Friday, December 28, 2012

கோழிகூவுது

http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-prn1/c0.0.403.403/p403x403/537640_316794115103466_872665832_n.jpg

கோழிவிற்ற தனது அனுபவத்தைக் கதையாக்கி ஒரு சமுகப்பிரச்சினையுடன் அசோக் -சிஜா ரோஸ் மூலமாக ஒரு அற்புதமான காதல் கதையைக் கோர்த்துச் சொல்ல வந்திருக்கிறார் கோழிகூவுது இயக்குனர் ரஞ்சித்.டிசம்பர் 28 இல் படம் வெளீயாக தேதி குறிக்கப்பட்டிருக்கும் நிலையில் சினிமாவில் தான் சந்தித்த பழைய கசப்பான அனுபவங்களை மறந்து மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளார் கோழிகூவுது இயக்குனர் ரஞ்சித். 
பண்ருட்டி அருகில் இருக்கும் சிருவத்தூர்ங்கிற கிராமத்திலிருந்து சினிமாவிற்குப் புறப்பட்டு வந்தவர் ரஞ்சித்.  தனது சிறிய வயதில் பிழைப்புக்காகச் செங்கல் சூளையில் வேலைபார்த்திருக்கிறார். ஏன்.. கோழிக்குஞ்சு வியாபாரம் கூட செய்திருக்கிறார். அதில் சேர்த்தை காசை சென்னையில் உதவி இயக்குனராகனும்னு பலபேர்கிட்ட இழந்திருக்கிறார். கேட்கவே கஷ்டமா இருக்குல்ல… உதவி இயக்குனர்களிடம் காசு பிடுங்கித் தின்று உடம்பை வளர்க்கும் வீணாப்போன இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதே அருவருக்கத் தக்க விஷயம்தான்.
படங்களில் வேலை செய்தும் அவருடைய பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதில் மிகவும் ஒடிந்து போயிருந்த ரஞ்சித் தனது  பூர்வீகத் தொழிலான கோழிக்குஞ்சு வியாபாரத்தையே  களமாக்கி, கூடவே ஒரு அழகான காதலைச் சேர்த்து கோழி கூவுது படத்தினை இயக்கி முடித்திருக்கிறார். இதன் கதையைக் கேட்ட தயாரிப்பாளர் ஏ.நாகராஜன் உடனே ஒத்துக் கொண்டு பட வேலைகளை ஆரம்பித்ததை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த ரஞ்சித்திடம் படத்தினைப் பற்றி சிறிது உரையாடினோம்.

http://www.mysixer.com/wp-content/uploads/2012/12/Kozhi-Koovuthu-Press-Meet-Stills-8.jpg


படத்தின் கரு என்ன ..? உங்க கோழி நாட்டுக்கோழியா..? அல்லது `ஈமு` கோழியா..?புரிந்து கொண்டு உஷாரான ரஞ்சித்,`அட ஏங்க நீங்கவேற… பத்திரிக்கைகள்ல ஈமு கோழியோட விளம்பரம்தான் பார்த்திருக்கேனே தவிர, அதை நான் நேர்லகூட பார்த்தது கிடையாது. படம் ஆரம்பிச்சு பாதி ஷூட்டிங் முடிஞ்சா சமயத்துலதான், அந்தப்பிரச்சனையே ஆரம்பமாச்சு!. ஆனாலும், இதுல கோழிக்குஞ்சு வியாபாரத்துல நடக்கிற மோசடியைச் சொல்லியிருக்கேன். 
நானே இதைப் பதிவு பண்ணியிருக்கக்கூடாதுதான்!. இருந்தாலும், மக்களுக்கு சொல்லிடலாம்னு தோணுச்சு. ஏன்னா, நான் நூறு ரூபாய்க்கு பத்து கோழிக்குஞ்சுகளைக் கொடுக்கிறேன்னா, ரெண்டு, மூணு நாள்லேயே செத்துப்போயிரும்!. அந்தப்பாவத்தை நாம சம்பாதிக்கனுமா?ன்னு தோணுச்சு. அதனாலதான் இந்தக்கதையை கையிலெடுத்தேன்!. அதனால கோழிக்குஞ்சு வியாபாரிகளோட வாழ்வியல் கொஞ்சம் பாதிக்கப்படலாம்னு தோணுது. இருந்தாலும், எங்களுக்கு வேற வழி இல்லைங்கிறதையும் கொஞ்சம் அழுத்தமா பதிவு பண்ணியிருக்கேன்..பாவத்தைப் போக்கக் காசு செலவுபண்ணிக் காசி ராமேஸ்வரம்னு போவாங்க… நீங்க என்னடான்னா  செஞ்ச பாவத்தைப் படம் பண்ணி காசாக்கிட்டீங்க…சிரிக்கிறார்….


http://www.indiancinemagallery.com/Gallery2/d/882139-1/Kozhi+Koovuthu+stills+_76_.jpgமாஸ் ஹீரோக்கள்  என்று முடிவுசெய்யாமல் வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருப்பவர்களை வைத்துப் படம் செய்ததன் நோக்கம்..?வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பவர்கள்தாம் ஈசியாக  உடன் வருபவர்களையும் கைகொடுத்து அழைத்துச் செல்வார்கள்… வெற்றியின் சிகரத்தில் இருப்பவர்கள் அப்படி செய்யமாட்டார்கள் என்பதல்ல… அவர்களுக்கும் நமக்குமான தூரம் அதிகமாக இருக்கும் அதுதான் பிரச்சினை…(ரொம்ப கவனமாத்தான் பேசுறாரு ) அத்துடன் இளம் நடிகர்கள் என்றால் அவங்களுக்குள்ள இருக்கிற திறமையை வெளியே கொண்டு வந்துடணும்ங்கிற சுதந்திரம் நமக்கு இருக்கும்… அப்பொழுது தான்  இயக்குனரா நாமளும் ஜெயிக்க முடியும். படத்தோட ஹீரோ அசோக், ரோகினி மேடம்கூட நடிச்ச ஒரு சீனுக்கு ஒரே டேக்ல மூணு பக்க வசனம் பேசுனாரு!. தவிர, வில்லனா நடிச்சிருக்கிற போஸ் வெங்கட், ரோகினி மேடம், புதுமுக ஹீரோயின் சிஜா ரோஸ். எல்லாருமே  அவங்களோட பங்களிப்பை, கொஞ்சம் அதிகமாவே கொடுத்திருக்காங்க!சில்க்ஸ்மிதாவின் ‘கோழி கூவுது’ படத்திற்கும், இந்தப்படத்திற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா?படத்துக்கு முதல்ல ‘கோழி’ன்னுதான் தலைப்பு வச்சிருந்தோம்!. ஆனா, அது வேற ஒருத்தருடைய தலைப்புங்கிறதுனால பயன்படுத்த முடியலை.. அப்புறம் தான் ‘கோழி கூவுது!’ என்று பெயர் வைத்தோம், நேரா… கங்கை அமரன் சார்கிட்ட போய் நின்னோம்!. படத்தோட கதையைக் கேட்ட அவர் முழு மனசோட சம்மதிச்சு ‘சந்தோஷமா பயன்படுத்திக்கோ’ன்னு பாராட்டுனாரு. அவருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும். அதேசமயம், அவருடைய ‘கோழி கூவுது’க்கும் இந்தப்படத்துக்கும் சம்மந்தம் கிடையாது! தமிழ் ரசிகர்கள் ரொம்ப நாளைக்கு முன்பு பார்த்து ரசித்த கிராமத்துக் காதலை அழகா சொல்லியிருக்கேன்!”படத்துல அசோக் எந்தக் கோழியை அதிகம் விரட்டுகிறார்..?ஆஹா… படம் டிசம்பர் 28 வெளியாகி இருக்கிறது… அப்புறம் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்…இப்போ கோழியை..சாரி ஆளை விடுங்க… என்று எஸ்கேப் ஆகிறார்.


 http://www.cinemahour.com/gallery/events1/moviestills/Kozhi%20Koovuthu%20Movie%20Latest%20Stills/76276704Kozhi-Koovuthu-Movie-Stills-62.jpg


 கங்கை அமரனின் கோழி கூவுது படம் பற்றி ஒரு சுவராஸ்யமான சம்பவம் ‎1983-ஆம் ஆண்டு திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தி.மு.கவிடம் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆளும் அ.தி.மு.க தோல்வியடைந்திருக்கிறது.இந்த நிலையில் கங்கை அமரனை தனது அலுவலகத்திற்கு வரச்செல்லியுள்ளார் எம்.ஜி.ஆர். எதற்காக அழைத்துள்ளார் என்ற விபரம் தெரியாமல் அங்கு சென்றுள்ளார் கங்கை அமரன். மந்திரிகள் சூழ அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் " கோழிகூவுது படத்துல நம்ம ஊரு இப்ப ரொம்ப கெட்டுப்போச்சு"ன்னு ஏதோ பாட்டு எழுதுனியாமே" என்று கங்கை அமரனிடம் கேட்டிருக்கிறார். வெலவெலத்துப்போன கங்கை அமரன், "படத்தின் காட்சிக்குத்தான் அந்த மாதிரி எழுதினேன், மத்தபடி வேற எதயும் மனசுல வச்சிக்கிட்டு எழுதலண்ணே" என்று கூறி இருக்கிறார். இருந்தாலும் சமாதனமடையாத எம்.ஜி.ஆர் "ஏதோ தெரிஞ்ச பையன் அப்படிங்கிரதுனால விடுறேன், இனிமே இந்த மாதிரி எழுதாத" என்று எச்சரித்து அனுப்பியுள்ளார்.


எம்.ஜி.ஆரின் கடும் கோபத்திற்கு காரணம் எதிர்க்கட்சியினர், "நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுண்ணே..ஒன்னரையனா காய்கறிய ஒன்னாரூவா ஆக்கிப்புட்டாங்க" என்று போஸ்டர் அடித்து பிரச்சாரம் செய்ததுதான்.இதை தன்னுடைய பத்திரிகை, தொலைகாட்சி என்று அத்தனை பேட்டியிலும் கூறி இருக்கிறார் கங்கை அமரன் .
 http://www.cinemahour.com/gallery/events1/moviestills/Kozhi%20Koovuthu%20Movie%20Latest%20Stills/3670635Kozhi-Koovuthu-Movie-Stills-45.jpg
நன்றி - கையளவு உலகம் ,  மை சிக்சர்.காம்

0 comments: