Sunday, September 28, 2014

ஜெயலலிதா தீர்ப்பு எதிரொலி: ட்விட்டரில் பொங்கிய ஆதங்கமும் ஆவேசமும்

இன்று ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருக்கும் #Jayaverdict .
இன்று ட்விட்டரில் டிரெண்டிங்கில் இருக்கும் #Jayaverdict .
18 ஆண்டு காலத்துக்கு பின்னர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், ட்விட்டரில் இந்த தீர்ப்பு குறித்து விவாதம் வலுத்ததால், இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் #Jayaverdict முதல் இடத்தை பிடித்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அனைவரது பார்வையும் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் இறுதி கட்டத்தை எதிர்நோக்கி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று(சனிக்கிழமை) ட்விட்டரில் இந்திய அளவில் #Jayaverdict என்ற ஹேஷ்டேக் முதல் இடத்தில் உள்ளது.
அந்த ஹேஷ்டேகில் பலர் இந்த தீர்ப்பு குறித்து தங்களது சுய கருத்துக்களை அளித்து வருகின்றனர். கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று புகார் அளித்தார்.
இதனிடையே ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், தவறு செய்யும் அரசியல் தலைவர்களுக்கு இதன் மூலம் பாடம் கிடைக்கும் என்ற நிலைபாட்டிலும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமெரிக்க பயணம், ஐ.நா. பொது சபையில் அவரது முதல் உரை என்பதான விஷயங்களில் கடந்த இரண்டு நாட்களாக தேசிய ஊடகங்கள் கவனம் செலுத்திய நிலையில், அவை அனைத்தின் கவனமும் முற்றிலும் இன்று(சனிக்கிழமை) ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு மீது திரும்பியுள்ளது.
இவை ட்விட்டரில் பிரதிபலிக்கத் தவறவில்லை. இந்திய அளவில், ஜெயலலிதா சொத்து குவிப்பு குறித்து விமர்சனமும், பல விதமான எதிர்மறை கருத்துக்களையும் இணையவாசிகள் #Jayaverdict ஹேஷ்டேகில் பகிர்ந்து வரும்கின்றனர். அந்த ட்வீட்டுகளில் சில,
ஆர்ச்சீ (@JhaSanjay): இனி ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் கடவுளை வேண்ட வேண்டும்.
கிருஷ்ணா (@Krishna #BDL ‏@Atheist_Krishna): என்ன நடிப்புடா... ஆஸ்கர் தான்_ (அதிமுக ஆதரவாளர்கள் ஒப்பாரி வைத்து சோகத்தை அனுசரிக்கின்றனர்)
லதா ஸ்ரீநிவாசன் (@latasrinivasan ): தமிழகம் எங்கம் கலவரமாக உள்ளது என்று செய்திகள் வருகின்றன.
ஜெயசீல பெல்காகுமார் (@jaysheel77): ஒரு சிறிய தவறு பல ஆண்டு கால நல்ல செயல்களை எல்லாம் பாதித்துவிடுகிறது. ஜெயலலிதாவுக்கு பின் அவரது கட்சியை நிகரான ஆளுமையுடன் செயல்பட யாரும் இல்லை.
விக்னேஷ் சுரேஷ் (@VignaSuresh): எனக்கு ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும். ஆனால், இந்த நேரத்தில் நமது நீதித்துறையை நினைத்து பெருமைப்படுகிறேன்.
விம்ரம் சந்திரா (@vikramchandra): பெங்களூருவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மனோஜ்குமார் (@Manoj Kumar): எனக்கு தெரிந்த ஒரு அதிமுக ஆதரவாளர், கடவுள் கூட எனது தலைவரை தண்டிக்க முடியாது என்றார். இந்தியாவில் இது போல நிறைய முட்டாள்கள் உள்ளனர்.
மீனாட்சி மகாதேவன் (‏@m_meenakshi86) : அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருங்கள். தமிழகத்தின் நிலைமை இப்போது மோசமாக உள்ளது.
ஹரிஹரன் கஜேந்திரன் (@hariharannaidu): வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஜெயலலிதா அதே கம்பீரத்துடன் எழுந்து வருவார்.
வாண்டரிங் மொங்க் (@muralispeak): யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், தீர்ப்புக்கு பின்னரும் ஜெ மீண்டும் எழுந்து வருவார்.
அன்புடன் பாலா (@AmmU_MaanU): ஜெயலலிதா பாடம் கற்கவில்லை. நன்கு தேர்ந்த ஆளுமை பெற்றவர், தகுதி வாய்ந்த முதல்வர். என்ன பயன்? அவர், எது நல்லது, யார் நல்லவர், என்ன செய்வது, என்ன செய்யக் கூடாது என்று அவருக்கு தெரியவில்லையே.
ஸ்ரீநாத் முரளி (@ Srinath Murali_msn): அம்மா என்றும் நினைவில் நிற்பார். ஆனால் இந்த தீர்ப்புக்குப் பின் தமிழகத்தின் நிலைமை என்ன ஆகும் என்று தான் தெரியவில்லை.
கீதா (@ geetdiamonds): அநீதி இழைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் செய்து சிறிய தவறுக்கு, பதவியில் இருக்கும் ஒருவரை தண்டிக்கலாமா? என்ன தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள அரசியல்வாதிகள் தியாகிகளா? 


 • Ponnarasu Mahalingam Senior Systems Engineer at Infosys 
  அப்போது ஜெயலலிதா எப்படி இருந்தார் என்பது எனக்கு தெரியாது. இப்போது மக்களுக்கு நிறைய நல்லது செய்கிறார் என்றே தோன்றுகிறது . நீதி மன்றம் இவரை தண்டித்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட MLA பதவி பறிக பட்டது தவறு. என்னை போன்ற லட்ச கணக்கான மக்களின் வாக்கு வீணா ? நீதி மன்றம் இவரை தவறானவர் என்கிறது . தவறு செய்தவரை மக்கள் தேர்ந்தேடுபார்களா ? இப்போது தேர்தல் வைத்து பாருங்கள் இவரை(assume she able to contest ) எதிர்த்து நிற்பவர் டெபொசிட் வாங்குவாரா என்று பார்ப்போம்.
  about an hour ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
     
 • Koteeswaran  
  ஜெயலலிதா அம்மையாரின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை DMK தொண்டர்கள் கொண்டாடி மகிழ்வது மிகவும் கீழ்த்தரமானது. அவரை தேர்தலில் தோற்கடித்து கொண்டாடினால் நல்லது. அய்யா தொண்டர்களே கொஞ்சம் மிச்சம் வையுங்கள். அடுத்து உங்கள் தலைவர் மற்றும் மாறன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உள்ளே போகும் போது கொண்டாட வேண்டும்.
  about an hour ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
 • Koteeswaran  
  100 cr பெனால்டி ரொம்ப ஓவர்.
  about an hour ago ·   (3) ·   (1) ·  reply (0) · 
 • ashok  
  We must findout a good leader for tamilnadu future
  about an hour ago ·   (1) ·   (0) ·  reply (1) · 
 • paramasivam  
  அவங்க கொள்ளை அடிச்சா சொத்தோட இன்றைய சந்தை மதிப்பு...4500 கோடிகள்....இருந்தாலும் நீங்க சொல்ற மாதிரி அபாரராதம் சொத்தை விட ரொம்ப அதிகம் thaan
  about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • saam  
  தாமதமாகவாவது நீதி வென்றது... இது மக்கள் பணத்தைச் சுரண்டித் தின்னும் அனைத்து ஊழல் அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடம்... யாரொருவரையும் விட தேசமே பெரியது.... சத்தியமே என்றும் வெல்லும்.... ஜெய்ஹிந்த்...
  Points
  2085
  about 2 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
 • THIRU  
  திரு: எனக்கு ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும். ஆனால், இந்த நேரத்தில் நமது நீதித்துறையை நினைத்து பெருமைப்படுகிறேன் இதே போல கருணாநிதி ராமதாஸ் வைகோ விஜயகாந்த் ரஜினிகாந்த் யாரா இருந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும் I LOVE INDIA
  about 2 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
 • jinnairfan  
  போலியான அரசியல்வாதிகளுக்கு சரியான சாட்டையடி கொடுத்த need both I rail கும் நீதிபதி குன்ஹா அவர்களுக்கும் இந்திய தலைவணங்குகிறது .... இனி ஊழல் செஇபார்கல் யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம்... இன்று புரட்சி தலைவி அம்மா .... நாளை கலைஞர் கருணாநிதி மற்றும் குடும்பம்... விதை வித்தவன் வினையறுப்பான் என்பது கூற்று , அரசன் அன்றுக்கொள்வான் தெய்வம் நின்றுக்கொள்ளும் என்பது சான்று .... இனி யாராக இருப்பினும் நீதி ஒன்றே
  about 2 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
 • srinivas  
  She is a good cm with the strong administration. A strong leader with unhidden mistakes.... She is better than other politicians. If the judgment against corruption continuous it will be a good change for indiaindia
  about 2 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
 • kalaivani  
  இப்ப வழங்க பட்ட தீர்ப்பு சரியானது என்றால் 2 g வழக்கில் இதே நீதி துறை செய்தது நியா மா
  about 2 hours ago ·   (7) ·   (2) ·  reply (0) · 
 • rasappan.k.k  
  ஜெயா தண்டிக்கபட்டதுபோல கருணா குடும்பத்தினரும் தண்டிக்கப்படவேண்டும். விக்யான முறையில் உழல செய்வதில் கருணாவை யாரும் இஞ்ச முடியாது .m
  about 2 hours ago ·   (11) ·   (0) ·  reply (0) · 
 • senthilkumar  
  நேர்மையா அதிகாாிகலுக்கு ஒரு boost குடிதமாதிரி but எனக்கு ஒரு சந்தேகம் 66,44,73,573,27 ருபாய் மாதிப்புல்ல சொத்துகல் தமிழ்நாட்டுக ,கார்னடாகவுக
  about 3 hours ago ·   (4) ·   (1) ·  reply (0) · 
 • su.dhandapani  
  மக்கள் ஜெயலலிதாவுக்கு பெருவாரியான வாக்கு அளித்தது தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யவேண்டும்,ஊழல் அற்ற நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.ஆனால் அதிகாரம் கையில் கிடைத்ததும் மக்கள் நலனை கருதாமல்,தன் நலம்தான் முக்கியம் என்று கருதி,ஆட்சி,அதிகாரித்தை பயன்படுத்தி இன்று பல ஆயிரம் கோடிகள் சொத்து சேர்த்து இன்று நீதி மன்றத்தில் தண்டிக்கப்பட்டு உள்ளார்.என்னதான் ஆயிரம் விளக்கம் சொன்னாலும் ஜெயலலிதா ஓர் ஊழல் பேர்வழி என்று ஊர் உலகத்திற்கு இந்த தீர்ப்பு பறைசாட்டுகிறது.சொத்து சேர்க்கும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
  about 4 hours ago ·   (12) ·   (0) ·  reply (0) · 
 • rajendiran Palanisamy at Advocate 
  66 கோடி என்பது சிறிய தவறா.அடுத்து சிரிய தவறு தண்டிக கூடதா ,பல ஆண்டுகள் என்பதால் மறந்து விடலாமா ,பதவியில் இரூப்பவர் தண்டிக்கப்பட கூடதா (ஜெயலலிதாவை சொல்லவில்லை )அரசியல் வாதிகள் தியாகிகள் என்று யார் சொன்னார்கள் ,சொல்லுங்கள் கீதா அவர்களே
  about 4 hours ago ·   (11) ·   (0) ·  reply (0) · 
 • Maya  
  தற்போது உள்ளவர்கள் அனைவரும் இதைத்தான் செய்கிறார்கள் அந்த நிலையல் அது குறைவு
  about 4 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
 • senthil  
  அம்மா அம்மா 66 கோடிக்கே இவ்வளவு தண்டனை 500 கோடி லட்சம் கோடிக்கு எவ்வளவு தண்டனையோ அம்மா அம்மா நீங்க பினிக்ஸ் பறவை திரும்ப அதே கம்பிரதுடன் வருவிங்கே
  about 4 hours ago ·   (14) ·   (4) ·  reply (0) · 
 • senthil  
  வூலல் தப்பு செய்யற அனைவருக்கும் இதுதான் சரியான பாடம்
  about 4 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
 • Uraj  
  தப்புதாக வரி பணம் நன்ம்பளது ethu யாருக்கும் புரிய மடணுது
  about 5 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
 • rajan  
  எம்ஜி ஆர் ஆரம்பித்த கட்சி ஜெயலலிதா முடித்து விட்டார்
  about 6 hours ago ·   (9) ·   (1) ·  reply (0) · 
 • vasan srinivasan  
  ஜெயலலிதா தற்போது தமிழகத்தை நன்கு நிர்வகித்து வருகிறார். பழைய தவறு தற்போது பெரிய தண்டனையை பெற்று தந்துள்ளது.காவரியின் வேகம் அதிகரித்துள்ளது.இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
  Points
  130
  about 6 hours ago ·   (6) ·   (4) ·  reply (0) · 
 • ponnu  
  Sattam than kadamayai seidhadhu....idhu thodarum matravargalukkum...
  about 9 hours ago ·   (2) ·   (2) ·  reply (0) · 
 • Micheal Johnson  
  அண்ணா நாமம் வாழ்க, எம் ஜி ஆர் நாமம் வாழ்க..இன்றோ, அம்மாவுக்கே "நாமம்"
  Points
  5915
  about 9 hours ago ·   (13) ·   (0) ·  reply (0) · 
 • MANIKANDAN  
  இந்த தீர்ப்புக்கு தமிழன் தலைவணங்க வேண்டும்.சரி தண்ணீரில் மூச்சு விட்டால் தெறியாது என்று சில உள்ளனர்.பினாமி பேரில் வைத்துள்ள சொத்துகளையும் கணக்கிட்டு ஆதாரம் இல்லாத சொத்துகளை அதிகாரிகள் வெளி உலகிற்க்கு காட்ட வேண்டும்.
  about 10 hours ago ·   (10) ·   (0) ·  reply (0) · 
 • thamilpithdan  
  தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும். சட்டம் தன் கடமையை செய்யும் Now iam proud to be a indian.
  about 10 hours ago ·   (11) ·   (0) ·  reply (0) · 
 • MANIKANDAN  
  ஐய்யா! இந்த தீர்ப்புக்கு தமிழன் தலைவணங்க வேண்டும்,பிறகு இது போன்று பினாமி முறையில் பதிக்கி வைத்துள்ளவர்களை என்னா செய்யபோகிறோம்.கயவர்ளை கண்டறிந்து தகுந்த தண்டனையை அளிக்க எதிர்பார்க்கிறேன்.
  about 10 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
 • selva kumaran  
  ஜெயா உக்கு கொடுக்கப்பட்டதீர்ப்பு ஏதோ மற்றவர்கள் யோக்கியம் போல் அவர்கள் கருத்து சொல்கிறார்கள் ,இது பெரிய அதிர்ச்சி தான் ,நேரமும் காரணம் ,இன்னும் கொஞ்ச காலம் இழுத்திருந்தால் ஓரளவு நல்ல மனசு உள்ள நீதிபதீடம் கேஸ் போயிருக்கலாம் ,4 வருடம் ,100 கோடி அபராதம் டூ மச் !
  about 11 hours ago ·   (5) ·   (8) ·  reply (0) · 
 • premkumar  
  Ippadi block money vaithurukkirarkalo avarkalaium ippadiey pannenal india is world no 1
  about 11 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
 • parthi  
  I hate this result.
  about 11 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) · 
 • RUSEWELDIN  
  M.RUSEWELDIN:வெறும் 66 கோடி ரூபாய்க்கு 4 வருடம் ஜெயில் 100கோடி அபராதம் விதிக்கப்பட்டது!!!. 170000 கோடி ஊழல் வழக்கில் சிக்கியுள்ளவர்கள் வெளியே வந்து விட்டது வேதனை அளிக்கிறது. சிந்தியுங்கள் மக்களே. ...அனைவரும் ஒன்று சேர்ந்து. ...
  about 11 hours ago ·   (11) ·   (4) ·  reply (1) · 
 • sans  
  170000 கோடி பணம் எங்கே ,தயவு செய்து கண்டுபிடித்து வேலை வாய்ப்பு கொடுங்கள்
  about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • parthi  
  I hate this result.....it is lie...
  about 11 hours ago ·   (5) ·   (2) ·  reply (0) · 
 • Raja  
  இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரை இன்றி கெடும்


  THANX  - the hindu

4 comments:

Unknown said...

தீர்ப்பு அபராதம் தண்டனை எல்லாமே அநியாயம் !
இந்த நிலைமை எந்த தமிழக முதல்வருக்கு வந்திருந்தாலும்
தமிழத்திற்கு அவமானம் .... மனித உரிமை இதில் மீறப்பட்டு இருக்கிறது .
கண்டிப்பாக தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவே குரல் எழப்பவேண்டும் !
100 கோடி அபராதம் என்ன ஒரு சர்வாதிகார தீர்ப்பு ?
இது ஜனநாயக நாடா ?சர்வாதிகார நாடா? தமிழ் தொலை காட்சி சானல்கள்
தமிழ் நாளேடுகள் , அனைவரும் இதை கண்டிப்பாக கேள்வி கேட்க வேண்டும் .
இந்த நாட்டில் நீதி துறை ஜனநாயகமாக செயல்படுகிறதா?
இந்த தீர்ப்பு அனைத்து தமிழர்களுக்கு அவமானம் ...
உடன்பட்டவர்கள் [email protected]
தொடர்பு கொள்ளவும்

Unknown said...

தீர்ப்பு அபராதம் தண்டனை எல்லாமே அநியாயம் !
இந்த நிலைமை எந்த தமிழக முதல்வருக்கு வந்திருந்தாலும்
தமிழத்திற்கு அவமானம் .... மனித உரிமை இதில் மீறப்பட்டு இருக்கிறது .
கண்டிப்பாக தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவே குரல் எழப்பவேண்டும் !
100 கோடி அபராதம் என்ன ஒரு சர்வாதிகார தீர்ப்பு ?
இது ஜனநாயக நாடா ?சர்வாதிகார நாடா? தமிழ் தொலை காட்சி சானல்கள்
தமிழ் நாளேடுகள் , அனைவரும் இதை கண்டிப்பாக கேள்வி கேட்க வேண்டும் .
இந்த நாட்டில் நீதி துறை ஜனநாயகமாக செயல்படுகிறதா?
இந்த தீர்ப்பு அனைத்து தமிழர்களுக்கு அவமானம் ...
உடன்பட்டவர்கள் [email protected]
தொடர்பு கொள்ளவும்

Unknown said...

தீர்ப்பு அபராதம் தண்டனை எல்லாமே அநியாயம் !
இந்த நிலைமை எந்த தமிழக முதல்வருக்கு வந்திருந்தாலும்
தமிழத்திற்கு அவமானம் .... மனித உரிமை இதில் மீறப்பட்டு இருக்கிறது .
கண்டிப்பாக தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவே குரல் எழப்பவேண்டும் !
100 கோடி அபராதம் என்ன ஒரு சர்வாதிகார தீர்ப்பு ?
இது ஜனநாயக நாடா ?சர்வாதிகார நாடா? தமிழ் தொலை காட்சி சானல்கள்
தமிழ் நாளேடுகள் , அனைவரும் இதை கண்டிப்பாக கேள்வி கேட்க வேண்டும் .
இந்த நாட்டில் நீதி துறை ஜனநாயகமாக செயல்படுகிறதா?
இந்த தீர்ப்பு அனைத்து தமிழர்களுக்கு அவமானம் ...
உடன்பட்டவர்கள் [email protected]
தொடர்பு கொள்ளவும்

SWEAD said...

Inthiyavai vallarasakka ninaikkum ovoru ilainjanum intha Jayalalitha theerppaiyum, 2G theerppaiyum varaverkka veendum.