Tuesday, September 25, 2012

திருமதி சுஜா என் காதலி -சினிமா விமர்சனம்
மினரல் வாட்டர் டிஸ்ட்ரிபியூஷன் பண்றாரு ஒருத்தர். அவர் கடைல 4 பசங்க..  ஓனருக்கு என்ன பழக்கம்னா பசங்க யார் வேலைக்கு சேர்ந்தாலும் அவங்க நேர்மையை டெஸ்ட் பண்ணிடுவாரு.. வேலைக்கு சேர்த்துனது பொண்ணா இருந்தா அவ பாத்ரூம்ல குளிக்கும்போது ஹமாம் சோப் போட்டு குளிச்சா நேர்மையானவ-னு நினைச்சுக்குவார் போல.. அவ்ளவ் அப்பாவி. 90,000 பணம் இந்தா போய் பேங்க்ல என் பேர்ல போட்டுட்டுவான்னு ஒரு லட்சம் ரூபா தர்றார்.. அந்தப்பையன் ஏமாத்தாம ஒரு லட்சத்தயும் அவர் அக்கவுண்ட்லயே போட்டுட்டு வந்துடறான். ஆஹா.. இவன் நேர்மையானவன், நம்பிக்கையானவன்னு ஓனருக்கு நம்பிக்கை வந்துடுது.அவன் தான் இந்த படத்துக்கு ஹீரோ.ஓனர் சம்சாரம் தான் ஹீரோயின். அதெப்பிடி? ஓனர் தானே ஹீரோ? ஹீரோயின் புருஷன் தானே ஹீரோவா இருக்க முடியும்னு யாரும் லாஜிக் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.. இந்த மாதிரி கில்மாப்படத்துல  கள்ளக்காதலன் தான் ஹீரோ, கள்ளக்காதலிதான் ஹீரோயின்.


 ஹீரோயின் மொட்டை மாடில  தன்னோட பிராவை காயப்போட்டிருக்கா.. அது காத்துல பறந்து 2 பர்லாங்க் தூரத்துல நிக்குற ஹீரோ மேல விழுது. 2 தத்திங்களும் கேவலமா சிரிச்சுக்கறாங்க.. வெட்கமாம்.. அடேய்


அப்பப்ப ஓனர் ஏதாவது வீட்டு வேலை சொல்லும்போது ஹீரோவும் , ஹீரோயினும் சந்திச்சுக்கறாங்க.. அப்பவெல்லாம் எந்த முக்கிய சம்பவமும் நடக்கலை.. ( முக்கிய சம்பவம்னா ம் ஹூம் , ஏய்  இச் இந்தமாதிரி முக்கிய முனகல் சம்பவங்கள் )10 நிமிஷம் லேட்டா வர்றவங்க தொந்தரவு தாங்க முடியறதில்லை.. சார்.. சீன் ஏதாவது போயிடுச்சா? அப்படினு கேட்டே உசுரை எடுப்பானுங்க.அந்த மாதிரி லேட் கமர்ஸ்க்காகவே படம் போட்டு 20 நிமிஷம் வரைக்கும் எந்த சீனும் இல்லை.
ஓனர் வேலை விஷயமா வெளியூர் போறார். போகும்போது  அந்த தத்தி ஓனர் என்ன பண்ணறார்னா  கடை பசங்க 2 பேரை நைட் அவர் வீட்ல வாசல்ல காவலுக்கு படுத்துக்குங்கன்னு சொல்லிட்டு போறாரு,. அமலாபாலை கேரவுன் வேன்ல உக்கார வெச்சு வெளில சிம்புவை காவலுக்கு வெச்சா என்னாகும்?

அதான், ஹீரோ பாட்டுக்கு நல்ல பிள்ளையா வாசல் திண்ணைல படுத்து இருக்கான், ஹீரோயின் என்னமோ குல்பி ஐஸ்காரனை கூப்பிடற மாதிரி சாதாரணமா கூப்பிடறா. கூச்சமே இல்லாம , பார்க்கற நமக்குத்தான் கூச்சமா இருக்கு.. அப்புறம் என்ன நடக்குது? டக்னு இடைவேளை. இங்கே தான்யா டைரக்‌ஷன் டச்.. ஹீரோ ஹீரோயின் இடைல வேலையா இருக்கும்போது இடைவேளை.. சிம்பாலிக் ஷாட்டாம்.இது தொடர்கதை ஆகுது.. பல மாசமா இது நடக்குது. என்ன ஆகும்? ஹீரோயின் மாசமா ஆகிடறா, புருஷன் கிட்டே சொல்றா. அத்தான் நீங்க அப்பா ஆகப்போறீங்க.. ஓனர் ஷாக் ஆகிடறான், நாம கடைக்கு மட்டும் தான் ஓனர். எவனோ நம்ம சம்சாரத்துக்கே ஓனரா இருந்திருக்கான்னு . இந்த இடத்துல யாருமே  எதிர்பார்க்காத ட்விஸ்ட். ஓனர் எப்படி டவுட் ஆகறார்னா ஆல்ரெடி டாக்ட அவர் கிட்டே உனக்கு அப்பா ஆகும் தகுதி இல்லை. எடியுரப்பா மாதிரி டம்மியா இருக்க வேண்டியதுதான்னு சொல்லி இருக்கார். இது சம்சாரத்துக்கு தெரியாது.


 இதுக்குப்பின் என்ன ஆகுது என்பதுதான் மிச்ச மீதி சதை சாரி கதை.. ஒரே முகத்தை (!!!!!!??) 2 மணீ நேரம் பார்த்தா ரசிகர்களுக்கு போர் அடிக்கும் என்பதாலே  இன்னொரு கிளைக்கதையும் உண்டு. சஹானா மாதிரி பல பாய்ஸ் ஃபிரண்ட் உள்ள ஆனா கில்மா பண்ண அனுமதிக்காத தில்லாலங்கடி பாப்பா கதை.. இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஹீரோயின், ஹெல்ப் ஹீரோயின் (உதவி நடிகை ஹி ஹி )  2 பேரும் 20 டூ 25 வயசு ஆளுங்களா பிடிச்சு போட்டது. ஏன்னா இந்த மாதிரி கில்மாப்படத்துல  35 வயசு ஆண்ட்டிகளைத்தான் போடுவாங்க .


2. படத்தில் போர் அடிக்கும் காட்சிகளே இல்லை.. செம ஜாலிதான். சீன் இருக்கோ இல்லையோ அது 2 வது மேட்டர். ஆனா சீனுக்கான லீடு இருக்கு கிளுகிளுப்பு இருக்கு..3.பட போஸ்டர் டிசைன் , மார்க்கெட்டிங்க் உத்தி எல்லாம் ஓக்கே
கில்மா பட இயக்குநரிடம் சில கொல்மா கேள்விகள்1. வழக்கமா இந்த மாதிரி படத்துல கணவன் கையாலாகதவனாகவோ, குடிகாரனாகவோ காட்டுவாங்க, ஆனால் நீங்க ஹீரோ ஆரோக்யமானவனா காட்டி இருக்கீங்க. மனைவி ஏன் தடம் புரள்றான்னு தெளிவா சொல்லலை.அவ ஒரு அலைஞ்சான் கேஸ் அப்டிங்கற மாதிரியும் காட்டலை
,ஹீரோ ஆள் கலரோ பர்சனாலிட்டியோ கிடையாது, அவனும் புருஷனை விட மோசமாத்தான் இருக்கான். தென் ஒய் ஒய்? வீ வாண்ட் டூ நோ த ரீசன் ..

2. ஒரே கட்டில்ல கணவன், மனைவி படுத்திருக்காங்க , கணவன் தூங்கறான், அப்போ கள்ளக்காதலன் வீட்டுக்குள்ளே வர்றதே ரிஸ்க். ஆனா அவன் கட்டில்லயே படுத்து கில்மா பண்றான். ஹாலிவுட் படத்துல கூட அபப்டி வர்லை.. யாராவது அசட்டுத்தனமா அப்படி பண்ணுவாங்களா? வீட்ல பாத்ரூம் , கிச்சன் ரூம் எங்காவது போய்க்க மாட்டாங்களா?


3. தன்  மனைவி ஒரு கேடு கெட்ட சிறுக்கின்னு அந்த கிறுக்கனுக்கு தெரிஞ்ச பின் முறைப்படி அந்த மனைவியைத்தானே கொலை பண்ணனும்? எதுக்கு கள்ளக்காதலனை கொலை பண்றார்?மனைவியை கொலை பண்ணிட்டா ஒரே ஒரு கொலையோட மேட்டர் ஓவர். க காதலனை கொலை பண்ணிட்டா அவ இன்னும் எத்தனை பேர் கூட போவாளோ? எல்லாரையும் தேடி தேடி கண்டு பிடிச்சு கொலை பண்ணிட்டு இருக்க முடியுமா? அட்லீஸ்ட் மனைவி திருந்தி மன்னிப்பு காட்ற மாதிரியும் சீன் வைக்கலை..4. ஓனர் தன்  கடைல வேலை செய்யற 5 பேர் மேல சந்தேகப்படறார். யார் அந்த புல்லுருவின்னு கண்டு பிடிக்க லூஸ் தனமா ஒரு ஐடியா பண்றார். அதன் படி தான் ஏதோ மறந்துட்டு வந்துட்டதாகவும் வீட்ல போய் அக்கா கிட்டே வாங்கிட்டு வாங்க என சொல்லி 5 பேரையும் தனித்தனியா அனுப்பறார். இவர் பின்னாலயே போய் செக் பண்றார். அந்த லூசு பொண்டாட்டி கள்ளக்காதலன் வந்ததும் அவனைக்கூட்டிட்டு உள்ளே போகுது, தொடர்ந்து 4 பேர் இப்படி வந்துட்டாங்களே, இதுல ஏதோ சூது இருக்குன்னு நினைக்க வேண்டாம்? சூது வாது தெரியாத புள்ள போல..


5. கள்ளக்காதலனுக்கு கூட அறிவில்லை. வீட்டுக்கும், கடைக்கும் உள்ள தூரம் 1 கிமீ. நாம அரை மணி நேரமா இங்கே கிடைக்கோம், டவுட் வராதா?ன்னு நினைக்க வேண்டாம்?


6. கிளைக்கதைல வர்ற அந்த டொக்கு ஃபிகரு கேரக்டரைசேஷன் சரியா சொல்லப்படலை.7 பசங்க கூட சுத்தறா, ஆனா யாரையும் தொட விடலை.. நல்ல விபரம். அப்பப்ப அவளை டிராப் பண்ண , செலவு பண்ண யூஸ் பண்ணிக்கறா, ஓக்கே  படத்துல அவரால என்ன யூஸ்? ( உங்களுக்கோ தயாரிப்பாளருக்கோ யூஸ் இருந்திருக்கலாம் )
சி.பி கமென்ட் -  படம் ஜாலியா காமெடியா போகுது, ஆனா சீனை எதிர்பார்த்தா ஏமாந்தே போயிடுவீங்க.. ஈரோடு சீனிவாசாவில் படம் பார்த்தேன்
2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா அண்ணே முதல் வ.........வரவுன்னு சொல்லவந்தேன் ஹி ஹி....

சேகர் said...

கில்மா படத்தையும் விடாம விமர்சனம் எழுதுற உங்கள மனமார பாராட்டுறேன் ..