Thursday, September 18, 2014

அரண்மனை

தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்குப் பிறகு சுந்தர் சி இயக்கும் படம் அரண்மனை. 


இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதுடன் அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். மேலும் இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்க, ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சரவணன், நிதின் சத்யா கோவை சரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், சந்தான பாரதி, ஆர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன், கிரேன் மனோகர், இயக்குனர் ராஜ்கபூர், வெள்ளை பாண்டி தேவர், சிவஷங்கர் மாஸ்டர், சீர்காழி சிவசிதம்பரம், பாடகர் மாணிக்கவிநாயகர் என ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.


“இது என்னுடைய வழக்கமான படமில்லை. திகில் சஸ்பென்ஸ் கலந்த ஹர்ரர் மூவி…” என்கிறார் சுந்தர் சி. இந்தப் படத்தில் முக்கியமாக இடம் பெறும் அரண்மனைக்காக பல இடங்களில் தேடியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்த மாதிரி அரண்மனை எங்கு தேடியும் அமையவில்லையாம். மேலும் தேடினால் சரிபட்டு வராது என்பதை உணர்ந்த சுந்தர்.சி ஐதராபாத்தில் அரண்மனை போன்ற மிகப் பிரம்மாண்டமான செட்டை அமைத்து, முழுக்க முழுக்க அந்த செட்டில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார். 


மிகப் பிரமாண்டமான இந்த அரண்மனையை கோடி ரூபாய் செலவில் 400 ஊழியர்கள் 3 மாத காலம் இரவு, பகலாக உழைத்து உருவாக்கியுள்ளனர். பரத்வாஜ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சுந்தர்.சியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யு.கே.செந்தில்குமார் தான் ஒளிப்பதிவு செய்கிறார். தனது வழக்கமான காமெடி பாணியிலிருந்து விலகி இதனை ஒரு த்ரில்லார் படமாக இயக்குகிறார் சுந்தர்.சி. 
அரண்மனை படத்தில் தான் சம்பந்தப் பட்டுள்ள காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன என்று வந்துள்ள செய்திகளை நடிகை ராய் லக்ஷ்மி மறுத்துள்ளார். மேலும், அவருக்கும் இயக்குனர் சுந்தர்.சி.க்கும் பனிப்போர் நிலவுவதாகவும் வெளியாகியுள்ளது வெறும் வதந்திதான் என்றும் அவர் கூறியுள்ளார்.இது முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ள அவர், தான் முழுவதும் அந்தப் படத்தைப் பார்த்ததாகவும், தான் நடித்துக் கொடுத்த எந்தக் காட்சியும் வெட்டப்படவில்லை என்றும், தனக்கும் சுந்தர்.சி.க்கும் எந்தவிதக் கருத்துமோதலும் தகராறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படம் அழகாக வெளிவந்துவிட்டது, இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் ஒட்டுமொத்தக் குழுவுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதகாவும் அவர் கூறியுள்ளார்.


இரும்புக் குதிரை, அரண்மனை இரண்டின் வெற்றியையும் தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

வினய், ஹன்சிகா, ஆன்ட்ரியா, லக்ஷ்மிராய், சந்தானம் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்களை வைத்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் -‘அரண்மனை’. தொடர்ந்து காமெடிப்படங்களை எடுத்து காமெடி ஸ்பெஷலிஸ்ட்டாக பெயர் வாங்கிய சுந்தர்.சி முதல்முறையாக ‘ஹாரர்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

அரண்மனை ஹாரர் படமாக இருந்தாலும் சுந்தர்.சியின் வழக்கமான காமெடிகளும் இப்படத்தில் இருக்குமாம். தெய்வசக்தி நிறைந்த பெண்ணாக ஹன்சிகா இப்படத்தில் நடித்திருக்கிறாராம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் அவருக்கு இருக்குமாம். இப்படத்தில் முக்கிய வேடமொன்றிலும் சுந்தர்.சி நடித்திருக்கிறார்.


வரும் 19ஆம் தேதி வெளியாகவிருக்கும் அரண்மனை படத்தை அண்மையில் தணிக்கைக்குழுவினர் பார்த்தனர். படத்தில் வன்முறை, ஆபாசம் இல்லை என்பதால் அரண்மனை படத்துக்கு தணிக்கைக்குழுவினர் யு சான்றிதழ் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தனர்.ஆனால் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் அரண்மனை படத்தில் பயமுறுத்தும் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருப்பதால் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். குழந்தைகளுடன் பெரியவர்களும் அமர்ந்து பார்க்கும் படம் என்ற அடிப்படையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.யு/ஏ சான்றிதழ் கொடுத்தால் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது. எனவே அரண்மனை படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கவலையில் இருக்கிறார்கள்.


ஒரு படத்தை இரண்டு, அல்லது இரண்டுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து தயாரிப்பார்கள்.. இது வழக்கமானதுதான். ஆனால் இரண்டு பேர் சேர்ந்து ஒரு படத்தை வாங்கி திரையிடும் விநியோகஸ்தர்கள் வேலையைச் செய்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதே..?வினய், ஹன்ஸிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி நடிப்பில் சுந்தர் சி தயாரித்து இயக்கியிருக்கும் ‘அரண்மனை’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து திரையிடப் போகிறார்களாம். இன்றைக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
நேற்றுவரையிலும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மட்டுமே இந்த அரண்மனை படத்தை திரையிடப் போவதாக சொல்லி வந்தது. அதற்குள் ஏன் இந்த மாற்றம் என்று தெரியவில்லை. திரு.இராம.நாராயணனின் மறைவுக்கு பின்பு அவருடைய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இராம.நாராயணன் படங்களைத் தயாரிக்காமல் இருந்தபோது விநியோகஸ்தராக பல படங்களை வாங்கி திரையிட்டு வந்தார். அந்த அனுபவத்தில் அவருக்கென்று சில குறிப்பிட்ட திரையரங்குகள் எப்போதும் காத்திருக்கும். அவைகளோடு இப்போது ரெட் ஜெயண்ட் மூவிஸின் படங்களை திரையிடும் வழக்கமான தியேட்டர்களும் இந்த அரண்மனைக்காக புக் ஆகியிருக்கும் போல தெரிகிறது..!ஆக.. இந்த ‘அரண்மனை’ நல்ல வெள்ளிசத்தில்தான் வரப் போகிறது..!

thanx - dinamani , dinamalar ,123 cinema , allcinemagazines

0 comments: