Tuesday, December 11, 2012

நீதிபதி கட்ஜூ சானியாமிர்சா ரசிகர் போல

1.ரூ 1600 க்கு விற்கப்பட்ட ஈமு கோழி முட்டை இப்போது கடும் வீழ்ச்சி.ஜஸ்ட் ரூ 100 தான் # ஈரோடு ,பெருந்துறை ,சென்னிமலை 
--------------------
2. கமல் முயற்சிக்கு தியேட்டர் அதிபர்கள் அலறுவது ஏன்னா பிளாக் டிக்கெட் வித்து கொள்ளை அடிக்க முடியாது என்பதால் தான்் 
--------------------
3. கணவன் கிட்டே வேலை வாங்கறதுல மனைவி கில்லாடி 
விளக்கை அணைங்க. 
ஏன்? நீ போய் ஆப் பண்ண மாட்டியா? 
-----------------
4. முதலிரவில் மனைவி - 
விளக்கை அதுக்குள்ளே அணைச்சுட்டீங்களே? 
ம்க்கும்.கரன்ட் வந்தாத்தானே ஆப் பண்ண ? 
-------------------
5. அன்பே! நின்னை சரண் அடைந்தா என் காதலை ஏத்துக்குவியா ? 
ம்.ஆனா சரணுக்கு என் அட்ரஸ் தெரியாதே? 
------------
6. டாக்டர்.டெயிலி 4 கி மீ வாக்கிங் போனா கால் வலிக்குது. என்ன பண்ண ? 
2 கி மீ வாக்கிங் போய்ட்டு அப்படியே ரிவர்ஸ்ல வா.சரி ஆகிடும் 
-------------------
7. துளசி -பொட்டு வைக்காத நீள் வட்ட நிலா # கடல் .70 மார்க் 
------------------
8. இன்ஸ்பெக்டர். என்னை 25 பேர் அன்பாலோ பண்ணிட்டாங்க.நடவடிக்கை எடுங்க . 
சட்டப்படி பசங்க உங்களை பாலோ பண்ணாத்தான் நடவடிக்கை எடுக்க முடியும் 
----------------
9. 2014- எம்.பி.தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஜெயா பச்சன்..# சரி சரி.சீன் போடாம வந்து சோறு போடு - அமிதாப் @் கிச்சன் 
---------------------
10. மிஸ் நீங்க பெயிண்டிங் எல்லாம் பண்ணுவீங்களா? 
நோ நோ கொஞ்சம் ஓவர் மேக்கப் போடுவேன்.பார்க்க பெயின்ட்டிங் மாதிரி இருக்கும் ஹி ஹி 
----------------------
11.  நீங்க கச்சேரில பாடி இருக்கீங்களாமே ? 
ஆமா பாட்டுக்கச்சேரி பார்க்கப்போன இடத்துல் அவங்க மேடைல பாடும்போது நான் கீழே இருந்து பாடுவேன். 
----------------------
13. அதிமுக அரசுக்கு பெருந்தன்மை இல்லை: கருணாநிதி: # திமுக அரசைப்போல் லஞ்சம் பெறும் தன்மை இல்லை - ஜெ 
-------------------
14. சார்.உங்க படத்துல மீனவர் பிரச்சனை க்கு தீர்வு சொல்லி இருக்கீங்களா? 
மணிரத்னம் - நோ நோ மீனவனை ஒரு மீன் விழியாள் லவ் பண்றா.அவ்ளவ்தான் 
------------------
15. மணிரத்னம் - பாட்டு பெரிய அளவில் ஹிட் ஆகலையே? 
ஏ ஆர் ஆர் - விடுங்க.படம் மட்டும் ஹிட் ஆகிடப்போகுதா ? # சும்மா 
----------------
16. ஏலே டியர் ,என்ன கோபம் ? 
சிட்டிபாய் இப்டி லே போட்டு பேசலாமா? 
ச்சீ மக்கு.இதுதான்நேர்நந்து விட்ட நேட்டிவிட்டி லவ் 
-----------------------


17. நாட்டின் வருமான வரி கட்டுவோர் வெறும் 2.7% பேர் தான்!: 3வது இடத்தில் கர்நாடகம், 4வது இடத்தில் தமிழகம் # 93% பேர் சீட்டிங்? 
------------------
18. இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே நாடாக்க வேண்டும்-நீதிபதி கட்ஜூ # சானியாமிர்சா ரசிகர் போல 
-----------------------
 19. சென்னைக்கு வரும் வால்மார்ட்டை ஜெ அரசு தடுக்குமா- கலைஞர்# இந்த மாதிரி டபுள் கேம் ஆடும் சந்தர்ப்பவாதிளை ஒடுக்கும் - ஜெ 
---------------------
20. சாப்பிடும்போது சாதம் சிந்தாமல் சாப்பிடத்தெரியாதவர்கள் தனி ரூமில் யாருக்கும்தெரியாமல் சிந்திக்கனும் # ஆர்ட் ஃபிலிம் ட்வீட் 
---------------------
21. தமிழகத்தில் வால்மார்ட்டை தடுக்க வேண்டும் - கருணாநிதி # நல்ல வேளை, தீய சக்தியை துரத்தனும்னு சொல்லலை - ஜெ நக்கல் 
---------------------
22. மதிமுக ஒரு மலட்டுக் கட்சி ஒரு போதும் கருத்தரிக்காது - நாஞ்சில் சம்பத் ! # நரம்பில்லாத நாக்கு சார், உங்களை சொல்லி தப்பில்லை 
------------------------
23. மிஸ்! இன்னைக்கு சாயங்காலம் நீங்க இலவ்சமா இருக்கீங்களா? 
யோவ்! சாரி, ஆர் யூ ஃப்ரீ 
------------------
24. மதுரையில் நம்மை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது: மு.க.அழகிரி ஆவேச பேச்சு # கைது கூட செய்ய முடியாதா? - ஜெ நக்கல் கேள்வி 
------------------
25. சார்,டிடிஹெச்ல படம் பார்க்கும்போது கரண்ட் போய்ட்டா? கமல் -1000 ரூபா கட்டி படம் பார்க்கும் அளவு வசதி இருக்கு, யுபிஎஸ் க்கு பணம் நோ? 
-----------------------------

0 comments: