Wednesday, December 26, 2012

12 ராசிகளுக்கும் 2013 புது வருஷ பலன்கள் , பரிகாரங்கள்

பெண்களுக்கு ஏற்றம் தரப்போகும் புத்தாண்டு!

செவ்வாய்க்கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில்... சூரிய உதயத்தை அடிப்படையாக கொண்ட நேரம்- நள்ளிரவு 12:34 மணிக்கு 2013 புத்தாண்டு பிறக்கிறது.  எண் ஜோதிடப்படி கற்பனை, காவிய கிரகமான சுக்கிரனின் ஆதிக்கத்தில் (2 0 1 3=6) இந்த ஆண்டு பிறப்பதால், மக்களிடையே வீடு- மனை மற்றும் வாகனம் வாங்க வேண்டும் எனும் எண்ணம் மேலோங்கும்.எதிலும் பெண்களின் ஆதிக்கம் பெருகும். சுரங்கங்கள், காற்றாலைகள், இரும்பு தொழிற்சாலைகள் ஆகியன பாதிப்பை சந்திக்கும்.  காலம் தவறி மழை பொழியும். புயல் மற்றும் வெள்ளப்பெருக்கால் விளை நிலங்கள் சேதம் அடையும். மக்களிடையே ஆடம்பரமாக வாழும் எண்ணம், போட்டி- பொறாமை மேலோங்கும். பாலியல் சம்பந்தமான புதிய நோய்கள் உண்டாகும். இதயம் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கான நவீன கருவிகள் கண்டறியப்படும்.தங்கம் விலையில் ஏற்ற - இறக்கம் இருக்கும். சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும். அரிய வகை கடல் வாழ் உயிரினங் கள் கண்டறியப்படும். மனவளம் குன்றிய, மாறுபட்ட முக அமைப்பு கொண்ட, தோல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு அதிகரிக்கும்.


பால் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். விலையும் உயரும். வங்கிகளில் வாராக் கடனை வசூலிக்க கடுமையான சட்டங்கள் வரும். சில வங்கிகள் தனது கிளைகளைக் குறைத்துக்கொள்ளும் நிலை உருவாகும்.


இந்தியாவின் ராசிக்கு சுக ஸ்தானத்தில், இந்த வருடம் முழுவதும் சனியும் ராகுவும் தொடர்வதால், அரசு நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். அந்நிய நாட்டு நிறுவனங்களின் படையெடுப்பால், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும். இந்திய வர்த்தகர்களும் பெரிதும் பாதிப்படைவர். உழைப்பாளி கிரகம் சனியுடன், ஏமாற்று கிரகம் ராகு சேர்ந்து காணப்படுவதால், ஒருபக்கம் வேலை வாய்ப்பு பெருகினாலும் மற்றொரு பக்கம் கட்டாய ஓய்வால் பலரும் வேலையிழக்கும் நிலை ஏற்படும். எண் ஜோதிடப்படி இந்த ஆண்டின் (1 1 2 0 1 3) விதி எண்ணாக, ஊழ்வினை கிரகமான சனியின் ஆதிக்க எண்ணான 8 வருவதால், உலகெங்கும் உயிர்ச்சேதங்கள் அதிகரிக்கும். சக்தி வாய்ந்த மருந்துகளுக்கும் கட்டுப்படாத- நோய் பரப்பும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் உருவாகும். உணவுக் கலப்படம் அதிகரிக்கும். வாய் சுத்தம்- கை சுத்தமானவர்களைச் சந்திப்பதும் கடினமாகும். மன இறுக்கத்தால் மக்கள் நிம்மதி இழப்பார்கள். கணினி, லேப்-டாப் போன்ற சாதனங்களின் விலை வீழும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். சுக்கிரன் வீட்டில் சனி நிற்பதால், சினிமா துறையில் சின்ன பட்ஜெட் படங்கள் ஹிட்டாகும். அறிமுகக் கலைஞர்கள் அதிகம் சம்பாதிப்பார்கள். மணல், கம்பி, சிமென்ட் ஆகிய கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிக்கும். வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி ஆகும்.


தீவிரவாதிகள் நவீன தாக்குதல் நடத்துவர். ஓட்டுநர்களை நெறிப்படுத்த புது விதிகள் பிறப்பிக்கப்படும். 4, 6, 8-ஆம் எண்கள் வலிமையடையும்.  பூமிக்காரகன் செவ்வாயின் வீடான மேஷத்தில் கேது நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், இயற்கை சீற்றத்தின் மூலம் பூமியில் நிலப்பரப்பு குறையும். நிலத்தடி நீரில் உவர்ப்புத்தன்மை அதிகரிக்கும். பூமியில் அதிசயப் பள்ளங்கள் உருவாகும். எரி நட்சத்திரங்கள் விழும். செவ்வாய், சந்திரன், சனி, சுக்கிரன் ஆகிய கோள்கள் காந்தப் புயல், புழுதிப் புயலால் பாதிப்படையும். பெண்களுக்கு... பூப்பெய்துவது மற்றும் மாதவிலக்கு குறைபாடுகள் அதிகரிக்கும். செயற்கை கருத்தரிப்பை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் பாதிப்படையும். அரசு நிர்வாகத்தில், அதிகாரிகளின் கை ஓங்கும். ராணுவ ரகசியங்கள் கசியும் வாய்ப்பு உண்டு. பொறுப்புமிக்க பதவி வகிப்பவர்கள் சுய நலத்துடன் செயல்படுவர். நீதித் துறையிலும் சலசலப்புகள் வரும்.நீதி கிரகமான சனியின் ஆதிக்கத்தில் புத்தாண்டு பிறப்பதால், இயன்றவரையிலும் சொல்லிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றுவோம். 'நெல் விதைத்தால் கரும்பு முளைக்காது’ என்பதை  உணர்ந்து, பிறருக்கு நல்லதே செய்து நாமும் நன்மை பெறுவோம்.


1.
மேஷம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
a


திலும் முதலிடத்தைப் பிடிக்க நினைப்பவர் நீங்கள். உங்களது ராசிக்கு 4-ஆம் வீடான சுக வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. இழுபறியாக நின்ற வேலைகள் பூர்த்தியாகும். மனக்குழப்பம் நீங்கும். சந்தோஷம் நிலைக்கும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களைகட்டும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். விலை உயர்ந்த ஆடை- ஆபரணங்கள் வாங்குவீர்கள்.


வீடு கட்ட வங்கி லோன் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

புது வருடம் ஆரம்பிக்கும்போது உங்களின் ராசிநாதன் செவ்வாய் 10-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். சொத்து ஒன்றை விற்று, பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள்.


1.1.13 முதல் 2.2.13 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், இந்த காலகட்டத்தில் கவனம் தேவை. 3.2.13 முதல் 11.10.13 வரை பரணி நட்சத்திரத்தில் கேது செல்வதால், இந்த காலகட்டத்தில் பரணி நட்சத்திரக்காரர்கள் மனஉளைச்சல், ஆரோக்கிய குறைபாடுகளைச் சந்திப்பர். 12.10.13 முதல் டிசம்பர் வரையிலும் கேது அசுவினியில் செல்வதால், இந்த காலகட்டத்தில் அசுவினி நட்சத்திரக்காரர் களுக்கு, பயணங்களில் கவனம் தேவை. சிறு சிறு ஏமாற்றங்கள் வந்துபோகும்.


10.4.13 முதல் 26.5.13 வரையிலும் உங்களின் ராசிநாதன் செவ்வாய், பாபக் கிரகங்களின் பார்வை சேர்க்கையால் பலவீனம் அடைவதால், வீடு- மனை வாங்குவது, பண விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்.  வருடம் முடியும் வரை ராகு உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் தொடர்வதால் சாதிக்கும் எண்ணம் பிறக்கும். 


ஆனால், எதையும் முழுமையாக முடிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் சச்சரவுகள், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வரக்கூடும். சிலர், உங்களைப் பயன்படுத்தி முன்னேறுவர். ஆடம்பரம் வேண்டாம். ராசிக்குள் கேது நிற்பதால், எதிலும் ஒரு சலிப்பு, சோர்வு, தலைச்சுற்றல், காய்ச்சல், தூக்கமின்மை வந்துபோகும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.


மே 28-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் குரு தொடர்வதால் எதிர்பாராத வகையில் பணவரவும், உதவிகளும் கிடைக்கும். செலவுகளும் தொடரும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். குடும்பத்தில் மதிப்பு கூடும். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். அதிக வட்டிக் கடனைபைசல் செய்வீர்கள். 


வழக்கு சாதகமாகும். ஆனால், மே 29-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் குரு அமர்வதால், சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்த சிலர் இழுத்தடிப்பர். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதரருடனான மனத் தாங்கல் நீங்கும். வருடம் முழுக்க ராசிக்கு 7-ஆம் வீட்டில் சனி நிற்பதால், எதிலும் திட்டமிடல் தேவை. எவருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்துப் போகவும்.வியாபாரிகள், பெரிய முதலீடுகளையும் கடன் கொடுப் பதையும் தவிர்க்கவும். பங்குதாரர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டாலும் லாபம் உண்டு. ஹோட்டல், கட்டட பொருட்கள், இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகஸ் தர்களுக்கு, உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என்ற வருத்தம் மேலிடும். மேலதிகாரியை அனுசரித்து செல்லுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. கன்னிப்பெண்கள், தடைப்பட்ட கல்வியை போராடி முடிப்பர். மாணவர்கள், கல்வியில் அதீத கவனம் செலுத்துவது அவசியம். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு, புதிய நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும். உங்கள் வெற்றி தொடரும்.முன்கோபத்தைத் தவிர்த்து, ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய வருடம் இது.

 a

2
ரிஷபம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
a

நாட்டு நடப்பை நன்கு அறிந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால், தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். சேமிக்கத் துவங்குவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவர். வழக்குகள் சாதகமாகும்.


புத்தாண்டு பிறக்கும்போது சந்திரன் வலுவாக இருப்பதால் தொட்டது துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். பாதி பணம்


தந்து முடிக்காமல் இருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.


இந்த வருடம் முழுக்க சனி உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால், முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். பிரச்னைகளை சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்குக் கிடைக்கும். கணவன்- மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வருமானம் உயரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வீடு வந்து சேரும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.


10.5.13 முதல் 6.7.13 வரை உடல் உஷ்ணம் அதிகமாகும். கார உணவுகளைத் தவிர்க்கவும். மே மாதம்


வரை ஜென்ம குரு நீடிப்பதால் அடிக்கடி கோபம் எழும். சில நேரங்களில் நிம்மதியின்றி தவிப்பீர்கள். உங்களைப் பற்றி எல்லோரும் தவறாக நினைப்பதாக நீங்களே முடிவு செய்யாதீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். 29.5.13 முதல் குரு உங்கள் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால், கனிவு பிறக்கும். இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கைமாற்று கடனையும் அடைப்பீர்கள்.பிள்ளைகளை நல்ல பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பீர்கள்.இந்த ஆண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் உதவுவர். எதிர்ப்புகள் அடங்கும். உங்களைப் புறக்கணித்த உறவினரும் தேடி வருவர். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். அரசு தொடர்பானகாரியங்கள் முழுமையடையும். 12-ஆம் வீட்டில் கேது தொடர்வதால், சுபச் செலவுகள் அதிகமாகும். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், கிரகப்பிரவேசம் என வீடு களைகட்டும்.சில காரியங்களில் அலைச்சல் உண்டு. எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். எவருக்கும் ஃபைனான்ஸ் மூலம் பணம் வாங்கித் தரவோ, பொறுப்பேற்கவோ வேண்டாம்.


வியாபாரிகள், தங்களின் அணுகுமுறையை மாற்றி லாபம் ஈட்டுவார்கள். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். கெமிக்கல், ஹோட்டல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து போவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, பணிகளில் இருந்த தேக்கநிலை மாறும். மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வருட தொடக்கத்திலேயே பதவி- சம்பள உயர்வு உண்டு. புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். 


