Monday, September 17, 2012

விறகெடுக்கப்போன வித்தார கள்ளி VS ரேஷன் கடை கேஸ் சிலின்டர்

1.ஷோபா வீட்டு சோபாவுல உக்காரும்போது ஷோபா கிட்டே "சோபா மேல உக்காரலாமா?னு அனுமதி கேட்டா வம்பாகிடும்:-) 

------------------------------


2. தன் வீட்டு மக்கள் மெச்சும்படி கிராமத்துப்பெண்களும்,ஊர் மக்கள் ஏசும்படி பல நகரத்துப்பெண்களும உடை அணிகிறார்கள்் 
-------------------------3. இன்று பொறியாளர் தினமாம்.இஞ்சினியர் பொண்ணுங்களுக்கு வாழ்த்து சொல்லிட வேண்டியதுதான் ----------------------4. இன்று அமாவாசையை முன்னிட்டு உங்க வாரிசின் அம்மாவின் அடுத்த வாரிசு ஆசையை நிறைவேற்ற நினைத்தால் நீயும் நல்ல குடும்பஸ்தனே ----------------------

5. தமிழன் அதிகாலைல நடை பயிற்சி போறானோ இல்லையோ கடலையை ஸ்டார்ட் டட் ------------------------6. பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன், விசாரணைக்குப் பின் கைது #அப்போ கைதுக்குப்பின் இப்பவெல்லாம் விசாரிக்கறதில்லையா? 

---------------------------


7. நீ யார் என யாரேனும் கேட்கும் பொழுதெல்லாம் அன்பே உன் பெயரை சொல்லி உன்னவன் என சொல்லி சமாளிக்கிறேன் 
------------------------


8. "keep rocking"னா யாரையாவது கல் மனம் கொண்ட பெண்ணை கீப்பா வெச்சுக்கனுமா? 
-----------------------------


9. அன்பே.உன் முகம் ராத்திரியில் அமுதமாக இருக்கு.காலையில் குமுதமாக மாறிடுது.பகல்ல ராணியா மாறி கட்டளை இடுது 
------------------------------


10. இந்த புடவையில் நீ அழகு என்பதை விட எந்தப்புடவையும் உனக்கு அழகு என்று வாய் கூசாமல் பொய் சொல்பவன் கெட்டிக்கார கணவன்
-----------------------11. கூட்டணியை விட்டு வெளியேறுவேன்-மம்தா பானர்ஜி, # சொல்றவன் செய்யமாட்டான செய்யறவன் சொல்லிட்டு இருக்கமாட்டான்் ---------------------


12. எனக்கு மத்திய அரசை மிரட்டத் தெரியாது : கருணாநிதி: # தலைவா.உங்க சொந்தப்பசங்களையே அதட்டி வைக்க முடியாது .மூச்! ---------------------


13. டீசல் விலையுயர்வைத் திரும்பப் பெற 72 மணிநேரக் கெடு - மம்தா பானர்ஜி! # 3 நாள் வெளில வர மாட்டீங்களா?ஓ -----------------


14. எல்லோரும் 'ஊதிய' உயர்வு வாங்குகிறார்கள் என்றாலுமமானாட மயிலாட ் நடத்துனர்களுக்கே அது மிகப்பொருத்தமாகிறது! --------------------


15. இன்று பார்த்தசாரதி கோவிலில் காணாம போன என் மனைவியை யாராவது , கண்டுபிடித்து கொடுத்தால்கடுமையாக தண்டிக்கப்படுவீர் # சும்மா 
---------------


16. பவர் ஸ்டாரை ஏன் அரெஸ்ட் பண்ணாங்க? ஜெ - என்னைத்தவிர யார் கிட்டே பவர் இருந்தாலும் அது எனக்கு பிடிக்காது ------------------------------


17. மாபெரும்சீர்திருத்தங்களை அமல்படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது-பிரதமர் # ராஜினாமா பண்ணப்போறீங்களா? -----------------------------


18. அடடா.வித்தார கள்ளி விறகெடுக்கப்போனாளாம்.ரேஷன் கடைல கேஸ் சிலின்டர் வாலன்ட்ரியா கூப்ட்டு குடுத்தாங்களாம் :-),# சும்மா 
-------------------------------


19. இன்னைக்கு எந்தப்பெண்ணாவது உங்களை அண்ணா என அழைத்தால் ஆமா இன்னைக்கு அண்ணா பிறந்த நாள் தான் அதுக்கென்ன? என சமாளிக்க !----------------------------


20. அரசியல் களத்தில் இனி எல்லாம் வெற்றி தான்: கட்சியினருக்கு ஜெ., கடிதம் # ஆனா உங்களுக்கு அடுத்து யாரு என்பது கட்சியில் வெற்றிடம்தான்1 comments:

குரங்குபெடல் said...

. " மாபெரும்சீர்திருத்தங்களை அமல்படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது-பிரதமர் # ராஜினாமா பண்ணப்போறீங்களா? "


. . . கலக்கிட்ட . . . . தம்பி