Thursday, December 20, 2012

தமிழ் சினிமா வில் புளித்துப்போன ”சீன்கள் ”

 கொச்சின்ல பொழுது போகாத பொம்முன்னு ஒரு ட்வீட்டர் இருக்காரு, அவர் ட்விட்டர் ஹேண்டில் கனல் கண்னன், சுருக்கமா கனல்,அவருக்கு பார்ட் டைம் ஜாப் ஆஃபீஸ் ஒர்க், ஃபுல் டைம் ஜாப் ட்விட்டர்.  நேத்து வழக்கம் போல என்ன டேக் போடலாம்ன்னு மண்டைய சொரிஞ்சுட்டு இருந்திருக்காரு . சாயங்காலம் கே டிவில 5 மணிக்கு "கங்கா கவிரி " நம்ம ஐ. லியோனிநடிச்ச படம் தான்.. ஓடிட்டு இருந்திருக்கு..


அதுல ஒரு சீன்ல அருண் பாண்டியனையும் வடிவேலுவையும் ஒரு நாய் தொரத்திருக்கு ,  அண்னன் யோசிச்சிருக்காரு . இன்னும் எத்தன படத்துல தான் ஹீரோ/காமடியான நாய் தொரத்துராப்ல சின் வைப்பானுவன்னு ... 
அப்ப உதிச்ச டேக் தான் #RepeatedScenes ... ஒடனே ஒரு டிவிட்டு போட்டாரு ,
ஹிரோக்கள நாய் தொரத்துற சீன் #RepeatedScenes

டேக் காட்டு தீ மாதிரி  பத்திகிச்சு.. 

அதில் என் பார்வையில் எனக்கு பிடித்த சில டிவிட்டுகள் பகிர்கிறேன்.1.  ஹீரோவா நடுவுல விட்டு ஜிம் பாய்ஸ் சுத்தி சுத்தி வர்றது (,மியூசிக்கல் சேர் போட்டியாடா நடக்குது? )


2.   ஹீரோ கடைசி சீன் ல வில்லனை ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு கூப்பிடறது ( ஹாலிவுட்லயே இப்போ அப்டித்தான் )

3.   சாலை ஓரத்தில் ஒன்ஸ் அடிக்கிறவன் பைக்க கொள்ளைக்கார வில்லனை பிடிக்க ஹீரோ திருடிட்டு போறது ( அவன் பைக்ல சைடு லாக் , மெயின் லாக் எதுவும் போட்டிருக்க மாட்டான், பெப்பரப்பேன்னு விட்டிருப்பான் )

:4.  கதாநாயகிகள் அப்பா கிட்ட அடி வாங்கிட்டு பெட்ல போய் விழுந்து அழுவுறது  ( முதுகு மட்டும் குலுங்கும் ஹி ஹி )
5.  பார்ல வேலை செய்யும் சின்ன பையனை குடிக்க வந்த அல்லக்கை அடிக்கிறது  ( காண்டா மிருகம் மாதிரி இருப்பான் )

6.  ரேப் சீன் முடிஞ்சு புலி மானை பிடிச்சு கடிக்கிற போஸ்டர காமிக்கிறது  ( அசைவக்காட்சின்னு சிம்பாலிக்கா டெல்லிங்காம்)
7 ஹீரோயினுக்காக ஒரே நாளில் பல வித்தைகளை கற்றுத் தேறும் ஹீரோ.. ( தத்திக்கு ஒரு வித்தை கூட தெரியாது )

:8 தாடி, மீசை, மரு மூலமே ஹீரோ மாறுவேடத்தில் வந்தாலும் யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது! ( ஹேர் ஸ்டைலை மாத்திட்டா  அவங்கப்பாவே வந்தாலும் கண்டு பிடிக்கமுடியாதாம், அடேய் )


வசதிக்கேற்ப நம்பவே முடியாத இடத்தில் கதாநாயகனும் நண்பர்களும் கலாய்க்க ஒரு டீ கடை உருவாக்குவது ( அந்தகக்டையை ஒரு மொக்கை ஃபிகர் குரூப் கிராஸ் பண்ணிப்போகும் )
10 பீரங்கி வச்சி சுட்டாலும் ஹீரோ மட்டும் குண்டு படாம தப்பிகிறது ( புல்லட் புரூஃப் டிரஸ் போட்டிருந்தாக்கூட கொஞ்சம் குண்டு பாயும் , ஆனா இவங்க மேல எதுவும் படாது )


 11  ஹீரோவும் அவர் பின்னால் கதைக்கு தொடர்பே இல்லாதவங்க ஒரு 50 பேரும் ஒரே ஸ்டெப் டான்ஸ் ஆடுறது  ( முன் வரிசைல இருக்கறவங்க  டேன்ஸ் மாஸ்டர் கிட்டே அட்ஜஸ் பண்ணி போறவங்களாம் ) 


12 பத்து ரூபாய் மாமுல் கேட்டது தப்புன்னு மொத்த மார்க்கெட்டையே காலிபண்ணினாலும் ஜனங்க ஹீரோவை வாழ்த்தறது ( காய்கறி எல்லாம் மேலே 1 கி மீ ஆகாயத்துல பறக்கும் )

13  நிஜத்தில் ஈவ டீசிங்கில் புழலுக்குள்ளே போகவேண்டியவனைப் பார்த்து ஹீரோயினுக்குக் காதல் மலர்வது! ( பார்க்கப்பிச்சைக்காரனாடம் தாடியோட குளீக்காத தலையோட பல்லே துலக்காத கபோதி மாதிரி இருப்பான் )


14  பலபேரு அருவா கத்தி வச்சிருந்தாலும் ஹீரோவ ரேசன் கடைல வர்ற மாதிரி ஒருஒருத்தனா போயி அட்டாக் பண்றது..( ஒட்டுக்கா எல்லாரும் போனா ஹீரோ குட்டு வெளிப்பட்டுமே? )


15  தங்கச்சி கற்பிழக்கும் பொழுது ஊர் சுத்தப் போயிட்டு ஹீரோயினை மட்டும் நேரத்துல போய் காப்பாத்துறதுஹீரோ  ( ஹீரோயின் மேல வில்லன் கை படும்போது கரெக்ட்டா கன் மாதிரி வந்து காரியத்தை கெடுப்பாரு )


16  ஹீரோயின் மறுமணம் புரிந்தாலும் கன்னித் தன்மை மாறாமல் இருப்பது! ( ஃபிளாஸ்பேக்ல முதல் இரவுலயே புருஷன் ஹார்ட் அட்டாக்ல செத்திருப்பான் )


17. விஷம் கலந்த பாலை பாம்பு கரெக்டாக தட்டி விட்டு ஹீரோயினை காப்பாற்றுவது! ( நாய்க்குத்தான் மோப்ப சக்தின்னா பாம்புக்குமா? ) 

18  புடலங்காய்ன்னு நெனச்சி பாம்பை எடுத்து கழுத்துல போட்டுக்கிட்டு காமெடின்னு சொல்லி கடுப்பேத்துரது ( இதுவரை 200 படங்கள்ல இது வந்தாச்சு )


19.  ஹீரோ ஒரே ஒரு குத்து தான் விடுவார், ஆனா 10 அடியாளுங்களூம் 20 டைரக்‌ஷன்ல போய் விழுவாங்க ( அதுக்கு பேக் கிரவுண்ட்ல  ஒரு பண்ணாட்டான மியூசிக் வேற )


 20. நீங்க பேசனதை எல்லாம் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்னு உள்ள வரது ( ஒட்டுக்கேட்டுட்டு வியாக்கியானம் என்ன வேண்டிகிடக்கு? ) 


21. ஹீரோ மிலிட்டரிலேர்ந்து ஊருக்கு வரும்போது கண்டிப்பா யூனிபார்மோடத் தான் வருவாரு!
22 அடிபட்ட கேரக்டருக்கு கரெக்டா இடது (அ) வலது நெற்றியோரம் மட்டும் லேசா ரத்தம் வரும். 

23  ஹீரோவுக்கு ஜெயில்ல எப்பவுமே ஃபேன்ஸி நம்பர்தான் 
24.  பர்ஸ்ட்நைட்டுல விளக்குஅனச்சிட்டு இருட்டை மட்டுமே காட்டுறது 

 25. எவ்வளவு நேரம் இருந்தாலும் டைம்பாமை 00:01 செக்கண்ட்லையே டிப்யூஸ் பண்ணுரது


 26. கன்னத்துல மரு வைச்சுகிட்டு வில்லன் கூட்டத்துக்கு போய் அவங்கள புடிக்கிற ஹிரோ 


27. பொடலங்காய்க்கு பதிலா பாம்ப வாங்கீட்டு கம்பீரமா போறது!! 

