Friday, September 05, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (5 9.2014 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை


அமர காவியம் ,பொறியாளன் ,விலாசம் ,வலியுடன் ஒரு காதல் ,பட்டையைக்கிளப்பனும் பாண்டியா ,காதலைத்தவிர வேறொன்றுமில்லை,வங்கக்கரை,கள்ளசாவி#5/9/14
1  அமர காவியம் -

அமர காவியம் படத்தில் உறைய வைக்கும் உண்மை சம்பவம்!

Amara Kaaviyam movie will show the real story
நடிகர் ஆர்யா தன் தம்பி சத்யாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள அமர காவியம் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை நடிகராக அறிமுகப்படுத்திய நான் பட இயக்குநர் ஜீவா ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மியா ஜார்ஜ் நடித்திருக்கிறார். அமர காவியம் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற இசைவெளியீட்டுவிழாவுக்குப் பிறகு அமர காவியம் படத்தின் பாடல்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளன. எனவே அமர காவியம் படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் நம்பிக்கையில் இருக்கிறார் தனது ஷோ பீப்பிள் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கும் நடிகர் ஆர்யா.அமர காவியம் படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதை முன்னிட்டு படத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்யலாமா என்ற எண்ணத்தில் கடந்த வாரம் மீண்டும் அமரகாவியம் படத்தை பார்த்துள்ளனர். படம் பார்த்த அனைவருமே ஒட்டுமொத்தமாக சொன்ன கருத்து... க்ளைமேக்ஸ், படம் பார்ப்பவர்களை உறைய வைக்கும் என்பதுதானாம். இந்தக் காட்சியை தான் கேள்விப்பட்ட 1982ல் நடந்த, ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்தே உருவாக்கியிருக்கிறாராம் இயக்குநர் ஜீவா ஷங்கர்.இந்த உண்மை சம்பவத்தை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியாக வைக்க வேண்டும் என்பதற்காகவே அமரகாவியம் படத்தின் கதை 80களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளதாம். க்ளைமாக்ஸ் பற்றி இப்ப்டியொரு பாராட்டு கிடைத்ததினால் அமரகாவியம் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜீவா சங்கர்.
 
 
2  பொறியாளன்  -

வேலையில்லா பட்டதாரி, பொறியாளன் படத்தின் கதைகள் ஒன்றா? இயக்குனர் விளக்கம்

உதயம் என்.ஹெச்.4’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனின் ’கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி’ தயாரித்துள்ள படம் ‘பொறியாளன்’. ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் தெலுங்கு நடிகை ரக்‌ஷிதா. இவர் தமிழில் ஆனந்தியாக பிரபுசாலமன் இயக்கும் ‘கயல்’ படத்தில் நடித்து வருகிறார். ‘உதயம் என்.ஹெச்.4’ படத்தின் இயக்குனர் மணிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, இயக்கியிருக்கிறார் தாணு குமார். எம்.எஸ்.ஜோன்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.பொறியியல் படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் ஒரு துடிப்பு மிக்க இளைஞன், கட்டுமானப் பணியில் உலக சாதனை படைக்கத் துடிக்கிறார். அவனுக்கு கட்டுமானப்பணியில் எதிரிகளால் நிறைய சிக்கல்கள் ஏற்படுகிறது. அந்த சிக்கல்களை அவர் எப்படி முறியடிக்கிறார் என்பதே படத்தின் கதை. எனவே, சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் கதையும், பொறியாளன் படத்தின் கதையும் ஒன்றாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்தது.


ஆனால் தற்போது இவ்விரு படங்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிலளித்த இயக்குனர் தாணு குமார், “பொறியாளன் ஆரம்பிக்கப்பட்ட போது வி.ஐ.பி ஆரம்பிக்கப் படவேயில்லை. பிறகுதான் ஆரம்பமானது. இதில் பணியாற்றும் வேல்ராஜுக்கே ஒருகட்டத்தில் இரண்டும் ஒரே மாதிரி வருகிறதோ என்கிற சந்தேகம் எழுந்தது. பிறகு இந்தக் கதையை முழுவதுமாகக் கேட்டு அதுபோல் இது இல்லை என்று சமாதானமானார்…” என்று கூறினார்.

 3  விலாசம் -Movie Name : Vilaasam 
Starring: Pawan, Sanam Shetty
Director: Pa Rajaganesan  
Music: Ravi Ragav

Nanba Nanba - 0.9MB
 
 
 
 
 
வலியுடன் ஒரு காதல் 


மாதாஸ் பிளஸ்ஸிங் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “வலியுடன் ஒரு காதல்” இந்த படத்தில் புதுமுகம் ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
 
 
 
கதாநாயகியாக கௌரி நம்பியார் நடிக்கிறார்.இவர் நடிகை ராதாவின் சகோதரி மகள். கார்த்திகா, துளசி ஆகியோரின் சகோதரி இவர். மற்றும் உமாரவி, வின்சென்ட் சுரேஷ், பஞ்சர்பாஸ்கர், சபா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
 
 
ஒளிப்பதிவு - எஸ்.செல்வகுமார் 
 
 
இசை - ஜே.கே.செல்வா
பாடல்கள் - உமாசுப்பிரமணியம்
கலை - சுந்தர்ராஜன்
நடனம் - கேசவ் /
எடிட்டிங் - சரவணவேல்
எழுதி இயக்கி இருப்பவர் - சஞ்சீவன்
தயாரிப்பு மேற்பார்வை - தண்டபாணி
தயாரிப்பு - ரவிராஜேஷ் 
 
 
பட பற்றி இயக்குனர் சஞ்ஜீவனிடம் கேட்டோம்.....
 
 
கிராமத்தில் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் ராஜேஷ். பக்கத்து ஊரில் உள்ள பணக்கார நாயகியை காதலிக்கிறான்.இந்த காதலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. முடிவில் காதல் ஜெயித்ததா இல்லையா? என்பதைத் தான் திரைக்கதையாக்கி இருக்கிறோம்.
 
 
கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு திகைப்பூட்டும் விதமாக உருவாக்கப் பட்டுள்ளது. 
 
 
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
 
 
பட விரைவில் திரைக்கு வருகிறது என்றார் இயக்குனர் சஞ்சீவன்.
 
 
 
 5  பட்டையைக்கிளப்பனும் பாண்டியா
 
 
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோவாகி விட்டதையடுத்து, இப்போது சின்னத்திரையில் இருந்து இமான் அண்ணாச்சியும் சினிமாவுக்கு வந்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். பிரபுசாலமனின் கயல் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி, அது வேற இது வேற, விதார்த் நடித்துள்ள பட்டைய கிளப்பனும் பாண்டியா உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

இதில், பட்டைய கிளப்பனும் பாண்டியா படத்தில் ஒரு காட்சியில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளாராம் இமான் அண்ணாச்சி. இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் மின்னல் தண்டபாணி என்ற பஸ் முதலாளி வேடத்தில் நடிக்கிறேன். கே.பி டிராவல்ஸ் மாதிரி எனது நிறுவனத்தை பெரிய அளவில் வளர்க்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருக்கும். ஆனால், என் பஸ்ஸை ஓட்டும் டிரைவர் விதார்த், கண்டக்டர் சூரி இருவரும் வரவுக்கு மிஞ்சிய செலவு கணக்கை காண்பித்து என்னை நஷ்டப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.

மேலும், இந்த படத்தில் எனக்கு காமெடியான வேடம் என்றாலும், ரிஸ்க்கான காட்சியிலும் நடித்திருக்கிறேன். அதாவது, ஒரு காட்சியில் 60 அடி ஆழமுள்ள ஒரு கிணற்றுக்குள் என்னை குதிக்க சொன்னார் டைரக்டர். ஆனால் கிணற்றை எட்டிப்பார்த்தபோது, நான் பதறி விட்டேன். இருப்பினும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடிக்க ரெடியாகினேன்.

அப்படி நான் குதித்தபோது, 8 முதல் 10 வினாடிகள் வரை ஆனது. ஒரு வழியாக குதித்து விட்டேன். அப்பாடா தப்பிச்சேன் என்று நினைத்தபோது, காட்சி சரியாக பதிவாகவில்லை என்று கேமராமேன் சொல்ல, மீண்டும் அந்த காட்சியை ஒன்மோர் கேட்டார் டைரக்டர். அதனால், மறுபடியும் கிணற்றுக்குள் குதித்தேன். ரிஸ்க்கான காட்சிதான் என்றாலும், கதைக்கு அவசியப்பட்டதால் நடித்தேன் என்று சொல்லும் இமான் அண்ணாச்சியிடம், எதற்கு ரிஸ்க், டூப் நடிகரை யூஸ் பண்ண வேண்டியதானே? என்றதற்கு, நமக்காக இன்னொருவரை கஷ்டப்படுத்துவதை நான் விரும்பவில்லை என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொள்கிறார்.
 
 
 
6  காதலைத்தவிர வேறொன்றுமில்லை, 


saranya mohan returns
தங்கச்சி பாப்பா கேரக்டரில் தமிழில் அறிமுகமானவர் சரண்யா மோகன். தொடர்ந்து தங்கச்சி கேரக்டராக வாய்ப்பு வரவே கேரளா பக்கம் போய்விட்டார். "ஞான் இப்போள் வல்லிய பெண்ணாக்கும் ஹீரோயினாயிட்டுதன்னே ஆக்ட் செய்யும்" என்றார். சிறிய இடைவெளிக்குப் பிறகு வெண்ணிலா கபடிக் குழுவில் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு விஜய் பட வாய்ப்பு என்பதால் மீண்டும் தங்கச்சி கேரக்டருக்கு இறங்கி வந்தார். பிறகு அழகர் சாமியின் குதிரையில் ஹீரோயின் ஆனார். இப்படி மாறி மாறி நடித்து வந்த சரண்யா இனி ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று உறுதியான முடிவு எடுத்து விட்டார். அந்த முடிவுக்குப் பிறகு இப்போது அவர் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் படம் "காதலைத்தவிர வேறொன்றுமில்லை". பிரியமானவளே, நினைத்தேன் வந்தாய், வசீகரா போன்ற படங்களை இயக்கிய செல்வபாரதி இயக்குகிறார். சாட்டை யுவன் ஹீரோ. மெரீனா, பசங்க பாணியிலான சின்ன புள்ளைங்க கதையாம். டியூசன் செண்டரில் படிக்கிற சின்னப் புள்ளைங்களின் காதல் படமாம். சரண்யா மோகன் டியூசன் டீச்சராம். யுவன் அவரிடம் பாடம் படிக்க வந்து காதல் பாடம் கேட்பவராம்.

திரும்பவும் சரண்யாவை தங்கச்சி கேரக்டருக்கு அனுப்பிடாதீங்கப்பு...!
 
 
 
வங்கக்கரை
 
 
நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் கே.டி.முருகன். இவர் தனது மீனவ நண்பர்களுடன் இணைந்து நாகை பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு பட நிறுவனத்தை துவங்கி "வங்கக்கரை" என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறார். அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். ஜோதிஷா, சைனு என்ற சிறுபட்ஜெட் பட நாயகிகள்தான் ஹீரோயின். "தினமும் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருப்பன் நாகை மீனவன். எதிர் கரையில் சிங்கள துப்பாக்கி, இக் கரையில் நம்ம போலீஸ் துப்பாக்கி, நடுக்கடலில் சுறா, திமிங்கிலம் இத்தனைக்கும் இடையில் வாழும் மீனவர்களின் கதை. எங்கள் கதையை யாரும் ஒழுங்காக சொல்லவில்லை. அதனால் நாங்களே படம் எடுக்க வந்துவிட்டோம்" என்கிறார் கே.டி.முருகன்.
 
 
 
 
8  டி.வி.எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.ஆர்.பி. தயாரிக்கும் படத்துக்கு கள்ளசாவி என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் நாயகனாக மோகன்ராஜ் நடிக்கிறார். நாயகியாக வர்ஷா நடிக்கிறார். இவர் திருடா திருடியில் இரண்டாம் கதநாயகியாக நடித்தவர். கவின் கார்த்திக், ரீத்து ராய் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ராஜேஷ்வரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

குடும்ப ரகசியங்களை சுய பரிதாபத்தில் அடுத்தவரிடம் கூறும்போது, அவர்கள் அந்த சூழலை தங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர். இதன் மூலம் கள்ளக்காதல்கள் உருவாகின்றன. வேலைக்காரி சதிக்கு ஆளாகி அவள் மோக வலையில் விழுந்து தன் குடும்பத்தை எப்படி அழிவில் ஒருவன் தள்ளுகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இளம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

இந்த படத்தின் போட்டோக்கள் அடக்கிய சி.டி. தவறி விட அதை யாரரோ இண்டர்நெட்டில் வெளியிட்டு விட்டனர். இன்று வரை அதை லட்சம்பேர் பார்த்துள்ளனர். கவர்ச்சியுடன் அழகான கருத்தும் படத்தில் உள்ளது. படப்பிடிப்பு முடிந்து பெரும் சிரமங்களுக்கு இடையில் தணிக்கை செய்யப்பட்டு விரைவில் திரைக்கு வர உள்ளது.

இசை: ராஜ்பாஸ்கர், ஒளிப்பதிவு: என். கிருஷ், எடிட்டிங்: சாய்கிருஷ்ணா அடுத்த மாதம் இப்படம் ரிலீசாகிறது. 
 
 
 
 
 
thanx  - dinamalar  , dinamani , malaimalar . all cine news magazines

0 comments: