Friday, September 21, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 21.9.2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://123tamilforum.com/imgcache2/2012/09/Saattai-1.jpg 

1.சாட்டை -  "மைனா" படத்தை தொடர்ந்து ஷாலோம் ஸ்டூடியோஸ் சார்பில் இயக்குனர் பிரபுசாலமன் வழங்க ஜான்மேக்ஸ் தயாரிக்கும் படம் "சாட்டை"

இதில் கதை நாயகனாக சமுத்திரகனி, இளம் நாயகனாக யுவன் நடிக்கின்றனர். கதாநாயகியாக மகிமா அறிமுகமாகிறார். மற்றும் தம்பி ராமய்யா, கோபி பீம்சிங் இவர்களுடன் பள்ளி மாணவ-மாணவிகள் 500 பேர் நடிக்கிறார்கள்.சமுத்திரகனி பள்ளி ஆசிரியராக வருகிறார். அதற்கான சிறப்பு பயிற்சியாக தனக்கு தெரிந்த ஆசிரியர்களிடம் சில விஷயங்களை கேட்டறிந்துள்ளார். யுவன் நடிப்பு பயிற்சியுடன், உடற்பயிற்சியிலும் அக்கறைக்காட்டி நடித்திருகிறார். 


பிரபல இயக்குனர் பீம்சிங் மகன் கோபி பீம்சிங் முதன் முறையாக நடிகராக களம் இறங்குகிறார். இப்படத்திற்கான கதைக்களம் பள்ளியை அடிப்படையாகக் கொண்டது என்பதால் ஒவ்வொரு பள்ளிக் கூடத்திற்கும் போய் அங்கு நடப்பவற்றை காட்சிகளாக் குகின்றனர்.


ஜீவன், ஒளிப்பதிவு செய்ய, இமான்  இசையமைக்கிறார். கதை திரைக்கதை, வசனம், எழுதி டைரக்ஷன் செய்கிறார் அன்பழகன்.


 ஈரோடு தேவி அபிராமி ,சண்டிகாவில் ரிலீஸ்

http://www.adrasaka.com/2012/09/blog-post_7166.html
விமர்சனம் படிக்க
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4tDUZ24wqeI1wZ90oslh7ixGXOMrO7w_CWm2EVKPsRxQ2z_RPlb1qc2ykmbAnZKv2oyH-TdrCOsz5MDNzEtlSUCOQzmpSiutTxnhAsPaJU-xIkfigLyxTYvzJ19qYUSxfXUScnqPS-_k/s1600/0.jpg


2.  சாருலதா - கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சாருலதா படம் தமிழில் அதேபெயரில் ரீமேக் ஆகிறது. இதில் ஒட்டிபிறந்த இரட்டை பிறவிகளாக நடிகை ப்ரியாமணி நடிக்கிறார். குளோபல் ஒன் ஸ்டுடியோ புரோடக்ஷன் சார்பில் ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி தயாரிக்கும் இப்படத்தை கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பொன்குமரன் இயக்கவுள்ள இப்படத்திற்கு யோகனந்த். எம்.வி பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர் சி பாபு இப்படத்திற்கு இசை அமைக்கிறார். 


தாய்லாந்து படமான ‘அலோன்’ என்ற படத்தின் இன்ஸ்பிரேஷனில் இது உருவாக்கப்படுகிறது.  


ஈரோடு அபிராமி, ஸ்ரீ அன்னபூரணி யில் ரிலீஸ்

http://www.adrasaka.com/2012/09/blog-post_7975.html
விமர்சனம்
 http://2funbd.com/wp-content/uploads/2012/08/heroine-hindi-movie.jpg

HEROINE -முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் புதிய படமொன்றில் நிர்வாணமாக நடிக்க உள்ளார். ஹீரோயின் என்ற பெயரில் பிரபல இயக்குநர் மதுர் பந்தர்கர் இயக்கும் படத்தில்தான் அம்மணியை முழுமையாக தரிசிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு வயது சற்று தெரிந்தாலும் அழகும், நளினமும் குறையவில்லை. இருந்தாலும் ஏஜ் பேக்டர் பயம் ஐஸ்வர்யாவை தொற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. கரீனா, கத்ரீனா, தீபிகா, பிரியங்கா, சோனம் கபூர், சோனாக்ஷி என நீண்டு செல்கிறது பாலிவுட்டின் சின்ன சிட்டுகளின் பட்டியல். இவர்களுடன் போட்டாப் போட்டி போட மாஜி உலக அழகி அந்தஸ்து மட்டும் போதாது, அதுவும் வயது ஏறிக் கொண்டே போகும் போது...! எனவே தான் தனது புதிய படத்தில் ஐஸ்வர்யா அதிரடியாக நிர்வாணமாக தோன்ற சம்மதித்திருப்பதாக பாலிவுட் வட்டாரம் சலசலக்கிறது.

முன்னதாக இந்தப் படத்திற்கு தேசிய விருது புகழ் இயக்குநர் மதுர் பந்தர்கர் கரீனா கபூரைத்தான் ஒப்பந்தம் செய்ய இருந்தார். ஆனால் நிர்வாண காட்சியா... அய்யய்யோ என்னால முடியாது... என கரீனா கபூர் ஓட்டம் பிடித்ததால், ஐஸ்வர்யாவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். முதலில் நிர்வாண காட்சியில் நடிக்க தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க சம்மதித்துள்ளார்.

அப்படியென்ன கதை? அங்கேதான் விவகாரமே இருக்கிறது. ஹீரோயின் என்ற தலைப்பு கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க ஒரு நடிகை சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எப்படி எல்லாம், யார் யாரையெல்லாம் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது என்பது பற்றிதான்.  ஏற்கனவே இதுபோன்ற கதையம்சங்களுடன் ஒருசில படங்கள் வெளியான போதிலும், அவற்றிலெல்லாம் இலைமறை காயாகத்தான் இதுபோன்ற அந்தரங்க காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் முதன் முதலாக இந்த படத்தில்தான் திரையுலகின் மறுமுகம் தெரியப் போகிறது என்பது கூடுதல் தகவல்.

கதைக்கு பொருத்தமாகத்தான் நிர்வாண காட்சிகள் இருக்கும்; எதையும் மிகைப்படுத்தி காட்ட மாட்டேன் என்று கூறியிருக்கும் டைரக்டர் மதுர் பந்தர்கருக்கு கண்டிப்பாக திரைத்துறையில் இருந்தே எதிர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் எதிர்த்தால் என்ன... ரசிகர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பார்களே... கலையுலகின் அழகுச்சிலையை நிர்வாணமாக காட்டுவதற்கு!!

ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipfj-5srS3yHDD6pyxJx09O75-C4Eiw87WKQUah_6SgNd2jrQTJkbOEIftubjPo7J-zfzNsIy-UrwGErRmzHnxglodfwC1xcVSeTpm4L98Dc_SR2e_X5xjH_-_LtOZbEGwjgDU0BPxO24/s1600/don-seenu-dvd-2010.jpg
4.don seenu telugu movie - ரவி தேஜா நடிச்ச பழைய படம் 2010 இல் ரிலீஸ் ஆனது. இப்போ தான் இங்கே வருது
5.DREDD ட்http://www.themesdownload.org/wp-content/uploads/Dredd-2012-1200x1920TD-1.jpgA


ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ் 

2 comments:

குரங்குபெடல் said...

"முன்னதாக இந்தப் படத்திற்கு தேசிய விருது புகழ் இயக்குநர் மதுர் பந்தர்கர் கரீனா கபூரைத்தான் ஒப்பந்தம் செய்ய இருந்தார். ஆனால் நிர்வாண காட்சியா... அய்யய்யோ என்னால முடியாது... என கரீனா கபூர் ஓட்டம் பிடித்ததால், ஐஸ்வர்யாவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். முதலில் நிர்வாண காட்சியில் நடிக்க தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க சம்மதித்துள்ளார். "


தர்மத்தின் தலைவன் சிபி வாழ்க . . .

ஷாஜி said...

Heroine film heroine is karina not aish.