28. சரியா க்ளைமாக்ஸ்லே போலீஸ் வர்ரது 
:29.  பாதி ரேப் ஓடிட்டு இருக்கும் போது ஹீரோ வந்து காப்பாத்தறது

30.   வில்லன் ரேப் பண்ணி முடிச்சதும் வாயத் துடைக்கிறது..31  ஹீரோ கோட்ட குளிர்ல நடுங்கி சாகிற ஹீரோயன்க்கு போர்த்தி விடுறது


 32 ஒண்ணுமே நடக்கலன்னாலும் ஒலக சாதனையா காட்ட தலைய கலச்சு பூவ பிச்சு விட்டுட்டு கதவை தொறக்கும் முதலிரவு காட்சிகள்¡ 


33  எப்பவுமே ஹீரோவ நேரா காட்டவே மாட்டாங்க ! கேட்டா ஹீரோ இன்ட்ரோவாம் டேய் !!! 


34  மாமுல் வசூல் பண்ண வர்ற ரவுடிங்ககிட்ட எலும்பும்தோலுமா இருக்கிற தள்ளுவண்டி வியாபாரி, யாவாரம் இல்ல. காசு இல்லைன்னு சொல்லுறது!


35  கார்த்திக் என்று எல்லா ஹீரோக்கும் பெயர் வைத்து நம்ம பிராணனை வாங்குவது 


36 . மணிக்கட்டை பிடிச்சு பார்த்தே ஹிரோயின் ப்ரெக்னென்ஸி ரிப்போர்ட் குடுக்கற ஒரு கிழவி கேரக்டர்


 37  அம்மா சமையல் செய்யும் போது ஹீரோயின் வாந்தி எடுத்ப்பது 

38 இனிமே 24 மணிநேரம் கழிச்சு தான் எதுவும் சொல்ல முடியும்னு ஸ்திர டயலாக்கோட ஒரு டாக்டர்

39.  வாட்சை கழட்டி வச்சுட்டு சண்டைக்கு ரெடியாவரது 


40. காமெடியன்கள் அடிவாங்கி மக்கள சிரிக்க வைக்க ட்ரை பண்றது....

41 சொந்த கதை மாதிரியே எடுக்குறது 
42  காதல் திருமன ஜோடியின் முன் எம்டி VIP சூட்கேஸை விட்டெறியும் அப்பா. அந்த சூட்கேஸும் வேணாம் என சொல்லும் மகன். 

 43  அறிமுக பாடல்ல ஹீரோ ஒரே ஃபிரேம்ல அஞ்சா வர்றது


44. டாபர் ஹனி பாட்டிலில் லேபிலை கிழித்துவிட்டு விஷமாக காட்டுவது


45   வில்லனோட பையன ஹிரோ கடத்துறது..


46 ஒரே  ஒரு பாட்டில 3 நிமிஷத்துல ஹீரோ  பணக்காரன் ஆறது 47. ஃபைட் சீன்ல மண்பானை, காய்கறீ வண்டி எதுனா ஓரமா இருந்தா அடியாட்கள் அது மேல போய் விழுறது. 
48. டிவின்ஸுனா அட்லீஸ்ட் ஒரு சீன்லயாவது மீட் பண்ண வைக்கிறது..
49. ஹீரோயின் கரக்ட் டைம்ல காப்பாத்துற ஹீரோ.. ஆனா தங்கச்சிய கோட்ட விடுறது.. 
50. அடியாளா வர்றவன் ஹீரோ சும்ம ஒரு தட்டு தட்டுனாலே மூணு ரவுண்டு அடிச்சு டைவ் அடிச்சு விழுறது 
51. முதல் காட்சில ஹீரோ பிறக்கும் போது அம்மாவ கொன்னுட்டே பொறக்குறது..
52  ஹாஸ்பிட்டல் சீன்களில் நர்ஸுகளை ஒரண்ட இழுக்கும் ஹீரோ/காமடியன்ஸ் 
53. ராமராஜன் ஃபைட் சீன்ல நீட்டா டக்கின் பண்ணி ஷூ எல்லாம் போட்டு ஃபைட்டுறது. 


54. மக்கள் க்ரவுட்ல எப்பவும் ஒரு சொட்ட மண்ட.. இடிச்சபுளி செல்வராஜ் .. 
55. அம்மன் படங்கள்ல புருஷன காப்பாத்த ஹீரோயின் க்ளைமாக்ஸ்ல ஒரு டான்ஸ்
56. அர்ஜுன் படங்கள்ல பிரதமர் இந்தி பேசுவர்.. தீவிரவாதி தமில் பேசுவான்..
57. கோர்ட் சீன்ல கண் தெரியாதவர கண்ணால் பாத்த சாட்ச்சியா காட்டுறது.

 ந்ன்றி  - அனைத்து ட்வீட்டர்ஸ்

@kavi_rrsk
 ஹீரோவா நடுவுல விட்டு ஜிம் பாய்ஸ் சுத்தி சுத்தி வர்றது #RepeatedScenes
@urs_priya
  ஹீரோ கடைசி சீன் ல வில்லனை ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு கூப்பிடறது.#RepeatedScenes
@Elanthenral
  சாலை ஓரத்தில் ஒன்ஸ் அடிக்கிறவன் பைக்க கொள்ளைக்கார வில்லனை பிடிக்க ஹீரோ திருடிட்டு போறது #RepeatedScenes
கதாநாயகிகள் அப்பா கிட்ட அடி வாங்கிட்டு பெட்ல போய் விழுந்து அழுவுறது #RepeatedScenes
@kasaayam
 
பார்ல வேலை செய்யும் சின்ன பையனை குடிக்க வந்த அல்லக்கை அடிக்கிறது #RepeatedScenes
@kasaayam
 ரேப் சீன் முடிஞ்சு புலி மானை பிடிச்சு கடிக்கிற போஸ்டர காமிக்கிறது #RepeatedScenes
@iThamilachi
 ஹீரோயினுக்காக ஒரே நாளில் பல வித்தைகளை கற்றுத் தேறும் ஹீரோ.. #RepeatedScenes
தாடி, மீசை, மரு மூலமே ஹீரோ மாறுவேடத்தில் வந்தாலும் யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது!#RepeatedScenes
@chinnapiyan
 வசதிக்கேற்ப நம்பவே முடியாத இடத்தில் கதாநாயகனும் நண்பர்களும் கலாய்க்க ஒரு டீ கடை உருவாக்குவது #RepeatedScenes
@naanavarillai
 
பீரங்கி வச்சி சுட்டாலும் ஹீரோ மட்டும் குண்டு படாம தப்பிகிறது #RepeatedScenes
@SeSenthilkumar
 ஹீரோவும் அவர் பின்னால் கதைக்கு தொடர்பே இல்லாதவங்க ஒரு 50 பேரும் ஒரே ஸ்டெப் டான்ஸ் ஆடுறது #RepeatedScenes
@SeSenthilkumar
 பத்து ரூபாய் மாமுல் கேட்டது தப்புன்னு மொத்த மார்க்கெட்டையே காலிபண்ணினாலும் ஜனங்க ஹீரோவை வாழ்த்தறது #repeatedscenes
 நிஜத்தில் ஈவ டீசிங்கில் புழலுக்குள்ளே போகவேண்டியவனைப் பார்த்து ஹீரோயினுக்குக் காதல் மலர்வது!#RepeatedScenes
@Athikapprasanki
 பலபேரு அருவா கத்தி வச்சிருந்தாலும் ஹீரோவ ரேசன் கடைல வர்ற மாதிரி ஒருஒருத்தனா போயி அட்டாக் பண்றது...#repeatedscenes
 தங்கச்சி கற்பிழக்கும் பொழுது ஊர் சுத்தப் போயிட்டு ஹீரோயினை மட்டும் நேரத்துல போய் காப்பாத்துறதுஹீரோ #RepeatedScenes
 ஹீரோயின் மறுமணம் புரிந்தாலும் கன்னித் தன்மை மாறாமல் இருப்பது! #RepeatedScenes
@amas32
விஷம் கலந்த பாலை பாம்பு கரெக்டாக தட்டி விட்டு ஹீரோயினை காப்பாற்றுவது! #RepeatedScenes
@su_boss2
 புடலங்காய்ன்னு நெனச்சி பாம்பை எடுத்து கழுத்துல போட்டுக்கிட்டு காமெடின்னு சொல்லி கடுப்பேத்துரது #repeatedscenes
@itisprashanth
 10 rowdies flying in different directions because of one punch from the hero!! #repeatedscenes
@thoatta
 நீங்க பேசனதை எல்லாம் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்னு உள்ள வரது #RepeatedScenes
@RavikumarMGR
 ஹீரோ மிலிட்டரிலேர்ந்து ஊருக்கு வரும்போது கண்டிப்பா யூனிபார்மோடத் தான் வருவாரு!#RepeatedScenes
@iParisal
 அடிபட்ட கேரக்டருக்கு கரெக்டா இடது (அ) வலது நெற்றியோரம் மட்டும் லேசா ரத்தம் வரும். #RepeatedScenes
 ஹீரோவுக்கு ஜெயில்ல எப்பவுமே ஃபேன்ஸி நம்பர்தான் #RepeatedScenes

