Saturday, October 05, 2013

நினைத்தாலே இனிக்கும் - சினிமா விமர்சனம்ஹீரோ ஒரு ஆர்க்கெஸ்ட்ராவில் அழகிய  சிங்கர் . அவரோட  மியூசிக்  ட்ரூப் சிங்கப்பூர் போகுது . அங்கே   அவர்  தன்  ரசிகையை சந்திக்கறார். வழக்கம்  போல காதல்  தான் . ஆனா   அந்தப்பொண்ணு  ஒரு   புரியாத  புதிரா  இருக்கு . பொதுவா பொண்ணுங்க  எல்லாம்  புரியாத  புதிர்  தான் என்றாலும் இது ஒரு  படி  மேல போய்  ஒரு டைம்   சேலைல  குடும்ப குத்து  விளக்கு மாதிரி இருக்கு , இன்னொரு டைம் பொட்டு வைக்காத  நீள் வட்ட நிலாவா மாடர்ன்  டிரஸ் ல  க்ளோஸ் கட்டிங்க் பண்ணி வருது . சில  டைம்  சோகமா  இருக்கு , சில  டைம்  சிரிச்ச முகமா  இருக்கு ..


இவங்க  2 பேர் காதலும் என்ன ஆச்சு என்பதுதான்  மிச்ச  மீதித்திரைக்கதை .

 கமல் ஹாசன்  வெறும் 27,000 ரூபா சம்பளத்துல நடிச்ச படம் . அப்போ எல்லாம் அவர் தான் காதல் இளவரசன் ( இப்போ காதல் மன்னன் ) காதல் காட்சிகளில் வழக்கமான கமல்  குறும்புகள்  இதில்  ரொம்பவே மிஸ்சிங்க் . அதே  போல் டூயட் காட்சிகளில் அவர் ஹீரோயினிடம்  ஏதாவது காதல் சேட்டைகள்  செய்வாரே அதெல்லாம்  மிஸ்சிங்க் . ஆனாலும்   அவர் ரசிக்க வைக்கும் நடிப்பைத்தான்  தந்திருக்கிறார் 


ஹீரோயின்  ஜெயப்ரதா , பின்னாளில்  சலங்கை  ஒலி வருதே  அதில் பார்த்துக்கலாம்  என அசால்ட்டாக விட்டுடார் போல .  இவர்   உருப்படியாய்  நடித்துப்பெயர் வாங்கிய  ஒரே இடம்   ஹீரோ எது கேட்டாலும்   ஆமாம் என்பது போல் தலையை ஆட்டி பின் இல்லை என்பது போல்  முடிப்பதே . அந்த  சீனை  கேப்டன்  கூட கூட்டணி வைப்பீங்களா? என ஜெ கிட்டே கேட்டா  அதே பாணியில் அவர் ரீ ஆக்சனை கற்பனை செய்து  மகிழ்ந்தேன் . 


ரஜினி  இதில்  ஹீரோவின் ந்ண்பர் கேரக்டர் . அந்தக்காலத்திலேயே   விவேக் ,சந்தானம்க்கு முன்னோடியாக  நடிச்சிருக்கார் . இவர்  சிகரெட்  தூக்கிப்போடும்  ஸ்டைல் போட்டி 10 டைம் , சுண்டு  விரல் செம அப்ளாஸ் . அதே  போல் சம்போ  சிவ சம்போ பாட்டு  சீனில் அரங்கம்  அதிர்ந்தது
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.  ரஜினி  ஹீரோவாக  நடிச்ச  ப்ரியா  படத்தின்  கதையையே லைட்டா பட்டி டிங்கரிங் பண்ணி அது வெளியே  யாருக்கும்  தெரியாத படி மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இடம் சூப்பர் ஹிட்  மெட்டுக்கள் வாங்கி  ப்ளாக் பஸ்டர்  ஹிட் படம் ஆக்கிய  திறமை 


2.    பாடல் காட்சிகள்   படத்துக்கு பெரிய பிளஸ் . 

 1. எங்கேயும்  எப்போதும் சங்கீதம் சந்தோஷம்  , 

2 சிவனே  மந்திரம்  சிவனே  தந்திரம் ,மனிதன் எந்திரம்  சிவசம்போ ,

3.  நம்ம  ஊரு  சிங்காரி , சிங்கப்பூர் வந்தாளாம் பொட்டு வெச்சுப்பூ வெச்சு நின்னாளாம் 


4 ஆனந்தத்தாண்டவமோ 


5 பாரதி கண்ணம்மா  , நீயே செல்லம்மா ,அழகிய மலர் முகம் தினசரி புது விதம் 


6  தான்னனா தனனா தன்னே  தனனா  நினைத்தாலே  இனிக்கும் 


7 இளமை இருக்கு  இனிமை   இருக்கு இனிமேல் நமக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட் 


8 யாதும்  ஊரே  யாவரும்  கேளீர் அன்பே எங்கள் உலக  தத்துவம் 


9  காத்திருந்தேன் காத்திருந்தேன்  காதல் மனம் நோகும் வரை

இந்த  9 பாடல்களும்  அந்தக்காலத்தில்  செம  ஹிட் , எந்தக்காலத்திலும்  கேட்க கேட்க  இனிமை 


3  பொதுவா  வெளிநாடுகளில்  படம் எடுத்தா அது டப்பா ஆகிடும் , காவியத்தலைவன் , பூ மழை பொழியுது ல   விஜய்காந்த் மாதிரி பலர் அடி பட்டிருக்காங்க , ஆனா ஃபாரீனில் படம் ஆக்கப்பட்டு மெகா  ஹிட் ஆன படங்களில்  முக்கியமானவை  உலகம் சுற்றும் வாலிபன் , நினைத்தாலே  இனிக்கும் . 


4  ரஜினி  சிகரெட் ஸ்டைலாக தூக்கிப்போட்டு பிடிக்கும்  பந்தயக்காட்சி மெகா ஹிட் , அந்தக்காலத்தில் தமிழ் நாடெங்கும் அந்த பந்தய மேனியா பற்றிக்கொண்டதாம் .
இயக்குநரிடம்  சில  கேள்விகள் 

1 .  பொதுவா   லிப்ஸ்டிக் கதவுலயோ ஜன்னல்லயோ எழுதுனா  5 நிமிஷத்துல  காய்ஞ்சிடும் . ஹீரோயின்   ஒரு சீன்ல  கதவுல  ஐ லவ் யூ அப்டினு எழுதி வெச்சுட்டுப்போயிடும்  . அதுக்குப்பின்  அங்கே வரும்  ஹீரோ  தன் நண்பர்களிடம் காட்டி மகிழும்போது அந்த ஐ லவ் யூ எழுதிய  லிப்ஸ்டிக் கை  கையில் எடுப்பார் ,  மாவு மாதிரி கையில்  வரும் ,. அப்படி எல்லாம் வராது 


2  ஹீரோயின்  கிட்டே  ஹீரோவோட நண்பர்  துண்டு சீட்டு தர்றதை  வில்லனின் அடியாள் பார்த்துட்டே  இருக்காரு . ஹீரோயின்  :இருங்க வந்துடறேன்”னு சொல்லிட்டு கிள்ம்ப்பும்போது அடியாள் க்ண்டுக்கவே  இல்லை , அந்த சீட்டைக்குடு ,என்னன்னு பார்க்கனும்னு அவன் ஏன் கேட்கவே  இல்லை ? 


3   மேடைக்கச்சேரியில்  4 நண்பர்களும்  எப்போதும்  ஒரே கலர்  யூனிஃபார்மில்  தான்  வர்றாங்க . ஆனா சம்போ சிவ சம்போ பாடல் காட்சி  யில் எல்லாரும்  ப்ளூ கலர் பேண்ட் , மஞ்சள் பனியன் போட்டு இருக்கும்போது கமல் மட்டும் சிவப்புக்கலர் பனியன் போட்டு வர்றாரே? ஹீரோ என்பதாலா? 


4 நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூர் வந்தாளாம் பொட்டு வெச்சு பூ வெச்சு நின்னாளாம் பாட்டு காட்சியில் ரஜினிக்கு  ஜோடியாக நடிப்பவர்  பொட்டும் வைக்கலை , பூவும் வைக்கலை . பாடல் வரிகளை கவனிக்க வேண்டாமா?  இதே போல் ம் எகா தவறை காக்கிச்சட்டை படத்தில் அமரர் ராஜசேகர் செஞ்சார் . பூப்போட்ட தாவணி போதையில் ஆடுது பாட்டில் மாதவி  மிடி போட்டிருப்பார் 


5  ஹீரோயின்  போதை மருந்து செலுத்தப்பட்டு போதையில்  சிங்கப்பூரில் நள்ளிரவில்  நடு ரோட்டில்  கிடக்கார் , அடுத்த நாள் காலை  8 மணிக்கு ஹீரோ வந்து வரைத்தூக்கும் வரை  ஹீரோயினை  யாரும் கண்டுக்கவே இல்லை , அம்புட்டு நல்ல ஊரா சிங்கப்பூர்? 


6  சிங்கப்பூர் ல எச்சில்  துப்பினா அபராதம் ,  குப்பை போட்டா ஃபைன் என்ற வசனம் அடிக்கடி வருது . எப்பவும்  கே பி படங்களீல்  இந்த ஆதங்கம் உண்டு , ஆனால் இதில்  எரிச்சல் தரும் அளவில் 3 முறை ரிப்பீட்டிங்க் 


7 ஹீரோயினுக்கு பிளட் கேன்சர் என்ற ரகசிய உண்மையை டாக்டர் குழு அப்படித்தான் கதவைக்கூட லாக் பண்ணாம பேசிட்டு  இருக்குமா?  ஹீரோயின் ஒட்டுக்கேட்க  வசதியா ?   


ஹீரோயினை அடிக்கடி ஒரு முகமூடி போட்ட ஆள் துரத்துற மாதிரி சீன் வெச்சிருக்கிங்க , அது  ஒரு குறியீடு , எமன்  தான் அது , சாவு நெருங்கிட்டு இருக்குன்னு எத்தனை பேருக்கு  புரியும் ? அந்த ஃபிளாஸ் பேக் காட்சி கட்டா?ன்னு சிலர் கேட்கறாங்க , இந்தக்காலத்துலயே இப்டின்னா அந்தக்காலத்துல எத்தனை பேருக்கு அந்த  சீன்  புரிஞ்சிருக்கும் ?  
 

 அமரர்  மேஜிக் ரைட்டர் சுஜாதாவின்  மனம் கவர்ந்த  வசனங்கள்


1.  இந்த  சிரிப்பு  வெட்கமா ?  விஷமமா? 


2 . இங்கே  ஆட்டோகிராஃப் வேணும் 

 ச்சீய் , அங்கே எல்லாம் பேனா  எழுதாது , வேணும்னா  கை நாட்டு போடவா? 


3   மிஸ்! உங்க கை ரேகை பார்த்து பலன் சொல்லவா? 


 ம். PTO னு போட்டிருக்கு.அந்தக்கையை குடுங்க  


4  நான்  உங்க கைல  கிடார் ஆகனும் 


5  என்னங்க  , தம்பட்டம் அடிப்பவர் வந்திருக்கார் 

 ஹய்யோ , அது  டிரம்ஸ்ங்க 


6  மிஸ்! சிங்கப்பூரா  போறீங்க ? 


நோ , பாதிலயே  இறங்கிக்குவேன் 

எங்கே? 

 பே ஆஃப் பெங்கால் 


7   கைரேகை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை , ஏன்னா என் எதிர்காலம் என்ன?ன்னு எனக்கு ஆல்ரெடி  தெரியும் 


8  எப்பவோ நாம  வரப்போகும் இடத்துக்கு  இப்பவே ஏன்  கூட்டி வந்தே ? 

 சுடுகாட்டுக்குத்தான்  யாரும் வர மாட்டாங்க , ஃப்ரீயா பேசிட்டு  இருக்கலாம் 


9  நான் பயங்கர முட்டாள்ங்க 

 அதான் நான் லவ் பண்ணேன் 

 அப்போ புத்திசாலியா  இருந்தா ? 

 மேரேஜ் பண்ணி  இருப்பேன் 


10  சிக்கன்  நீங்க சாப்பிடலை ? 

 ஆல்ரெடி சாப்ட்டாச்சு , இன்னும் சாப்ட்டா  ஆல்ரெடி உள்ளே  இருக்கும் சிக்கன் கூட இது போய் சண்டை போடும் 


11  இங்கே என்ன பண்றீங்க ? ( முதலைப்பண்ணை )

 முதலைக்கண்ணீர் வடிக்க கத்துக்கிட்டு  இருக்கேன் 


12   மறக்காம இந்த கடிதத்தை  குடுக்கச்சொன்னார் , அதான் மறந்துட்டேன்
படத்தின்  சுவராஸ்யங்களில்  சில


1.   கமல்  ரஜினி இணைந்து நடித்த எல்லாப்படங்களிலும் ஹீரோ கமல் தான் , வில்லன் அல்லது  குணச்சித்திர நடிகராகத்தான்  ரஜினி வருவார் . ஆனால் அப்ளாஸ் அள்ளுவது  ரஜினியாகத்தான்  இருக்கும் . இது   கமலுக்கு உள்ளூர  ஒரு மன்க்குறையாக அந்தக்காலத்தில்  இருந்ததாம்.  பின் நாளில்  நாம் இனித்தனித்தனி  ஹீரோவாக நடிக்கலாம் என கமல் முடிவு எடுக்க முக்கியகாரணியாக  இந்த ஈகோ இருந்தது


2  கமல் நடித்த எல்லாப்படங்களிலும்   மேல் சட்டை , பனியன் இல்லாமல் டாப்லெஸ்சாக  ஒரு சீனிலாவது  வந்து தன் ரசிகைகளுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் பழக்கம் உள்ள கமல் இதில் அப்படி ஒரு சீன்  கூட  டாப் லெஸ்ஸீல்   வரவில்லை , அதே போல்  லிப் கிஸ்சோ , கன்னத்தில் கிஸ்சோ தராமல் நடித்த  மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று 


3  ரஜினியின்  சிகரெட் தூக்கிப்போட்டு டக் என பிடிக்கும் ஸ்டைல்  பட்டி தொட்டி எங்கும் பரவியது , தம் அடிக்கும்  பழக்கமே  இல்லாதவர்கள்  கூட தம் அடிக்க கற்றார்கள் . தெரிந்தோ  தெரியாமலோ ரஜினி  தமிழ்நாட்டில்  சிகரெட்  குடிக்கும் இளைஞர்கள் பெருகுவதில்  முக்கியக்காரணி ஆனார் . ( எப்படி தழர்கள்  ஹிந்தி கற்காமல் போக கலைஞர் ஒரு காரணம் ஆனாரோ அப்படி ) 


4  16 வயதினிலே - ரஜினிக்கு சம்பளம் ரூ.2500, கமலுக்கு ரூ.27000 # இப்போ ரஜினி =30 கோடி , கமல் 20 கோடி

5  எம் எஸ் விஸ்வநாதன்  வெறும் எல்க்ட்ரிக் கிடார் மட்டும்  யூஸ் பண்ணி போட்ட பாட்டு காத்திருந்தேன் பாட்டு 


6 . தான்னனா தான்னா  தனா தனனா நினைத்தாலே இனிக்கும் - இந்த ஒரு லைனை மட்டும் போட்டு  ஒரு முழுப்பாட்டு வருவது தமிழில் இதுவே  முதல் முறை . இந்த டெக்னிக்கை  தனது குருவிடம் இருந்து வசந்த் காப்பி அடிச்சு தன் நீ பாதி நான் பாதி யில் சசரி சாரிசா நிவேதா என்ற  ஒரே வரி வரும் பாட்டை எடுத்தார், அதில்  கவுதமிக்கு 180  டிரஸ் சேஞ்ச்  ரெக்கார் ட் . அந்த ரெக்கார்டை இப்போ பூனம் நடிச்ச  ஒரு படத்தில்  480  டிரஸ் ஒரே பாட்டில் . வரப்போகுது 
 டி டி எஸ் மிக்ஸ் நியூ ப்ரி்ண்ட்டில்  மிஸ் ஆனவை 


1.  யாதும்  ஊரே யாவரும் கேளீர்  , காத்திருந்தேன்  என 2 பாடல்கள் கட் 


2. மாமூவாக வரும் ஆள் சரக்கு அடிச்சுட்டு தன் சம்சாரம் பற்றி உளற அதை டேப்பில் ரெக்கார்டு செஞ்சு சம்சாரத்திடம் மாட்டி  விடும் காமெடி காட்சி  மிஸ்

 3   யுவர்ஸ் லவ்விங்க்லி வாசக பனியன் போட்ட ஆளை அடியுங்க என வில்லன் சொன்னதும் அடியாள் கமலுக்குப்பதில் மாமாவை அடிப்பது காமெடி சீன் கட் 

4   ரஜினி தன் காதலி மாடியில்  இருந்து விழுவதாக கனவு கண்டு அலறி அலப்பறை செய்யும் காமெடிக்காட்சி கட்டிஸ்கி - நினைத்தாலே இனிக்கும் @ கடலூர் கமலம் தியேட்டர்# 4 10 13இல் பார்த்தேன் , பாரம்பரியம்  மிக்க தியேட்டர் போல , ஆனா பராமரிப்பு இல்லாததால் பாடாவதி தியேட்டர் ஆகி விடும் அபாயத்தில் . கமல்  ரசிகர்கள் மட்டுமே பேனர் கட்டி  இருந்தார்கள் . ரஜினி ரசிகர்கள் அட்ரசைக்காணோம் . ரஜினி  ஹீரோ இல்லை என்பதால் அலட்சியமா விட்டுட்டாங்க போல6 comments:

ஆர்வா said...

அப்டுடேட் அப்படிங்கிறதுக்கு நீங்கதான் தலை சரியான உதாரணம்... செம விமர்சனம்...

saravanan selvam said...

Every movie you watch in different theaters in different towns.Are you always on tour?it is nice to know that Kamalam theater still exists in Cuddalore.

'பரிவை' சே.குமார் said...

ஒரு அருமையான படம்...
கண்டிப்பாக பார்க்க வேண்டும்....

தேன் நிலா said...

வழக்கமான ஸ்டைல்ல உங்களோட விமர்சனம்.. ஒரு வரிவிடாம படிச்சேன்...

பகிர்வினிற்கு மிக்க நன்றி.. சி.பி. சார்..

எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்

பொ.முருகன் said...

சென்னியாரே நீ பாதி நான் பாதில ஹீரா தான் 180 டிரஸ் சேன்ஞ் பண்ணுவாங்கன்னு நெனைக்கேன்.

பொ.முருகன் said...

சென்னியாரே நீ பாதி நான் பாதில ஹீரா தான் 180 டிரஸ் சேன்ஞ் பன்னுவாங்கன்னு நினைக்கிறேன்