Thursday, September 13, 2012

செத்தவன் பிழைக்க ஐடியா கண்டு பிடிச்ச டாக்டர் ( ஜோக்ஸ்)

1. குத்து விளக்கு, குத்து ரம்யா  என்ன வித்தியாசம்?


அஞ்சு பக்கமும் திரியோட ஆயிலொட இருந்தா அது குத்து விளக்கு, திரும்புன பக்கம் எல்லாம் ஃப்ரீயா இருந்தா அது குத்து ரம்யா.. ------------------------------------


2. ஆல் ஈஸ் வெல் -னு எங்க ஊர்ல சொல்ல முடியாது.. 


ஏன்?

 கிணறு மட்டும் இல்லை, வாய்க்கால், ஏரி, போர் வெல் எல்லாம் இருக்கும்.. எப்படி ஆல் ஈஸ் வெல்னு மட்டும் சொல்ல முடியும்?---------------------------------


3. டாக்டர்! என்ன சொல்றீங்க? செத்தவன் பிழைக்க ஐடியா இருக்கா? எப்படி?


யாராவது ஒரு பெண்ணை சின்சியரா லவ் பண்ணு... அவ உன்னை தினம் தினம் உயிரோட சாகடிச்சுட்டே இருப்பா.. ----------------------------------

4.  மோஹனா உன்னை லவ் பண்றா-ன்னு எப்படி சொல்றே?


 டைவர்ஸ்னு ஒண்ணு செஞ்சா அது உன்னைத்தான்னு அடிச்சு சொன்னாளே.. -------------------------------------


5. டேய்.. புத்திசாலிப்பசங்க கூட மட்டும் சேர்ந்திரு, அப்போதான் உனக்கு மூளை வளரும்.. 


 டாடி.. பணக்காரங்க கூட மட்டும் சேருங்க, அப்போதான் நிறைய பணம் சேர்த்த முடியும்னு நான் எப்பவாவது சொல்லி இருக்கேனா?--------------------------------------


காலத்துடன் முன்னோக்கி நகர நாம் வெகு இலகுவாய் இருக்க வேண்டுமோ...6. மிஸ்.. எனக்கு கம்ப்பெனி தர முடியுமா?

 ஸாரி, எங்கப்பா கிட்டே இருக்கறது இந்த ஒரே ஒரு கம்பெனி தான், அதை உங்க கிட்டே கொடுத்துட்டா நான் பூவாவுக்கு என்ன பண்ண?


-----------------------------------


7. மிஸ்.. ஐ லவ் யூ


 சாரி, இப்போதான் நான் முதன் முதலா உங்களை பார்க்கறேன்

 சரி, நான் வேணா போய்ட்டு நாளைக்கு காலைல வரவா?


-------------------------------


8. சார், 3 கோடாலி, விரகு வெட்டி, தேவதை கதையை மெகா பட்ஜெட்ல எடுக்கப்போறோம்.. 


 அதுக்காக அமேசான் காட்டுல சந்தன மரம் வெட்டறவர் தான் ஹீரோன்னு சொல்லி ஃபாரீன் லொக்கேஷன்க்கு கூட்டிட்டு போறதா?


--------------------------------


9. உங்க வீட்டுக்கிணற்றித்தண்ணி இளநீர் மாதிரி இருக்கும்னியே, அவ்ளவ் டேஸ்ட்டா?

 ம்ஹூம், அவ்ளவ்  கம்மியா.. -------------------------


10. டியர், நீங்க அப்பா ஆகப்போறீங்க.. 

 அய்யய்யோ, நான் ஏதும் செய்யலையே?


பயம் வேணாம்.. நான் தான்  ஒரு குழந்தையை தத்து எடுத்தேன். ------------------------------------
11. தீக்குளிக்கத்தயாரா?ன்னு தலைவர் கேட்கறாரே?

 அக்னிப்பரீட்சை வைக்கப்போறார் போல..---------------------------------------

12.  தலைவர் கேரளா போய்ட்டு வந்திருக்காரா?


 ஆமா, எப்படித்தெரியும்?


 எதிர்கட்சித்தலைவர் செஞ்ச ஊழலை புட்டு புட்டு வைப்பேன்னாரே?


------------------------------


13.  தலைவர் ஊழல் கறை படியாதவர்னு எப்படி சொல்றே?


டெயிலி கட்சி ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு வர்றப்போ ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வந்து மக்களை ஐ வாஷ் பண்ணிடுவார்.. -----------------------------


14. ஹீரோ படம் பூரா கேமராவைப்பார்த்து “ கொன்னுடுவேன், தொலைச்சுடுவேன்” அப்டிங்கறாரே?


படம் மிரட்டலா வந்திருக்குன்னு எல்லாரும் சொல்லட்டும்னு தான்------------------------------------

15. ஐ ஆம் அட்டெண்டிங்க் என் இண்ட்டர்வியூ ( I AM ATTENDING AN INTERVIEW)


தென்? 


 ஐ வாஷ் இண்ட்டர்வியூ (  eye wash)


------------------------------------------
Photo: Cute..

3 comments:

அபி said...

நகைச்சுவை யாவும் அருமை 5 8 10 and
2nd pic

Easy (EZ) Editorial Calendar said...

சூப்பர் காமெடி.........


நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

”தளிர் சுரேஷ்” said...

அட்டகாசமான ஜோக்ஸ்! பகிர்வுக்கு நன்றி!

இன்று என் தளத்தில்
ஓல்டு ஜோக்ஸ் 2
http://thalirssb.blogspot.in/2012/09/2.html