@Rjcrazygopal
 எனக்கும் அப்படித்தான் பண்ணினாங்க சீரியல் ல RT : @rkthiyagarajan
 பர்ஸ்ட்நைட்டுல விளக்குஅனச்சிட்டு இருட்டை மட்டுமே காட்டுறது #RepeatedScenes
 எவ்வளவு நேரம் இருந்தாலும் டைம்பாமை 00:01 செக்கண்ட்லையே டிப்யூஸ் பண்ணுரது #RepeatedScenes
@maghizchi1
 கன்னத்துல மரு வைச்சுகிட்டு வில்லன் கூட்டத்துக்கு போய் அவங்கள புடிக்கிற ஹிரோ #RepeatedScenes
@sudhanks
 பொடலங்காய்க்கு பதிலா பாம்ப வாங்கீட்டு கம்பீரமா போறது!! #RepeatedScenes

@mayan212012
 சரியா க்ளைமாக்ஸ்லே போலீஸ் வர்ரது #repeatedscenes
@santhozn
 ன்னாச்சு…… #RepeatedScenes

: பாதி ரேப் ஓடிட்டு இருக்கும் போது ஹீரோ வந்து காப்பாத்தறது #RepeatedScenes
  வில்லன் ரேப் பண்ணி முடிச்சதும் வாயத் துடைக்கிறது.. #RepeatedScenes

@talkativewriter
 ஹீரோ கோட்ட குளிர்ல நடுங்கி சாகிற ஹீரோயன்க்கு போர்த்தி விடுறது #repeatedscenes
@jannal_seat
 ஒண்ணுமே நடக்கலன்னாலும் ஒலக சாதனையா காட்ட தலைய கலச்சு பூவ பிச்சு விட்டுட்டு கதவை தொறக்கும் முதலிரவு காட்சிகள்¡ #Repeatedscenes
@santhozn
 எப்பவுமே ஹீரோவ நேரா காட்டவே மாட்டாங்க ! கேட்டா ஹீரோ இன்ட்ரோவாம் டேய் !!! #RepeatedScenes
@kaattuvaasi
 மாமுல் வசூல் பண்ண வர்ற ரவுடிங்ககிட்ட எலும்பும்தோலுமா இருக்கிற தள்ளுவண்டி வியாபாரி, யாவாரம் இல்ல. காசு இல்லைன்னு சொல்லுறது! #RepeatedScenes
@talkativewriter
 கார்த்திக் என்று எல்லா ஹீரோக்கும் பெயர் வைத்து நம்ம பிராணனை வாங்குவது #repeatedscenes
@maghizchi1
 மணிக்கட்டை பிடிச்சு பார்த்தே ஹிரோயின் ப்ரெக்னென்ஸி ரிப்போர்ட் குடுக்கற ஒரு கிழவி கேரக்டர்#Repeatedscenes
@alaigal2
 அம்மா சமையல் செய்யும் போது ஹீரோயின் வாந்தி எடுத்ப்பது #Repeatedscenes
@vivek_here
 தினம் இவரு--> @0SGR
 எதாவது டேக் போடுறது.. #repeatedscenes
@maghizchi1
 இனிமே 24 மணிநேரம் கழிச்சு தான் எதுவும் சொல்ல முடியும்னு ஸ்திர டயலாக்கோட ஒரு டாக்டர்#RepeatedScenes
@RenugaRain
 வாட்சை கழட்டி வச்சுட்டு சண்டைக்கு ரெடியாவரது #
repeatedscene
@Athikapprasanki
காமெடியன்கள் அடிவாங்கி மக்கள சிரிக்க வைக்க ட்ரை பண்றது....#repeatedscenes
: தமிழ் சினிமா!#RepeatedScenes
@sudhagarcyru
சொந்த கதை மாதிரியே எடுக்குறது #RepeatedScenes
@jnfr88
காதல் திருமன ஜோடியின் முன் எம்டி VIP சூட்கேஸை விட்டெறியும் அப்பா. அந்த சூட்கேஸும் வேணாம் என சொல்லும் மகன். #RepeatedScenes
 அறிமுக பாடல்ல ஹீரோ ஒரே ஃபிரேம்ல அஞ்சா வர்றது
@jnfr88
டாபர் ஹனி பாட்டிலில் லேபிலை கிழித்துவிட்டு விஷமாக காட்டுவது #RepeatedScenes
@pesubavan
 வில்லனோட பையன ஹிரோ கடத்துறது..#REPEATEDSCENES
@SelvaaRocky
 ஒரு பாட்டில பணக்காரன் ஆறது #RepeatedScenes

