Sunday, September 14, 2014

நடிகை மைத்ரி- பாலியல் பலாத்காரம், - மத்திய அமைச்சர் மகன் கார்த்திக் கவுடா வாக்குமூலம்

கார்த்திக் கவுடா| கோப்புப் படம்.
கார்த்திக் கவுடா| கோப்புப் படம். 
 
 
திரைப்பட நடிகை என்பதால் மைத்ரியுடன் சில மாதங்கள் நண்பராக பழகினேன் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா வெள்ளிக்கிழமை பெங்களூர் போலீஸார் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 


கார்த்திக் கவுடா தன்னை ரகசிய திருமணம் செய்து, ஏமாற்றி பாலி யல் பலாத்காரம் செய்துவிட்டார் என நடிகை மைத்ரி கவுடா ஆர்.டி.நகர் போலீஸாரிடம் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி புகார் அளித் தார். இதையடுத்து, கார்த்திக் மீது பாலியல் பலாத்காரம், மோசடி, தடயங்களை அழிக்க முயற்சித்தது என 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கார்த்திக் கவுடாவை கைது செய்ய போலீஸார் தேடிவந்த நிலையில், அவருக்கு கடந்த 8-ம் தேதி நீதிமன் றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 



ரகசிய விசாரணை
இந்நிலையில், கார்த்திக் கவுடா யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 6.15 மணிக்கு பெங்களூர் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் பெங்களூர் மாநகர காவல் துறை துணை ஆணையர் ஓம் பிரகாஷ் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார். 



அதன்பிறகு கார்த்திக் கவு டாவை பெங்களூர் அம்பேத்கர் மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பரிசோதனையின் போது அவருடைய ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதிக்கப்பட்டது. அடுத்த ஓரிரு நாட்களில் அவரிடம் மடிவாளா தடயவியல் ஆய்வகத்தில் குரல் பரிசோதனை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். 



80 கேள்விகளுக்கும் ஒரே பதில்
இந்நிலையில், கார்த்திக் கவுடாவிடம் எத்தகைய விசாரணை நடைபெற்றது என ஆர்.டி.நகர் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, “மைத்ரியுடனான உறவு, காதல், ரகசிய திருமணம், பாலியல் பலாத்காரம், தொலைபேசியில் உரையாடியது, புகைப்பட மற்றும் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் குறித்து சுமார் 80 கேள்விகள் கார்த்திக்கிடம் கேட்கப்பட்டன. அத்தனை கேள்விகளுக்கும் பொய் என்ற பதிலையே அவர் அளித்தார். 



“நடிகை மைத்ரியை நான் திரு மணம் செய்துகொள்ளவில்லை. மஞ்சள் கொம்பு தாலி கட்டவில்லை. மங்களூரில் பார்ட்டி வைக்கவில்லை. அவரது புகார் அனைத்துமே பொய். இதில் அரசியல் சதி இருக்கிறது. எனது தந்தை சதானந்த கவுடாவின் புகழை கெடுக்கும் நோக்கத்தில் இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளது”என்றார். 



அவர் இறுதியாக ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அழுத்தமாக சொன்னார். அது என்னவென்றால், “நடிகை மைத்ரி கர்நாடகாவில் பிரபலமானவர். இதனால் எனது நண்பர்கள் பலருக்கு அறிமுகமாகி இருந்தார். அந்த வகையில் எனக்கும் தோழி ஆனார். அதனால் அவரோடு சில மாதங்கள் நண்பராக பழகினேன். மற்றபடி, அவர் என்னுடைய‌ காதலி அல்ல. மைத்ரி சொன்னது எல்லாமே பொய். வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்கள் பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளன” என்றார். 


இவ்வாறு ஆர்.டி.நகர் போலீஸார் தெரிவித்தனர். 


கார்த்திக் கவுடாவிடம் நடைபெற்ற விசாரணை குறித்து நடிகை மைத்ரி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறும்போது, “ஊடகங்களுக்கு தெரியாமல் போலீஸார் கார்த்திக் கவுடாவிடம் ரகசிய விசாரணை நடத்தியது ஏன்? எனது புகார் குறித்து கார்த்திக் ஏன் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. இதிலிருந்தே இவ்வழக்கிலிருந்து கார்த்திக் கவுடாவை காப்பாற்ற போலீஸார் முயற்சி செய்கின்றனர் என்பது புரிகிறது. எனக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன்” என்றார். 



thanx - thehindu



readers views 



1  நடிகைகளிடம் மட்டும் தான் பழகவேண்டுமென்று ஏதாவது வரை முறை இருக்கிறதா? அப்படி என்றால் என் வீட்டு பக்கத்தில் ஒரு நடிகை இருக்கிறார். அவருக்கு வயது வெறும் 80 தான். அவருடன் பழக வருகிறிர்களா? யார் காதில் பூ சுற்றுகிறீர்கள்?



2 இந்த நபர் பலே கில்லாடி ஆசாமி. இவரது அப்பா என்னவோ இந்தியாவில் மிக பிரபலமான நபர் என்ற நினைப்பு இவருக்கு. இப்போது தான் அமைச்சராகி உள்ளார். செய்வதை எல்லாம் செய்து விட்டு இப்போது பிதற்றுவது ஒன்றும் செல்லாது. சீக்கிரம் உள்ளே தள்ள வேண்டும் இந்த ஆசாமியை. (மோடி தான் இதை செய்ய வேண்டும் இல்லாவிடில் அவரது அமைச்சரவை பெயர் கெடும்) ஏற்கனவே ஒரு அமைச்சர் புகாரில் மாட்டி உள்ளார்.


3  முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போல என்ற பழமொழி கேள்விப்பட்டு இருக்கிறேன் .கார்த்திக் கவுடா விற்காக முழு பூசணிக்காயை எடுத்துவிட்டு முழு பலாபழம் என படிக்கவும் !


4  கார்த்திக் கவட நல்ல தமாஷ் பண்ணுகிறார்.நடிகை என்றால் எப்படி வேண்டுமானாலும் பழகுவார?ஓடி லிந்து மறந்து இருந்த இவருக்கு ஏன் ஜாமீன்?ஏன் இவர் சிறையில் இருந்தால் என்ன?நீதி மன்றமே கார்த்திக் போன்ற குற்றவாளிகளை உருவாக்குகிறது.அமைச்சரின் பேச்சையே காணோம்.இது போன்ற பிள்ளைகளை பெற்றால் என்னசெய்வது?


5 பொதுவாகவே ஆண் பெண் இருபாலர்களுக்கும் அதுவும் வாலிப வயதில் உள்ளவர்களுக்கு ஒருவரை ஒருவர் விரும்புகின்ற அளவில் ஈர்ப்புகள் ஏற்படுவது உண்டு என்றாலும், சில மாதங்கள் ஒன்றாக பழகினேன் என்று அமைச்சரின் மகன் திரு . கார்த்திக் கவுடா அவர்கள் கூறுவது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லுவது போலத்தான், பாதிக்கப்பட்டு இருப்பது பெண் என்ற வகையில் அந்த பெண்ணுக்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும், இன்றைய மத்திய ஆளும் கட்சியின் அமைச்சர் மகன் என்பதினால் நீதி சற்று தடுமாறினால், அல்லது தடம் மாற வைக்கப்பட்டால், இறைவனின் சந்நிதானத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாய் இருந்த அத்தனை பேர்களும் குற்றவாளியாய் நிறுத்தப்பட்டு இருப்பார்கள், அரசன் அன்றே கேட்பான், இறைவன் நின்று கேட்பான் என்பது அந்த காலம், சற்று



 பொறுத்து இருப்போம் இறைவனின் தீர்ப்பினை விரைவிலேயே காண காலங்கள் விடையளிக்கும். இப்போதும் காலங்கள் கடந்துவிடவில்லை திரு. கார்த்திக் கவுடா அவர்கள் நன்றாக சிந்தித்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாழ்வு கொடுப்பதே நன்மைகள் விளைவிக்கும் என்பதை உணருவது நன்று. 


6 கார்த்தி கவுடாவின் தாயாரே தன மகன் மனநிலை சரியில்லாதவன், அவனை மறந்துவிடு என மைத்ரியிடம் ஒரு முறை தெரிவித்ததாக செய்தி . அப்படிப்பட்டவரிடம் விசாரணையில் எப்படி உண்மை கிடைக்கும் ! பொறவு 80 கேள்வியென்ன 800 கேள்வி கேட்டாலும் அதே பதில் தான் !!



0 comments: