Wednesday, October 09, 2013

மமோ -மெமோ - நமோ

ஒரு கொய்யாப்பழம் உங்க வயிற்றுப்பசியை சிறிதளவு கூட ஆற்றிட முடியாது. ஆனால்

பல பறவைகளுக்கு அது இரையாகக்கூடும்....

ஆகவே வீட்டு மரங்களில் ஒன்றிரண்டு பழங்களையாவது உங்களை நம்பியிருக்கு இந்த ஜீவன்களுக்காக விட்டு வைப்பீர்.
Photo: ஒரு கொய்யாப்பழம் உங்க வயிற்றுப்பசியை சிறிதளவு கூட ஆற்றிட முடியாது. ஆனால்

பல பறவைகளுக்கு அது இரையாகக்கூடும்....

ஆகவே வீட்டு மரங்களில் ஒன்றிரண்டு பழங்களையாவது உங்களை நம்பியிருக்கு இந்த ஜீவன்களுக்காக விட்டு வைப்பீர்.
1. உலகத்துலயே ரொம்ப கஷ்டமான வேலைகள் 1 கோபமா இருக்கும் பொண்டாட்டியை சமாதானப்படுத்துவது 2 குறை சொல்லும்் மேனேஜர்ட்ட நல்ல பேர் எடுப்பது=====================


2  ஜுர வேகத்தில் என்னை அலை பேசியில் அழைத்தாய்.அசுர வேகத்தில் உன்னருகே வந்து சேர்ந்தேன்


=======================


3  இந்த பொண்டாட்டிங்க பீரோ ல 2 தலைமுறைக்குத்தேவையான சேலை இருந்தாலும் புருசனை நச்சிட்டேதான் இருப்பாங்க
============================


4 தீபாவளி செலவைக்குறைக்க (அவங்கவங்க சொந்த) சம்சாரத்துடன் வலியனா சண்டை போடவும்


======================


5  ஆய கலைகள் 64 என்பவை யாவை ? கீரை வகைகள் 64 வகையையும் சமைக்கும் முன் எப்படி ஆய்ந்து குண்டாவில் போடுவது என்பதே ஆய கலைகள் 64=====================
6 ஆம்வே உயர் அதிகாரி கைது # ஜெயில் களி ஆன் த வே


=====================


7  அழகான மனைவி ,அன்பான துணைவி (1+1=2) அமைந்தாலே பேரின்பமே # புதுப்புது அ(ன)ர்த்தங்கள்


=======================8 சுந்தர் சி மைண்ட் வாய்ஸ் - என் சம்சாரத்துக்கு நானே இன்னும் ஹேப்பி பர்த்டே சொல்லலை , ஆளாளுக்கு சொல்லிட்டு இருக்காங்க======================


9  மாப்ளை ஊட்டி , பொண்ணு கொடைக்கானல் # மேடு ஃபார் ஈச் அதர்=====================


10 புருசன் வாசல் திண்ணையில் ஊடல் கொண்டு வெளிநடப்பு செய்திருந்தாலும் தாலியை பத்திரமாகக்கழட்டி பீரோவில் வைத்து விடுகிறார்கள் நவநாகரீக நவமணிகள்=======================

குழந்தை மாற்றிப்போட்ட காலணி
மாறவேயில்லை நாம்...

11 தனித்தே போட்டியிட்டாலும் 40 தொகுதிகளுமே திமுகவுக்கே..: மு.க. ஸ்டாலின் # அப்துல் கலாம் வழியில் கனவு காண எல்லாருக்கும் உரிமை இருக்கு


=====================


12 மோடியிடம் நாம் கற்க வேண்டியது நம் எதிரியை யாராவது அவமானப்படுத்தினால் எல்லோருக்கும் பரப்பி இப்படி சொல்லக்கூடாது என கண்டிக்க வேண்டும்


===================


13  கோவை அர்ச்சனாவில் ஆரம்பம் முதல் நாள் முத ஷோ பார்க்க அழைக்க - 9894848309


===================


14 லூசிங்கற பொண்ணை செல்லமா லூஸ்னு கூப்பிட்டா நம்மை லூஸ்னு எதிர்த்துப்பேச முடியாது அந்த லூசால


=====================


15 மெல்லினம் ஆன பெண்ணினம் ,செல்லினம் இரண்டும் நம்மை திசை திருப்ப தவறான யோசனை கொடுக்கும்


====================


16  நஸ்ரியா என்பர் நயன் தாரா என்பர் ஸ்ரீ திவ்யாவை க்ளோசப்பில் காணாதார்


====================


17  காந்தி ஜெயந்திக்கு டாஸ்மாக் லீவ் என்பதால் 2 நாட்களுக்கு முன்பே சரக்கு வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ளும் முன் யோசனை உள்ளவன்தான் தமிழன்=====================


18  எல்லா(ர்) சம்சாரங்களும் அவரவர் புருசன் மேல் அன்பு ,பாசம் ,அக்கறை ,மரியாதை காட்டும் நாள் - சம்பள நாள் # என்னங்கங்க====================


19 விஜய் வில்லனா நடிச்ச ப்ரியமுடன் படம் நல்லாருந்தும் எதிர்பார்த்த அளவு ஓடலை.அஜித் வில்லனா நடிச்ச மங்காத்தா எதிர்பாராத அளவு ஓடிடுச்சு====================


20  ஜெ - இவங்களுக்கு சீட் குடுத்ததே பெருசு.இதுல பின் வரிசை ,கடைசி வரிசைன்னு புலம்பல் வேற.அடுத்த விழாவில் எல்லாரையும் நிக்க வெச்சுடனும்


=====================21  குஷ்பூ இட்லி எங்கே?னு ஒருத்தர் குஷ்பூவுக்கே டேக் போட்டு கேட்கறாரு.இன்னைக்கு குஷ்பூ பர்த்டே க்கு சுந்தர் சி கடுப்பாகிடுவார்னு தோணுது=====================


22  ம மோ வுக்கு மெமோ கொடுக்க வந்தவர் தான் நமோ # மமோ = மண்மோகன் ,நமோ = நரேந்திர மோடி=====================

 

0 comments: