Friday, September 12, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (12 9.2014 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

சிகரம் தொடு  - அரிமா நம்பிக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் தயாராகியிருக்கும் படம் 'சிகரம் தொடு'. 'தூங்கா நகரம்' திரைப்படத்தை இயக்கிய கௌரவ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி நடக்கும் கொள்ளைதான் இப்படத்தின் மையக் கருத்தாகும். இந்தக் கொள்ளையை துப்பு துலக்கும் போலீஸ் அதிகாரி வேடத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார்.

மலையாளத்தில் பிருத்விராஜ், ஜெய்சூர்யா, நரேன், பாவனா நடிப்பில் வெளிவந்த ராபின்ஹுட் திரைப்படம் போல் இப்படம் இருக்கும் என்று தமிழ் சினிமா திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் விக்ரம் பிரபுவின் தந்தை வேடத்தில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்த நடிகர் அஜித் தொலைபேசியில் விக்ரம் பிரபுவை அழைத்து பாராட்டியதாக தனது டுவிட்டர் இணையதளத்தில் விக்ரம் பிரபுவே குறிப்பிட்டுள்ளார். 


விக்ரம் பிரபு சிகரம் தொடு படத்தில் நடித்து வருகிறார். தூங்கா நகரம் டைரக்ட் செய்த கவுரவ் இதனை டைரக்ட் செய்கிறார். யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இமான் மியூசிக், விஜய் உலகநாதன் கேமரா.  இதன் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரித்துவாரில் உள்ள சண்டிதேவி கோவிலில் தொடங்கியது. முதன் முறையாக கங்கோத்ரி கோவிலில் ஷூட்டிங் நடத்தி உள்ளனர். இது ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவை சொல்லும் படம். விக்ரம் பிரபுக்கு ஜோடி மோனல் கஜ்ஜார். இப்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னையிலும், குலுமானலியிலும் நடந்து வருகிறது. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

சிகரம் தொடு  -  சினிமா விமர்சனம் 

http://www.adrasaka.com/2014/09/blog-post_79.html
2 வானவராயன் வல்லவராயன்கழுகு சுமாராகப் போனதற்கே கடுமையான உற்சாகத்தில் இருக்கிறார் கிருஷ்ணா. அடுத்து அவர் நடிக்கும் படம் வானவராயன், வல்லவராயன்.

குங்குமப்பூவூம் கொஞ்சும்புறாவும் படத்தை இயக்கிய ரா‌ஜ் பிரபு இந்தப் படத்தை இயக்குகிறார். சகோதரர்கள் இருவரைப் பற்றிய கதை என்று காற்றில் செய்தி உலவுகிறது. ஒரு சகோதரர் கிருஷ்ணா. இன்னொருவர் யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் தெ‌ரியவில்லை. ஆனால் இசையமைப்பாளர் யார் என்பதை முடிவு செய்திருக்கிறார்கள்.

ரா‌ஜ் பிரபுவின் குங்குமப்பூவுக்கு இசையமைத்தவர் யுவன். கிருஷ்ணாவின் கழுகுக்கும் அவரே இசை. அதனால் அதிக ஊசலாட்டமின்றி யுவனையே இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்


 தேவர் பிக்சர்ஸ் ஆர்.ஐயப்பன் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் 'வானவராயன் வல்லவராயன்'இந்த படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், சௌகார்ஜானகி,S.P.B.சரண்       தம்பி ராமைய்ய, கோவைசரளா, ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணா, பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பழனிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராஜமோகன் இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குநர் ராஜமோகன் கூறுகையில், "அண்ணன் தம்பி பாசம்தான்  கதையோட்டம்...அதை காமெடியாக சொல்கிறோம் படம் ஆரம்பம் முதல் கடைசிவரை காமெடிதான்.திருமண மண்டபங்களில் “மணமகளே மருமகளே வா வா” என்ற பாடல் மட்டுமே ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது .இனி வானவராயன் வல்லவராயன் படத்தில் இடம் பெரும் வாங்கம்மா ....வாங்கப்பா வாங்கண்ணே ....வாங்கத்தே   வா மாமா.....என்ற உறவுகள் அனைவரையும் கல்யாணத்திற்கு அழைக்கும் பாடலும் கேட்க ஆரம்பிக்கும்.

இந்த பாடல்காட்சி ஒரு திருமண மண்டபத்தில் படமாக்கப் பட்ட போது அலங்காரத்திற்காக தினமும் 50,000 ரூபாய் செலவில் மலர் வாங்கப்பட்டு திருமண மேடை அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. பூ வாங்க மட்டும் 2,50,OOO செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர்.

வானவராயன் வல்லவராயன் - சினிமா விமர்சனம்


3 பர்மா ட்ரெயலரைப் பார்த்துவிட்டு, அதைக் காப்பி என்று கருத்திட்ட ஃபேஸ்புக் கருத்தாளர்களை துணிச்சலுடன் அணுகியிருக்கிறார் புதுமுக இயக்குநர் தரணிதரன். 


மைக்கேல், ரேஸ்மி மேனன், அதுல் குல்கர்னி, சம்பத் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் இம்மாதம் 12-ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் 'பர்மா'. தரணிதரன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சுதர்சன் இசையமைத்து இருக்கிறார். 


'பர்மா' படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வந்தார் தரணிதரன். படத்தின் ட்ரெய்லர்களுக்கு பலரும் 'கான் இன் 60 செகண்ட்ஸ்' (GONE IN 60 SECONDS) படத்தின் காப்பி என கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 


இது குறித்து இயக்குநர் தரணி தரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "எனது 'பர்மா' ட்ரெய்லருக்கு பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதில் சிலர் இப்படத்தை நான் 'Gone in 60 Seconds' என்ற படத்தில் இருந்து காப்பியடித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 


'GONE IN 60 SECONDS' படத்தை இதுவரை பார்க்காதவர்கள், தயவு செய்து பர்மா பஜாரில் உள்ள FINAL DRAFT என்ற டி.வி.டி. கடையில் வாங்கி கொள்ளவும். அங்கு சென்று எங்கள் படத்தின் பெயரைச் சொன்னால் 10% தள்ளுபடி கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.4  ஹாலிவுட் படமான,’லூஸி’ தமிழில் ‘துடிக்கும் துப்பாக்கி’ என்று மொழிமாற்றம் செய்யப்படுகிறது.சயின்ஸ் பிக்சன் ஆக்ஷன் படமான இதை, லுக் பெஸன் இயக்கியுள்ளார். மோர்கன் பிரீமென், சோய் மின் சிக் உட்பட பலர் நடித்துள்ளனர். தைவானில் படிக்கும் அமெரிக்க பெண்ணான லூஸி, ஒரு கொள்ளைக் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறாள். அந்தக் கூட்டம் அவளின் உடலில் ஒரு வகை கெமிக்கலை செலுத்துகிறது. அதன் காரணமாக புது அவதாரம் எடுக்கிறாள் லூஸி. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை. லூஸியாக நடித்துள்ள ஸ்கார்லெட் ஜோகன்சன் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் விதமாக நடித்துள்ளார். தமிழில் இந்தப் படத்துக்கு ‘துடிக்கும் துப்பாக்கி’ என்று டைட்டில் வைத்துள்ளனர் -thanx - dinamalar , malaimalar , dinamani , chennai on line , web duniya , the hindu

0 comments: