Saturday, December 22, 2012

டெல்லி - குற்றம் நடந்தது என்ன? - மக்கள் கருத்து

ல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்தை அறிந்து...  ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துள்ளது. 'குற்றவாளிகளை பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்’ என்று நாடெங்கும் போராட்டம் நடக்கின்றன! 


தெற்கு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லுரியில் பிசியோதெரபி படித்த 23 வயது மாணவி அவர். பொறியாளரான தனது நண்பருடன் கடந்த 16-ம் தேதி சினிமா பார்த்து விட்டு, இரவு 9.30 மணிக்கு முனிர்கா பேருந்து நிலையத்தில் நின்றார். ஒரு பேருந்து வந்து நிற்கவே, இருவரும் அதில் ஏறினர். உள்ளே இருந்தது மொத்தமே ஆறு பேர். அவர்கள் அந்த மாணவியின் நண்பரிடம், 'இந்த நேரத்தில் ஒரு பொண்ணுகூட என்னடா பண்ற?’ என்று மிரட்டி இருக்கிறார்கள். உடனே, அந்தப் பெண் குறுக்கிட்டு, 'நாங்கள் நண்பர்கள். படம் பார்த்துவிட்டு வருகிறோம்’ என்று சொல்லவும் 'நீ பேசாதடி’ என்று இரும்புக் கம்பியால் தாக்கி இருக்கிறார்கள். அந்த ஆண் நண்பரையும் தாக்கி பேருந்தில் இருந்து அவரை வெளியே தள்ளினர்.
அடுத்து அவர்கள் செய்த காரியங்கள் கொடூரத்தின் உச்சம். அந்த மாணவியை இரும்புக் கம்பியால் பல இடங்களிலும் தாக்கவே, ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்தார். வலியால் துடித்த பெண்ணை அந்தப் பேருந்துக்கு உள்ளேயே வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், மஹில்பூர் என்ற இடத்தில் உள்ள மேம் பாலத்தில் பேருந்தை நிறுத்தி, அலங்கோலமாக்கி விட்டு அந்த மாணவியை வெளியே வீசி இருக்கிறார்கள். இப்போது, அந்த மாணவி டெல்லி சப்தர்ஜங் மருத்து​வ​மனையில் உயிருக்குப் போராடிக்​கொண்டிருக்கிறார். இந்தியாவின் தலைநகரத்தில் நடந்த இந்தச் சம் பவத்தைக் கண்​டித்து மொத்த நாடும் கனன்று கொண்டு இருக் கிறது.
இதுதொடர்பாக  வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம் சிங் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியது டெல்லி போலீஸ்,  அக்ஷய் குமார் மற்றும் ராஜு என்ற இரு​வரைத் தேடி​ வருவதாகக் கூறும் டெல்லி போலீஸார், வெளியிட்ட உண் மைகள் பகீர் ரகம்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 'யாதவ் டிராவல்ஸ்’ நிறுவனத்தின் பேருந்து, டெல் லியில் உள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியர்களையும் மாணவர்​களை​யும் ஏற்றிச்செல்லும் கான்ட்ராக்ட் பேருந்து. ராம் சிங் என்பவர்தான் கடந்த 10 மாதங்களாக அந்தப் பேருந்தின் ஓட்டுனராக இருந் தார். 16-ம் தேதி மாலை தன் நண்பர்கள் நால்வர் மற்றும் தனது தம்பி முகேஷ§டன் சேர்ந்து மது அருந்தியவர், பேருந்தை எடுத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ரவுண்ட் போகலாம் என்று கிளம்பி இருக்கிறார். பேருந்துக்காக மாணவி தன் நண்பருடன் காத்திருப்பதைக் கண்டதும், பயணிகள் பேருந்தைப்போல் நிறுத்தி, அவர்களை ஏற்றிக் கொண்டனர். நண்பரை அடித்து வெளியே எறிந்து விட்டு, மாணவியைப் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியை ஓட்டுனர் ராம் சிங் பலாத்காரம் செய்த போது, அவனுடைய தம்பி முகேஷ் பேருந்தை ஓட்டி இருக்கிறார். அந்த பஸ் கறுப்புக் கண்ணாடியுடன் இருந்ததால், உள்ளே நடந்த எதுவுமே வெளியில் யாருக்கும் தெரியவில்லை. மாணவியை வெளியே வீசிய பிறகு, பேருந்தை ஷெட்டுக்கு எடுத்துச்சென்று ரத்தக் கறைகளைத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, தலைமறைவாகி இருக்கிறார்கள்.
மாணவி சேர்க்கப்பட்டுள்ள டெல்லி சப்தர்ஜிங் மருத்துவ மனையின் டாக்டர் பி.டி.அதானி, ''அந்த மாணவியின் உடலில் பல முக்கிய உறுப்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னமும் செயற்கை சுவாசம்தான் அளித்து வருகிறோம். இதுவரை நான்கு அறுவைச் சிகிச்சைகள் செய்து இருக்கிறோம்.. இன்னும் சில அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டி இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர் உடல்நிலை இல்லை. அந்த ஆறு பேரும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். அவரது அடிவயிறு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னமும் ஐ.சி.யு-வில்தான் இருக்கிறார். இப்படி ஒரு மோசமான கேஸை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை'' எனக் கவலை தெரிவித்து இருக்கிறார்.


இந்த வழக்கை சூ-மோட்டாவாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், ''மக்கள் உங்கள் மீது வைத் திருக்கும் நம்பிக்கையை இழந்து விட்டனர். சம்பந்தப்பட்ட பேருந்து டெல்லியில் அனுமதி இல்லாத கறுப்பு நிற ஸ்டிக்கர், ஜன்னல் துணிகளுடன் சென்று இருக்கிறது. இந்தச் சம்பவம் நடக்கும்போது ஐந்து போலீஸ் செக் பாயின்ட்களை பேருந்து கடந்துள்ளது. நீங்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?'' என்று, டெல்லி போலீஸாரைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளது.


அனைத்துத் திசைகளில் இருந்தும் சரமாரியாகப் புகார்கள் குவியவே, ''கறுப்புக் கண்ணாடி, திரைகள் போட்டுள்ள பேருந் துகளை உடனே கண்காணித்து உரிமத்தை ரத்து செய்யுங்கள். இரவு ரோந்து போலீஸாரின் எண்ணிக்கையை பலப்படுத்துங்கள். புதிதாக ரோந்து வாகனங்களை வாங்குங்கள். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸாரை நியமியுங்கள்'' என்று அடுக்கடுக்கான சட்டங்களை உள்துறை விதித்துள்ளது.
2012-ல் மட்டும் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 635 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால், இதுவரை தண்டனை பெற்றதோ ஒரே ஒருவர்தான்.

எங்கே போகிறது இந்தியா... அதுவும் தலைநகர்?

- ஆ.அலெக்ஸ்பாண்டியன்


நன்றி - ஜூ வி 
 மக்கள் கருத்து 
1. எல்லாம் சரி.இரவில்,அதுவும் நண்பருடன் அந்தப்பெண் ஏன் திரைப் படத்திற்கு செல்லவேன்டும்? குற்றவாளிகள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு குற்றச்செயலில் ஈடுபட ஏன் வாய்ப்பு தர வேண்டும்? இதை யாருமே பேசமாட்டீர்களா?2. இது பிரச்சனை ஒன்று மட்டுமே இந்தியாவின் தலையாய பிரச்சனை அல்ல என்று மார்க்கண்டேய கட்ஜீ கூறி இருப்பது வருந்தத்தக்கது. இது போன்ற பிரச்சனை அவருக்கோ, அவரைச் சார்ந்தவர்களுக்கோ ஏற்பட்டிருந்தால்..... நெறியாளர் இதை வெளியிடுவார் என நம்புகிறேன்.3. உணர்ச்சி வசப்படாமல் நடந்ததை திரும்பி பார்க்கவேண்டும்.

1. அது ரெகுலர் பஸ் கிடையாது.

2. அந்த பஸ்ஸில் ரூட் நம்பர் இல்லை. செல்லும் இடமும் போடவில்லை.

3. அதை ஓட்டியவர்கள் சீருடை அணியவில்லை.

4. வண்டியில் வேறு பயணிகள் இல்லை.

5. வண்டியில் விதிகளுக்கு புறம்பாக கருப்பு கண்ணாடி ஓட்டப்பட்டுள்ளது.

6. முன்பின் அறிமுகம் இல்லாத சிலர் வாகனத்தில் ஏற அழைப்பு விடுத்தால் ஏறலாமா?

7. இரவு சினிமாவிற்கு செல்பவர்கள் திரும்பி வருவதற்கு வழி செய்யாமல் படம் பார்க்கலாமா?

8. ஞாயிற்று கிழமை பஸ் எண்ணிக்கை பாதி தான்.

9. ஆட்டோவிற்கு நூறு ரூபாய். டாக்ஸியிற்கு முன்னூறு ரூபாய் பையில் இல்லாமல் ஒரு பெண் இரவு சினிமாவிற்கு செல்லலாமா?

10. டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என்பது தெரிந்தும் இப்படி ரிஸ்க் எடுக்கலாமா?

11. அந்த பெண்ணிற்கு நடந்தது கொடுமையே. அந்த பெண் குணமடைய நாம் கடவுளை வேண்டுவோம்.

12. அந்த கயவர்களுக்கு தக்க தண்டனை வேண்டும்.

13. இங்கு நியூ யார்க் தலை சிறந்த ஊர். ஆனால் இரவு பத்து மணிக்கு மேல் ஆண்களே சில இடத்திற்கு செல்ல மாட்டார்கள். சென்றால் பர்ஸோட சேர்த்து கிட்னியும் போய்விடும்.

14. பெண்கள் முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். இடம் பொருள் நேரம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.
இது அனைவருக்கும் பொருந்தும்.
4. தயவு செய்து அந்த கயவர்களை சட்டென்று தூக்கில் போட்டுவிடாதீர்கள். தூக்கு தண்டணை எதிர்ப்பாளர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். கொஞ்ச நாள் வழக்கு நடந்து கொண்டிருந்தால், அந்த கயவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர்களை விடுவிக்க போராட ஆரம்பிப்பார்கள். உடனே நமது மென் மனதுக்காரர்கள் அவர்களை மன்னித்து விட முனைவார்கள். இவர்களுக்கெல்லாம், கோவையில் அந்த கைதிகளை அழைத்து சென்று என்கவுண்டரில் போட்டுத் தள்ளியது போல் செய்து விட வேண்டும். அதிலும் அனைவரையும் கொன்றுவிடக் கூடாது.......அடுத்தவர்கள் அந்த கொலை பயத்தில் சில நாட்களாவது இருந்து பின் சாகடிக்கப்பட வேண்டும். இப்போதைக்கு அவர்களின் விரல்களை மட்டும் வெட்டி விடலாம்.5. கறுப்புக் கண்ணாடி, திரைகள் பேருந்துகளில் போடுவது குற்றம் செய்வதற்கு அல்ல வெயிலில் பயணம் செய்பவர்களுக்கு அவதிப்படாமல் பயணம் செய்வதற்க்கு அதை விலக்குவதால் சாதரன மக்களுக்கு மட்டுமே பாதிப்பு எம்பி, மந்திரி, டிப்பளமாட், அதிகாரிகள் எல்லாருக்கும் கண்ணாடி, திரைகள் உள்ள வண்டிகளில் தான் எப்பொழுதும் பயணம் செய்கிறார்கள். பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போட்டால் குற்றங்கள் குறையும்.


6. இது மாதிரி ஆட்களுக்கு நம்ம சைலேந்திர பாபு தான் சரி.

இன்னொரு சந்தேகம்... ஒப்பந்த பேருந்துக்கும் சாதாரண பயணிகள் பேருந்துக்கும் வேறுபாடு கூடத் தெரியாமலா இந்த இருவரும் அந்தப் பேருந்தில் ஏறினார்கள்?


7. இந்தியாவுக்கு மானம்லா இருக்கா?

தருமபுரியில் 3 பெண்களை உயிரோடு கொளுத்திய தேசம் இது

பத்திரிக்கை அலுவலகத்திலே ஊழியர்களை கொளுத்திய தேசம் இது.

இது சூடு சொரணை அற்ற ஜட தேசம்.

இங்கு காசுக்கு மனசாட்சியை விற்று விட்டு , என் தலவன் சின்ன குற்றவாளி, உன் தலைவன் பெரிய குற்றவாளின்னு ஜால்ரா தட்டுற பயல்கள்தான் அதிகம்.8. 635 வழக்குகளில் ஒருவர் மட்டுமே சிறிய தண்டனை அடைந்துள்ளார் - இதுதான் இத்தனை கொடுமைகளுக்கும் அடித்தளம். குற்றத்துக்கு தண்டனை கிடைக்காது, கிடைத்தாலும் பல வருடங்களாகும், அதுவும் ஒரு சிறிய தண்டனையாகவே இருக்கும் என்று குற்றவாளிகள் நினைப்பதுவே அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படை. ஆனால் நம்மால் ஏன் நீதிமன்றங்கள் வருடத்தில் 150 நாட்கள், தினமும் 3 மணி நேரம் என்ற அளவில் செயல்படுகின்றன, கணக்கில்லா வாய்தாக்கள் வழங்க எப்படி அனுமதிக்கப்படுகின்றன என்று கேட்க முடியாமல் நீதிமன்ற அவமதிப்பு என்ற சட்டம். இந்தியா நாசமாவதில் மிக மிக மிக அதிகப் பங்கு நீதித்துறையையே சாரும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பற்றியே ஊழல் புகார்கள் வரும் பெரிய நாடு இந்தியா மட்டுமே.9. ஒரு சம்பவம் நடந்த பிறகுதான் நாஙகள் விழித்து க்கொள்வோம் என்பது நமக்கு வழக்கம் தானே.வெளி நாட்டு டூரிஸ்ட் கள் கதி கேக்கவே வேண்டாம். இந்தியா வரவே பயப்படும் நிலைதான்.10. டெல்லிய்ல் ஒரு பெண் கொடூரப்படுத்தப்பட்டார் என்றவுடன் எல்லா ஊடகங்களும் தங்களுக்குஒரு ஸ்கூப் கிடைத்திவிட்டது என அதை வைத்து தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். நாடாளுமன்ரத்தையே முடக்குகின்றனர். பல்லாயிரம் உயிர்கள்( விவசாயிகள், கூலிகள், மீனவர்கள், சாதி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள்) செத்தபோது கண்டுகொள்ளவில்லையே.

0 comments: