Thursday, December 20, 2012

நானே வருவேன் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNgORehqribNXBgygBqQcVAlfvzoZ6ApgW4yQPssmyaYlJv4s1VbZyjPMIOmy0PD2kZAR87WbtW2TgH5ktkkejTFxQK2sACvumOO5gqk4blksvVcm6flfTcz0x1bAm3skivuAHzkyrL2Zr/s400/naane-varuven-tamil-movie-cd.jpg

நான் ஏன் இந்த டப்பா படத்துக்கு போனேன்னா  போஸ்டர் விளம்பரம் தான் . உலகின் முதல் வாசனைத்திரைப்படம் அப்டினு பக்காவா , பண்ணாட்டா விளம்பரம் கொடுத்திருந்தாங்க. அதாவது ஹீரோயின் மல்லிகைப்பூ வெச்சுட்டு வந்தா தியேட்டர் ஃபுல்லா அந்த வாசம் வீசுமாம். அந்த புது அனுபவம் எப்படி இருக்கும்னு பார்ப்போம்னு நினைச்சேன்.இன்னொரு காரணம் லோ பட்ஜெட் டி ஆர் என அழைக்கப்படும் பாபு கணேஷ் . கதை வசனம் ஆபீஸ் பாய் உட்பட 14 பொறுப்புகளை சுமந்து இவர் எடுத்த கடல் புறா படம் நினைவு இருக்கு . சரின்னுட்டு போனா மனுஷன் கொன்னு குதறிட்டாரு. முடியல


ஹீரோ தன் ஃபிரண்ட்ஸோட டூர் போறார். அங்கே போன இடத்துல ஒரு விபரீதம் நடக்குது . ஒரு மலைவாசிப்பெண் ரேப் செய்யப்படறா. அதை வேடிக்கை பார்த்து ஏளனம் செய்ய்யும் 3 பெண்கள் , 2 ஆண்கள் 5 பேரையும் ரேப்பப்பட்ட பார்ட்டி பேயா வந்து பழி வாங்குது . இந்த பிரமாதமான புதுமையான கதை முடிச்சு படம் போட்டு க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முந்திதான் தெரிய வருது, சஸ்பென்ஸை மெயிண்ட்டெயின் பண்றாங்களாம், அடேய்

 ஹீரோ பாபுகணேஷ் பார்க்க சகிக்கல . பீர் அடிச்சு உப்பிய கன்னம் ,வழுக்கையை மறைக்கும் மூன்றாந்தர  விக். எல்லா சீன்களுக்கும் ஒரே மாதிரி பாறை மாதிரி முகத்தை வெச்சிருக்கும் லாவகம் . பாபு கணேஷ் ராக்ஸ். அப்பா சாமி


ஹீரோயின் அதை விட கண்றாவி .பொதுவா ஒரு படத்துல ஹீரோயின் தோழிகளா வர்ற பொண்ணுங்க நல்ல ஃபிகர்ங்களா இருப்பாங்க , இதுல அதுவும் இல்லை. பாக்கி 3 பொண்ணுங்களும் படு கேவலமா இருக்காங்க .காலேஜ் கேர்ள்ச் மாதிரி தெரியல . பக்கா அயிட்டம்ஸ் மாதிரி இருக்கு .ஆண்டிகள் மாதிரி ஆட்களைக்காட்டிட்டு 19 வயசுப்பொண்ணுன்னு சொல்றதுக்கு ஜெயில்ல பிடிச்சு போடுங்க ஏட்டய்யா


டைட்டில் போடும்போது வகீதா , ஷில்பா , இப்ரா , விக்டோரியா ,ச்டேபி , பாபி என வித்தியாசமான பேரா வந்தப்போ நான் சந்தோஷப்பட்டேன், படம் டப்பாவா இருந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியா ஏதாவது ஃபிகர்ங்களையாவது பார்க்கலாம்னு.. ஆனா பாருங்க இதுங்களைப்பார்த்து  கண்ணே கெட்டுப்போச்சு , ஐ வாஷ் பண்ணனும் 

http://www.tamilnow.com/movies/gallery/naane-varuven/nane-varuven-film-stills-11.jpg இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்1. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம கின்னஸ் புக்ழ் பாபுகணேஷ்னு டைட்டில்ல போட்டுக்கிட்ட மொள்ளமாரித்தனம்


2. வாசனை டெக்னிக்னு ஊரை ஏமாத்தின லாவகம்

3. படம் பார்க்கும் முதல் 200 பேருக்கு கோடி ரூபா பரிசுன்னு கோல்மால் விளம்பரம் ( ஆனா தியேட்டர்,ல நான்,  தியேட்டர் ஓனர், ஆபரெட்டர், பின்னே டிக்கெட் கிழிப்பவர் 4 பேர்தான் ) 

4. இந்தப்படத்தோட மொத்த பட்ஜெட்டே ரூ 50,000 தான் இருக்கும். ஆனா கொஞ்சம் கூட மன்சாட்சியே இல்லாம கோடி ரூபாய் பரிசுன்னு விளம்பரம் கொடுத்தது செம 


5.கடலுக்குள்ளே மீனம்மா  கட்டு மரத்துல போவமா? மனசுக்குள்ளே பாரமா? உன் மாமன் மேல கோபமா? செம கானா பாட்டு


http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/naane-varuven/bwoods_naane-varuven-01.jpg

இயக்குநரிடம் வேண்டா வெறுப்பாய் சில கேள்விகள்


1. படத்துல ஃபாரஸ்ட் ஆஃபீசர்னு சொல்லிட்டு ஒரு கேனம் வருது . அது ஏன் போலீஸ் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு அலையுது . அந்தாள் பார்க்க வாட்ச்மேன் மாதிரியே இருக்காரு


2. நான் ஒரு ஃபாரஸ்ட் ஆஃபீசர்னு அந்த கேனம் சொல்லும்போது ஹீரோ - அதை எல்லாம் உன் வீட்ல வெச்சுக்க “ அப்டினு கேவலமா ஒரு பஞ்ச் பேசறாரு , காட்டுல வெச்சுக்கறதுக்கு வேற ஏதாவது அரேஞ்ச் பண்ணி இருக்கீங்களா?


3. அனாமத்தா வழில கிடக்கும் ஃபார்ஸ்ட் ஆஃபீசரோட டெட் பாடியை இவங்க் அதாவது ஹீரோ அண்ட் கோ பார்க்கறாங்க. அவங்க பாட்டுக்கு கிளம்ப வேண்டியதுதானே , எதுக்கு பேக்குங்க மாதிரி அந்த டெட் பாடியை டிஸ்போஸ் பண்னனும்? வேலியில் போகும் ஓணானை எதுக்கு வேட்டிக்குள்ள விடனும்?


4. அப்படி டெட் பாடியை டிஸ்போஸ் பண்ணும்போது 4 பேர் கைரேகையும் டெட்பாடில படுது.  போலீஸ் அதை கவனிக்காதா?


5.  வழக்கமா  பேய்னா வெள்ளை சேலை தான் போட்டுட்டு வரும்? இதுல ஏன் வெள்ளை பெட்டிகோட் , வெள்ளை பிரா போட்டுக்கிட்டு காட்டுக்குள்ள சுத்துது? குளிராதா? 


6. ஒரு பெண்ணோட 2 கண்களை க்ளோசப்ல படத்துல 67 டைம் காட்டறீங்க, எதுக்கு?  http://www.cinepicks.com/tamil/gallery/naane-varuven/nane-varuven-film-stills-2.jpgமனம் கவர்ந்த வசனங்கள்


1. ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ஊய் ( பேய் எஃபக்ட்டாம் ) 2. நானே வருவேன்  நானே வருவேன் நானே வருவேன் நானே வருவேன் நானே வருவேன் நானே வருவேன் நானே வருவேன் ( டைட்டிலை நியாயப்” படுத்தறாங்களாம் “)


 சி.பி கமெண்ட் - இந்த கேவலமான , குப்பையான , டப்பாவான, மொக்கையான மக்காத குப்பையை யாரும் போஸ்டரைக்கூட பார்த்துடாதீங்க எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் -  மைனஸ் 10 


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - அய்யய்யோ டெக்கான் கிரானிக்கல் ரேங்க் -  மைனஸ் 4 /5

http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/naane-varuven/bwoods_naane-varuven-03.jpg3 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

what about power star?

தமிழ் பையன் said...

வாசனை அனுபவம் எப்படி இருந்தது?

K.Arivukkarasu said...

வாக்கிங் போறேன்னு மல்லிப்பூ வாசம் பிடிச்சது பத்தாம, தியேட்டருக்கும் போய் ........ செம அடி வாங்கியதை நினைச்சும், இந்த விமர்சனத்தைப் படிச்சும் சிரிச்சு மாளலை ... :-))