Tuesday, October 01, 2013

THE CONJURING (2013) -சினிமா விமர்சனம்

The Conjuring (2013) Poster 
தழுவாத கைகள் படத்துல  “ஒரு குடும்பத்தை  உருவாக்கச்சொன்னா ஒரு கிராமத்தை உருவாக்கித்தந்தார் எங்கப்பா”ன்னு ஒரு சூப்பர் ஹிட் பாட்டு வரும் ,அந்த பாட்டுக்குத்தக்கபடி ஹீரோவுக்கு 5  குழந்தைங்க , ஒரே ஒரு சம்சாரம் .இந்த  குடும்பம்  ஒரு   பெரிய வீட்டுக்கு புதுசா  குடி வர்றாங்க . இந்த இடத்துல தான் நாம ஒண்ணை நல்லா  கவனிக்கனும் , பெரும்பாலான பேய்ப்படத்துல  புதுசா   குடி போற வீட்ல தான் பிரச்சனையே வரும் .


புது  வீட்டுக்கு குடி போனதும்  குழந்தைங்க  எல்லாம்  ஹைடு அண்ட்  சீக் அதாவது கண்ணா மூச்சி விளையாட்டு  விளையாடுதுங்க . தம்பதிகள்  என்னமோ அப்போதான் மேரேஜ் ஆன மாதிரி  கில்மாவுக்கு பிட் போடறாங்க . புது வீட்ல அதுதான்  முதல் இரவாம் , அடேய் ;-)) 

எல்லாரும்  வீட்டுக்குள்ளே  இருக்கும்போது அவங்க  வீட்டு நாய் மட்டும் உள்ளே வர்லை . இதுக்கு என்ன காரணம்னா அந்தக்காலத்துல  இருந்தே  கிராமங்களில் நிலவி வரும் நம்பிக்கை என்னான்னா  நமக்கு நம்ம கண்ணுக்குத்தெரியாத  தீய சக்திகள்  உருவம்  நாய்  , பூனை மாதிரி   விலங்குகளுக்குத்தெரியும் , இயற்கைச்சீற்றங்கள் கூட மாடு , அணில் ( உண்மையான அணில் ) மாதிரி விலங்குகளுக்கு  முன் கூட்டியே உணர முடியுமாம் .நாய் உள்ளே வர்லைன்னதுமே பார்ட்டி  உஷார் ஆகி இருக்கனும் . ஆனா  கூடவே சம்சாரம்  இருக்கறதால  ஹீரோவுக்கு   அது பத்தி ஏதும்  தோணலை , ஏன்னா  எப்பவும் ஆம்ப்ளைங்க தன் பக்கத்துல  சம்சாரம்  இருந்தா மூளைக்கு வேலை தர மாட்டாங்க 


வீட்டுக்குள்ளே ஒரு பாதாள அறை  இருக்கு . அதுல  ஏதோ மர்மம்  இருக்குன்னு  நினைக்கறாங்க . அப்போ  ஒரு பொம்மையை குழந்தை கண்டெடுக்குது , அது கிட்டே பேசுது . பார்த்த அம்மா வுக்கு திகில் . 

 இது வேலைக்கு ஆகாதுன்னு  பேய்களை விரட்டும் ஒரு தம்பதியை அழைச்சுட்டு வர்றாங்க . அந்த  ஜோடில  லேடிக்கு ஒரு உள்ளுணர்வு உண்டு . பின்னால நடப்பதை முன்னாலயே சம்பவமா பார்க்கும் சக்தி  ( அழகிய  தமிழ் மகன் ல இளைய தளபதிக்கு இருக்குமே ) அதன்  மூலமா   அவருக்கு  இந்த வீட்டில்  தீய சக்திகள் இருக்குன்னும் , சப்போஸ்  இவங்க  வீட்டை விட்டு வெளியேறுனாலும் அதுங்க இவங்களை விடாதுன்னும்   தெரிஞ்சுக்கறாங்க  .இவங்க  எப்படி பேயை  விரட்னாங்க ?  அந்த பேய்களுக்கான ஃபிளாஸ் பேக் என்ன?  என்பதை வெண் திரையில் காண்க 


சும்மா  சொல்லக்கூடாது . கத்தியின்றி , ரத்தம் இன்றி  ஒரு நல்ல பேய்ப்படம் தான்  இது  . ( க்ளைமாக்ஸ் ல ஒரே ஒரு சீன்ல  ரத்தம் ) தியெட்டர்ல  ஆளாளுக்கு   சவுண்ட்  கொடுத்துட்டே  படம் பார்த்தது  செமயான அனுபவம் . ஏன்னா அமைதியா படம் பார்த்தா   டக்னு பயந்துக்குவோம்.. ஏஎய்  ஆய் ஊய்னு கத்திட்டே படம் பார்த்தா  கொஞ்சம்  தெம்பா  இருக்கும் 
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. தகவல் தொடர்பு சாதனங்கள்  இருக்கே , ஏன் இந்த மாதிரி செய்யலாமே? அப்படி செஞ்சிருக்கலாமே ? அப்டினு ஆளாளுக்கு லாஜிக்  கொஸ்டின் கேட்கக்கூடாதுன்னு  கதை நடக்கும் கால கட்டம் 1971 என ஆரம்பத்திலேயே டைட்டிலில் போட்டு விட்ட புத்திசாலித்தனம் . 
2.  லொக்கேஷன்  செலக்‌ஷன்  பிரமாதம் . தனிமையான  கிராமம் , தனி  வீடு ( பங்களா ) , பக்கத்த்ல ஒரு ஆறு  , அதுல  கரை  ஓரம்  ஒரு மரம்  அந்த மரத்தில்   ஒரு உருவம் தூக்கில்  தொங்கும் காட்சி அந்த போஸ்டர் டிசைன் அட்டகாசம் .


3  அந்த  குழந்தைங்க  நடிப்பு  பிரமாதம் , எல்லாமே கண்ணுக்கு அழகு செல்லங்கள் . இதுல ஒரு தொழில் ரகசியம் என்னான்னா  இந்த மாதிரி கதைல  குழந்தைங்க கேரக்டர்  இருந்தா  குடும்ப ஆடியன்சை தியேட்டருக்கு இழுத்துட்டு வர்ரது  ஈசி 


4. இது  ஃபாரீனில் நடந்த உண்மைச்சம்பவம் என்பதால்  திரைக்கதையில்  ஒரு  நம்பகத்த்ன்மை  இயல்பாகவே அமைஞ்சிடுச்சு   படமாக்கம் , எடிட்டிங்க் , ஒளிப்பதிவு  என  டெக்னிக்கல் அம்சங்கள் எல்லாமே  எபவ் ஆவரேஜ் 5  ஜேம்ஸ் வான்  இயக்கிய   இன்சீடியஸ் , எக்சார்சிசம் , போல்டர் கோஸ்ட் படங்களின் கலவையான உல்டா தான்  என்பது  எளிதில்  தெரிஒயாத வண்ணம்  காட்சிகளை வேகமாக நகர்த்தியது படத்துக்கு பலம் 


6  ஒரு பேய்ப்படத்துக்கு  பின்னணி இசை எவ்வளவு  முக்கியம்  என்பதை உணர்ந்து  தேவையான இடத்தில் அமைதி  , அலறல்  , திடீர் சத்தம் என பார்த்து பார்த்து படம் ஆக்கிய விதம் 

 இயக்குநரிடம்  சில கேள்விகள்1.   பொதுவா  பேய் குழந்தைங்க கிட்டே தன் வீரத்தைக்காட்டாது  இந்தப்படத்துல வர்ற  பேய்  ஒரு கையாலாகாத பேய் போல  , குழந்தைங்க  கிட்டேப்போய் தன் வீரத்தைக்காட்டுது ஆசாராம் பாபு மாதிரி  ஆள் போல 


2  என்ன தான்  லோ  பட்ஜெட்  படமா  இருந்தாலும்  படத்தில் வரும்  2 ஹீரோயின்களை   குறைந்த பட்சம்  சுமார்  ஃபிகர்களாகத்தேர்வு செய்ய வேணாமா? 2  ஃபிகர்களும் அட்டு  ஃபிகர்களே ! 


3  பேய்  வரும்பொது  கெட்ட வாடை வரும்னு  அந்த லேடி சொல்லுதே ,. ஏன்? பேய்  குளிக்காதா?  செண்ட் போடாதா? அட்லீஸ்ட் மல்லிகைப்பூ கூட வைக்காதா? 


4  பொதுவா பேய்ங்க மேக்கப் போடாது , ஆனா இதுல வர்ற பேய்  ஃபேரன் லவ்லி அரைக்கிலோவை எடுத்து முகத்துல சுண்ணாம்பு மாதிரி தடவிட்டு வருதே ஏன் ? 


5  அந்த பேய்  ஓட்டும் லேடி   ஏதோ  ஒரு க்ண்ணாடியில் அதை சுத்த விட்டு பார்க்கும்போது கண்ணாடியில்  தெரியும் பேய்  திரும்பிப்பார்த்தா   தெரிய்றதில்லை .கண்ணாடி பின்னாடி நிக்கும் பேய் ஏன் அப்டி எஸ் ஆகுது ? 


6  பேரா நார்மல் இன்வெஸ்டிகேட்டர்ஸா வரும் அந்த தம்பதிகள் ல புருஷன் டம்மி மாதிரி  இருக்கான் , பொண்டாட்டி தான் மெயினா எல்லா வேலையும் செய்யுது ஃபாரீன்லயும் புருஷங்க டம்மிதானா? 


7. அந்த  பொம்மையை வெச்சு பயமுறுத்த நினைத்த காட்சிகள் எடுபடலை
மனம்  கவர்ந்த வசனங்கள்


1.தனக்கு ஏதாவது ஆகிடுமோங்கற பயம் தான் மனிதனை ஆட்டுவிக்குது #2 மனைவி - நீங்க இப்போ டயர்டா இருக்கீங்களா? க்ணவன் - எவன் சொன்னான்? இதுக்கெல்லாம் யாராவது டயர்ட் ஆவாங்களா?


சி பி கமெண்ட் - எல்லாரும் ஃபேமிலியோட  பார்க்கும் தரத்தில் படம் இருக்கு . எப்போ போனாலும்  நைட்  ஷோ போங்க . பகல் ல போனா அடிக்கடி கேட் நீக்கி  வெளிச்சம் உள்ளே வந்து கடுப்பேத்துவாங்க 

 ரேட்டிங்க் - 3.25 / 5 


டிஸ்கி - புதுக்கோட்டை விஜய் தியேட்டரில் ட்விட்டர் நண்பர் உடன் THE CONJURING ஸெகண்ட் ஷோ @ 10 pm (28 9 13 )

 தியேட்டரைப்பத்தி சொல்லியே ஆகனும் , டிக்கெட் ரேட் 100 ரூபாய்க்கு ஒர்த்தான் , தியேட்டர் மெயிண்ட்டெனன்ஸ் அருமை . ஏ சி படம் பூரா போட்டாங்க. ஈரோட்ல எல்லாம் பிச்சைக்காரத்தனமா படம் போட்ட 20 நிமிஷத்துல ஆஃப் பண்ணிடுவாங்க , அப்புறம் படம் விடும் நேரத்துக்கு 10  நிமிஷம்  முன்னால ஏ சி ஆன் பண்ணுவாங்க . அந்த மாதிரி பித்தலாட்டம் ஏதும் புதுக்கோட்டைல இல்லை . செகண்ட் ஷோ என்றாலும்  பலர்  ஃபேமிலியோட  வந்தது ஆச்சரியம் . அவங்க கத்துன கத்தல்கள்   படத்தை  விட சுவராஸ்யம் . இந்த மாதிரி  திகில் , பேய்ப்படங்களை  தியேட்டர்ல தான்  பார்க்கனும் 


2 comments:

Shankar said...

A Good review. Will see this movie for sure. What you said about the theater is very true. Most Theaters in Chennai also cheat.The feel and the reactions of the audience in the theater can enhance the viewing experience.
The last photo was a visual treat.

Unknown said...

Sorry