Monday, December 31, 2012

ஒரு அடங்காப்பிடாரியின் டைரியில் இருந்து


டுடே டைம்பாஸ@டி வி்
சின்ன வயசுல அட்வைஸ் பண்ணாத பெற்றோரே இல்லை, 1000 சொன்னாலும் நம்மாளு அதை காதுலயே போட்டுக்க மாட்டான், சட்டை பண்ணிக்க மாட்டான். சித்தன் போக்கு சிவன் போக்குன்னு சுத்துவான்.. இது லேடீஸ்க்கும் பொருந்தும்.. சின்ன வயசுல பேரண்ட்ஸ் என்ன சொன்னாங்க.. அப்போ நம்ம மனசு என்ன நினைச்சுது? ஒரு ஜாலி ஃபிளாஸ் பேக்


1.
உங்க ஆத்தா பிள்ளைய பெக்கச் சொன்னா தொல்லயப் பெத்து விட்டுருக்கா.


அன்புத்தொல்லைன்னு குழந்தையா இருந்தப்போ சொன்னீங்க?2. இந்த மாதிரி சோம்பேறியா இருந்தா வர்றவ நல்லா மொத்துவா, அப்போ தெரியும்


ஓஹோ, தாய்க்குப்பின் தாரம்னா இதானா? மேரேஜ் ஆகறவரை அம்மா கிட்டே அடி, ஆன பின் சம்சாரம் கிட்டே அடி, ஆனாலும் ஆண் பாவம்


3. ஏழு கழுத வயசாகுது இன்னும் படுக்கையில ஒன்னுக்கு போயிகிட்டு இருக்க நீயெல்லாம் எங்க உருப்பட போற


ஒரு கழுதையோட ஆயுள் ஆவரெஜா 10 வருஷம்னு வெச்சாக்கூட  70 வயசாகுதா? எனக்கு?4. இப்படியே பண்ணிட்டு இருந்தேனா உன்ன எவனும் கூட சேத்துக்க மாட்டாங்க


நான் என்ன கூட்டணீக்கட்சியா நடத்தப்போறேன்?5. இப்பப் புரியாது, உன் பிள்ளை நாளைக்கு இப்படிப் பண்ணும் போது தான் தெரியும்!"


நாளைக்கு நடக்கறதை நாளைக்கு பார்த்துக்கலாம், இப்போ நடப்பது அஜித்தின் பில்லா 2, வா போலாம்-------------------------------------------


6. டாடி மம்மின்னு சொல்லு

  பெரியவங்களை டா - டி போட்டு பேசக்கூடாதுன்னு சொல்லிட்டு டாடின்னு சொல்லச்சொன்னா எப்படி?

7. எனக்குன்னு வந்து பொறந்து இருக்கு பாரு, தருதல


பத்து தலை ராவனனையே தறுதலைன்னு சொன்ன  தேசம் தானே இது?ஒரு தலையை சும்மா விட்றுமா?8. மாடு மேய்க்க கூட லாயக்கில்ல...

 மாடு மேய்க்கிறது என்ன அவ்ள லேசான விசயமா? ஓடி ஓடி போகும் தெரியுமா?9. தோசைக்கரண்டிய அடுப்புல வெக்கப்போறேன்


ஓக்கே ஓக்கே தோசையை என் வாய்ல வைக்கப்போறேன்10. உன்னப் பெத்ததுக்கு ஒருமூட்ட அரிசியப் பெத்துருக்கலாம்" பொங்கியாச்சி தின்றுப்போம்...


எப்போ பாரு திங்கறதுலயே இருங்க----------------------------------------


அநியாயங்கள் செய்த 2012 யை
அனைவரும் சேர்ந்து வழிஅனுப்பி வைப்போம் ...
போதும் போ 2012டே ... share this ...
போதும் போ 2012டே ...

இவன் ===> @[256612747698514:274:கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர்
 )]
11. தல வாருனதுக்கு அப்புறம் சீப்பை க்ளீன் பண்ணிவைன்னு எத்தனை வாட்டி சொல்றது.


சீப்பை க்ளீன் பண்ற அளவு நான் சீப்பா போய்ட்டேனா?


12. உதவி செய்யலைன்னாலும் பரவாயில்ல, தொந்தரவு செய்யாம இரு


கேட்ட பாக்கெட் மணீயை குடுத்துட்டா நான் ஏன் தொந்தரவு பண்ணப்போறேன்?13. சின்ன வயசுல நான் எவ்ளோ வேலை செஞ்சேன் தெரியுமா?


யாருக்குத்தெரியும்? யார் வந்து பார்த்தாங்க? நான் கூட என் பையன் கிட்டே இதே டயலாக் விடலாம் போல..
14. நான் இங்க பேசிட்டே இருக்கேன் , அங்க நீ கவனிக்காம என்னடா பண்ற


 பக்கத்து வீட்டு ஃபிகரை கரெக்ட் பண்ணிட்டு இருக்கேன்


15. நாளைக்குக் கல்யாணம்ஆகி போற வீட்டுல, உன்னைக் குத்தம் சொல்ல மாட்டாங்க இப்படி வளர்த்துருக்காங்களேன்னு என்னை தான் சொல்வாங்க


 என்னமோ செடிக்குத்தண்ணி ஊத்துன மாதிரி பேசறீங்களே, நானா வளர்ந்தேன்


--------------------------------------------

16. உன்னயப் பெத்ததுக்குப் பதிலா ஒரு அம்மிக்கல்லப் பெத்துருக்கலாம்... க்ர்ர்ர்ர்.


 நார்மல் டெலிவரி கஷ்டம், சிசேரியன் தான்


17. IAS படிப்பான்னு சண்முகவேலுன்னு பேர் வச்சோம் கெரகம் 10வது தாண்டல.


டென் த் ஃபெயில்னு நெகடிவ்வா திங்க் பண்னக்கூடாது, ஒன்பதாங்கிளாஸ் பாஸ்னு பாசிட்டிவா பேசனும்

18. இவன் நல்லவன் தான் # கூட உள்ள பயக தான் இவன கெடுத்திருப்பாணுக

 ஆமா, கன்னிப்பெண்ணு , கெடுத்துட்டாலும்?

19. அந்த காலத்துல நாங்க எப்படி இருந்தோம் தெரியுமா


நம்ப மாட்டேன்.. ஃபோட்டோ காட்டு


20. நீ இதுகெல்லாம் லாயக்கில்லை. ஊர் சுத்துரதுக்குத்தான் லாயக்கு.


 ஜனாதிபதியே ஊர் தான் சுத்தறார்.. மாசம் ஒன்றரை லட்சம் ரூபா சம்பளம் வேற
----------------------------------


வெண்பூக்கள் பூக்கும் காலம், நாளை எனது நாள்...!
வெண்பூக்கள் பூக்கும் காலம், நாளை எனது நாள்...!21. உன் வயசைத் தாண்டித் தான்டா நாங்களும் வந்திருக்கோம் 


 தெரியுதல்ல, கிளம்பு கிளம்பு காத்து வரடும்.. ஆல் ஓவர் த வேல்டு அப்பன்ச எல்லாம் வெப்பன்ச வெச்சுத்தான் டீல் பண்ணனும் ..


22. எதுத்த ஊட்டுப்புள்ள மார்க் என்னான்னு கேட்டியா! அது மூத்திரத்த தெனம் ஒரு டம்லர் வாங்கிக் குடி!


நீங்களே தான் சொன்னீங்க எதிர் வீட்டுப்பொண்ணையெல்லாம் பார்க்கக்கூடாதுன்னு , பார்க்காமயே எப்படி இதை எல்லாம் கேட்க முடியும்?23. போகும் போது எங்க போறேன்னு சொல்லிட்டுப் போறதில்ல ... இதுக்கெல்லாம் எப்ப புத்தி வரப்போகுதோ


எனக்கே தெரியாது, போஸ்டர் பார்த்துதான் முடிவு பண்ணனும்24. உம்புள்ள என்ன காரியம் செஞ்சுட்டு வந்து நிக்கிதுன்னு பாரு


சரி , சேர் குடுங்க உக்காந்துக்கறேன்25. டிவி பாத்துகிட்டே சாப்ட்டு தொலையாத

 ம்க்கும், நீங்க மட்டும் சீரியல் பார்க்கலாம், நான் மேட்ச் பார்க்கக்கூடாதா?------------------------------------------

26. உன்ன நம்பி எந்த பொண்ணடா கட்டி வைக்குறது?


 நீங்க ஒண்ணும் கட்டி வைக்க வேணாம்.. நாங்களே பார்த்துப்போம்


27 எப்படித்தான் இந்த சத்ததிலேயும் இப்படி கும்பகர்ணன் மாதிரி இவ்வளவு நேரமா தூங்க முடியுதோ?

 நாங்க எல்லாம்  தியேட்டர்ல டமால் டுமீல் சவுண்ட்லயே  தூங்குனவங்க28. ஏண்டா இளச்சுட்டே போறே?கொடுத்து விடுற லன்ச்சை சாப்பிடுறியா இல்ல ஃப்ரண்ட்ஸ்ட கொடுத்துடுறியா?


காதல் ஏக்கம் தான், சொன்னா புரியாது29. ஏன்டா உன் ஸ்கூல்ல இன்னுமா ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டு குடுக்கல


 பிராகரஸ் கார்டு பிரிண்ட்டுக்கு குடுத்திருக்காங்க, இன்னும் வர்லை


30. 4 கிமீ நடந்தே போய் படிச்சு ஃபஸ்ட் க்லாஸ்ல பாஸ் பண்ணேன்டா


ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணீங்க, ஓக்கே செகண்ட் கிளாஸ்ல, தார்ட் கிளாஸ்ல ஃபெயில் தானே?
----------------------------------
இனிய காலை வணக்கம் நண்பர்களே...