Wednesday, September 05, 2012

THE 13TH FLOOR -ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://movies.maxupdates.tv/wp-contents/uploads/2010/01/The-Thirteenth-Floor.jpg 

ஒரு கணிணி விஞ்ஞானி தன் ஆராய்ச்சில புதுசா ஒண்ணு கண்டு பிடிக்கிறார்..அப்போ அவர் உதவியாளர் பக்கத்துல இல்லை.  தன்னோட கண்டு பிடிப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதறார்.. அப்போ யாரா தன்னை நோட் பண்றாங்க.. ஃபாலோ பண்றாங்க அப்டினு ஒரு உள் உணர்வு..உடனே நேரா தான் வழக்கமா போகும் ஒரு நைட் கிளப்க்கு போறார். அங்கே இருக்கும் பேரர் ஒருவர்ட்ட ஒரு கவரை கொடுத்து  தன் பேரை சொல்லி யாராவது இந்த கவரை கேட்டா கொடுத்துடுன்னு சொல்லிட்டு போறார்.. 


 முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஒரு ஆள் கிட்டே அந்த மாதிரி ஒரு ரகசியத்தை ஒப்படைக்கலாமா?ன்னு நானும் யோசிச்சேன்.. அதுக்கு காரணம் சஸ்பென்சான ட்விஸ்ட்டா பின்னால வருது.. அந்த கவரை நாம எதிர்பார்த்த மாதிரியே அந்த சர்வர் பிரிச்சு படிச்சுடறான்.. கம்ப்யூட்டர் சயிண்ட்டிஸ்ட்டோட பி ஏ தான் நம்ம ஹீரோ.. 


 மர்ம நபரால் அந்த சயிண்ட்டிஸ்ட் கொலை செய்யப்படறார்.. கொலை செய்யப்பட்ட  நபரோட கோட் பாக்கெட்ல ஹீரோவோட பேரும் அவர் விசிட்டிங்க் கார்டும் இருக்கு.. இன்னும் பல பாதகமான அம்சங்கள் அவருக்கு எதிரா சாட்சியா இருக்கு.. போலீஸ் ஹீரோவை கொலையாளின்னு சந்தேகப்படுது.. 


பிரைவேட் டிடெக்டிவ் ஹீரோவை விசாரிக்கறார்.. அப்போ  ஒரு 70 மார்க் ஃபிகர் ஒண்ணு வருது.. கொலை செய்யப்பட்ட  சயிண்ட்டிஸ்ட்டோட பொண்ணுன்னு தன்னை சொல்லிக்குது.. ஆனா அந்த சயிண்ட்டிஸ்ட் கிட்டே பி ஏ வா பல வருஷம் வேலை பார்த்த ஹீரோவுக்கோ , மற்றவங்களுக்கோ அவளைப்பற்றித்தெரியல.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJuTpEex1xUXucF8OClJep65wXs4LMwo4GElV-Yf6YYul-klnw1VCAigsI5faQP9Sgyi9lvJqb6UKunGb2BdTZkz_RX1bBc8bTaSdUJ9wD1rpPZXXC0mLcVtfFpNxIoVbvdE3DEOGX9Q/s400/The+Thirteenth+Floor.jpg


சயிண்டிஸ்ட் கிட்டே கவரை வாங்கின பேரர் போலீஸ்ல சாட்சி சொல்றாரு.. அதாவது ஹீரோவும், சயிண்ட்டிஸ்ட்டும் சந்திச்சாங்க.. கொலை செய்யப்படறதுக்கு கொஞ்ச நேரம் முன்பு இருவரும் சந்திச்சாங்கன்னு சொல்லிடறார்.. இது போதாதா? போலீஸ்க்கு.. அவரை கைது பண்ணுது. இந்த இடத்துல அந்த சயிண்ட்டிஸ்ட் எந்த மாதிரி ஆராய்ச்சி செஞ்சார்னு பார்க்கலாம்..  ஆங்கிலத்துல சொன்னா virtual reality (VR) simulation.

நம்ம ஊர்ல அந்தக்காலத்துல முன்னோர்கள் சொல்வாங்களே கூடு விட்டு கூடு பாய்தல்.. அது மாதிரி.. இப்போ உதாரணத்துக்கு ராவணன் சீதையை அடைய ராமன் மாதிரி வேஷம் போட்டுட்டு அல்லது ராமர் உருவத்துல போனான். ராமர் உருவம் வந்ததும் அவர் மனசும் ராமர் மாதிரி அடுத்தவங்க மனைவியை மனதாலும் நினைக்காத தன்மை வந்துடுச்சுன்னு சொல்வாங்களே..  அதுக்கு நேர் எதிர்.. 


 அதாவது  இப்போ உங்களுக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராயை கிஸ் பண்ண ஆசை.. ஆனா அபிஷேக் வந்தா மட்டும் தான் அவர் அதுக்கு ஓக்கே சொல்வார்.. நீங்க என்ன பண்றீங்க. வெர்ச்சுவல் ரியாலிட்டி மூலமா அபிஷேக் உருவத்துல போய் மேட்டரை முடிச்சுட்டு வந்துடறீங்க.. உருவம் தான் அவருது.. மனசு, எண்ணம், செயல்பாடுகள் எல்லாம் உங்களுது.. 


 இந்த ஆராய்ச்சில தான் அந்த சயிண்ட்டிஸ்ட் வின் பண்ணி இருக்கார்.. . 


இந்த கொலைக்கேஸ் விசாரணை நடந்துட்டு இருக்கும்போது அந்த சயிண்ட்டிஸ்ட்டோட மகள் ஒரு குண்டைத்தூக்கி போடறா.. அதாவது அவ மேரேஜ் ஆனவ்.. ஆனாலும் தன் அப்பாவின் பி ஏவான ஹீரோவை வை ஒன் சைடா லவ்வி இருக்கா.. மனசுக்குள்ளே.. அது அவ புருஷனுக்கு பிடிக்கல.. எந்த புருஷனுக்குத்தான் அது பிடிக்கும்..? 


அதனால அவ புருஷன் தான் ஹீரோவை   மாட்டி வைக்க கொலை செஞ்சிருப்பாரோ அப்டினு சந்தேகப்படறா.. 

என்ன நடக்குது? யார் தான் உண்மையான குற்றவாளி? என்பதெல்லாம் மிச்ச மீதிக்கதை.. க்ளைமேக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் உண்டு..  


 http://www.movie-roulette.com/photos_big/the-13th-floor-2-1.jpeg


 படம் ரிலீஸ் ஆன  கால கட்டம் 1999. கதை நடக்கும் கால கட்டம் 1990.. கொலை விசாரணை எல்லாம் முடிஞ்சு படம் முடியறப்போ 2024.. அது போக ஹீரோ பேக் டூ பாஸ்ட் ட்ராவல் பண்றது   1937

 அதனால படத்தோட முதல் ஹீரோ ஆர்ட் டைரக்டர் தான்.. அசால்ட்டா ஒர்க் பண்ணி கை தட்டல் வாங்கிக்கறார்..

Daniel F. Galouye.  என்னும் நாவல் ஆசிரியர்  எழுதிய நாவலான Simulacron-3 (1964) கதையை பேஸ் பண்ணி எழுதப்பட்ட திரைக்கதை,,. இயக்குநர் Josef Rusnak


 படத்தோட பெரும்பாலான சம்பவங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்ல, கலிஃபோர்னியாவுல நடக்குது,.,. நல்லா ரவுண்ட் அடிச்ச திருப்தி..


ஹீரோ ஆள் தோற்றத்தில் குறை களையப்பட்ட விஜய் ஆண்டனி மாதிரி இருக்கார்.. நல்ல நடிப்பு.. இவர் கமல் மாதிரி 3 கெட்டப்ல வர்றார்.. இந்தப்படம் தமிழ்ல ரீமேக் செஞ்சா அல்லது உல்டா செஞ்சா கமல் தான் பெஸ்ட் சாய்ஸ்.. ஆக்‌ஷன் காட்சிகளை விட காதல் காட்சிகளில் இவருக்கு சுறு சுறுப்பு கம்மி.. ஏன்னா பாப்பா பக்கத்துல வந்து வாகா நின்னும் கூட அண்ணன் கம்முன்னே இருக்கார். 


 ஹீரோயின் நல்ல அழகு.. டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லேட்டின் முகத்தை என்லார்ஜ் பண்ணி கொஞ்சம் பிரைட்னெஸை குறைச்சு, புன்னகையை கூட்டினா எப்படி இருக்கும்? அதான் இவர்..  குட் செலக்‌ஷன்;. 


 பல இடங்களில் நுணுக்கமான நடிப்பு.. குறிப்பா  ஹீரோ ரூபத்துல வந்திருப்பது தன் கணவன் தான் என அசால்ட்டா அடையாளம் காணும் இடங்கள், ஹீரோவிடம் ஆல்ரெடி தான் லவ்விய மேட்ட்ரை நாசூக்கா சொல்வது என  ஆங்காங்கே பளிச் பளிச்.. வில்லனாக வரும் சயிண்ட்டிஸ்ட்டின் மாப்ளையும், ஹீரோயினின் கணவர் இன்னும் பெட்டரா பண்ணி இருக்கலாம்.. அவரை விட அந்த பார் பேரர் நடிப்பில் முந்துகிறார்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtszbVWx9ZlQs-SfSOAuJpJwnlxXZkVh26Amf5Wjuy_OnIVeWcsQXWZZePmVeGTytdFUAxJ7QVEZL3GNy0FzfqvzpVe_AstFkSCs1CNv_EYrvtSImWn4axGXz7u6iK3rtjDxRugfVpTynX/மனம் கவர்ந்த வசனங்கள்1.  உங்களுக்கு செல்வாக்கு ஜாஸ்தியா இருக்கு?


 ரெகுலரா ஒரே இடத்துலயோ, ஹோட்டல்லயோ  தங்குங்க, உங்களுக்கும் அந்த செல்வாக்கு வரும். 2.  வெளி உலகத்தை பார்க்கவே மாட்டியா? எப்போ பாரு கம்ப்யூட்டரை கட்டிட்டு அழுதுட்டே இருக்கே? 3. யார் யார் ராத்திரி எங்கெங்கே போறாங்கன்னு என்னை கேட்டா எனக்கு எப்படி தெரியும்?4. அவர் இங்கே வந்தா என்ன பண்ணுவார்?


 எல்லாரையும் போலத்தான்.. ஆடுவாரு, குடிப்பாரு. பொண்ணுங்க கூட கூத்தடிப்பாரு.. 


 பொண்ணுங்க கூடவா? ஆச்சரியமா இருக்கே?


 ஏன்? அவரை உங்களுக்கு நல்ல பழக்கம்னீங்க.. அவர் எப்படிப்பட்ட கேரக்டர்னு உங்களுக்குத்தெரியாதா? 

 தெரியும்.. ஆனா இந்த அளவு தெரியாது.
5. நாம ஆல்ரெடி பார்த்து பேசி பழகுன மாதிரி இருக்கே? 


 ஒரு வேளை முன் ஜென்மத்துல நமக்குன்னு இன்னும் ஒரு லைஃப் இருந்ததோ என்னவோ?


 இன்னொரு லைஃப்னா? புரியலை.. 


 போகப்போக புரியும்.. 6. ஏய்.. மிஸ்டர்.. போலீஸ் விசாரணைல உனக்கு சிகரெட் பிடிக்கற பழக்கம் இல்லைன்னு சொன்னே... ஆனா  இப்போ தம் அடிக்கிறியே?


 அதுக்குப்பிறகு பழகிட்டேன்.. 7. நீ நிழலை நிஜம்னு நம்பி இருக்கே.. நான் நிஜத்தை நிழல்னு நம்பி இருக்கேன்.. அதான் நமக்கிடையே உள்ள வித்தியாசம்8. என் பொருளை இன்னொருத்தர் சொந்தமாக்கிக்க நான் விட மாட்டேன்.. விரும்பவும் மாட்டேன். 


 நீ என்ன மிருகமா? 


 ஆமா, அப்படி ஆக ஆசைப்படுறேன்.. 


http://www.brightlightsfilm.com/blog/wp-content/uploads/2010/08/13th-Floor.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. படத்தோட டைட்டில் பார்த்தா என்னமோ  பேய்க்கதை மாதிரி இருக்கு. சயின்ஸ் ஃபிக்சன்  என்பதற்கோ, இன்வெஸ்டிகேஷன் ஆஃப் எ கர்டர் என்பதற்கோ எந்த விதமான க்ளூவோ , லீடோ டைட்டில்ல இல்லை.. என் சிபாரிசு - : THE SURPRISE MURDER"  OR  " LONG LONG AGO I WAS MURDERED"


2.  ஹீரோயின் தன் பர்சனாலிட்டி கணவனை விட்டுட்டு ஏன் ஹீரோ மேல மையல் கொள்கிறாள்? என்பதற்கு சரியான விளக்கம் இல்லை..  சம்பிராதயப்படி அவள் கணவனை கொடுமையானவனா காட்டி இருக்கலாம்.. அல்லது எதுக்கும் லாயக்கில்லாதவனா காட்டி இருக்கலாம்..


3. ஹீரோயினை அவள் கணவனா வர்ற வில்லன் பல டைம் டேஸ்ட் பார்த்தவன் தான். ஆனா காணாததைக்கண்டவன் போல் எதுக்கு ஹீரோ உருவத்துல வந்து ரொமான்ஸ் பண்றான்?


4. சயிண்ட்டிஸ்ட்டா வர்றவர் கில்மா மேட்டர்ல மன்னன் என்பதற்கும், கதைக்கும் என்ன சம்பந்தம்? கொலை செய்ததாக சந்தேகப்படும் லிஸ்ட்டில் எந்தப்பெண் பெயரும் வர்லை. பின் எதுக்கு அந்த தேவை இல்லாத  பல்லி வால் ?


5. கதைப்படி  வேற ஒரு காலத்துக்குப்போறவர் 2 மணி நேரம் தான் அங்கே இருக்க முடியும் என்ற கான்செப்ட் ஓக்கே.. அந்த 2 மணி நேரம் முடிஞ்சதும் ஹீரோ நிகழ்காலத்துக்கு வர்றார்.. அப்போ அங்கே ஏற்படும் குழப்பங்கள் என்ன? மறுபடி ஹீரோ அங்கே போகும்போது “ எங்கேப்பா ஆளையே காணோம்? திடீர்னு மாயமா மறைஞ்சுட்டே?ன்னு யாரும் கேட்கவே இல்லையே? 


http://www.tribute.ca/tribute_objects/images/movies/13th_Floor/07.JPGஇயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. திரைக்கதை உத்தி..  இந்தக்கதையை க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை முதல்லியே சொல்லி அல்லது அதை யூகிக்கும்  வாய்ப்பை ஆடியன்சுக்கு முன் கூட்டியே கொடுத்திருந்தா சப் என முடிந்திருக்கும் சாதா கதை தான்.. ஆனால் அதை சாமார்த்தியமாக மறைத்து கதை சொன்ன விதம் அழகு


2. ஹீரோ, ஹீரோயின் செலக்‌ஷன் கனகச்சிதம்.. இருவருக்கும் இடையே யான பாடி கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்  டச் எல்லாம் அருமை..


3. இசை, ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு மூன்றும் மூன்று வெவ்வேறு கால கட்டத்துக்கு போகும்போது அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றபடி மாறுவது அம்சம்..
சி.பி கமெண்ட் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் ஸ்டோரி ரசிகர்கள், பெண்கள் அனைவரும் பர்க்கலாம்.. கொஞ்சம் தூசு தட்னா தமிழில் ரீமேக்க நல்ல படம்..http://13thflooroffice.files.wordpress.com/2011/06/bridesmaids_movie_poster.jpg%3Fw%3D500%26h%3D365

0 comments: