Sunday, September 30, 2012

திருவாரூர் - கூத்தனூர் - சரஸ்வதி கோயில்

http://mw2.google.com/mw-panoramio/photos/small/53935507.jpg
வாழ்க்கையில் சந்தர்ப்பம் எப்போதாவது தான் கிடைக்கும். அதை தவற விடுபவர்கள் புத்திசாலிகள் அல்ல. சில குடும்பங்களில், துன்பம் துரத்திக் கொண்டே இருக்கும். குறிப்பாக, வாழாவெட்டியாய் வரும் பெண்கள், அங்கஹீனர்களாகப் பிறப்பவர்கள், திருமணமாகியும் நிம்மதியில்லாமல் இருக்கும் ஆண்கள், பணக்கஷ்டத்தால் அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ளாமல் இருப்பவர்கள்... இதற்கெல்லாம் காரணம் என்ன என்றால், பிதுர் தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவற்றைச் செய்யாமல் இருப்பது தான். ஒவ்வொரு அமாவாசையும், பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். மாதப்பிறப்புகளில் பிதுர் தர்ப்பணம் செய்யலாம். இவையெல்லாம் சாத்தியமில்லாவிட்டால், தை அமாவாசை, ஆடி அமாவாசையாவது தர்ப்பணம் செய்யலாம். இதுவரை என் வாழ்க்கையில் தர்ப்பணம் செய்ததே இல்லை, அதற்கு ஏதாவது மாற்று இருக்கிறதா என்றால், அதற்கும் மாற்று வைத்திருக்கிறது சாஸ்திரம்.புரட்டாசி மாத பவுர்ணமி துவங்கி, அமாவாசை வரையுள்ள, 15 நாட்கள் மகாளயபட்ச காலம். மகாளயம் என்றால், மொத்தமாகக் கூடுதல் என்று பொருள் கொள்ளலாம். பிதுர்கள் எனப்படும் முன்னோர்கள் இந்த, 15 நாட்களும் கூட்டமாக பூமிக்கு வந்து விடுகின்றனர். தங்களது சந்ததியர், தங்களை நினைத்துப் பார்க்கின்றனரா என சோதிக்கின்றனர். அவர்களை அந்த, 15 நாட்களும் நினைத்து தர்ப்பணம் செய்தால், அவர்கள் மகிழ்கின்றனர்.

இதற்கு அதிக செலவாகுமோ என்று எண்ணத் தேவையில்லை. வசதி படைத்தவர்கள், தகுதியுள்ள அந்தணர்களை அழைத்து, இதை சில ஆயிரங்கள் செலவழித்து செய்யலாம். மற்றவர்கள் என்ன செய்யலாம் என்றால், சில விதிமுறைகளை சாஸ்திரம் சொல்கிறது.


நதிக்கரைகளுக்கு சென்று, அந்தணர்களுக்கு தட்சணை கொடுத்து தர்ப்பணம் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால், ஒரு பிடி எள்ளை தானம் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால், ஒரு பிடி எள்ளை கையில் எடுத்து, தீர்த்தத்தை விட்டு கீழே விடலாம். இதெல்லாம் முடியாவிட்டால், பசுவை வலம் வந்து வணங்கலாம். அதற்கும் முடியாவிட்டால், வெட்டவெளியில் நின்று இரண்டு கைகளையும் உயரே தூக்கி, "பித்ரு தேவதைகளை வணங்க வேண்டும் என்பது என் ஆசை தான். ஆனால் முடியவில்லை. எனவே, பித்ரு தேவதைகளே... நீங்கள் எல்லாரும், நான் சிரார்த்தம் செய்ததாக எண்ணி திருப்தி அடையுங்கள்...' என்று வேண்டலாம்.


இதை விட சாஸ்திரம் நமக்கு என்ன சலுகையைத் தந்துவிட முடியும். மேற்கண்ட பரிகாரங்களுக்கு ஒரு பாக்கெட் எள் போதாதா. எள் எந்த அளவுக்கு வேண்டும் என்றால், கை கட்டை விரலில் எள்ளை ஒற்றிக்கொண்டு, அதில் தண்ணீரை விட்டு கீழே விட்டால் கூட போதும் என்கிறது சாஸ்திரம்.

மகாளயபட்சத்தின், 15 நாட்களும் இவ்வாறு செய்யலாம். முடியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்தன்றாவது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை கடமைக்குச் செய்யாமல், சிரத்தையாக செய்தால், கிடைக்கும் பலன் என்ன தெரியுமா?


இனிமேல், நம் குடும்பங்களில் ஊனமான குழந்தைகள் பிறக்க மாட்டார்கள். இப்போது, மாற்றுத் திறனாளிகளாக இருப்பவர்களுக்கு, நல்ல வாழ்க்கை அமையும். மேலும், நம் முன்னோர்கள் பாவம் செய்து நரகத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அவர்களுக்கு விமோசனமாகி சொர்க்கத்தை அடைவர். அவர்களின் ஆசிர்வாதம், நம்மை மனநிம்மதியுடனும், செல்வச்செழிப்புடனும் வாழ வைக்கும்.மகாளயபட்ச காலம், செப்., 30ல் துவங்கி, அக்., 14 வரை நீடிக்கிறது. அக்., 15ல் மகாளய அமாவாசை. இந்த நாட்களில், நம் முன்னோரை நினையுங்கள். திருவாரூர் மாவட்டம் செதலபதி கிராமத்தில், முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கே, ராமபிரான் பூஜித்த பிதுர்லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை மகாளயபட்ச காலத்தில் ஒரு நாளாவது சென்று தரிசித்து வாருங்கள். அங்கே தர்ப்பணம் செய்வது இன்னும் விசேஷம். திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில், 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில், கூத்தனூர் சென்று, 2 கி.மீ., தொலைவில் உள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ் பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது. பிதுர் தர்ப்பணத்தின் பலன் அளவிட முடியாதது; அனுபவத்தின் மூலமே இதை உணர முடியும்.
http://img1.dinamalar.com/Kovilimages/T_500_678.jpg a
ahttp://farm3.staticflickr.com/2402/1685445012_72546088eb.jpg
a


thanx - தினமலர்

6 comments:

Menaga Sathia said...

மிக அருமையான பதிவு!!...

Unknown said...

திருவாரூரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பொழுது பூந்தோட்டத்திற்கு முன் ஒரு சிறிய பாலம் உள்ளது. (தற்பொழுது அருகில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.) அந்த பாலத்திற்கு முன்னால் இடது பக்கம் கும்பகோணம் செல்லும் ஒரு Single Roadல் சென்றால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் ஆலையம் உள்ளது. மேலும் உள்ள சிறப்பு என்னவென்றால் உலகிலையே கல்விக்கடவுளான சரஸ்வதிக்கு தனி ஆலையம் அமைந்துள்ளதும் இங்குதான். மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பொழுதும், தேர்வுகள் எழுதும் பொழுது இங்கு வந்து வழிபட்டால் படிப்பு நன்றாக வரும்.

இப்படிக்கு,

திருவாரூர்காரன்.

நம்பள்கி said...

திரு. செந்தில்...
இது மாதிரி இடுகைகள் வெளியிடும் போது..சில விஷயங்களை [edit] செய்யுங்கள்; வெட்டி விடுங்கள். பல விஷயங்களை வெட்டலாம். வெட்ட வேண்டும்; காரணம் இந்த ஒரு உதாரணம்:

'நதிக்கரைகளுக்கு சென்று அந்தணர்களுக்கு தட்சணை கொடுக்க வேண்டும்."

இது தவறில்லையா? ஒன்று அந்தணர்களை [edit] செய்யுங்கள் அல்லது மலம் அள்ளுபவர்களுக்கு தட்சணை கொடுத்தால் மட்டும் புண்ணியம் கிடைக்கும் எழுதுங்கள்;

புராணமே புளுகு மற்றும் இடைசெருகல்கள் தான்.

நாமும் ஒரு புது புராணத்தை எழுதுவோமே...

மலம் அள்ளுபவர்களுக்கு தட்சணை கொடுத்தால் மட்டும் புண்ணியம் கிடைக்கும், அந்தணர்களுக்கு தட்சணை கொடுத்தால் புண்ணியம் கிடைக்கவே கிடைக்காது என்று..!

கடவுள் இருக்கிறர் என்று நம்புபவர்கள் இதை ஒத்துக் கொள்வார்கள்....எந்த ஏழைக்கு கொடுத்தால் என்ன???

praveen said...

குத்தனூர் அருகில் ஆதிவிநாயகர் ஆலயம் உள்ளது. இங்கே விநாயகருக்கு மனித முகம்.

Anonymous said...

அருமையான தகவல் !
மிக்க நன்றி !

ஊடகன் said...

poonthottathil irunthu sariyaaka arai km thooraththil maha saraswathi kovil ullathu.angirunthu sariyaaga 2km thooraththil sethalapathi aathi vinayagar aalayam ullathu...
by chandru
koothanur,poonthottam