வெளிநாட்டுத்தொடர்புள்ள நிறுவனங் களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கன்னிப்பெண்கள், உற்சாகத்துடன் காணப்படுவார்கள். தடைப்பட்ட திருமணம் கூடிவரும்; கண்ணுக்கு அழகான கணவர் அமைவார். தடைப்பட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். மாணவர்கள், அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கவிதை- கட்டுரை, இலக்கியப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி பரிசு- பாராட்டுகளை பெறுவீர்கள்.


அரசியல்வாதிகளுக்கு, புதிய பொறுப்புகளை கட்சித் தலைமை ஒப்படைக்கும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆதாரம் இல்லாமல் எதிர்க்கட்சியினரை விமர்சிக்காதீர்கள். கலைத் துறையினர், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவர். அரசால் ஆதாயம் உண்டு. மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அடிப்படை வசதிகளை உங்களுக்கு அமைத்துக் கொடுப்பதுடன், உங்களை சாதிக்க வைப்பதாகவும் அமையும்.

மிதுனம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ன்கு யோசித்து முடிவெடுப்பவர் நீங்கள். உங்களுக்கு 2-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். குழப்பம் ஏற்படுத்திய உறவினர்- நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வருடம் பிறக்கும்போது ராகு 5-ஆம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். மகளுக்கு வரன்
தேடும்போது, மணமகனின் பழக்கவழக்கங்களை நன்கு விசாரித்து முடிவெடுக்கவும். பணம்  கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ஒற்றை தலைவலி, ரத்தசோகை, மூட்டுவலி வரக்கூடும். எல்லோரையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பீர்கள்.


தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். பூர்வீகச் சொத்து விஷயத்தில் கவனம் தேவை. கேது 11-ஆம் வீட்டில் தொடர்வதால், வற்றிய பணப்பை நிரம்பும். கைமாற்று கடனையும் அடைப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பி-களின்  நட்பை  சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.


வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் ஏற்பாடு ஆகும். ராசிக்கு 5-ஆம் வீட்டில் சனி தொடர்வதால், பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசுவர். அவர்களின் அடிமனதில் இருப்பதை அறிந்து நிறைவேற்றப் பாருங்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர்களைப் பிரிய நேரிடும். மே 28-ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ல் நிற்பதால், வீண் செலவுகள் அதிகமாகும். ஆக்கப்பூர்வமான காரியங்களுக்காக கொஞ்சம் கடன் வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். மே 29-ஆம் தேதி முதல் வருடம் முழுவதும் ஜென்ம குரு நீடிப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. எவர் மீதும் அதீத நம்பிக்கை வைக்க வேண்டாம். அடிக்கடி கோபம் எழும். உணவில் உப்பு, காரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் காமாலை வரக்கூடும். 


குடிநீரை கொதிக்க வைத்து குடியுங்கள். தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்து போகவும். பிள்ளைகள் சில நேரங்களில் உங்களை புரிந்துகொள்ளாமல் பேசுவர். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பது நல்லது. வீட்டு லோனில் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவுக்கு தர்மசங்கடத்தில் மூழ்கக்கூடும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். எவருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.  


ராசிக்கு 6-ஆம் வீட்டில் சுக்கிரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீண் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். செவ்வாய் 8-ல் நிற்கும்போது, புத்தாண்டு பிறப்பதால் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பூர்வீகச் சொத்து விஷயங்களை சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்துமோதல்கள் எழலாம். அரசு அதிகாரிகளை பகைத்துக்கொள்ளாதீர்கள்.


வியாபாரிகளே!  மற்றவர்கள் பேச்சை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அனுபவசாலிகளை பணியில் அமர்த்துவீர்கள். உணவு, எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், ஸ்டேஷனரி, பப்ளிகேஷன், கட்டட உதிரிபாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய பங்கு
தாரர்களை சேர்ப்பீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, வருட முற்பகுதியில் வேலை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றமும் உண்டு. வருடத்தின் பிற்பகுதியில் மன நிம்மதி உண்டு. எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.


கன்னிப்பெண்கள், பெற்றோரின் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவது அவசியம். உடல் உஷ்ணத்தால் வயிற்றுவலி, வேனல்கட்டி வந்து நீங்கும். மாணவர்கள், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள், உட்கட்சிப் பூசலில் தலையிட வேண்டாம். பதவியைத் தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டியிருக்கும். கலைத் துறையினருக்கு, தடைப்பட்டிருந்த வாய்ப்பு இனி தேடி வரும். உங்களின் படைப்புகள் குறித்த கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும்.மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும், புதிய அணுகுமுறையால் வெற்றிபெற வைக்கும்.
 a


2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
 ள்ளம் கபடமற்றவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் சுக்கிரன் நிற்கும்போது, இந்தப் புத்தாண்டு பிறப்ப தால், எதையும் சாதிக்கும் வல்லமை பிறக்கும். எதிர்பார்த்த தொகை வந்து சேரும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்கத் துவங்குவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்களைப் புறக்கணித்த உறவினரும்இனி வலிய வந்து பேசுவர். தடைப்பட்டிருந்த வீட்டுப் பணியை தொடர, வங்கி லோன் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை- ஆபரணம் சேரும். எனினும், உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.அவ்வப் போது உடல்நிலை லேசாக பாதிக்கும். மே 28-ஆம் தேதி வரை குரு பகவான் லாப வீட்டில் நிற்பதால் பிரபலங்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் உடனே முடியும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.


வருமானத்தை உயர்த்த புதுவழிகளில் முயற்சிப்பீர்கள். திடீர்யோகம், பணவரவு உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க வழி பிறக்கும். உங்களின் தாழ்வு மனப்பான்மை நீங்கும். மதிப்பு கூடும். பெரிய பதவிகள் தேடி வரும். மே 29-ஆம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள், வேலைகள் அதிகரிக்கும். வீண் செலவுகள் வேண்டாம். அறிமுகம் இல்லாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளின் உயர் கல்வியில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். 7-ல் செவ்வாய் நிற்பதால் மனைவியுடன் விவாதங்கள், சந்தேகம், பிரிவு வரும். முன்கோபத்தைக் குறையுங்கள். உடன்பிறந்த வர்களால் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் கவனம் தேவை.


இந்த வருடம் முழுக்க ராசிக்கு 4-ஆம் வீட்டில் சனியும் ராகுவும் அமர்ந்திருப்பதால், தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் வரும். தாய்வழி உறவினர்களால் அலைச் சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். தாய்வழிச் சொத்தை விற்றுவிட்டு புது சொத்து வாங்குவீர்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். நெடுந்தூர, இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும்.


6-ஆம் வீட்டில் சூரியன் நிற்கும்போது, புத்தாண்டு பிறப்பதால் எதிரிகளும் நண்பர்களாவர். அரசு விஷயங்கள் சாதகமாகும். சொத்து சேரும். தடைப்பட்ட காரியங்களை முழு வேகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும். தகப்பனாருடனான கருத்து மோதல்கள் நீங்கும். அவர் வழி சொத்தை அடைவதில் இருந்த தடைகளும் நீங்கும். ஜூன் மாதத்திலிருந்து குரு 12-ஆம் வீட்டுக்கு வருவதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். பண வரவு உண்டு. மனைவிக்கு அவ்வப்போது மருத்துவச் செலவு வந்துபோகும்.   வியாபாரிகளே... வியாபாரத்தைப் பெருக்க விளம்பரங் களுக்கு செலவு செய்வீர்கள். பக்கத்து கடைக்காரருடனான கருத்து மோதல்கள் விலகும். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்களால் லாபம் உண்டு. அரசு கெடுபிடிகள் தளரும். பங்குதாரர்களின் துரோகங்களை மறந்து, மன்னிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும்.

 புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய தொழிலில் கால் பதிக்கும் முன் அனுபவசாலிகளிடம் ஆலோசித்து செயல்படுங்கள். உத்தி யோகஸ்தர்களுக்கு, பதவி - சம்பளம் உயரும். மேலதிகாரி சிலநேரம் உங்களிடம் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கேட்ட இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்கும். மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெறுவதற்காக சிலர் நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.
கன்னிப் பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கைகூடி வரும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.  

நண்பர்களுடன் கருத்து மோதல், விளையாட்டில் சிறுசிறு காயங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகள், தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கலைத் துறையினர், வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவர்.பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அனுபவம், சகிப்புத் தன்மையால் உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்.a

சிம்மம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
a


புதுமை விரும்பி நீங்கள். தைரிய ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகம், பண வரவு உண்டு. 


பழைய பிரச்னைகள் ஓயும். சவாலான விஷயங்களையும்சாதாரண்மாக முடிக்கும் வல்லமை பிறக்கும். குடும்பத்தில் மதிப்பு கூடும். பழைய சொத்து ஒன்றை எதிர்பார்த்த விலைக்கே விற்பீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தவர்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் யோகம் உண்டாகும். புத்தாண்டு பிறக்கும்போது செவ்வாய் ராசிக்கு 6-ஆம் வீட்டில் நிற்பதால், தொட்டது துலங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சொந்த வீட்டு கனவு நிறைவேறும். உங்களுக்கு 12-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால் வீண் அலைச்சலும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும்.


அத்தியாவசியச் செலவுகளால் கையிருப்பு கரையும்.     வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 3-ல் ராகு தொடர்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பெரிய பதவியில் அமருவீர்கள். பேச்சில் தடுமாற்றம் நீங்கும். வழக்கு சாதகமாகும். போட்டி- பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதரருடனான மனஸ்தாபம் விலகும். அவர் மூலம் உதவிகளும் உண்டு. 9-ஆம் வீட்டில் கேது நிற்பதால் சேமிப்புகள் கரையும். அப்பாவுக்கு நெஞ்சுவலி, மூட்டுவலி வந்துபோகும். அவருடன் வீண் விவாதங்கள் வெடிக்கும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. சொந்த ஊர் கோயில் திருவிழாவை சொந்த செலவில் நடத்துவீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும்.


28.5.13 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ல் தொடர்கிறார். அதுவரையிலும் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய நேரிடும். உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகள், இடமாற்றங்கள் வரக்கூடும். வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிரபலங்களை பகைக்க வேண்டாம். எவருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். புதிய நபர்களை வீட்டுக்கு அழைத்து வராதீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். அவ்வப்போது, பழைய கடன் பிரச்னைகள் மனதை வாட்டும்.


மே 29-ஆம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 11-ல் அமர்வதால் புகழ், கௌரவம் உயரும். பண வரவு அதிகரிக்கும். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லவிதமாக முடியும். தடைப் பட்டிருந்த வீடு கட்டும் பணியை இனி தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மகான்களின் ஆசி கிட்டும். சிலருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனின் திருமணம் சிறப்புற நடக்கும். பழைய மனையை எதிர்பார்த்த விலைக்கு விற்பீர்கள்.


வியாபாரிகளுக்கு, பற்று - வரவு உயரும். சனி 3-ல் சாதகமாக இருப்பதால், பிரபலங்களின் உதவியோடு கடையை விரிவுபடுத்துவீர்கள். கெமிக்கல், துணிக் கடை, ஹோட்டல் வகைகளால் லாபம் உண்டு. பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். புது ஒப்பந்தங்கள் கூடிவரும்.


உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். ஜுன் மாதத்திலிருந்து பதவி-சம்பள உயர்வு உண்டு. சக ஊழியர்களின் ஆதரவுடன் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கன்னிப்பெண்கள், போலியான நண்பர்களை விலக்குவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். உங்களுக்கு நல்ல  குணம் கொண்ட கணவர் அமைவார். மாணவர்களுக்கு, விளையாட்டில் பதக்கம் கிடைக்கும். அரசியல்வாதிகள், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களைக் கண்டுகொள்ள வேண்டாம்.


கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் தள்ளிப்போனது அல்லவா? இனி, பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். உங்களின் படைப்புத் திறன் வளரும்.


மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு வசதி- வாய்ப்புகளையும், பதவி மற்றும் பணவரவையும் பெற்றுத் தருவதாக அமையும்.
 aகன்னி

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

 ன்னிக்கும் குணம் கொண்டவர் நீங்கள். குரு பகவான், உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். கைமாற்று கடனை அடைப்பீர்கள்.குடும்பத்தில்   சந்தோஷம் நிலைக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேர்வீர்கள். சிலருக்கு, பிள்ளை பாக்கியம் உண்டு. தடைப்பட்டிருந்த கல்யாணம், கிரகப்பிரவேசம் நல்லவிதமாக நடந்தேறும். 


மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். நெஞ்சு வலியால் சோர்ந்திருந்த தந்தையின் உடல்நிலை சீராகும். வங்கிக் கடனை அடைப்பீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், வருமானம் உயரும். பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர- சகோதரிகளுடனான மனத் தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் வேலையை, இனி விரைந்து முடிப்பீர்கள். சிலர், இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள்.

செவ்வாய் 5-ஆம் வீட்டில் நிற்கும்போது, புத்தாண்டு பிறப்பதால், பிள்ளைகளிடம் கெடுபிடி வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் பாடப் பிரிவில் போராடி சேர்ப்பீர்கள். அரசு அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம்.

கர்ப்பிணிகள் உணவு, மருந்து விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது பரிசோதிக்கவும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை பேசித் தீர்ப்பது நல்லது. சொத்து வாங்குவது-விற்பதில் வில்லங்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மே 29-ஆம் தேதி முதல், குரு உங்கள் ராசிக்கு 10-ல் அமர்வதால், வேலை அதிகரிக்கும். எதிலும் அலட்சியம் வேண்டாம். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். அரசு அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் வைப்புத் தொகை வைக்க வேண்டாம். முக்கிய பணிகளை நீங்களே நேரடியாக முடிப்பது நல்லது.உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வரும். தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும்.


புத்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 2-ஆம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாக தொடர்வதால், வீண் விவாதங்களைத் தவிருங்கள். காலில் அவ்வப்போது அடிபடும். கண் பரிசோதனையும் அவசியம். எவரையும் விமர்சிக்க வேண்டாம். திடீர் பண வரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. எனினும், செலவுகளும் அதிகரிக்கும். உங்களின் நிதி நிலை தெரியாமல் உறவினர், நண்பர்களில் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.
வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டி லேயே ராகுவும் தொடர்வதால், பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.


குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் எழும். கேது 8-ஆம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திண்டாடுவீர்கள். கை- காலில் காயம், வயிற்றுக் கோளாறு, மூட்டுவலி மற்றும் நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும். தம்பதிக்குள் பிரச்னை வந்தாலும் ஒற்றுமைக்குக் குறையிருக்காது.
வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அவசியம்.
வியாபாரிகள், பெரிய முதலீடுகளைத் தவிருங்கள். வேலையாட்களை அனுசரித்து செல்லவும். கமிஷன், ரியல் எஸ்டேட், அரிசி - எண்ணெய் மண்டி மூலம் லாபம் உண்டு.

பங்குதாரர்களால் விரயம் வரும். உத்தியோகஸ்தர்களுக்கு, மே 29-ஆம் தேதி முதல் குரு 10-ல் நுழைவதால், பணியில் கூடுதல் கவனம் தேவை. வேலைச்சுமை, உயரதிகாரிகளால் அலைக்கழிப்பு ஏற்படலாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் நேரிடும். புது வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. இடமாற்றம் இருக்கும்.


கன்னிப் பெண்களுக்கு, தகுதியான கணவன் அமைவார். மாணவர்களுக்கு கடின உழைப்பு தேவை. அரசியல்வாதிகள், தலைமையிடம் விட்டுக்கொடுத்து போகவும். கலைஞர்களுக்கு, அரசாங்கத்தின் பாராட்டு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சிக்கனம் மற்றும் மௌனத்தின் அவசியத்தை உணர்த்துவதாக அமையும்.
 aதுலாம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
aற்றவர்களின் வருத்தங்களை புரிந்து உதவும் குணம்  கொண்டவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 10-வது வீட்டில் புத்தாண்டு பிறப்பதால், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர் கள். சாணக்கியத்தனத்துடன் பேசி காரியம் 
சாதிப்பீர்கள்.உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பணத்தைத் திருப்பித் தருவார்கள். நீங்களும் கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். மகனின் திருமணம் இனிதே நடந்தேறும்.


புத்தாண்டு பிறக்கும்போது செவ்வாய் 4-ஆம் வீட்டில் இருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். தாயாருக்கு ஆரோக்கியக் குறைவு, வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். வருடம் பிறக்கும்போது ராசிக்குள் ராகு நிற்பதால் எதிலும் ஒருவித தயக்கம், படபடப்பு, நெஞ்சு வலி வந்து நீங்கும். முன்கோபம் அதிகரிக்கும். யோகா, தியானம், எளிய உடற்பயிற்சிகள் அவசியம்.


7-ஆம் வீட்டில் கேது அமர்வதால் தம்பதிக்குள் ஈகோ பிரச்னை, வீண் சந்தேகத்தால் பிரிவு ஏற்படும். வாழ்க்கைத் துணை உங்களின் நிறை- குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். மே 28-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் குரு மறைந்திருப்பதால், மறைமுக பணவரவு உண்டு; செலவுகளும் இருக்கும். வீண் பழிச்சொல்லுக்கு ஆளாவீர்கள். வாகனத்தில் செல்லும்போது அதீத கவனம் தேவை.


மே 29 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் அமர்வதால் சாதிப்பீர்கள். போராட்டங்கள் ஓயும். கல்வியாளர்கள், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். பதவிகள் தேடி வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனைவியுடனான பிணக்குகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.


புது வேலை கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். தந்தையின் உடல் நிலை சீராகும். அவருடனான கருத்து மோதல்களும் விலகும். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ், கௌரவம், செல்வாக்கு உயரும். வழக்கு சாதகமாகும். முதுகுவலி, சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். நல்ல வேலை அமையும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகைகளை உடனுக் குடன் செலுத்துவது நல்லது.


ஜென்மச்சனி தொடர்வதால், மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஜெனரல் செக்கப்பும் அவசியம். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் வழியில் அலைச்சலும் செலவும் இருக்கும். எவருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரிகள், சந்தை நிலவரங்களை அறிந்து புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். ஃபர்னிச்சர், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. அரசாங்க நெருக்கடி கள் நீங்கும். வேலையாட்களும்  பங்குதாரர்களும் பணிந்து போவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவர். வியாபாரம் செழிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு, எவரும் குறை சொல்லமுடியாத நிலை உருவாகும். முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். சக ஊழியர்களால் மறைமுகமாக சில பிரச்னைகள் எழலாம். கன்னிப்பெண்களுக்கு, உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். தாயாரின் ஆதரவு உண்டு. ஆடை- ஆபரணங்கள் சேரும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.  விட்ட பாடத்தை மீண்டும் எழுதி வெற்றி பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு அவ்வப்போது மறதி - மந்தம் ஏற்படலாம். படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.

அரசியல்வாதிகளுக்கு வேலை அதிகரிக்கும். கட்சி அறிவிக்கும் போராட்டங்களில் பங்கேற்று, தலைமையின் நன்மதிப்பை பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, தடைப்பட்ட வாய்ப்புகள் எல்லாம் இனி வீடு தேடி வரும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, அவ்வப்போது உங்களுக்கு சுகவீனங்களைத் தந்தாலும், தன்னம்பிக்கையால் வெற்றிபெற வைப்பதாக அமையும்!
 aவிருச்சிகம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்


ன்மானம் மிகுந்தவர் நீங்கள். உங்களுக்கு 9-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களின் ஆளுமைத்திறனும் கையில் பணப் புழக்கமும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். ரசனைக்கேற்ற வீடு- வாகனம் அமையும். வருடம் ஆரம்பிக்கும்போது செவ்வாய் 3-ஆம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் வீடு- மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். மகளின் கல்யாணம் சிறப்புற நடக்கும். வி.ஐ.பி-களின் ஆதரவு உண்டு.

 சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் பேச்சில் இனிமை கூடும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்டவும், வாங்கவும் வங்கி லோன் கிடைக்கும். புது வேலைக்கான முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். பழைய கடன் பிரச்னை தீரும்.
ராசிக்கு 6-ஆம் வீட்டில் கேது சாதகமாக இருப்பதால், சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். பழைய பிரச்னைகளுக்கு, மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சிலருக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து, அயல்நாடு சென்று வருவீர்கள். ராகு 12-ஆம் வீட்டில் மறைந்திருப்பதால், மறைமுக எதிரிகளாலும் ஆதாயம் உண்டு.

திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். யதார்த்தமாக நீங்கள் பேசுவதையும் சிலர் தவறாகப் புரிந்துகொள்வர். சொத்து வழக்கில் வழக்கறிஞரை மாற்றுங்கள். மே 28-ஆம் தேதி வரையிலும் உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால், வரவேண்டிய பணம் வந்துசேரும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.


தம்பதிக்குள் மனம் விட்டுப் பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மூத்த சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். மே-29 முதல் குரு 8-ல் மறைவதால் வேலை, செலவுகள் அதிகரிக்கும். தம்பதிக்குள் மனஸ்தாபம் எழும். கை- காலில் அடிப்படக்கூடும்.


சனி பகவான் ராசிக்கு 12-ஆம் வீட்டில்... ஏழரைச் சனியின் ஒரு பகுதியான விரயச்சனி தொடர்வதால்,  இனம் புரியாத கவலைகள் வந்து செல்லும். ஓரளவு பண வரவும் உண்டு. சிலர், உங்களை தவறாகப் புரிந்துகொள்வர்.
இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை. அரசு அதிகாரிகள், வி.ஐ.பி-களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். காசோலை தருவதற்கு முன்பு, வங்கியில் கையிருப்பை அறியவும்.


வியாபாரிகளே... தரமான சரக்குகளை வாங்கி புது சலுகைகளை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. ஃபர்னிச்சர், ஹோட்டல், லாட்ஜ், ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் நீசப்பொருட்களால் ஆதாயம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, உங்க ளின் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த சலுகை கள் கிடைக்கும். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும்.
கன்னிப்பெண்கள், கூடா பழக்கவழக்கம் உள்ளவர்களிடம் இருந்து விடுபடுவீர்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர் கணவனாக அமைவார். மாணவர்களுக்கு, படிப்பில் ஆர்வம் பிறக்கும்; சக மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் எனும் வைராக்கியத்துடன் படிப்பீர்கள்.


அரசியல்வாதிகள் பற்றிய வீண் வதந்திகள் நீங்கும். கட்சி மேலிடத்தால் பெரிதும் மதிக்கப்படுவீர்கள். கலைஞர்களின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பாராட்டப்படும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சிறு சிறு தடைகள்- ஏமாற்றங்களைத் தந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும்.

தனுசு

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
a


தாராள மனம் கொண்டவர் நீங்கள். புத்தாண்டு பிறக்கும் போது, சனி உங்களின் லாப வீட்டில் தொடர்கிறார். திடீர் செல்வாக்கு, புகழ் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பழைய மனையை விற்றுவிட்டு புது வீடு வாங்குவீர்கள். கடன்கள் அடைபடும். வழக்குகள் சாதகமாகும். விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். ஆபரணம் சேரும். நாடாளுபவர்கள் உதவுவர்.

மே 28-ஆம் தேதி வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக எதிர்ப்புகள், வீண் டென்ஷன் வேலைச்சுமை, காய்ச்சல் என வந்து செல்லும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாம். சில காரியங்களை பலதடவை முயன்று முடிக்க வேண்டியது வரும். பணம்- நகை, வீட்டுப் பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். சிக்கனமும் அவசியம். வீண் சந்தேகத்தால் நல்லவர்களை இழக்கவேண்டி வரும்.

மே - 29 முதல் குரு உங்கள் ராசிக்கு 7-ல் நுழைவ தால், துடிப்புடன் செயலாற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். சிலருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு நல்ல மணப்பெண் வாய்ப்பாள். தாயாரின் உடல் நிலை சீராகும். பழைய சொத்து ஒன்றை எதிர்பார்த்த விலைக்கு விற்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.

உங்களுக்கு 8-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். புது வருடம் பிறக்கும்போது, 2-ஆம் வீட்டிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால், வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து போங்கள். சிலர், வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். முக்கிய பணிகளை நீங்களே முன்னின்று  முடிப்பது நல்லது. கேது உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்துபோகும். அவர்களின் உயர் கல்வி, உத்தியோகம் தொடர்பாக அலைச்சலும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் எழலாம். பூர்வீகச் சொத்துப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எவருக்கும் நகை, பணம் வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

ராகு, உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் தொடர்வதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதிய பதவிகள் தேடி வரும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
வியாபாரிகள், தள்ளுபடி விலையில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை அழகுப்படுத்துவீர்கள். வேலையாட்களால் டென்ஷன் ஏற்படலாம். மருந்து, என்டர்பிரைசஸ், துணி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிவர். புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, பதவி- சம்பள உயர்வு உண்டு. அலுவலகப் பிரச்னைகள் மட்டுமின்றி, அதிகாரியின் சொந்தப் பிரச்னைகளையும் தீர்த்துவைப்பீர்கள். பெரிய பொறுப்புகளுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். சிலருக்கு, புது வேலை கிடைக்கும்.


கன்னிப்பெண்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். தாமதமான கல்யாணம், வருடத்தின் பிற்பகுதியில் நல்லவிதமாக முடியும். மாதவிடாய்க் கோளாறு, தலைசுற்றல், தூக்கமின்மை நீங்கும். மாணவர்களுக்கு, நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்.

அரசியல்வாதிகள், ஆதாரம் இல்லாமல் எவரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். சகாக்கள் சிலர், உங்களைப் புகழ்வது போன்று இகழ்வார்கள். கலைஞர்கள், கிடைக்கும் வாய்ப்புகள் எதுவானாலும் தவிர்க்காமல் ஏற்றுக்கொள்வது நல்லது.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, ஆரம்பத்தில் உங் களை அலைய வைத்தாலும், பிறகு எதிர்பாராத பண வரவையும் வெற்றிகளையும் தரக்கூடியதாக அமையும்.மகரம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்


பெற்ற தாயையும், பிறந்த மண்ணையும் அதிகம் நேசிப்பவர் நீங்கள். உங்களுக்கு லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில், புத்தாண்டு பிறக்கிறது. திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். ஷேர் மூலம் பணம் வரும். செவ்வாய் உங்கள் ராசிக்குள் உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால்எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி நிறைவேறும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வழக்கு சாதகமாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வீடு வாங்குவது- கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

மே 28-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால், குடும்பத்தில் கூச்சல் - குழப்பம் விலகும். தாம்பத்தியம் இனிக்கும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சிலருக்கு, மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் செல்வாக்கு கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும்; நல்ல வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தின் பங்கு கைக்கு வரும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

மே- 29 முதல் குரு உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சென்று மறைவதால் மறைமுக விமர்சனங்கள், ஏமாற்றம், இழப்பு, கவலைகள் ஏற்படும். வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். தம்பதிக்குள் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வந்துபோகும். பணப் பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க நேரிடும். உறவினருடன் பகை வரக்கூடும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். அரசு காரியங்கள் தாமதமாகும்.

கேது 4-ஆம் வீட்டில் நிற்பதால் முக்கியக் கோப்புகளில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்க்கவும். தாயாருக்கு கை- கால் மற்றும் முதுகு வலி வந்துபோகும். தாய்வழி உறவினருடன் கருத்து வேறுபாடுகள் எழலாம். மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி, ரத்த சோகை வரக்கூடும். ஆனால் 10-ஆம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் சவால்களை சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். கடன் வாங்கியவர்கள் திருப்பித் தருவர். எனினும், வேலைச்சுமையும் வீண் பழியும் வரக்கூடும். சனி உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் தொடர்வதால், உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். வி.ஐ.பி-களின் அறிமுகமும் அவர்களால் உதவியும் உண்டு. பணபலம் கூடும். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும்.மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்து தகராறு தீரும்.

உடல்- உள்ளச் சோர்வு வரும். நகை, பணம், முக்கிய பத்திரங்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. வியாபாரிகள், அதிரடி திட்டங்களால் போட்டியாளர்களை திணறடிப்பார்கள். பணியாளர்களிடம் கவனம் தேவை. புது ஏஜென்சி எடுப்பீர்கள். கூட்டுத்தொழிலில், விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவர். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் இனி அலைக்கழிப்புகள் இருக்காது. எதிர்பார்த்த பதவி - சம்பள உயர்வு உண்டு. ஆனாலும், 10-ல் சனி தொடர்வதால் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.

கன்னிப்பெண்களுக்கு பேச்சில் அனுபவ முதிர்ச்சி வெளிப்படும். காதிருந்ததற்கு ஏற்ப நல்ல கணவர் அமைவார். மாணவர்கள், கடைசி நேரத்தில் படிக்கும் வழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உயர் கல்வியில் விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்வதற்கு, கொஞ்சம் அலைச்சலும் போராட்டமும் உண்டு. கெட்ட நண்பர்களை ஒதுக்குங்கள். அரசியல்வாதிகள், உட்கட்சி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எதிர்க்கட்சியினர் குறித்த விமர்சனமும் வேண்டாம். நேரத்தை வீணடிக்காமல் செயல்பட்டு, சாதிக்கப் பாருங்கள்.

கலைத் துறையினரை, பெரிய நிறுவனங்கள் அழைத்துப் பேசும். மொத்தத்தில் இந்த புத்தாண்டின் முற்பகுதி முன்னேற்றப் பாதையைக் காட்டினாலும், பிற்பகுதியில் தொலை நோக்குச் சிந்தனையின் அவசியத்தை உணர்த்துவதாக அமையும்.


கும்பம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
aடுத்தவர்களின் குறை-நிறைகளை சாமர்த்தியமாக சுட்டிக்காட்டுவதில் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும்போது, புத்தாண்டு பிறக்கிறது. மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். காரியம் நடப்பதற்காக மட்டுமே உங்களின் காலைப் பிடிக்கும் சிலரை, இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வீண் செலவுகளைக் குறைத்து, சேமிக்கத் துவங்குவீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவி வழி உறவினரால் ஆதாயம் உண்டு.
உங்களுக்கு 6-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள், அலைச்சல்கள், செலவுகள் அதிகரிக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடு களை கட்டும். உங்கள் ராசிநாதன் சனி 9-ஆம் வீட்டில் அமர்ந்திருக் கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பாதியில் நின்றுபோன வீடு கட்டும் பணியைத் துவக்குவீர்கள்.

வெற்றி பெற்ற மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு உண்டு என்றாலும் செலவுகளும் துரத்தும். வழக்குகள் சாதகமாகும். உறவினர், நண்பர்களின் சுயரூபத்தை அறிந்து, அதற்கேற்ப செயல்படுவீர்கள். சிலருக்கு, புது வேலை அமையும். வெளி நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால், தந்தைக்கு நெஞ்சு வலி, அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.

வருடம் முடியும் வரை 3-ஆம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. அண்ணன் பக்கபலமாக இருப்பார். ஆனால், இளைய சகோதரருடன் பனிப்போர் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். 9-ஆம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால், 'எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே’ என்று ஆதங்கப்படுவீர்கள். குலதெய்வ நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசு அதிகாரி களை பகைக்க வேண்டாம்.

மே 28-ஆம் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால், தாயாருடன் கருத்துமோதல்கள் வரக்கூடும். அவருக்கு நெஞ்சுவலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். கடனை போராடி வசூலிப்பீர்கள். அரசாங்க வரிகளை உரிய காலகட்டத்தில் செலுத்திவிடுங்கள். வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேச வேண்டாம்.  மே- 29 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் நுழைவதால் பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வார்கள். பண வரவு உண்டு. மழலை பாக்கியம் உண்டு. மகளின் தடைப்பட்ட திருமணம், இப்போது கூடிவரும். வீடு கட்டி குடிபுகுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

வியாபாரிகள், வாடிக்கையாளரின் தேவையறிந்து கொள்முதல் செய்வது அவசியம். நீண்டநாளாக செய்ய நினைத்த மாற்றங்களை ஜூன் முதல் செய்வீர்கள். விளம்பரங்களால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுக நிலை ஏற்படும். புது கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள், உங்களது ஆலோசனையை ஏற்பர்.
உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தின் எல்லா நடவடிக்கை களிலும் உஷாராக இருங்கள். ஜூன்  முதல் பதவி- சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுக்கு தொல்லை தந்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார்.

கன்னிப்பெண்கள், விடுபட்ட பாடத்தில் தேர்வு எழுதி வெற்றி பெற்று, வேலையில் சேர முயற்சியுங்கள். பெற்றோர் உங்களைப் புரிந்துகொள்வர். மாணவர்கள், 'தேர்வில் வெற்றி நிச்சயம்’ என்று தப்புக்கணக்கு போடாமல், படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேர்வீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். உயர்கல்வியில் வெற்றியுண்டு.

அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை தலைமை உற்று நோக்கும். கலைஞர்கள், விமர்சனங்கள் குறித்து அஞ்ச மாட்டார்கள். மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவர். மொத்தத்தில், இந்த புத்தாண்டின் மையப்பகுதியில் இருந்து அதிரடி யோகம் உண்டு.


மீனம்

2013 புத்தாண்டு ராசி பலன்கள் - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
 னிய பேச்சுக்கு சொந்தக்காரர் நீங்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், உங்களின் செல்வம்- செல்வாக்கு உயரும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் பாச மழை பொழிவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் சுக்கிரன் வலுவாக நிற்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், விரக்தி விலகும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வீடு கட்ட பல வழிகளில் இருந்தும் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். தாய்வழியில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். குல தெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். புது வேலை கிடைக்கும். கைமாற்றாக வாங்கிய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள்.

மே 28-ஆம் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் நிற்பதால், கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும், திடீர் பயணங்களும் அதிகரிக்கும். சில காரியங்களில் தடைகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனைவி, பிள்ளை களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். மற்றவர்களின் பேச்சை நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்கவேண்டாம். வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

மே- 29 முதல் குரு உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் அமர்வதால் மன உளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம், மூட்டுவலி, சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் உரசல்கள் எழலாம். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். நண்பர்களில் சிலர், உங்களை தவறான பாதைக்கு திருப்பலாம்; கவனம் தேவை.

வழக்கு விஷயங்களில் சற்றே பின்னடைவு ஏற்படும். ராசிக்கு 2-ஆம் வீட்டில் கேது நிற்பதால் பேச்சில் காரம் வேண்டாம். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். ராசிக்கு 8-ஆம் வீட்டில் ராகு நிற்பதால், தம்பதிக்குள் சிறு சிறு மனஸ்தாபம் எழும்; விட்டுகொடுத்து போகவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வருடம் முடியும் வரை அஷ்டமத்துச் சனி தொடர்வதால் சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், குழப்பங்கள், பண இழப்பு, வீண் பழி, வழக்குகள் வந்து நீங்கும்.

வியாபாரிகள், பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த லாபத்தைக் குறைத்து விற்பனை செய்வீர்கள். மே மாதம் முதல் கணிசமாக லாபம் உயரும். உணவு, புரோக்கரேஜ், கமிஷன், எலக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடன் மோதல்கள் எழலாம். உத்தியோகஸ்தர்களுக்கு, மேலதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்பட்டாலும், உங்களை நம்பித்தான் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். விருப்பமற்ற இடமாற்றம் உண்டு.

கன்னிப்பெண்கள், பெற்றோரை அனுசரித்து செல்லவும். உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். மாணவர்கள், அன்றைய பாடங்களை அன்றே படித்து முடித்துவிடுங்கள். கணிதம், அறிவியலில் கூடுதல் கவனம் தேவை.
அரசியல்வாதிகள், கோஷ்டி பூசலில் தலையிடாதீர்கள். மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.கலைஞர்களுக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஒருபுறம் விமர்சனங்கள் இருந்தாலும், மற்றொரு புறம் கடின உழைப்பால் சாதித்துக் காட்டுவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு... எதிலும் அகலக்கால் வைக்காமல், ஆழம் பார்த்து காலை விடவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமையும்.
athanx - vikatan

0 comments: