Wednesday, September 24, 2014

இணையத்தில் லிங்குசாமிக்கு எதிராக அத்துமீறல்: இயக்குநர் வெங்கட்பிரபு கொந்தளிப்பு

இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் இயக்குநர் லிங்குசாமி
அஞ்சான் திரைப்படம் வெளியாகி, அது தொடர்பான பேச்சுகள் அடங்கிய நிலையில், அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி அளித்த பழைய தொலைக்காட்சிப் பேட்டியை முன்வைத்து, சமூக வலைதளங்களில் கலாய்ப்பு பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக, நையாண்டித்தனத்துடன் இயக்குநர் லிங்குசாமி மீதான கலாய்ப்புத் தாக்குதல்கள் மிகுந்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார், இயக்குநர் வெங்கட்பிரபு.
இணையத்தில் இயக்குநர் லிங்குசாமிக்கு எதிரான கேலித் தாக்குதல்களை கடுமையாக சாடி, வெங்கட்பிரபு வெளியிட்டுள்ள பதிவு:
"நீங்கள் நினைப்பது போல, சினிமா இயக்குவது என்பது சாதாரண விஷயமில்லை. எங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்கிறோம். ஆனால், சில நேரங்களில் அது எடுபடுகிறது, பல நேரங்களில் அது எடுபடாமல் போகிறது.
லிங்குசாமி சார் ஒரு சிறந்த இயக்குநர். 'ஜி' படத்தில் அவரோடு பணியாற்றி இருக்கிறேன். எந்த ஓர் இயக்குநரும் கடவுள் அல்ல. கடவுளே சில தப்புகளைச் செய்கிறார். தீர்ப்பு சொல்வதற்கு நாம் யார்?
நீங்கள் சொல்வதெல்லாம் (லிங்குசாமியை கலாய்க்கும் இணையவாசிகள்) சிரிப்பாக இருக்கிறது. ஆனால், எதிலுமே அர்த்தமில்லை. உங்களைப் பொறுத்தவரை ஒரு படம் வெற்றியா இல்லையா என்பது மட்டும்தான்.
நீங்கள் நல்ல ரசிகர்களாக இருந்திருந்திருந்தால், 'தங்கமீன்கள்' ஒரு மகத்தான வெற்றிப் படமாகி இருக்குமே?
உங்களால் கிண்டல் மட்டுமே செய்ய முடியும். நாங்கள் உங்களைக் கலாய்க்க ஆரம்பித்தால்?
உங்களுக்காகத்தான் படம் இயக்குகிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு நல்ல படத்தை ஏன் வெற்றி அடைய வைக்கவில்லை?" என்று கொந்தளித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் வெங்கட்பிரபு. 

 • miresh mms  
  வெங்கட் அப்ப நீங்க என்ன கறுமத்த எடுத்தாலும் மக்கள் காச கொடுத்து பாத்திட்டு சத்தம் போடாம போகனுமா .? உங்களுக்கெல்லாம் முதலாளி மக்கள் தான் என்பதை மறந்திட்டிங்க போல ..
  34 minutes ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
     
 • Karthik  
  அப்போ நாங்க tuningல இல்ல வெங்கட் பாய்........... சும்மா போறீங்களா இல்ல உங்களையும் tune பண்ணவா?????
  37 minutes ago ·   (9) ·   (0) ·  reply (0) · 
 • penaavum aayuthame  
  கதையே இல்லாத உங்க படத்தலாம் பார்க்குறதுக்கு பதிலா 10 நிமிசத்துலையும் ஒரு கதைய வச்சி திருப்தி படுத்துற குறும்படம் எவ்வளவோ மேல்...
  38 minutes ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
 • Sandy  
  ஒரு படம் வெற்றி அடைஞ்சா அத ரோடு புள்ள போஸ்டர் அடிச்சு கொண்டாடனும்நு அவசியம் இல்ல வெங்கட் பிரபு . நல்ல படம் எபோமே கொண்டாட பட்டுகுகிதே தன இருக்கு. அது நீங்க தன புரிஞ்சிக்கணும் . என ப்றேச்சனயோ அத பத்தி மட்டும் பேசுங்க போதும்.
  about an hour ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  Ravi  Up Voted
 • Siddik Jinnah  
  Venkat sir,Neenga eppo sir tune aagi motha vithayum irakka porenga hahaha
  about an hour ago ·   (6) ·   (1) ·  reply (0) · 
 • Ponn Mano  
  படத்தபத்தி ஓவரா பில்டப் பண்ணச்சொல்லி யார் சொன்னா!.... இன்னைக்கு கலாய்க்காரங்க அப்பிடின்னு வருத்தப்பட்டா!... ஒரு படம் எடுத்திட்டா போதும் (ரெண்டு நாள் கூட அந்தப்படம் ஓடியிருக்காது) அவரபத்தி சொல்லும் போதுஎல்லாம் வெற்றி இயக்குனர் அப்பிடின்னு ஒரு பட்டம் தொத்திக்குது....இதெல்லாம் டிவி-ல மீடியா-ல வரும்போது நாங்க தாங்கிக்கறது இல்லையா!.... அந்த மாதிரிதான்.... ரசிகர்கள்தான் உங்களின் முதலாளிகள்.... உங்கள் வண்டி அவர்களால்தான் ஓடுதுன்னு புரிஞ்சுக்குங்கோ வெங்கட்!
  about an hour ago ·   (17) ·   (0) ·  reply (0) · 
  Ravi · Ahamed-Mohideen  Up Voted
 • Siddik Jinnah  
  Biriyani ya kalaikkama vittathukku santhosa padunga sir, aarampichuda poranga hahaha
  about an hour ago ·   (9) ·   (0) ·  reply (0) · 
 • harish  
  என்ன Mr. வெங்கட் மறந்துபோச்சா , இந்த ஆளு (லிங்குசாமி) ஒரு பேட்டி கொடுதாறு " ஜி " படம் வந்தப்ப,,, இனிமேல் அஜித் எல்லோரும் "ஜி" னு கூப்பிடுவாங்க தல னு கூபிடமாட்டாங்க , படம் பிளாப் ஆனதும் பழிய அஜித்து மேல போட்டாறு , இனிமேல் அஜித் கூட படம் பண்ணமாட்டேன் அப்படி இப்படின்னு சமாளிச்சார், இப்ப சமாளிக்க முடியல , எவளோ தைரியம் இருந்தா எங்களையே கலாய்பேன் னு சொல்லுவீங்க, உங்க படத்த பாக்குறதால நல்ல படம்னா என்னானு தெரியாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா , , நீங்க ஒரு படம் எடுக்குறதுகுள்ள நாங்க ஆயிரம் படம் பாத்துறுவோம், MIND UR WORDS
  about an hour ago ·   (12) ·   (0) ·  reply (0) · 
  Karthik  Up Voted
 • arugan  
  இவர்கள் கொடுத்த பொய்யான தகவல்களை நம்பி பணத்தையும் நேரத்தையும் பறிகொடுத்தவர்கள் ரசிகர்கள். இவர்களுக்கு இந்த படத்தின் இயக்குனரை பற்றி விமர்சனம் செய்ய எல்லா உரிமையும் இருக்கிறது.
  Points
  225
  about an hour ago ·   (10) ·   (0) ·  reply (0) · 
  Ravi  Up Voted
 • Yuva  
  நீங்க நல்ல படம் கொடுத்ததுக்கு அப்பறம் கொடுக்க வேண்டிய பில்டப்பை முன்னாடியே கொடுக்குறது உங்க தப்புங்க சார்.... நீங்கள் விமர்சனம் கொடுக்கலாம், நாங்க கொடுக்க கூடாத...? வெங்கட் சார் "நாங்கள் உங்களைக் கலாய்க்க ஆரம்பித்தால்? " நீங்கள் இப்படி சொல்வது மிகவும் தவறு.... தவறு செய்பவர்களை நீங்கள் சுட்டி காட்டம்மல், அனைவரையும் சொல்வது தவறு..... தங்க மீன்கள் எடுக்கும் போது ராம் சார் இந்த அளவுக்கு விமர்சனம் செய்யவில்லையே.... அந்த படத்தை யாரும் கலாயக்கவில்லை...
  about an hour ago ·   (8) ·   (0) ·  reply (0) · 
 • sure  
  என்ன கொடுமை சரவணன் இது ன்னு ஆரம்பிச்சதே நீங்க தான பாஸ்
  about 2 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
 • Yuva  
  அடுத்து நல்ல படம் எடுங்க சார் யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க.... ஆனால், வெங்கட் சார் " நாங்கள் உங்களைக் கலாய்க்க ஆரம்பித்தால்?" நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது....
  about 2 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
 • noushad  
  காசு கொடுத்து படம் பாக்குற எங்களுக்கு தான் தெரியும் இந்த வர்த்தம்,,,இப்படி மொக்க படம் யடுதுடு அவர் கொடுக்குற பில்ல்டுப்கு அழவே இல்ல ,,,இதுல டீசெர் கு வேற சுச்செச்ஸ் மீட் கொடும'
  about 2 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
 • sivakumar  
  தலைவன், ஜில்லா போன்ற மொக்க படங்களை காட்டிலும் அஞ்சான் ஒன்றும் கேவலம் இல்லை. வெங்கட் சொல்வது சரிதான்.
  about 2 hours ago ·   (2) ·   (10) ·  reply (0) · 
  Ravi  Up Voted
  selvakumar  Down Voted
 • mohamed saleem  
  முதலில் வெங்கட் தெளிவுடன்தான் பேசகிறாரா?? லிங்குசாமியை கடவுளுடன் ஒப்பிடுகிறார். கடவுளே தப்பு செய்கிறார் என்று சொல்கிறார். தப்பு செய்தவர் கடவுளாக முடியுமா?? முதலில் நாம் தெளிவுடன் இருக்கிறோமா என்பதை,சுயபரிசோதன்ைை செய்வத்ுது நல்லது.
  about 2 hours ago ·   (12) ·   (0) ·  reply (0) · 
  Ravi  Up Voted
 • Raj  
  The proudness of lingu is mocked hear not his failure! Mr. Venket think..
  Points
  7520
  about 2 hours ago ·   (5) ·   (2) ·  reply (0) · 
  PRASATH  Down Voted
 • vela  
  முடிந்தால் கலாய்த்து கொள்ளுங்கள்.. ஒருவர் தன் காரியம் வெற்றியில் முடியும் வரை அதை பற்றி பேசாமல் இருத்தல் நலம்.. நான் சொல்லல திருவள்ளுவர் சொன்னது.. வினையை விதைத்து விட்டு வினைய அறுத்து கொண்டு இருக்கிறார்.. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். இது உங்களுக்கு எனக்கு லிங்குசாமிக்கு எல்லாத்துக்கும் ஓகே!
  Points
  115
  about 2 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
  Ravi  Up Voted
 • nandagopal  
  அஞ்சான் படத்தில் யார் பாடல் எழுதியது ? இந்தி வேன்டாம் என்று போராடி வரும் நிலையில் எக் தோன் தேவைதானா இனிமேலாவது தமிழில் வேறு மொழியை சேர்க வேண்டாம் இன்றைய தமிழின் நிலைமை என்ன தெறியுமா ஆங்கிலதமிழாக மாரி வருகின்றது் இதையும் தடுக்கும்பட்சத்தில் தமிழில் பாடல்களை எழுதுங்கல் உலக வறலாட்றிள் தமிழுக்கு இடம் உண்டு
  about 2 hours ago ·   (11) ·   (0) ·  reply (0) · 
  Ravi  Up Voted
 • Ramesh  
  ஒரு மொக்கை படத்தை கிண்டலடிப்பது மீண்டும் அந்த இயக்குனர் அப்படி ஒரு படம் இயக்கி விட கூடாது என்பதாக இருக்க வேண்டும்.. ஆனால் மீண்டும் எந்த படமுமே இயக்கக்கூடாது என அவரை வருந்தவைக்க கூடாது.. லிங்குசாமி விஷயத்தில் ரசிகர்கள் செய்தது மாற்றிக்கொள்ள வேண்டிய ஒன்று..
  Points
  135
  about 2 hours ago ·   (1) ·   (2) ·  reply (0) · 
  Ravi  Down Voted
 • Selva  
  டைரக்டர் மனதை புண் படுத்த விரும்பவில்லை...வெற்றி தோல்வி எவருக்கும் நடப்பதே.. பேராசை பெரு நஷ்டம், இது முன்னோர் சொல்.. நீங்கள் படத்தின் பட்ஜெட்-டை ஏற்றி, அதிக லாபம் வேண்டும் என திரை அரங்கின் டிக்கெட் விலை ஏற்றி, சராசரி மக்களின் எதிர்பார்ப்பை தரமுடியவில்லை என்றால் எதிர்ப்புகள் வலுபெறும்.. இதில் பேராசை என்பது - பட்ஜெட் , திரை அரங்கின் டிக்கெட் விலை ஏற்றம்...etc நஷ்டம் என்பது - எதிர்ப்புகள் மட்டுமே.... 25 ரூபாயில் திருட்டு VCD இன்று கிடைகிறது. உங்கள் நஷ்டம் மற்றும் எதிர்ப்புகள் நீங்களாக தேடி கொண்டது ...இதில் பயன் பெரும் நபர் நாங்கள் அல்ல...திருட்டு VCD - காரர்கள் மட்டுமே....!!
  about 2 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
 • meeraj  
  கடவுள் எப்படி தப்பு செய்ய முடியும
  about 2 hours ago ·   (9) ·   (1) ·  reply (0) · 
  Ravi  Up Voted
  PRASATH  Down Voted
 • singaravelan  
  அப்ப படம் பிடித்தல் மட்டும் காசு கொடுங்க நு சொல்லுவிகலகாசு கொடுத்த பிறகு அது ரசிகனின் சொத்து அவன் என்ன சொன்னலும் கேடு தன அக வேண்டும் நல்ல இருக்கு சொல்லும் போது அதையும் வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே
  about 2 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  Ravi  Up Voted
 • Selvin Lloyd  
  தேவை இல்லாம tension வேண்டாம் venkat.. நீங்க பணத்த கொட்டி படம் எடுக்குறது என்ன உங்க வீட்ல உள்ளவங்க மட்டும் பார்க்குறதுக்கா?...ரசிகர்களுக்குத்தானே..விமர்சனம் வந்த மட்டும் என் இப்படி? நீங்க மக்களை கலாய்க்க போறீங்க?...அவங்க வந்து பார்த்தாதான் உங்க படம் ஓடும்...இல்லனா நீங்க ஓட வேண்டியதுதான்....எந்த புது படம் வந்தாலும் ஏதோ ஒரு TV ல மொத்தமா கூடி கும்மியடிச்சு மக்கள் எதிர் பார்ப்ப ஏத்துறது... ஆனா படம் மொக்காய கொடுக்க வேண்டியது...சாமானியனின் பணம் உங்களுக்கு இளக்காரமா?..லிங்குசாமியே பேசாமா இருக்கார்..நீங்க என் துள்ளுறீங்க?..அவரோட எல்லா படைப்புகழயுமா குறை சொன்னாங்க...தேவா இல்லாம build-up கொடுத்து...அதற்கு ஈடான படம் வரலனுதான் கலாய்க்குறாங்க..விமர்சனம் பிடிக்கலனா நீங்க படம் எடுக்குறத நிறுத்திக்கோங்க..வீணா மக்கள் எதிர்ப்ப சம்பாதிக்காதீங்க...
  about 2 hours ago ·   (8) ·   (0) ·  reply (0) · 
  Ravi · selvakumar  Up Voted
 • Tiruchengode  
  கரெக்ட் வெங்கட் பிரபு , 100 ./. உண்மை , ஏன் நா , சில தேவ இலாத பசங்க இப்படி பண்றாங்க BEFORE TROLLING LINGU WATCH HIS MOVIES , HITS FLOPS ARE COMMON
  about 2 hours ago ·   (2) ·   (8) ·  reply (0) · 
  PRASATH · Ram · Ram  Down Voted
 • PRASATH  
  நோஞ்சான் மாதிரி அஞ்சான் கொடுத்த லிங்குசாமிக்கு ,வூசி போன பிரியாணி கொடுத்த வெங்கட்பிரபு ஆதரவு கொடுப்பது ஆச்சர்யமில்லை. இப்படிக்கு :இவர்கள் இருவரிடம் படம் பார்த்து பணத்தை இழந்தவன் .
  Points
  170
  about 2 hours ago ·   (38) ·   (1) ·  reply (1) · 
  • suren  
   பிரசன்ட்>> நீங்கதான் ஒரு படத்தை தயாரித்து காட்றது...ரொம்ப பேசுறியே !!!!
   about an hour ago ·   (2) ·   (1) ·  reply (0) · 
   MSARUL  Up Voted
 • suresh  
  Engaloda oru nal sambalathai neengal edukum mokka padathula invest pani irukurom nenga kodi kodi ya sambathringa bankok poringa engaluku enga oruku poga kasu illa.. nan 400 rs sambarika 9hr vela seyanum neenga kodi kanakula sambarika oru producer போதும் Apa edhuku ticket rate 120
  about 2 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
 • Sudhar Ghilli  
  இவர் கேள்விக்கு என் பதில் : " நல்ல படங்களை ஏன் வெற்றி அடைய செய்யவில்லை என்றால் .... அப்ப நாங்க துணிங் ல இல்ல "
  about 2 hours ago ·   (12) ·   (0) ·  reply (0) · 
 • MUTHUPANDI  
  டியர் வெங்கட் சார்... நீங்க போட்ட பிரியாணியே இன்னும்தொன்ன்டைல நிக்குது சார்.. 150 ருபாய் கொடுத்து படம் பாக்குற எங்களுக்கு ... நீங்க பிரியாணி போடுறேன்னு சொல்லிடு புலியன் பிரியணிய போட்டுடிங்களே அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்கோ ...
  about 2 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
  Ram  Up Voted
 • arun  
  டியர் வெங்கட் தங்க மீன்கள் வெற்றி படம் தான் .. உங்க துறை செர்தவங்க இந்த மாத்ரி படம்கலகு பெருசா ஒபெநிங் பண்றது இல்லையே .. அஞ்சான் மாத்ரி படத்துக்கு ஓவர் பில்டுப் எதுக்கு .. அப்பரும் ஜி படம் மட்டும் என்ன சூப்பர் டுபேர் ஹிட் ஹ ?..
  about 2 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  Ravi  Up Voted
 • Deiva tamil  
  atuthu ungaloda படம் parpom எப்படின்னு அட் same டைம் லின்குசம்ய்கு கம்பெனி கொடுத்ததுக்கு thanks


thanx -the hindu

0 comments: