Wednesday, September 03, 2014

ஸ்ரீ ராமஜெயம் எழுதுவதன் பரிணாம வளர்ச்சி =

1  கல்யாண முகூர்த்தம் களை கட்டுது.சென்னிமலை மலை மேல 17 ஜோடிக்கு ,ஈஸ்வரன் கோவில் ல 7 ஜோடிக்கு கல்யாணம்.பூக்கடைக்கு ,புரோகிதர்க்கு வாழ்வுதான்


============

2 ஞாயித்துக்கிழமை கல்யாணம் பண்ண ஜோடிங்க கிட்டே இன்னைக்கு லீவ்.மத்ததெல்லாம் நாளை னு சொல்லிடனும்.கடுப்பாயிடுவாங்க ;-)


======================

3 அதிகாலையிலும் ,மதி மயக்கும் மாலையிலும் மருதாணி வைத்த மங்கை உள்ளங்கை போல கீழ் வானம் சிவந்தோ ஆரஞ்ச் ல யோ இருக்கு


==================


4 தினமும் வேப்பங்குச்சியில் பல் துலக்கினால் பாம்பு ,பூரான் போன்றவை கடித்தால் விஷம் ஏற தாமதப்படுத்தும்.மருத்துவ சிகிச்சைக்கு அவகாசம் தரும்


================


5 காதலியிடம் பின் பற்ற வேண்டிய முதல் கொள்கை இடை தொடும் ஜடை பற்றி இழுப்பதே!


================


6  திருமண வயதுப்பெண்கள் (அகல நெற்றிக்காரர்)ஹேர் ஸ்டைலை நெற்றியில் முன் பக்கம் குழல் படிவது போல்சீவினால் ஏறுநெற்றியில் இருந்து தப்பலாம்
=============


7  தமிழர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள் - வட இந்தியர் குற்றச்சாட்டு # உப்பு போட்டு சாப்டறமுங்ணா.சப்பை சப்பாத்தி சாப்ட்டா புரியாது


================


8 ஏம்மா மஞ்ச சுடி.லட்சணமா இருக்கீங்கோ.லட்சுமிகரமா பேசறீங்கோவ்.எட்டணா வுக்கு ஒரு ரப்பர் பேண்ட் வாங்கி கூந்தலை முடியவும்================


9 வீட்ல அண்ணன் காரன்னா உணர்ச்சியை வெளிக்காட்டிக்க மாட்டாங்களாம்.சிரிக்க மாட்டாங்களாம்.அழகிரி அண்ணன் அதான் உம்முன்னே இருக்கார் போல==============


10 ஸ்ரீ ராமஜெயம் எழுதுவதன் பரிணாம வளர்ச்சி தான் "கத்தி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிடும் "-50000 +========


11 அபிமான நடிகருக்காக எதையும் செய்யத்துணியும் ரசிகர்கள் அமைவது நடிகரின் பலம்.ரசிகரை உபயோகப்படுத்திக்கொள்ளும் நடிகர் ரசிகனின் பலவீனம்===============


12 விஜய் டிவி விருது விழா வச்சு 50000 ட்வீட்ஸ் போட்டவங்களை மேடை ஏத்தி கவுரவிப்பது போல் கனா கண்டேனடி தோழி!===============


13 மனமிருந்தால் மார்க்கமுண்டு=,பழமை ரசிகன். மனமிருந்தால் மார்க்கபந்து=கிரேஸி மோகன் ரசிகன் மனமிருந்தால் மார்க் க பிந்து = பிந்துமாதவி ரசிகன்


==============


14 நான் சாகும்போது பார்க்கும் கடைசி முகம் உன் முகமாத்தான் இருக்கும் # அமர காவியம்

=================


15 பள்ளிபாளையம் ஆறுகிராஸ் பண்றப்ப 1லேடி சாமி கும்பிட்டுச்சு .பஸ்ல இருந்துக்கிட்டே.இன்னாம்மான்னேன்.இதுதான் ஆத்துக்காரரை தள்ளி விட்ட இடம்குது


=================


16 எனக்கும் ,அவளுக்கும் ரசவாதம் நிகழ்ந்தது.மிளகு ரசம் வைப்பதா?பூண்டு ரசம் வைப்பதா?என வாதம்


=========


17 உன் சந்தன நிற முதுகில் கறுப்பு ஜடை தவழ்வது சந்தனம் அரைத்த அம்மிக்கல்லில் கரும்பு கரணை யை வைத்தது போல் ருசிக்கிறது


================


18 பி ஏ = சார்.உங்களுக்கு போன்


விஜய் = இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனதுக்கு வாழ்த்தா? தெரிலங்க.போயஸ் ல இருந்து. # கத்தி க்கு கழுத்துல கத்தி


================


19 என்னை திட்ட முயலும் விஜய் ரசிகர்கள் சொந்தக்காசில் திட்டவும்.மிஸ்டு கால் கொடுத்து பின் நான் அழைத்தபின் திட்டினால் கம்பெனி்கு கட்டுபடி ஆகாது


==============20 பழக்கமான அம்மா,அப்பா ,வாத்தியாரு ,சம்சாரம் திட்டும்போதே இந்தக்காதுல வாங்கி அந்தக்காதுல விடற ஆளு அறிமுகம் இல்லா ந (ண்)பர் திட்டியா கேட்பாக?


================

0 comments: