Thursday, September 06, 2012

வளையல் வியாபாரியா இருந்தா ஒரு கிளுகிளுப்பான பயன் என்னான்னா....

வாவிசி :) லெட்டர்னா இப்படி தான் எழுதனும்... என்ன ஒரு அறிவாளித்தனம்... 
1.மேல் அதிகாரிகள் கெடுபிடியால் 10,000 வீரர்கள் இந்திய ராணுவத்தை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். # ஃபீமேல் அதிகாரியை நியமிக்க -------------------------


2.சூடா இருக்கும் அயர்ன் பாக்ஸ், தோசைக்கல்,காதலியின் முகம் மேல் தண்ணீர் அடிச்சு விளையாண்டால் அது வாட்டர்கேம்ஸில் வருமா? # ரீ மிக்ஸ்லொள் டேவிட் - நல்ல வேளை, நான் வாட்டர் கோம்ஸ்னு படிச்சுட்டேன் ---------------------3. கிரிக்கெட் விளையாட நான் சிபாரிசு செய்யும் நடிகைகள் - சிம்ரன்,கிரண்,# ஓடி ஓடி ரன் எடுப்பாங்க ----------------------


4. பெரும்பாலும் பெண்கள் பெயர் "ஆ"காரத்திலேயே முடிகிறது,ரம்யா,திவ்யா,ப்ரியா,தீபா,அகிலா,சுகன்யா,காதலர்கள் வாழ்வு சேதாரத்தில் ---------------------------5. பெண்கள் சிக்கன் ஸ்லீப் ( கோழித்தூக்கம்) தூங்கி விடுவதால் ஆண்கள் சேவலாக மாறி எழுப்ப வேண்டி இருக்கிறது ;-0 -----------------------

Manachatchi Manasu shared Veeran Vetri Veeran's photo.


6. என் வாழ்வா” தாரம்” நீ! தாங்கவொண்ணா துய”ரம்” நீ! ------------------------


 7. சுமாரான அழகே! நான் மிஸ் பண்ண வாயாடி நீ தானே #அடடே...! # எ கீ
------------------

8. உடைந்தது நடன கலைஞர்கள் சங்கம்: படப்பிடிப்புகளை நிறுத்தும் நிர்வாகிகள் # கலா மாஸ்டர் வழுக்கி விழுந்துட்டாங்களா? அய்யகோ! ;-0---------------------------


9. கோவை குற்றாலம் அருவி மூடல் # பெட்ஷீட் நனைஞ்சுடாது?---------------------


10. கள்ளச்சாராயம் என்பது அவள் கடைக்கண்ணால் பார்ப்பது! நல்ல சாராயம் என்பது நேருக்கு நேர் அவள் பார்ப்பது # டாஸ்மாக்கானின் டைரிக்குறிப்பு-------------------------

11. வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு கணவன், மாதாந்திர சம்பளம் வழங்குவதற்கான மசோதா தயார்-அமைச்சர் கிருஷ்ணா திராத் # வெளங்கிடும்


--------------------------


12. முகமூடியில் பாட்டுக்கு கத்தரி: பூஜா அப்செட் # பாட்டுக்கு கத்தரின்னா ஃபைட்டுக்கு தக்காளியா?------------------------

13. நான் விளக்கெண்ணெய் குடிப்பதே இல்லை, ஏன்னா ஆல்ரெடி என் முகம் அதை குடிச்ச மாதிரி தான் இருக்கு  # எ கீ---------------


14. விளையாட வந்த சிங்களவரை திருப்பி அனுப்பியது சரியல்ல-கருணாநிதி # தலைவா! அவங்க நம்ம வாழ்க்கைல விளையாடியவங்க, மைண்ட் இட்
-------------------


15. பரிவு காட்டும் காதலியை தெரிவு செய்வதில்  உன் அறிவு காட்ட வேண்டும்------------------------


இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்)

*** ஒரு தமிழர் *** V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL:16. 12  ஜென் கதைகள் கொண்ட சிறுகதைத்தொகுப்பை ஒரு டெ”ஜென்” கதைகள் என சொல்லலாமா?
----------------


17. சம்சாரம்  கண்ணா பின்னான்னு திட்ட வருகையில் கண்ணான்னு  சொல்றப்ப பாதிலயே நிறுத்திட்டா நீ  புத்திசாலி # ச்--------------------


18. காதலி - ஐ லவ் ஐஸ்க்ரீம் வெரி மச்.டெயிலி 4 சாப்பிடுவேன்.காதலன் - அப்போ அது வெறி மச்----------------------------19. வளையல் வியாபாரியா இருந்தா ஒரு பெனிஃபிட் உண்டு, கிராமங்களில் பொண்ணுங்க கையை பிடிச்சு பார்த்துக்கலாம்
----------------------------


20. ஸ்க்ரூ ட்ரைவரை யூஸ் பண்றவங்க ஸ்க்ரூ கண்டக்டர்ஸ்?--------------------------


3 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்ல காலை.

kutti said...

Helo

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல்!

இன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html