Wednesday, September 05, 2012

கலைஞர், அன்னா ஹசாரே ஒரு ஒப்பீடு பார்வை ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ் )

1.நித்யானந்தாவுடன் ரஞ்சிதாவும் யாத்திரை சென்றது தெரியாது-மதுரை ஆதீனம் # முக்காலும் உணர்ந்தவர் நீங்க, ரதி யாத்திரை கூட தெரியல, ஷேம் ஷேம்--------------------------------2. நாட்டை குட்டிச்சுவர் ஆக்குவது சுனாமி, ஆட்சியை குட்டிச்சுவர் ஆக்குவது  அரசியல்வாதிகளின் பினாமி---------------


3. பொண்ணுங்க புத்திசாலிங்க, ஆனா அதை வெளில காட்டிக்க மாட்டாங்க, ஆண்கள் முட்டாள்கள், சொல்லாமயே எல்லாருக்கும் அது தெரிஞ்சுடும் ;-0 -----------------------------


4.ஈரோடு, கோவை, சென்னை போன்ற நகரங்களில்  12 நாள்நடக்கும் புத்தகத்திருவிழாவுக்கு டெயிலி வர்றவன்


1. நிறைய புக்ஸ் ஓசிலயே படிச்சுடறான்


2.ஆல் ஏரியா ஃபிகர்ஸை அட்டெண்டன்ஸ் எடுத்துடறான்============================


5. நிருபர் -பாஸ்போர்ட்டை முடக்கிட்டாங்க, என்ன செய்யப்போறீங்க? நித்தி - அது என் கைக்கு வரும் வரை இந்தியப்பெண்களை மட்டும் கவனிப்பேன்


--------------------------------------
6.  பல முறை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து  சரித்திரம் படைத்த நாயகர்கள்


1 . டாக்டர் கலைஞர்


 2. அன்னா ஹசாரே 
----------------


7. இந்தியர்கள் இண்டோர் கேமில் இணையற்றவர்கள், அதனால் தான் ஒலிம்பிக்கில் அவுட்டோர் கேமில் கவனம் செலுத்த முடியவில்லை ;-0--------------------------


8. டியர், நீ சீக்கிரம் டிரஸ் பண்ணிட்டு கிளம்பு, நீ ரெடி ஆகறதுக்குள்ளே நான் ஆஃபிஸ்க்கு போய்ட்டு சாயங்காலம் சீக்கிரமா வந்துடறேன் #  லேட்பிக்கப்லேகா-----------------------------------


9. உங்க டைம் நல்லா இல்லைனா ஜாதகம் பார்க்காதீங்க , முதல்ல வாட்சை பாருங்க, அதை கரெக்ட் பண்ணுங்க   # எ கீ-------------------


10. I WILL CORRECT = நான் சரி பண்ணிடறேன் , நான் கரெக்ட் பண்ணிடறேன் = ஃபிகரை கரெக்ட் பண்ணிடறேன் # தமிங்கிலீஷ் வாழ்க 

--------------------11. ஒலிம்பிக்கில், விளையாட்டில் மட்டும் ஆர்வம் உள்ளவர்கள் தான் இன்று நீச்சல் போட்டியை பார்ப்பாங்கன்னு சொல்லிட முடியாது, ஹி ஹி -------------------------------


12. ராகிங்க் = ராவா அடிக்கறதுல சுத்துப்பட்டு வட்டாரத்துல கிங்க் = ”ரா” கிங்க்----------------------------13. மக்கள் என்னை அவ்வளவு லேசில் சாக விட்டுவிட மாட்டார்கள்!'' - அன்னா ஹசாரே # சித்திரவதைப்படுத்தி?---------------------------

14. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே, மது விற்பனை உள்ளது!''
- குமரி அனந்தன்   # காங்க்”கிரேசி” பியூப்பிள்----------------------------


15.ஏய்! மிஸ்டர், உனக்கு சென்ஸ் ஆஃப் ஹியூமர் கிடையாதா?எவன் சொன்னது? நீங்க சும்மா 2 லைன் பேசுங்க,  உடனே சிரிப்பேன் ;-0 # கி கி கீ


------------------------------------
16. எங்க ஆஃபீஸ் பொண்ணுங்க அவங்க டிஃபன் பாக்ஸை ஸ்டோர் ரூம் பீரோவுக்கு பின்னால ஒளிச்சு வெச்சிருக்காங்க, ஜாக்கிரதையா இருக்காங்களாம் ;-0----------------------------------


17. பொண்ணுங்க பசங்களை டா போட்டுக்கூப்பிட்டா அவன் கோபப்படாம  புளகாங்கிதப்படறான்,ஆனா பசங்க டி போட்டு கூப்பிட்டா பொண்ணுங்க பொங்கிடறாங்க #டா ,டி


----------------------------------

18. ஈழ தமிழருக்காக தூக்கமின்றி பாடுபடுபவர் கருணாநிதி - கனி #  குழப்பாதீங்க, ஸ்டாலின் ஈழத்தமிழரா?---------------------------

19. சோழா பூரி, சோளக்கருது ( சோளக்கதிர்) இதெல்லாம் சோழ பரம்பரைகள் வழித்தோன்றல்கள் தான் சாப்பிடனுமா?
-------------------


20. டேமெஜர் - இந்த டகால்டி வேலை எல்லாம் செய்யாதே!மீ - போங்க சார், நான் இன்னும் என் வேலையையே செய்யலை ;-0----------------------------------------

1 comments:

Unknown said...

பினாமி , நித்தி , உண்ணா விரதம் , ஈழத்தமிழர் மிகவும் ரசிக்கத்தக்கது . ஆமை படம் சிறு குழந்தை சிரிப்பு அருமை . நன்றி