Thursday, October 17, 2013

நாலாவதா ஒரு சக்களத்தி

1.நிலக்கரி சுரங்க முறைகேடு: குமார் மங்கலம் பிர்லா மீது சி.பி.ஐ. வழக்கு # மங்கலம் பிர்லாவுக்கு மங்களம் பாடிட்டாங்களா?பேர்லயே LAW இருக்கே=================


2 நான் அரசியலுக்கு வருகிறேன் என்ற செய்தி வதந்தி- சிவகுமார் # நல்ல வேளை ,சூர்யா ,கார்த்தி எல்லாம் டெபுடி CMமாகிடுவாங்க்ளோனு பயந்துட்டேன்


=====================


3 22 Female Kottayam' இயக்குநர்ஆஷிக் அபு, நடிகை ரீமா கல்லிங்கல் அடுத்த மாதம் திருமணம் # மேரேஜ்க்குப்பின் அவர் இவரை டைரக்‌ஷன் பண்ணுவார்
===================
4 கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூன்றாவது அணி திட்டம்: ஜெயலலிதா தலைமை ஏற்பாரா? # நெம்பர் ஒன்னா வர நினைப்பவர் எப்படி 3 வது க்கு ஓக்கே சொல்வாரு?
====================
5 மோடி பிரதமராக ஆதரிக்க மாட்டேன்: -நவீன் பட்நாயக்   # நாயக் நஹி , கல் நாயக் ஹை தும்


=====================
6  குடியரசுக் கட்சியின் திட்டத்தை நிராகரித்தார் ஒபாமா - அதிர்ச்சியில் அரச ஊழியர்கள் # கவர்மென்ட் ஜாப் மாப்ளைக்கும் அடிசறுக்கும்


=====================


7 நடிகர் ஷ்யாம் மனைவிக்காக அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறினார் # மனைவி கணவனுக்காக அசைவத்துக்கு மாறி இருந்தா காமெடியா இருக்கும்


====================


8 கும்பகோணம் -

 பாம்பு புகுந்ததாக கூறி வீட்டினுள்
 நுழைந்து 3 பவுன் சங்கிலி பறிப்பு: # திருடன் கூட வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கிறானே
=======================


9 சங்கரன் கோவில் மாஜி எம்.எல்.ஏவின் துப்பாக்கி மாயம்... வலை வீசி தேடும் நூற்றுக்கணக்கான போலீஸ் # துப்பாக்கின்னாலே பிரச்சனை தான் போல


=====================


10 2016ல் வன்னிய ஆட்சி மலர்வதை யாராலும் தடுக்க முடியாது-ராமதாஸ் # அன்னைக்கு ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு இவர்ட்ட இல்லை.2006,2011,2016=====================


11 திருவான்மியூரில் துணிகரம் பூட்டிய வீடுகளுக்குள் நுழைந்து குடும்பத்தோடு தங்கி கொள்ளை

# அவங்க பேமிலி திருடன் போல=======================


12 க்ரிஷ் 3 ஹிந்திப்படம் தீபாவளி ரிலீஸ் # ஆல்ரெடி 3 பொண்டாட்டிங்க தங்கவே இடம் இல்லையாம்.நாலாவதா ஒரு சக்களத்தி வந்தாளாம்=====================


13 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு முடிவுகட்டுவோம்!: ஜெ # பின்னே நீங்க அவருக்கு முடி சூட்டி விடுவீங்கன்னா எதிர் பார்க்க முடியும்?


=====================


14 வரும் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும் - ஸ்டாலின் # டெபாஸிட் வாங்கறதுலதானே?


================


15 அமெரிக்க ஆயுத கப்பலை விடுவிக்க முடியாது - GKவாசன்# சைக்கிள்காரன்ட்டயே லைசன்ஸ் கேட்கற போலீஸ் கிட்டே கப்பல் சிக்கிட்டா கம்முனு இருப்பாரா?=====================


16 டெல்லி: - பாஜகவுக்கு அதிக இடங்கள்- கருத்துக் கணிப்பு # மேரேஜ் டேட்டே இன்னும் பிக்ஸ் ஆகல.அதுக்குள்ளே முதல் இரவு ரிசல்ட் கேட்டானாம்=====================


17 நான் MP பதவிகேட்டு வரவில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டேன்-S.V.சேகர் # கேட்டாலும் கிடைக்காதுன்னு அவங்களும் தெளிவா சொல்லி இருப்பாங்களே?=====================


18 பஞ்ச் டயலாக்கா.ம்ஹூம்..நான் பேச மாட்டேன்!- கதாசிரியர்களுக்கு அஜீத் போட்ட கண்டிஷன் # ஜெ ஆட்சி ல எல்லாரும் ரொம்ப அடக்கி வாசிக்கனும் போல====================


19 குஜராத்தில் அத்வானி; நரேந்திர மோடியுடன் சந்திப்பு!# மனசுக்குள்ளே அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக்.வெளில சிவகார்த்திகேயன் தனுஷ் மாதிரி=====================


20 மோடி ஒரு நீர்க்குமிழி தேர்தலுக்கு முன் உடைந்து விடும்: கபில்சிபல் # சினிமாவுலயே நீர்க்குமிழி செம ஹிட் ஆகும்போது அரசியல்ல ஆகாதா?


============================

1 comments:

'பரிவை' சே.குமார் said...

எல்லாமே நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.