இனி  கனல் போட்டது. ஹிஹி 

ஃபைட் சீன்ல மண்பானை, காய்கறீ வண்டி எதுனா ஓரமா இருந்தா அடியாட்கள் அது மேல போய் விழுறது. #RepeatedScenes
டிவின்ஸுனா அட்லீஸ்ட் ஒரு சீன்லயாவது மீட் பண்ண வைக்கிறது..#RepeatedScenes
ஹீரோயின் கரக்ட் டைம்ல காப்பாத்துற ஹீரோ.. ஆனா தங்கச்சிய கோட்ட விடுறது.. #RepeatedScenes
அடியாளா வர்றவன் ஹீரோ சும்ம ஒரு தட்டு தட்டுனாலே மூணு ரவுண்டு அடிச்சு டைவ் அடிச்சு விழுறது #RepeatedScenes
முதல் காட்சில ஹீரோ பிறக்கும் போது அம்மாவ கொன்னுட்டே பொறக்குறது..#RepeatedScenes
ஹாஸ்பிட்டல் சீன்களில் நர்ஸுகளை ஒரண்ட இழுக்கும் ஹீரோ/காமடியன்ஸ் #RepeatedScenes
ராமராஜன் ஃபைட் சீன்ல நீட்டா டக்கின் பண்ணி ஷூ எல்லாம் போட்டு ஃபைட்டுறது. #repeatedscenes
ஆரிசு செயராசு பாட்டெல்லாம் ..... ஹஹஹஹஹ்ஹா.. #repeatedscenes
மக்கள் க்ரவுட்ல எப்பவும் ஒரு சொட்ட மண்ட.. இடிச்சபுளி செல்வராஜ் .. #repeatedscenes
அம்மன் படங்கள்ல புருஷன காப்பாத்த ஹீரோயின் க்ளைமாக்ஸ்ல ஒரு டான்ஸ் #repeatedscenes
அர்ஜுன் படங்கள்ல பிரதமர் இந்தி பேசுவர்.. தீவிரவாதி தமில் பேசுவான்.. #repeatedscenes
கோர்ட் சீன்ல கண் தெரியாதவர கண்ணால் பாத்த சாட்ச்சியா காட்டுறது.. #repeatedscenes


கிளைமாக்ஸ் : @TrendsChennai
 
#repeatedscenes
 is now trending in #Chennai


2 comments:

Kesavan Markkandan said...

58. ஹீரோ சாகப்போறான்னு நினைச்சு கிளைமாக்ஸ் -ல எல்லா உண்மையையும் சொல்லறது... -------துப்பாக்கி வரை...

YESRAMESH said...

டீக்கடைல எப்பவுமே ஒரு மலையாளப்பொன்னு முண்டோடு எல்லாரையும் ஏக்கமா பார்க்கிறது