Wednesday, December 12, 2012

சி.பி செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ் பாகம் 31. அந்த பாகவதர் ஏன் கண்ணை மட்டும் மூடிக்குறார்?

வாயை மூடிக்கிட்டா பாட முடியாதே! அதான் கண்ணை மட்டும் மூடிக்குறார்.

......................................................................

நிபந்தனையற்ற ஆதரவு தர்றேன். ஆனா ஒரு நிபந்தனை.

பார்த்தீங்களா? இப்பவே கண்டிஷன் போட ஆரம்பிச்சுட்டீங்களே!

…………………………………………………….

3.நெற்றிக் கண்ணேனு தலைவரை பாராட்டுனாங்களே!

அது அப்போ..., இப்போ ஊழலின் ஊற்றுக்கண்ணேன்னுதான் ஏசுறாங்க.

.............................................................

4. எனக்கு ஒரு வித்தியாசமான மெசேஜ் வந்துச்சு. பிறகு செல், தானா ஆஃப் ஆகிடுச்சு.

அடடா..., என்ன மெசேஜ் அது?

பேட்டரி லோ.( BATTERY LOW.)

...............................................................

5. நிரூபருக்கு கிஃப்டா தலைவர் எதுக்கு வேட்டியை தர்றார்?

பேட்டி எடுக்க வந்தவருக்கு வேட்டி தந்த வேந்தர்ன்னு பேர் எடுக்கத்தான்.

............................................................

6.மோஹனா நீதான் என் மனைவியா வருவேன்னு முதல்லயே எங்க ஸ்கூல் வாத்தியாருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு.

எப்படி சொல்றீங்க?

மாடு மேய்க்கத்தான் நீ லாயக்குன்னு அடிக்கடி சொல்லுவாரு.

......................................................................
 7. தலைவரே! நீங்க மீன், நண்டு, கோழி சாப்புடுறதை நிறுத்தனும்ன்னு டாக்டர் சொல்லிட்டாரே!

அட போப்பா..., நான் சொல்லுறதை என் சம்சாரமே கேக்குறதில்லை. மீன், நண்டு, கோழிலாம் எப்படி கேக்கும்?

...........................................................

8. உன் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பேரை செல்லுல ஸ்டோர் பண்றப்ப ஏர்செல் கவிதா, பி.எஸ்.என்.எல் காஞ்சனா, டாடா டொக்கோமோ பிந்துன்னு எழுதியிருக்கியே ஏன்?

அவங்ககிட்ட இருந்து எதாவது மெசேஜ் வந்தாக்கூட செல் இன்பாக்ஸ்ல ஏர்செல், பி.எஸ்.என்.எல், டாடா டொக்கோமோ, இப்படித்தான் காட்டும். என் மனைவி படிக்க மாட்டா.

.............................................................................

 9. சார் ஆஃபீஸ் விட்டு வந்ததும் உங்க வீட்டு ஜன்னல், கதவு எல்லாத்தையும் சாத்திடறீங்களே ஏன்?!

என் மனைவி என்னை சாத்துறது கேக்க கூடாதுன்னுதான்.
............................................................

10 அத்தான் சொர்க்கம், நரகம் ரெண்டுத்துக்கும் வித்தியாசம் என்ன?

மச்சினி விருந்தாளியா வந்தா அது சொர்க்கம்..., கூடவே மாமியாரும் செக்யூரிட்டிக்கு வந்தா அது நரகம்.


.................................................

11. வீடுகளின் சுவர்களில் வரைய அனுமதியில்லை- தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
அதுக்காக தலைவரோட சின்ன வீட்டோட முதுகுல கட்சி சின்னத்தை பச்சை குத்தி விளம்பரம் பண்ணானுமா?!
...........................................................

12. LKG ஸ்டூடண்ட் 1 : நேத்து கிளாஸ் ரூம்ல வச்சு ஒரு சப்பை ஃபிகர் என்னை கிஸ் பண்ணிட்டா.
LKG ஸ்டூடண்ட் 2: அடடே! நம்ம கிளாஸ் மிஸ் மோஹனாக்கிட்ட சொல்ல வேண்டியதுதானே!?
LKG ஸ்டூடண்ட் 1: என்னை கிஸ் பண்ணதே அந்த சப்பை ஃபிகர்தாண்டா.

..........................................................

13. அவர் அம்மா கட்சின்னு எப்படி சொல்றே.

 மஞ்சள் கலர்ல இருக்குன்னு  போஸ்ட் கார்டு போஸ்ட் கார்டே யூஸ் பண்றதில்லையாம்.
.........................................................

14. டாக்டர்! என் மனைவுக்கு நாக்கு நீளம்.

விட்டுத்தள்ளுங்க. கை நீளம்ன்னாத்தான் பயப்படனும்.

......................................................
15. ஜட்ஜ்: தீர்ப்பு சொல்லுறதுக்கு முன்னாடி நீ எதாவது சொல்ல விரும்புறியா?

கைதி: யுவர் ஆனர்! என் ஃபெர்ஃபாமன்சுக்கு உங்க ஸ்கோர் எவ்வளவுன்னு சொன்னா சந்தோசப்படுவேன்.

................................................................................

16.உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணை லவ் பண்றதா என்கிட்டயே சொல்லுவே?!

அப்போ சிறந்த தைரியசாலின்னு பாராட்டி உங்க பொண்ணை தரப்போறீங்களா மாமா?!
..................................................

17. தலைவர் அதிகமா டி.வி பார்ப்பார் போல-ன்னு எப்படி சொல்றே?!

அவருக்கும், மகளிர் அணித்தலைவிக்கும் பாடி கெமிஸ்ட்ரி எப்படி இருக்குன்னு கேட்டு கருத்து கணிப்பு நடத்த சொல்லி இருக்கார்.

.........................................................
18. பேடு பாய்ஸின் டெண்டா டெம்பிள் ஆகிடக் கூடாது...,

அது வேற ஒண்ணுமில்லை. கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிடக்கூடாதுங்குற டயலாக்கின் ரீமிக்ஸாம்.

.............................................................

19. தலைவரோட செல்போன்ல காலர் டியூனா என்ன வெச்சிருக்காரு?

அது தெரியலை.., ஆனா, அவர் கரகாட்டக்காரி காஞ்சனாவை வெச்சிருக்குறது மட்டும் தெரியும்.
...................................................

20.நம்ம கட்சிக்கூட எந்த கூட்டணி சேருதோ அது வெற்றிக் கூட்டணி.

சேரலைன்னா?
வெட்டிக் கூட்டணி.

1 comments:

விஸ்வநாத் said...

எல்லா ஜோக்கு எப்பவு படிக்கற ஜோக்ஸ் மாதிரி தா இருக்கு,
பின்ன இதுக்கு மட்டு எப்படி நீங்க 'கேவலமான' என்று தலைப்பு போடலாம். ?