய சாய் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஏ.ரகுராம் தயாரிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத்குமார் - ஆர்யா நடிப்பில் உருவான ஆரம்பம் படத்தின் தணிக்கை அதிகாரிகளுக்கான பிரத்யேக காட்சி நேற்று சென்னையில் உள்ள திரை அரங்கில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து யு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் படத்தை பற்றி ஏகமனதாக பாராட்டியதாக கூறபடுகிறது.


இந்த மாதம் 31ஆம் தேதி உலகெங்கும் கோலாகலமாக வெளியிடப்பட உள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை வீரம் படத்தின் இடைவிடாத படப்பிடிப்புக்கு ஹைதராபாத் செல்ல உள்ள அஜீத்குமாரின் வேண்டுக்கோளுக்கு இணங்க தயாரிப்பு நிறுவனம் ஒரு பிரத்யேக காட்சியை திரையிட்டனர். இதை அவரது குடும்பத்தினர், தயாரிப்பாளர் ஆகியோர் பார்த்தனர். படத்தை மிகவும் ரசித்த அஜீத்குமார் காட்சி முடிந்தவுடன் இயக்குனர் விஷ்ணுவர்தனை மனமார பாராட்டினார் . அதற்கு பின்னர் ஆர்யாவை தொலைபேசியில் நலம் விசாரித்ததோடு தன் பாராட்டையும் தெரிவித்தார். இந்த படத்தில் உங்களது  நடிப்பு மிகவும் பிரமாதம். நான் மிகவும் ரசித்துபார்த்தேன். திரையில் நீங்கள் டாப்சியுடன் தோன்றும் காட்சிகள் இளமை, அழகு... எல்லோரையும் கவரும் வண்ணம் உள்ளது. இந்த படம் உங்களை நிச்சயம் ஒரு புதிய உயரத்துக்கு கூட்டி செல்லும், தொடர்ந்தது வெற்றி படங்களை குவித்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்  என கூறினார். பதிலுக்கு ஆர்யாவும் இந்த பாராட்டு என்னை ஊக்குவிக்கிறது. உங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எப்போது கிடைத்தாலும் நிச்சயம் நடிக்க வருவேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார். இவர்களின் உரையாடலை கேட்டு ரசித்த நிர்வாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்த பரஸ்பர மரியாதை, தமிழ் திரை உலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும்’ என கூறினார்.


thanx - dinamalar

கொங்குமண்டலம்.ஆரம்பம்.அ ராஜா.பா நாடு கோவை11,7,8,ஈரோடு =3,3,2,திருப்பூர்.8,8,8அழகுராஜா@கொங்கு
 
 
 
பாண்டியநாடு@கொங்கு
 
 
 
 
ஆரம்பம் @ கொங்கு
 
 

0 comments: