Monday, December 10, 2012

சி.பி செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ் பாகம் 2


1. தலைவர் எந்த கட்சியையும் திட்றது இல்லையே ஏன்?

ம்க்கும் அவருக்கு எதிர்கட்சி எது? தான் இருக்குற கட்சி எதுன்னே வித்தியாசம் தெரியாது.

.................................................................................
2. தேர்தல் அறிக்கைக்கு  தொண்டர்கள்லாம் முத்தம் தர்றாங்களே ஏன்?!

அதுதானே கட்சியோட கதாநாயகி. ஆசை வராதா?

................................................................
3. பெட்ரோல் விலை ஏற விஸ்வநாதன் ஆனந்த்தான் காரணம்ன்னு அறிக்கை விட்டிருக்காரே?!

பெட்ரோலியப் பொருட்கள் மீது செஸ் வரிதானே விதிக்கப் பட்டிருக்கு.

..........................................................
4.எப்படியாவது வர்ற எலக்‌ஷன்ல நான் தோத்துடனும்ன்னு கடவுள்கிட்ட தலைவர் வேண்டிக்குறாரே ஏன்?!

தலைவரோட எதிர்கட்சி மகளிர் அணித்தலவி தலைவர் தேர்தல்ல தோத்துட்டா கட்சி ஆஃபீஸை நிர்வாணமா ஒரு ரவுண்ட் ஓடி வர்றதா சபதம் போட்டிருக்காங்க.


...............................................
5.உலகத்துலயே காதலுக்கு எதிர்ப்பே இல்லாத ஜோடி எது?

ஆதாம்.., ஏவாள்..

.......................................
6. மாமியார் பிரச்சனை இல்லாத மருமகளே இல்லை.

அப்படி சொல்ல முடியாது. ஏன்னா ஏவாள்க்கு மாமியாரே இல்லை...,


...................................

7.எவ்வளவு தடவை குளிச்சும் என் உடம்புல இருக்குற ஜவ்வாது செண்ட் வாசம் போக மாட்டேங்குதே!

அதனால என்ன?

“காதலி கூட “மணம்(மனம்) விட்டு பேசலாம்ன்னு நினைச்சு வந்தேன்.

........................................................................

8.ஆரூடம் சொல்லும் ஆக்டோபஸை அழிக்க போவதா தலைவர் மேடைல முழங்குறாரே!

அவர்  தோற்கப் போவதா முன்கூட்டியே அது சொல்லிட்டா விழுற 10 ஓட்டும் விழாம போய்டுமே!

..............................................................

9.இன்ஸ்பெக்டரை அய்யான்னு கூப்பொடாம அய்யோன்னு கூப்பிட்டியாமே?!

இன்ஸ்பெக்டர் லாக்கப்புல இருக்குற பென் கைதி கூட சரசமா சிரிச்சுப் பேசறப்ப இன்ஸ்பெக்டரோட மனைவி திடீர்ன்னு ஸ்டேஷனுக்குள்ளே வந்துட்டாங்களே!

........................................................................

10. தலைவருக்கு மனசுக்குள்ளே பெரிய சினிமா ஹீரோன்னு நினைப்பு.

ஏன்?

நான் ஒரு தடவை ஒரு தொகுதில நின்ன தொகுதில மறுபடி ஒரு தடவை நானே நிக்க மாட்டேன். யார்க்கிட்டயும் ஓட்டு கேட்க மாட்டேன்னு பஞ்ச் டயலாக் பேசுனாரே?!

..............................................................

11. திருப்பதில எல்லா சாமி நகையையும் காணாம போய்டுச்சாமே!

ஏழுமலையானை ஏழைமலையானாக மாத்தாம  விட மாட்டாங்க போல.

.......................................................

12. தன்வினை தன்னைச்சுடும்ன்னு இப்போதான் நான் உணர்ந்தேன்.

எப்படி?

நான் லவ் மேரேஜ் பண்ணுன சித்ரா என்னையே எதிர்த்துப்பேசி எனக்கே சூடு வைக்குறா.

.......................................................................

13.கடன்கார பசங்கன்னு தலைவர் யாரை திட்டுறாரு?

வேற யாரை? இந்தியர்களைத்தான். உலக வங்கில கடன்(லோன்) வாங்குனதுல இந்தியாதான் நெம்பர்1 பிளேஸ்ல இருக்காம்.

.........................................................................

14.தீம்ஸ் பார்க்குல செயற்கை அலை உருவாக்குற வாட்டர் எஞ்சினியர்ஸ் கூட தலைவர் தீவிர டிஸ்கஷன்ல இருக்காரே! எதுக்கு?

வர்ற எலக்‌ஷன்ல அவருக்கு அனுதாப அலை வீச்ச் செய்ய ஐடியா கேட்குறாரு.

.......................................................

15. டாக்டர்.., மாலை கண் நோய்ன்னு சொல்றிங்க. ஆனா, கண் மஞ்சளா இருக்கே!
ஒருவேளை கா”மாலை” கண் நோயா  இருக்குமோ?!
..................................................................................
16. சதீஷ்.., உங்களுக்கு  தாடி வெச்சா நல்லா இருக்கும்.
மோஹனா! கழட்டி விடப் போறேன்னு ஓப்பனா சொல்லு. ஏன் சுத்தி வளைச்சு சொல்றே.

..................................................

17. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?! அழகான பொண்ணுங்களுக்கு “மூளை” சின்னதா இருக்கும், அழகில்லாத பொண்ணுக்கு “மூளை” பெருசா  இருக்கும்.

ஏன்?

குவாலிட்டி இருந்தா குவாண்டிட்டி இல்லை. குவாண்ட்டி இருந்தா குவாலிட்டி இல்லை.

..............................................................

18. காதும்.., காதும் வைத்ததுப்போல் வளர்வதால் தனோ “காதல்” எனப்படுகிறதோ!

..........................................................................................

19.லவ்வரோட தங்கை நமக்கு மிஸ்டுகால் விட்டா இந்த சமுதாயம் என்ன சொல்லும்?!

கண்ணா! இன்னொரு லட்டு திங்க ஆசையா?!

...................................................................................

20. அவள் விரல்பட்ட கோபத்தில் விழுந்துக் கிடக்கிறேன்.- கோலமாக.

3 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஓகே.

”தளிர் சுரேஷ்” said...

அப்படி ஒண்ணும் கேவலமா இல்லே! குட் ஜோக்ஸ்!

கி.ச.திலீபன் said...

சுமார்!!!!!!!!!!!!! இவையெல்லாம் நீங்கள் அனுப்பி பிரசுரத்திற்கு தேர்வாகாத ஜோக்குகள் என நினைக்கிறேன்.