Monday, September 01, 2014

மேகா -சினிமா விமர்சனம்

தடயவியல் டிபார்ட்மெண்ட்ல ஹீரோ  பெரிய ஆஃபீசர். அவர்க்கு வேலை வாங்கித்தந்த  உயர் அதிகாரியான  டெபுடி கமிஷனர்  தற்கொலை செஞ்சுக்கிட்டதா  தகவல் வருது . தடயவியல்  நிபுணரான அவர்  அது  தற்கொலை  இல்லை . கொலை தான்னு கண்டு பிடிக்கறார். கமிச்னரா பதவி உய்ர்வுக்காக காத்திருக்கும்  பரிசீலனைப்பட்டியலில்  இருக்கும் 7 பேரில் அவரும்   ஒருவர். பதவிக்கு ஆசைப்பட்டு யாரோ ஒருவர் தான் கொலை  செஞ்சிருக்கனும்னு  துப்பறிகிறார். கொலையாளியைக்கண்டுபிடிப்பதுதான்  கதை . 

 இதை இப்படியே  சொல்லிட்டா  இது  க்ரைம் ஸ்டோரி ஆகிடும் . ஏ செண்ட்டர் ல மட்டும்  தான்  போகும் . அதனால  ஒரு காதல்  கதைய  சேர்த்து  சொல்றாங்க . இளையரா ஜா கிட்டே வாங்குன  கால்ஷீட்  வேஸ்ட்டாப்போயிடக்கூடாதே? 

ஹீரோ  ஹீரோயினை  லவ்வறாரு . வில்லன்  குரூப் அவரை கடத்தி  வெச்சு  மிரட்டுது . இது  இன்னொரு டிராக்ஹீரோவா அஸ்வின்  . ஆள் படு ஸ்மார்ட் .,அமராவதி கால அஜித்  குமார்  முகச்சாயல் . நல்ல எதிர் காலம்  உண்டு 

 நாயகியா  சிருஷ்டி . அழகிய தாமரைப்பூ  முகம். படத்தில்  ரொமாண்டிக்  போர்ஷனை  இவர்  தான்  தாங்கிப்பிடிக்கறார் . ஃபேமிலி   லுக் . டீசண்ட்   டிரஸ் . வெரிகுட்  ஃபிகர் இசை ராஜா  வழக்கம்  போல்  இசை \ராஜாங்கம் நடத்தி  இருக்கார் ந். ஆங்காங்கே இசையில்   காதல் காட்சிகளில்  நீ தானே   என்   பொன் வசந்தம்  எட்டிப்பார்க்குது 

 மழைக்காட்சிகள்  ஒளிப்பதிவு  ஜால வித்தை . பிஜிஎம்  பிரமாதம் இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  நாயகி   ஊஞ்சலில்  ஆடி வரும்  ஒவ்வொரு  ட்ரிப்புக்கும் நாயகன்  கால் விரலில் மருதாணி  வைத்து விடும் காட்சி  கவிதை . ( இதைப்பார்த்துட்டு  எத்தனை  ஃபிகருங்க  தங்கள் காதலனிடம்  முறையிடறாங்களோ? 2   ஹீரோயின்  குடையை  வெச்சு  கிட்நாப் செய்யப்பட்ட இடத்தைக்கண்டு பிடிக்கும் காட்சி 3  போஸ்டர்   டிசைன்  , விளம்ப்ர  யுக்தி  


=============== மனம் கவர்ந்த வசனங்கள்


1  மச்சி.உனக்காக நான் அடி வாங்கலாம்.என் தொழில் அடி வாங்க விடமாட்டேன்

2 குடை எடுத்துட்டு வர்லையேனு வருத்தமா?


ம்ம்ஹூம். உங்க பக்கத்துல ,உங்க குடைக்கு கீழே நிற்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கே?மழைக்கு நன்றி


=================


3 மிஸ் ! உங்க பேர் என்ன?


 ,,,,,,


மேல கை காட்னா என்ன அர்த்தம் ?# மேகா ( பேரே மேகா தான்யா)


================


4 மிஸ்! உங்க வீட்டுக்கல்யாணத்துக்கு ஏன் என்னைக்கூப்பிடலை?


சீக்கிரமே என் கல்யாணம் வரும்.அதுக்கு கூப்டறேன்


============

5 ஒத்து வராத இடத்துல ஒண்ணா இருந்து அவமானப்படறதை விட பிரிஞ்சிருந்து கவுரவமா வாழலாம்


==============

 6 எனக்கு தம் அடிக்கறது கொஞ்சம் கூடப்பிடிக்காது.

 சரி.நான் உன்னை கம்ப்பெல் பண்ணல.

டேய்


===============

7  பேசாத


ஏன்?

 உன்னைப்பிடிச்சிடுமோனு பயமா இருக்கு

==============


8 என் பேரு மேகவல்லி.அப்டின்னா மேகத்தில் வசிப்பவள் னு அர்த்தம் # அப்ப் பங்கஜ வல்லி கோமளவல்லின்னா தாமரையில் வசிப்பவள் ?

==============


9  உனக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்குனு எனக்குத்தெரியும்.


எப்டி?

என்னைப்பார்க்கும்போதெல்லாம் உன் அழகு கூடுது # மேகா


============


8  அப்டி பாக்காத.

ஏன்?


 என் தைரியம் எல்லாம் குறைஞ்சிடுமோ னு பயமா இருக்கு # மேகா==============


9 ஏதாவது சாப்டறியா?


ம்ஹூம்.அம்மாக்கு ஏன் சிரமம்?


 நான் தான் சமையல்


அப்போ எனக்குதான் சிரமம் # மேகா


=============

 10  மனிதனுக்கு வரவே கூடாத நோய் = தனிமை #


=============


11 நான் இங்க டென்சனா இருக்கேன்.நீ தண்ணி அடிச்ட்டு ஜாலியா இருக்கே.


எனக்கும் உன்னை விட்டுட்டு சரக்கடிக்க கஷ்டமாத்தான் இருக்கு # மேகா


==

12 புது பைக் ல ஏன் மெதுவா போறே?


1 வருசத்துக்கு மெதுவாத்தான் போகனும் மைலேஜ் அப்பத்தான் கிடைக்கும் # மேகா ( டபுள் மீனிங்?)


==============


13 எந்த விஷயத்திலும் நம்ம லிமிட்டைத்தாண்டி முயற்சி பண்ணக்கூடாது


==============


14 ஊருக்குப்போறேன்.ஏதாவது குடுப்பீங்கனு பார்த்தேன்.


 சுத்தியும் ஆளுங்க இருக்காங்க்ளேனு பார்க்கறேன்===============


15 நான் பக்கத்தில் இருந்தா உனக்கு சென்சே வேலை செய்யாதே?


இல்லையே.காமன் சென்ஸ் நல்லா வேலை செய்யும்


=============

=============
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  ===============

1பிரமாதமான மெலோடி= செல்லம் கொஞ்சிப்பேசும்


===========6 ஹீரோயின் தமிழ்ப்பற்று மிக்கவர் போல.யூ நெக் / வி நெக் எல்லாம் போடாம ப வடிவ நெக் ஜாக்கெட் போட்டிருக்கு

=============


3 ஹீரோயின் மேகா உள்ளங்கைல மெஹந்தி வெச்சுக்குது # மேகாந்தி


===============


4 ஹீரோ பேரு முகில் /முகிலன்.ஹீரோயின் பேரு மேகா.குழந்தை பிறந்தா ஆகாஷ் னு பேர் வைக்கலாம்


============


5   கள்வனே கள்வனே என்ன மாயம் செய்தாய்? - ரொமான்டிக் சாங் # ராஜா @ மேகா


==============


6   பிரமாதமான மெலோடி= செல்லம் கொஞ்சிப்பேசும்#மேகா


=============== 

7  டைட்டில் ல இளையராஜா விழா னு போடறாங்க.இடைவேளை அப்போ கேன்ட்டீன் ல கூழ் ஊத்துவாங்க்ளோ? # மேகா


================


சி பி கமெண்ட் - மேகா - ரொமான்டிக் த்ரில்லர் - ராஜா இசை ,ஹீரோயின் அழகு + .யூகிக்க முடிந்த திரைக்கதை திருப்பம் - விகடன் = 41,ரேட்டிங் = 2.5 / 5

0 comments: